The Talkie
Thursday, April 9, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home திரைக்கதைகள்

The Prestige  திரைக்கதை

The Talkie by The Talkie
May 23, 2025
in திரைக்கதைகள்
A A
0
The prestige
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon ஜா.தீபா

The Prestige என்கிற திரைப்படத்தின் பெயர் திரையில் வருகிறது. எழுத்துகள் மட்டும் அப்படியே இருக்க இந்தக் காட்சி மாறுகிறது. மேஜிக் நிபுணர்கள் அணியும் கறுப்புத் தொப்பிகள் பல தரையில் கிடைக்கின்றன. ஒரு கருப்பு பூனை அந்தப் பக்கமாக வருகிறது.

The Prsetige என்கிற திரையில் வந்த எழுத்து மறைகிறது

“கவனமாக பார்க்கிறாயா?”

என்கிற ஒரு ஆண்  குரல் பின்னணியில்கேட்கிறது.

இரண்டாவதாக ஒரு கருப்பு பூனை பிரேமுக்குள் வருகிறது. முதல் பூனையைத் துரத்திக் கொண்டு காட்டுக்குள் ஓடுகிறது

ஒரு பட்டறை – பகல் /INT

கூண்டுக்குள் ஒவ்வொன்றிலும் ஒரு பறவை வீதம் வரிசையாக இருக்கின்றன. மேஜிக் கலையில் மூன்று பாகங்கள் இருப்பதைச் சொல்கிறது. அது கட்டரின் குரல். அறுபது வயது மதிக்கத்தக்கவரின் குரல் அது. அவரது கைகள் கூண்டினை எடுத்து வருவது காட்டப்படுகிறது. வயதானவரின் கை அது.

கட்டரின் பின்னணிக் குரல் தொடர்கிறது.

முதல் பாகத்தின் பெயர் The Pledge என்று கட்டரின் குரல் சொல்லும்போது , காற்றின் கை கூண்டிற்குள் இருக்கும் பறவையை எடுக்கிறது.

“மேஜிக் நிபுணர் சாதாரணமான ஒன்றினை உங்களிடம் காட்டுவார்” என்று கட்டரின் பின்னணிக் குரல் சொல்கிறபோது கட்டர் தன் கையில் உள்ளதை புன்னகையுடன் காட்டுகிறார்.

ஒரு சிறுமி (ஜெஸ்) அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்

ஸ்காலா அரங்கம் லண்டன் – இரவு – INT

பார்வையாளர்கள் வரிசையில் தாடி மீசையுடன் பார்டன் உட்கார்ந்திருக்கிறான்.

மேடையின் மேல் ஏஞ்ஜியர் நின்று கொண்டிருக்கிறான்

மேடையின் பின்பக்கம் எதையோ காட்டுகிறான்.

கட்டரின் பின்னணிக் குரல் ஒலிக்கிறது.

“உங்களை வந்து பரிசோதிக்கும்படியும் கேட்டுக் கொள்ளலாம்”

எனும்போது பெண் உதவியாளர் பார்வையாளர் வரிசையில் யாரையோ சுட்டிக் காட்டுகிறாள்..

பார்வையாளர் வரிசையில்  இருந்து பார்டன் எழுகிறான்.

பார்டனும் பார்வையாளர்கள் சிலரும் மேடையின் மேல் உள்ள மின்சாரக் கூண்டினைப் பரிசோதிக்கின்றனர்.

பார்டன் மேடைக்குப் பின்புறமாகச் செல்கிறான்.

அங்கு ஒருவனால் தடுக்கப்படுகிறான்.

ஒட்டுத் தாடியைப் பிய்க்கிறான் பார்டன்

அவனைத் தள்ளிவிட்டு மேடைக்குக் கீழ் செல்கிறான்.

மேடையில் பார்டன் மேஜிக் செய்யத் தயாராகிறான்.

பார்டன் கீழே வருகிறான். திகைத்து நிற்கிறான்.

அரையிருட்டில் சுருக்கம் நிறைந்த விழிகளற்ற ஒரு கிழவரின் முகம் தெரிகிறது.

கட்டர் தன் கையில் இருக்கும் பறவையை மேஜை மேல் உள்ள கூண்டிற்குள் வைக்கிறார்.

பின்னணிக் குரல் கேட்கிறது

‘இரண்டாவது பகுதி “The Turn’ என்று சொல்லப்படுகிறது.

ஏஞ்ஜியர் திரும்புகிறான்.

மேடைக்குக் கீழ் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் பார்த்தபடி இருக்கிறான் பார்டன்.

மேடையின் மேல் மின்னல் போல் ஒளி பாய்ச்சும் கூண்டிற்குள் நடந்து போகிறான் ஏஞ்ஜியர்.

“அப்போது எதிர்பாராத சம்பவம் நடக்கும்” என்று பின்னணிக் குரல் கேட்கும்போது, கட்டர் பறவைக் கூண்டினை ஓங்கி அடிக்கிறார்.

மேடையின் மேல் உள்ள கூண்டிற்குள் மின்னல் ஒளி பாய நடுவில் நிற்கிறான் ஏஞ்சியர். பார்வையாளர்கள் என்ன நடக்கிறது என்பதை ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்,

பின்னணிக் குரல் : இப்போது ரகசியம் ஒன்றிற்காகக் காத்திருப்பீர்கள். ஆனால் உங்களால் கண்டுபிடிக்க முடியாது

என்று குரல் ஒலிக்க ஜெஸ் மேஜையின் மேல் இருந்த பறவைக் கூண்டினைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஆவலாக.

பின்னணிக் குரல் “ ஏனென்றால் நீங்கள் நிஜமாகவே பார்த்துக் கொண்டிருக்கவில்லை

என்று குரல் ஒலிக்க அரிக்கேன் விளக்குடன் தாடி மீசையில்லாத பார்டன் எதையோத் தேடுகிறான்.

மேடையின் மேல் இருந்தது அப்படியே ஏஞ்ஜியர் கீழே குதிக்கிறான். கண்ணாடிப் பெட்டி தண்ணீரில் விழுகிறான்.

பின்னணிக் குரல்

நீங்கள் முட்டாளாக விரும்புகிறீர்கள்.

பட்டறை – பகல் – INT

என்று குரல் ஒலிக்கும்போது கூண்டின் மேல் போர்த்தியிருந்த  துணியை விலக்குகிறார் கட்டர்.

அங்கு கூண்டு இல்லை.

ஜெஸ் ஆச்சரியமாகப் பார்க்கிறாள்.

பின்னணிக் குரல் “ ஆனால் நீங்கள் கை தட்ட மாட்டீர்கள்

ஸ்காலா அரங்கம் – இரவு – INT

மேடை மேல் ஏஞ்ஜியர் காணாமல் போக பார்வையாளர்கள் அங்கும் இங்கும் பார்க்கிறார்கள்.

ஏனென்றால் காணாமல் போக வைப்பது என்பது போதாது’

பின்னணிக்குரல்  : திரும்ப வரவைக்க வேண்டும்

என்று குரல் ஒலிக்கும்போது தன்னுடைய கையில் ஒரு பறவையை வெளிக்கொண்டு அவனது பறக்க விடுகிறார் கட்டர்.

ஜெஸ் சந்தோஷமாகக் கைத்தட்டுகிறாள்

பார்வையாளர்கள் ஏஞ்ஜியரை அங்கும் இங்குமாகத் தேடுகிறார்கள்.

மேடையின் கீழ் பார்டன் அரிக்கேன் விளக்குடன் செல்ல, கண்ணாடி தண்ணீர்ப் பெட்டிக்குள் விழுந்திருக்கும் ஏஞ்சியர் மூச்சுத் திணறுகிறான்.

‘இந்த இறுதிக் கட்டம் தான் கடினமானது. இதற்குப் பெயர் THE PRESTIGE என்கிற கட்டரின் பின்னணிக் குரல் தொடர்கிறது

நீதிமன்றம்– பகல் – INT

இதுவரை பேசிக்கொண்டிருந்த பின்னணிக் குரல் கட்டருடையது என்று காட்டப்படுகிறது. அவரிடம் வழக்கறிஞர் கேள்வி கேட்கிற குரல் கேட்கிறது. ஏஞ்ஜியர் தண்ணீரில் மூழிகிய சம்பவத்தை சொல்லி முடித்திருக்கிறார் கட்டர்.

இப்போது அது ஒரு நீதிமன்றம் என்பது தெரிகிறது. குற்றவாளிக் கூண்டில் பார்டன் உட்கார்ந்திருப்பதும், சாட்சிக் கூண்டில் கட்டர் நிற்பதும் தெரிகிறது.

“இவர் அவர் மூழ்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்” அவர் சுட்டிக் காட்டிய இடத்தில் கையில் விலங்குடன் பார்டன் அமர்ந்திருக்கிறான்.

கட்டர் தன்னுடைய தொழிலைப் பற்றி சொல்கிறார்.

“நான் ஒரு பொறியாளன். படங்கள் வரைந்து அதே போன்றதான கருவிகளை உருவாக்குவேன். மேஜிக் செய்ய ஏற்றதான உபகரணங்களை வடிவமைத்துத் தருவேன்” என்கிறார்

ஏஞ்ஜியருடன் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்ததை சொல்கிறார்.

“மேடைக்குக் கீழ வைக்கப்பட்டிருந்த இந்த தண்ணீர் தொட்டி என்பது ஏஞ்ஜியரின் THE TRANSPORTED MAN வித்தையின் ஒரு பகுதியா?” என்று வழக்கறிஞர் கேட்க,   

“இல்லை. அந்தத் தண்ணீர்த் தொட்டியினை முதல் வித்தைக்குப் பயன்படுத்துவோம். பின் அதனை மேடையில் இருந்து அகற்றிவிடுவோம். பார்டன் தான் அதனை மேடைக்குக்  கீழ் வைத்திருக்க வேண்டும்”

அவர் விவரிக்கிறார். கோர்ட்டில் பார்வையாளர் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

சொல்லிவிட்டு பார்டனை கட்டர் பார்க்க, அவன் தன்னையுமறியாமல் தன் விரல்களால் கூண்டினைத் தட்டி விட்டுக் கொண்டே இருக்கிறான். அவனுடைய விரல்களில் இரண்டரை விரல்கள் இல்லை..மொண்ணையாக இருக்கின்றன என்பது காட்டப்படுகிறது.

“அந்தத் தண்ணீர் தொட்டி எத்தனை பெரியது?” என்று வழக்கறிஞர் கேட்க,  அது மிகப்பெரியது என்கிறார் கட்டர்.

“அதை எப்படி பார்டனால் தனியாக மாற்றி வைத்திருக்க முடியும் என்று கேட்கப்பட “அவன் ஒரு மெஜிசியன்..அவனையே கேளுங்கள்” என்கிறார் கட்டர்.

தண்ணீர் நிரம்பிய கண்ணாடிப் பெட்டியைத் தான் எஞ்சியருக்காக செய்து கொடுத்ததைச் சொல்கிறார்.

The Transported Man வித்தைக்கான உபகரணத்தை கட்டர் எப்படி செய்தார் என்று கேட்கப்பட, அது தொழில் ரகசியம் என்று சொல்ல மறுக்கிறார் கட்டர்.

தன்னிடம் தனியாகச் சொல்லும்படி நீதிபதி சொல்ல, ஒப்புக் கொள்கிறார் கட்டர்.

அங்கிருந்து பார்டனை அழைத்து செல்லப் போகையில், பார்டன் பார்வையாளர்கள் கூட்டத்தைப் பார்க்கிறான். அங்கு ஜெஸ் இருக்கிறாள் அவளைப் பார்த்து கையசைக்கிறான் பார்டன். அவளும் பதிலுக்கு கையசைக்கிறாள். அவளுடன் தொப்பியும், தாடியும், கண்ணாடியும் அணிந்த  ஃபாலன் இருக்கிறான். ஃபாலனும், பார்டனும் பார்த்துக் கொள்கிறார்கள்.

ஜெஸ்ஸை அங்கிருந்து அழைத்து செல்கிறான் ஃபாலன்.

சிறைச்சாலை வளாகம் – புதிய சிறைச்சாலை – பகல்

சிறைச்சாலைக்குள் ஓவன்ஸ் வருகிறார். ஓவன்ஸ் ஒரு வழக்கறிஞர். ஐம்பது வயது மதிக்கத்தக்கவர். அவரின் பாக்கெட்டுகள் பரிசோதிக்கப்படுகின்றன. “எதற்காக  இந்த சோதனை ?” என்பது போல ஓவன்ஸ் பார்க்க, “வார்டன் இப்படி செய்யச் சொல்லியிருக்கிறார். மான்செஸ்டரில் இவருடைய மேஜிக் ஷோவை அவர் கடந்த வருடம் பார்த்திருக்கிறார். அங்கே அவர் காற்றில் மறைந்து போய்விட்டாராம். அதே போல் இங்கும் அவர் காணாமல் போய்விடக்கூடாது” என்று இந்த சோதனைகள்” என்கிறார் தலைமைக் காவலர். பார்டன் மேஜிக் நிபுணர் என்பதால் தீவிர கண்காணிப்போடு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஓவன்ஸ் புன்னகையோடு தன்னுடைய பாக்கெட் வாட்ச், பர்ஸ் போன்றவற்றை ஒப்படைக்கிறார்.சிறை வளாகத்துக்குள் நடந்து செல்கிறார்.

ஒரு கதவு திறக்கிறது. அங்கிருந்து பார்டன் வெளிவருகிறான். அவன் உடம்பைச் சுற்றி சங்கிலிகள் கட்டப்பட்டிருக்கின்றன. சங்கிலியின் பூட்டுகள் இரண்டு முறை பரிசோதிக்கப்படுகின்றன. பிறகே  ஓவன்ஸுடன் பேச பார்டன் அனுமதிக்கப்படுகிறான்.  

ஓவென்ஸ் தன்னை லார்ட் கால்ட்லோவின் வழக்கறிஞர் என அறிமுகம் செய்து கொள்கிறார். கால்ட்டோவிற்கு பார்டனின் மேஜிக் வித்தைகள் தேவைப்படுகின்றன என்றும் அதற்கு ஐயாயிரம் பவுண்டுகள் தர முடியும் என்று விலை பேசுகிறார்.

ஃபாலனிடம் பேசும்படி கூறுகிறான் பார்டன். The Transported Man என்கிற ரகசியத்தை மட்டும் விற்க முடியாது என்கிறான் பார்டன்.

மகளின் நலனுக்காக யோசிக்கும்படி கேட்கிறார் ஓவென்ஸ்.

“உன்னுடைய மகள் அனாதையாக இருக்க வேண்டாம் என்று நினைக்கிறோம். உனது மகளின் நலனுக்காக இதை ஒப்புக் கொள்” என்கிறார் ஓவென்ஸ்.

தந்து மகளை ஃபாலன் பார்த்துக் கொள்வான் என்று சொல்ல, யார் எவர் என்று தெரியாத பெர்னார்ட் ஃபாலன் போன்ற ஒருவனிடம் உனது மகளை கோர்ட் ஒப்படைக்காது என்கிறார் ஓவென்ஸ்.

போகும்போது எஞ்சியரின் டைரி ஒன்றை கால்டோ தரச் சொன்னதாக ஓவன்ஸ் பார்டனிடம் தருகிறார்.

கொலோரோடாவில் ஏஞ்ஜியர் சென்று The Transported Man வித்தையைக் கற்றுக் கொண்டது டயரியில் இருப்பதாகச் சொல்கிறார்.

தன்னுடைய வித்தையை ஏஞ்ஜியர் ஒருபோதும் கற்றுக் கொள்ளவில்லை என பார்டன் கூறுகிறான்.

கொலோரோடாவில் இருந்து திரும்பும்போது ஏஞ்ஜியர் உன் Transported Man யுத்தியை விட சிறப்பான ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தார்

என்று ஓவன்ஸ் சொல்ல, “உங்களுக்கு ஏஞ்ஜியரின் வித்தை குறித்து தெரிய வேண்டுமானால், அவனுடைய கல்லறையை நோண்டி அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்” என்று சொல்கிறான்.

பார்டன் ஏஞ்ஜியரின் டயரியைப் பிரித்து வாசிக்கத் தொடங்குகிறான். டைரியில் உள்ளவை காட்சிகளாகின்றன. ஏஞ்ஜியரின் குரல் பின்னணியில் ஒலிக்கிறது.

ரயில், அந்தி நேரம் , INT

மலைப்பகுதியின் நடுவே ரயில் சென்று கொண்டிருக்கிறது.

ரயிலுக்குள்

ஏஞ்ஜியர் டைரியில் எழுதிக் கொண்டிருக்கிறான். அவன் வேறொரு டைரியை விரித்துப் படிக்கிறான்.

அது பார்டனின் டைரி என்பதும் அதில் உள்ளவை ரகசியக் குறியீடுகளான எழுத்துகள் என்பதும் தெரிகிறது. பயணம் குறித்தும் டைரி பற்றியும் ஏஞ்ஜியரின் பின்னணிக் குரல் கேட்கிறது.

ரயில் நிலையம் – அந்திநேரம் – EXT

கொலோரோடோ ரயில் நிலையத்தில் பனிபொழியும் மாலை நேரத்தில் தனித்து நிற்கிறான் ஏஞ்ஜியர். அவன் அருகில் இருக்கும் மின்கம்பத்தில் மின்விளக்கு எரிகிறது. இது ஏஞ்ஜியரை ஆச்சரியப்படுத்துகிறது. கோச் வண்டியில் ஏறிப் போகையில், நகரம் முழுவதுமே மின்விளக்குகள் எரிவதைப் பார்க்கிறான். இது ஏஞ்ஜியரை ஆச்சரியப்படுத்துகிறது.

விடுதி கோச் வண்டி விடுதியினை நோக்கிச் செல்கிறது.

விடுதி – அந்திநேரம்

விடுதியினுள்ளே ஏஞ்ஜியர் செல்கிறான். அந்த சீசனின் முதல் வாடிக்கையாளர் என்பதால் பணியாளர்கள் வரவேற்பறையில் நின்று வரவேற்கும் விதமாக நிற்கிறார்கள். எத்தனை நாட்கள் ஏஞ்ஜியர் அங்கு தங்கப் போகிறார் என விடுதி மேலாளர் விசாரிக்கிறார். வந்த காரியம் முடிவது வர என்கிறான் எஞ்சியர். மறுநாள் குன்றின் மீது செல்வதற்காக ஒரு கோச் வண்டி ஏற்பாடு செய்யும்படி மேலாளரிடம் ஏஞ்ஜியர் கேட்கிறான். அறிவியல் சோதனைக்காக குன்று மூடப்பட்டிருப்பதாக மேலாளர் சொல்கிறார். தானும் அதற்காகத் தான் அங்கு வந்திருப்பதாக சொல்கிறான் ஏஞ்ஜியர்.

ரோடு – குன்று – காலை

பனிப்புகைக்கு நடுவே கோச் வண்டி வருகிறது. ஓரிடத்தில் நிறுத்தி, இதற்கு மேல் நடந்து தான் போக வேண்டும் என்று வண்டியோட்டி சொல்கிறார்.

மரங்களுக்கு நடுவே பனிப்புகையின் ஊடாக நடந்து செல்கிறான் ஏஞ்ஜியர்.

ஆய்வகக்கட்டடம் பனிப்புகைக்கு இடையில் தெரிகிறது. அதன் இரும்புக் கதவில் ஏஞ்ஜியர் கை வைத்துத் திறக்கப்போக அதில் உள்ள மின்சார அதிர்வினால் கீழே விழுந்து விடுகிறான் ஏஞ்ஜியர்.

கட்டடத்தின் உள்ளே துப்பாக்கிக் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது.

“இங்கு எழுதப்பட்டிருக்கும் எச்சரிக்கை வாசகங்களை ஏன் தான் பத்திரிகையாளர்கள் படிக்காமல் இருக்கிறீர்களோ? என்றபடி கையில் துப்பாக்கியுடன் வருகிறான் ஏலி.

ஏஞ்ஜியரைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டு கதவைத் திறக்கிறான் “நீங்கள் Great Danton தானே? உங்களுடைய ஷோவை லண்டனில் பார்த்திருக்கிறேன் என்கிறான் ஏலி.

தான் டெஸ்லாவை சந்திக்க வேண்டும் என்றும் தன்னுடைய சக மேஜிக் கலைஞனுக்கு டெஸ்லா வடிவமைத்துத் தந்த ஒரு சாதனம் போன்று தனக்கும் வேண்டும் எனக் கேட்கிறார்.

அது முடியாது என்று மறுத்து திறந்த கதவினை மூடுகிறார் ஏலி.

பணம் நிறைய கொண்டு வந்திருப்பதாகவும் , விடுதியில் கால வரையற்று தங்கப் போவதாகவும் சொல்கிறார் எஞ்சியர்.

சொல்லிவிட்டு நடக்கத் தொடங்குகிறார்.

ஏலி தன்னுடைய் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்துக் கொண்டே “ஏ…என் கையில் என்ன இருக்கிறது?” என்று கேட்கிறார்.

“உன்னுடைய கடிகாரம்” எனத் திரும்பிப் பார்க்காமலே பதில் சொல்லிக் கொண்டே நடக்கிறார் ஏஞ்ஜியர்.

சந்தோஷமாக சிரிக்கிறார் ஏலி. அவர் கையில் தங்க கடிகாரம் இருக்கிறது.

விடுதி அறை – பகல் – INT

ஏஞ்ஜியர் பார்டனின் டைரியை வாசித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்ப கால வாழ்க்கைப் பற்றிய ஏஞ்ஜியரின் குரல் ஒலிக்கிறது. பார்டனும், ஏஞ்ஜியரும் சந்தித்துக் கொண்ட ஆரம்ப காலத்தின் குறிப்புகளாக இருக்கின்றன.

அரங்கம் – இரவு – INT

பார்வையாளர்கள் வரிசையில் ஏஞ்ஜியரும் பார்டனும் அமர்ந்திருக்கின்றனர். மேடையின் மேல் இருந்து மேஜிக் நிபுணர் மில்டன் “உங்களில் தைரியமானவர் இங்கே வரலாம்” என்று அழைக்கிறார். ஏஞ்ஜியரும் பார்டனும் மேடைக்குச் செல்கிறார்கள். அவர்களை ஜூலியாவே தேர்ந்தெடுக்கிறாள்

இருவரிடமும் ஜூலியாவின் கைகளையும் கால்களையும் கட்டச் சொல்கிறார் நிபுணர்.

ஏஞ்ஜியர் ஜூலியாவின் கைகளைக் கட்டுகிறான்.

பார்டன் கால்களைக் கட்டுகிறான். கயிறால் முடிச்சிடும்போது திணறுகிறான். பிறகு முடிச்சிடுகிறான். இதனை ஜூலியா கவனிக்கிறாள். 

மேடையின் பக்கவாட்டில் கட்டர் நின்று கொண்டிருக்கிறார்.

கைகளைக் கட்டும்போதே கட்டுரைத் திரும்பிப் பார்க்கிறான் பார்டன்.

கைகளைக் கட்டிக் கொண்டிருக்கும் ஏஞ்ஜியர் குனிந்து யாருக்கும் தெரியாமல்  ஜூலியாவின் கால்களில் முத்தமிடுகிறார்,

ஒரு நொடி ஏஞ்ஜியரைக் கண்டிப்பது போலப் பார்த்துவிட்டு புன்னகைக்கிறாள் ஜூலியா.

கைகால்கள் கட்டப்பட்டதும் ஒரு கொக்கியை மாட்டி ஜூலியா தூக்கப்படுகிறாள்

கட்டர் ஒரு கோடாரியைத்க் கையில் எடுத்துக் கொள்கிறார். ஸ்டாப் வாட்சினை செட் செய்து கொள்கிறார்.

ஜூலியா ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் போடப்படுகிறாள்.

கண்ணாடி பெட்டியின் மேல் துணி மூடப்படுகிறது.

கட்டர் ஸ்டாப் வாட்சினை பார்க்கிறார். மேஜிக் நிபுணர் கண்ணாடிப் பேட்டியினை சுற்றி வருகிறார்.

ஸ்டாப் வாட்சில் ஒரு நிமிடம் முடிகிறது.

மேஜிக் நிபுணர் கைத்தட்டுகிறார்.

திரை விலகுகிறது.

கண்ணாடிப் பெட்டியில் ஜூலியா இல்லை. பெட்டிக்கு அருகில் இருக்கும் மற்றொரு திரை விலக, அங்கு நனைந்த உடையுடன் கைகள் கட்டப்படாத நிலையில் நிற்கிறாள்.

பார்வையாளர்கள் கைதட்டும் சத்தம் கட்டர் முகத்தில் கேட்கிறது.

கோடாரியை எடுத்த இடத்திலே திருப்பி வைக்கிறார் கட்டார்.

ஒப்பனை அறை – இரவு

மேஜிக் நிபுணர் மில்டன் செய்வது அலுப்பாக இருக்கிறது புதிதாக ஏதேனும் முயற்சி செய்ய வேண்டும் எனச் சொல்கிறன பாரடா.

அந்த அறையில் பார்டன், எஞ்சியர், ஜூலியா கட்டர் இருக்கிறார்கள்.

“Bullet Catch ; ஐ ஏன் முயற்சி செய்யக்கூடாது என பார்டன் கேட்க அது தற்கொலைக்கு சமானம் என்கிறார் கட்டர்.

எந்தவொரு மேஜிக்கையும் போலியாக செய்து காட்டிவிடலாம் என்கிறான் ஏஞ்ஜியர்.

அது முடியவே முடியாது என்கிறான் பார்டன்.

தான் ஒரு புது யுத்தியைக் கண்டுபிடித்திருப்பதாகவும், அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றும் பார்டன் சொல்கிறான். “இரண்டு முறை என்னிடம் செய்து காட்டு, அந்த யுத்தி என்னவென்பதைக் கண்டுபிடித்து விடுவேன்” என்கிறான் ஏஞ்ஜியர். “உன்னால் முடியாது” என்கிறான் பார்டன். “உன்னுடைய ஆர்வத்தை மதிக்கிறேன் ஏஞ்ஜியர். ஆனால், பார்டன் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்திருந்தால் அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றே நினைக்கிறேன்” என்கிறார் கட்டர்.

சீனாவில் சங் லீ சூ என்கிற மேஜிக் நிபுணன் செய்யும் gold fish bowl  தந்திரத்தைப் பார்த்துவிட்டு அவர் எப்படி செய்கிறார் என்பதை வந்து சொல்பவர்க்க்கு பப்ரிசு தரப்படும் என்றும் அதைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்துதருவதாகவும் சொல்கிறார்  என்கிறார் கட்டர்.

எஞ்சியரும் பார்டனும் அந்த மேஜிக் ஷோவைப் பார்க்க ஆர்வமாக சம்மதிக்கின்றனர்.

சரியாகக் கண்டுபிடித்துவிட்டால், தனது நண்பரான லண்டனின் அதிகாரம் கொண்ட தியேட்டர் ஏஜென்ட் ஆக்கர்மேன் முன்பாக பத்து நிமிடங்கள் மேஜிக் வித்தைகள் காட்ட ஏற்பாடு செய்வதாகச் சொல்கிறார் கட்டர். இருவருக்கும் ஆர்வம் கூடுகிறது.  

சில சமயங்களில் ஜூலியாவுக்கு தவறான முடிச்சினைப் போட்டு விடுகிறாய் பார்டன்..இனி அப்படி செய்யாதே என்று எச்சரிக்கிறார் கட்டர்.

Longford Double முடிச்சும் இன்னும் இறுக்கமாக இருக்கலாம் என்கிறான் பார்டன்,

ஏஞ்ஜியரும் எச்சரிக்கிறான்.

பார்டன் அதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

Longford knot என்பதை சரியாகப் போடவில்லை என்றால் ஆபத்தாகிவிடும். கயிறு ஈரமானதும் அது இறுகப் பிடித்துக் கொள்ளும், பிறகு அவளால் வெளியே வரவே முடியாது என்கிறார் கட்டர்.

“என்னால் எந்த நீரின் அடியாழத்திலும் முடிச்சினை அவிழ்க்கக் அமுடியும்” என்கிறாள் ஜூலியா.

அதனை ஆதரிக்கிறான் பார்டன்.

கோபமாகும் ஏஞ்ஜியர், ‘அவர் தான் வேண்டாமா என்று சொல்கிறார் இல்லையா..” என்கிறான்.

அங்கிருந்து செல்கிறான் பார்டன், அவன் போனதும்

பேச்சு பார்டன் பற்றித் திரும்புகிறது. பார்டன் பகுதி நேரமாக விர்ஜில் மற்றொரு மேஜிக் நிபுணரிடம் வேலை செய்கிறான் என்கிறார் கட்டர்.

“அது எப்படி சாத்தியம்? எதற்காக மற்றொருவரிடம் வேலை செய்ய வேண்டும்?’ என்று ஏஞ்ஜியர் கேட்க, “நான் தான் விர்ஜிலின் ஆரஞ்சு யுத்தியைக் கண்டுபிடிக்க அவனை அங்கு வேலைக்கு அனுப்பினேன்” என்கிறார்.

“அவனை நம்பலாமா என்று சந்தேகமாக இருக்கிறது” என்கிறான் ஏஞ்ஜியர்.

“அவன் இயற்கையிலேயே மேஜிக்கில் நிபுணத்துவம் கொண்டிருக்கிறான். நீ அவனை நம்ப வேண்டியதில்லை” என்கிறார் கட்டர்.

“எனக்கு என்னவோ அவன் சரியானவனாகவே இருப்பதாகத் தெரிகிறது’ என்று ஜூலியா சொல்ல, “உனக்கு உலகத்தில் எல்லோருமே சரியானவர்கள் தான்” என்கிறான் ஏஞ்ஜியர். இருவரும் முத்தமிட்டுக் கொள்ள, கட்டர் அங்கிருந்து நகர்கிறார். செல்கிறபோது, இனி எல்லார் முன்பும் உன் மனைவியின் காலை முத்தமிடாதே என்கிறார் ஏஞ்ஜியரிடம் கட்டர்.

ஏஞ்ஜியரும், ஜூலியாவும் சிரித்துக் கொள்கிறார்கள்.

The Great Virgil என்பவற்றின் மேஜிக் ஷோ நடக்கும் இடம். மேடையின் ஓரத்தில் பார்டன் நின்று கொன்றயுக்கிறான். பார்வையாளர்கள் கூட்டத்தில் சாரா சிறுவன் ஒருவனுடன் உட்கார்ந்திருக்கிறாள்.

பார்டனும் சாராவும் அவ்வப்போது பார்த்துக் கொள்கிறார்கள்.

ஒரு சிறிய அரங்கம் – கான்வென்ட் தோட்டம் – INT

ஒரு மேஜிக் ஷோ நடக்கிறது. The Great Virgil – ன் மேஜிக் ஷோ அது.

The Great Virgil  மேஜையின் மேல் உள்ள பறவைக் கூண்டினைத் தட்ட அதில் இருந்த புறா காணாமல் போகிறது.

‘இவர் அதைக் கொன்று விட்டார் என்று அழுகிறான் சிறுவன்.

அந்த சிறுவனுடன் அமர்ந்திருக்கும் சாரா சமாதானப்படுத்துகிறாள்.

Great Virgil மீண்டும் கூண்டிற்குள் புறாவைக் கொண்டு வருகிறார்.

ஷோ முடிந்த அறிகுறியாக அனைவரும் எழுந்து செல்கின்றனர்.

பார்டன் அழுத சிறுவனிடம் பறவையைக் கொண்டு வருகிறான்.

“எங்கே இதனுடைய சகோதரன்”. என சிறுவன் அழுதபடி கேட்கிறான்.

அவனுடைய புத்திக் கூர்மையை வியக்கிறான் பார்டன்.

அந்த சிறுவன் சாராவின் உறவுக்காரன் என்பது தெரிகிறது.

கேசிக் பொருட்கள் வைக்கபப்ட்டிருக்கும் அறை – பகல்  – INT

பறவைக் கூண்டில் உள்ள புறாவைப் பார்த்து :இன்று நீ அதிர்ஷ்டம் செய்திருக்கிறாய்; என்று சொல்லிவிட்டு கூண்டினை ஒரு கொக்கியில் மாட்டுகிறான் பார்டன்.

மேஜையின் மேல்பகுதியில் உள்ள இழுப்பறையைத் திறக்கிறான். அதனில் கூண்டு நசுங்கிப் போய் ஒரு பறவை செத்துக் கிடக்கிறது. அதை எடுத்து குப்பை வாளியில் போடுகிறான்.

அழுத சிறுவனிடம் வருகிறான் பார்டன்.

“கவனமாகப் பார்க்கிறாயா?” என்று ரகசியம் பேசுவது போலக் கேட்கிறான்.

காற்றிலிருந்து ஒரு நாணயத்தைக் கொண்டு வந்து அந்த சிறுவனிடம் காட்டுகிறான்,

“இதன்  ரகசியத்தை யாரிடமும் எப்போதும் சொல்லாதே இதற்காக உன்னிடம் கெஞ்சுவார்கள் ரகசியங்கள் யாரையும் ஈர்ப்பதில்லை. அதற்காக பயன்படுத்தும் யுத்தி தான் முக்கியம்”  என்கிறான் பார்டன்.

சாராவிடம் பார்டன் எங்கு தங்கியிருக்கிறாள் என்று கேட்கிறான். அவர்களின் உரையாடலில் ஒருவருக்கொருவர் ஈர்க்கபப்ட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

சாராவின் வீடு –  பகல் – INT

பார்டனும் சாராவும் வீட்டிற்கு வருகிறார்கள். வீட்டிற்குள் வந்து காபி குடிக்கலாமா என்று கேட்கிறான் பார்டன்.

சாரா தயங்குகிறாள்.

வீட்டின் உரிமையாளர் ஏதாவது சொல்லுவார் என்கிறாள்.

பார்டன் தன்னை அவள் ஆல்ஃபிரெட் என்றே அழைக்கலாம் என்கிறாள்.

அவள் சரி என்று பூட்டிய கதவைத் திறக்கிறாள்.

“இந்தப் பூட்டு என்னை வெளியேற்றிவிடும் என்று நினைக்கிறாயா?” என்கிறான் பார்டன்.

“அப்படித் தான் நினைக்கிறேன்” என்றபடி அவனை அனுப்பிவிட்டு உள்ளே வந்து கதவை மூடுகிறாள்.

அவளது பின்பக்கம் குரல் கேட்கிறது,

“பாலும் சர்க்கரையும்”

சாரா திரும்பிப் பார்க்கிறாள்.

அங்கு பார்டன் சிரித்தபடி நிற்கிறான்.

அவளும் சிரிக்கிறாள்.

TENLEY THEATRE – EVENING – INT

பார்வையாளர்கள் கை தட்டுகிறார்கள்.

மேடையில் வயதான சீன மேஜிக் நிபுணர் சங் லீ சூ ஒரு முக்காலியில் எதையோ வைக்கிறார்.

கூட்டம் கைத்தட்டுகிறது.

பார்வையாளர் வரசையில் உள்ள ஏஞ்ஜியர் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அவனருகில் இருக்கும் பார்டன் சிரித்தபடி மேடையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

வயதானவர் மெல்ல நடந்து வந்து காலியாக இருக்கும் ஸ்டூலில் நீருள்ள மீன்தொட்டியை வரவழைக்கிறார் அதில் தங்க மீன் நீந்திர்க் கொண்டிருக்கிறது.

கூட்டம் கைத்தட்டுகிறது.

ஏஞ்ஜியர் பார்டனைப் பார்க்க, பார்டன் மேடையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

சங் லீ சூ தள்ளாடி தள்ளாடி மேடையிலிருந்து செல்கிறார்.

அரங்கத்தின் வெளிப்புறம் – EXT

சீன மேஜிக் நிபுணர் அடி மேல் அடி வைத்து கோச் வண்டிக்குள் ஏறுகிறார்.

“இது தான் தந்திரம்” என்கிற பார்டனின் குரல் கேட்கிறது. இருவரும் சங் லீ சூ  போவதைப் பார்க்கின்றனர்.

இவர் வாழ்நாளைக் கலைக்காக அர்ப்பணித்திருக்கிறார். என்கிறான் பார்டன்.

நம்பமுடியாத ஆச்சரியத்தில் இருக்கிறான் ஏஞ்ஜியர்.

ஏஞ்ஜியர் வீடு – இரவு 

ஏஞ்ஜியர் சீன மேஜிக் நிபுணன் செய்து காட்டியதைப் போல முயற்சி செய்து கொண்டிருக்கிறான். எதிரில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஜூலியா. அவன் தன் மேல் போர்த்தியிருந்த போர்வையை விலக்க, இரண்டு கால்களுக்கு இடையிலும் ஒரு தங்க மீன்தொட்டி இருக்கிறது.

‘என்னால் இதனை கொஞ்ச நேரம் கூட தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. இதில் தண்ணீரும் மீனும் கூட இல்லை. அந்த மேஜிக் நிபுணர் காலை போல வலுவுள்ளவராக இருக்க வேண்டும்” என்று ஏஞ்ஜியர் ஆச்சரியப்படுகிறார்.

“அப்படியென்றால் இத்தனை வருடங்களாக அவர் தன்னை ஊனமுள்ளவராக காட்டியிருக்கிறாரா?” என்கிறாள் ஜூலியா நம்பமுடியாமல்.

“ஆமாம் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை”

என்று ஜூலியாவின் அருகில் அமருகிறான் ஏஞ்ஜியர். 

இத்தனை வருடங்கள் ஒருவர் தன்னுடைய அடையாளத்தையே மாற்றிக்கொண்டு வாழ்வதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாதது.  ஒருமுறை தான் பார்டன் பார்த்தான், கண்டுபிடித்து விட்டான்.. என்னால் முடியவில்லை” என்கிறான்.

“நீயும் கூடத் தான் வேறு ஒருவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறாய்” என்று ஜூலியா சொல்ல, “”இது போன்ற கூத்துக்களை எல்லாம் செய்ய மாட்டேன் என்று என்னுடைய குடும்பத்துக்கு நான் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன்”

என்று சொல்ல ஏஞ்ஜியருக்குத் தான் ஒரு பேர் வைத்திருப்பதாகச் சொல்கிறாள் ஜூலியா.

The Great Danton என்கிறாள்.

இருவரும் முத்தமிட்டுக் கொன்கின்றனர்.

பார்டனின் பட்டறை

வீட்டின் உள்ளே வருகிறாள் சாரா.

வீட்டினுள் பார்டனும் ஃபாலனும் இருக்கிறார்கள். சாரா வந்ததும் ஃபாலன் எழுந்து செல்கிறார். புதிய மேஜிக் யுத்திகளை செய்யப்போவதாகவும் ஃபாலன் அதற்கு உதவுவதாகவும் பார்டன் சொல்கிறான்.

தான் கர்ப்பமாக இருப்பதாக சாரா சொல்கிறாள். உடனே இதை ஃபாலனிடம் சொல்ல வேண்டும் என்கிறான் பார்டன். அவனை விசித்திரமாகப் பார்க்கிறாள் சாரா.

தான் புதிதாக செய்யப்போகும் Bullet Catch யுத்தியைப் பற்றி சொல்கிறான்.

பயப்படுகிறாள் சாரா.

இது மாதிரி யுத்திகளை செய்து நிறைய சம்பாதிக்கப் போவதாக பார்டன் சொல்கிறான்

“உன்னுடைய மாஸ்டர்பீஸ் என்னவானது?”என்று சாரா கேட்க, “அதைப் பார்க்குமளவுக்கு உலகம் இன்னும் தயாராகவில்லை” என்கிறான்.

“ஆனால இது ஆபத்தானது..” என்கிறாள் புல்லட்டைக் காட்டி

“இது சாதாரணமானது தான்” என்று அது எப்படி சாத்தியம் என செய்து காட்டுகிறான் பார்டன்.

சாராவைத் தன்னை நோக்கிச் சுடச் சொல்கிறான். அவள் அவனைக் குறிவைக்காமல் பின்னால் இருக்கும் கண்ணாடியை குறி வைக்கிறாள். பிஸ்டலை அழுத்த , அதில் இருந்து புல்லட் வெளிப்படுகிறது. அந்த புல்லட்டை சட்டென்று பிடிக்கிறான் பார்டன்.

அது எப்படி என்று சொல்கிறான் பார்டன். புல்லட்டினை பிஸ்டலுக்குள் போட்ட பின் அது சுடாது..என் கையில் உள்ள புல்லட் என்னிடம் ஏற்கனவே இருப்பது என்கிறான்.

இதிலும் ஆபத்து இருக்கிறது..இதிலும் சிலர் இறந்து போயிருக்கிறார்கள்.  என்கிறான் பார்டன்.

இதற்குள் நிஜமாகவே புல்லட்டினை யாரேனும் போட்டிருந்தால் என்கிறான்.

சாரா பயப்பட, அவளை ஆறுதல்படுத்தும் விதமாக ஐ லவ் யூ என்கிறான் பார்டன்.

“சில நாட்கள் நீ என்னை விட மேஜிக்கைத் தான் விரும்புகிறாய். அது நீ சொல்கிற ஐ லவ் யூவில் தெரிகிறது என்கிறாள் சாரா.

 ஏஞ்ஜியர் வீடு

உள்ளங்கையில் துப்பாக்கிக் குண்டினை வைத்துக் கொண்டு அது மறைந்து போகும் வித்தையை செய்து பார்த்துக் கொண்டிருக்கிறான் ஏஞ்ஜியர்.

சிறைச்சாலை

ஏஞ்ஜியர் தன்னுடைய டைரியில் இவ்வாறு எழுதி வைத்திருப்பது பின்னணிக் குரலில் வெளிப்படுகிறது.

விடுதி அறை

‘மேஜிக் கலையின் உண்மையான அர்த்தம் யாருக்கும் தெரியாது’ என பார்டன் எழுதி வைத்திருக்கிறான்.

ஏஞ்ஜியர் ஒரு புகைப்படத்தை எடுத்துப் பார்க்கிறான் அதில் ஜூலியாவின் புகைப்படம் இருக்கிறது. பின்னணிக் குரல் ஒலிக்கிறது.

“ஆனால் அவனுக்கெப்படி சுயத் தியாகம் பற்றித் தெரியும்’

இந்த வாக்கியத்தைப் படித்து முடித்ததும் பார்டன் சிரித்துக் கொள்கிறான்..

“நீ ஒரு முட்டாள்”

என்று முணுமுணுக்கிறான்.

சிறைச்சாலை

பார்டனை நினைத்துப் பார்ப்பது போல ஒரு நொடி வெறிக்கிறான்.

பார்டன் சிந்தனையில் இருக்கிறான்

ஏஞ்ஜியரின் பட்டறை

ஏஞ்ஜியரின் மேஜிக் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு நீதிபதியும் கட்டரும் வருகிறார்கள்.

பத்தடி நீளம்கொண்ட மரச்சாமான் ஒன்றின் முன்னால் வந்து நிற்கின்றனர். இந்த வழக்கு முடிந்ததும் எல்லாப் பொருட்களையும் விலை கொடுத்து வாங்கிக் கொள்ள லார்ட் கால்ட்டோ விருப்பமாக இருக்கிறார் என்கிறார் நீதிபதி.

எல்லாவற்றையும் தாருங்கள், ஆனால் இதனைத் தர வேண்டாம். இது ஆபத்தானது என்கிறார் பத்தடி உயரமுள்ள ஒரு பெட்டியைக் காட்டி. “இது மற்ற உபகரணங்கள் போல அல்ல, மற்ற எல்லாவற்றிலும் தப்பிப்பதற்கான யுத்தி கொடுத்திருப்போம். ஆனால், இதில் அப்படி எதுவுமில்லை. இது நிஜமானது. மாட்டிக் கொண்டால் தப்பிக்க இயலாது. இதனை வடிவமைத்தவர் ஒரு மாயாஜாலக்கரராக இருக்க முடியாது..அவர் ஒரு சூன்யக்கராராக இருக்க வேண்டும்” என்கிறார் கட்டர்.

அந்த உபகரணத்தை அச்சத்துடன் பார்க்கிறார் நீதிபதி.

“எதற்காக இப்படி ஆபத்தோடு விளையாட வேண்டும்” என்று கேட்க

“அவர்கள் மேஜிக் நிபுணர்கள் அப்படித் தான் இருப்பார்கள். அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டியவர்கள். வெளியில் சாதாரணமாக தோற்றமளிக்கிறவற்றுள் பயங்கரங்கள் ஒளிந்து கொண்டிருப்பதைப் போல..” என்கிறார் கட்டர்.

“ஆனால்..இதெல்லாம் ஒரு பார்வையாளர் கூட இல்லாமலா?”

கட்டர் அந்த உபகரணத்தைப் பார்க்கிறார்.

INTER CUT –

Flash Cut ல் ஏஞ்ஜியர் தண்ணீருக்குள் போராடும் காட்சி வந்து போகிறது.

‘ஒரே ஒரு பார்வையாளன் இருந்தார்’ என்கிறார் கட்டர்.

“இந்தத் தண்ணீர் தொட்டி இருவருக்குமே பயங்கராமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது” என்கிறார் கட்டர்.

மேஜிக் ஷோ நடக்கும் அரங்கம்

பார்வையாளர்கள் வரிசையில் பார்டன் அமர்ந்திருக்கிறான்

மேடையில் ஜூலியா நடந்து கொண்டிருக்கிறாள்

‘இந்தப் பெண்ணின் கை கால்களைக் கட்டப்போகும் தைரியசாலிகள் மேடைக்கு வரலாம்’ என்றதும் பார்டனும், ஏஞ்ஜியரும் மேடைக்கு செல்கின்றனர். இப்போது இவர்கள் இருவரும் வேறு ஒரு மாறுவேடத்தில் இருக்கிறார்கள். ஏஞ்ஜியர் இப்போது கால்கள் ஊனமற்று நன்றாக நடக்கிறான.

பார்டன் ஜூலியா கையில் கயிறினைக் கட்டும்போது தடுமாறுகிறான். மேடையில் பக்கவாட்டில் நின்று கொண்டிருக்கும் கட்டர் இதைப் பார்க்கிறார்.

ஜூலியா பார்டனை உற்றுப் பார்க்கிறாள்.

பார்டன் கயிறைக் கட்டுகிறான்.

கால்களை ஏஞ்ஜியர் கட்டிவிட்டு அவளது  காலை லேசாகத் தட்டுகிறான். அவளைப் பெருமையுடன் பார்க்கிறான். ஜூலியாவும் அவனைப் பார்த்து மென்மையாக புன்னகைக்கிறாள்

“நீங்கள் இருவரும் மாலுமிகளா?”

எனக் கேட்கிறார் மேஜிக் நிபுணர்.

இருவரும் இல்லை என்கின்றனர்.

ஜூலியாவை மேலே தூக்குகின்றனர்.

கட்டர் கோடரியையும், ஸ்டாப் வாட்சினையும் எடுத்துக் கொள்கிறார்.

ஜூலியா தண்ணீருக்குள் விழுகிறாள்

ஸ்டாப் வாட்ச் ஓடுகிறது.

மேஜிக் நிபுணர் திரையைச் சுற்றி வருகிறார். பார்வையாளர்கள் பரபரப்பாகிறார்கள்.

ஒரு நிமிடம் தாண்டுகிறது.

என்ன நடக்கப்போகிறது என்று ஆவலாகவும், திகிலாகவும் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள்.

“ஏன் இவ்வளவு நேரம் என்பது போல மில்டன் கட்டரைப் பார்க்கிறார்.

கட்டர் கோடாரியுடன மேடைக்கு ஓடி வருகிறார். திரை தூக்கப்படுகிறது. உள்ளே கைகள் கட்டப்பட்ட நிலையில் ஜூலியா உயிருக்குப் போராடுகிறாள்.

ஏஞ்ஜியரைப் பார்த்து ராபர்ட் என்று அழைப்பது தெரிகிறது.

கட்டர் கோடாரியால் கண்ணாடியை உடைக்கிறார்.

கண்ணாடி உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது.

ஜூலியாவைத் தாங்கிப் பிடிக்கிறான் ஏஞ்ஜியர்.

ஜூலியா இறந்திருப்பது தெரிகிறது.

ஏஞ்ஜியர் ‘ஜூலியா..ஜூலியா’ என்று கத்துகிறான்.

பார்டன் உச்சபட்ச அதிர்ச்சியில் இருக்கிறான்.

பார்டனின் பின்னணிக்கு குரல் கேட்கிறது

“அன்றைய இரவு முழுக்க யோசித்தபடி இருந்தேன். என்னுடைய ஒரு பாதி நான் சாதாரண முடிச்சினைப் போட்டேன் என்றது, மற்றொரு பாதி, லாங்போர்ட் முடிச்சினைப் போட்டதாகச் சொன்னது. என்ன நடந்தது என்பதை என்னால் கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை” என்று கேட்கிறது.

ஏஞ்ஜியரின் பட்டறை

ஏஞ்சியர், கட்டர் இன்னும் சிலரும் அங்கு இருக்கிறார்கள்.

ஒரு மாலுமி நீரில் தப்பித்த பின் ‘சொர்க்கத்திற்கு சென்றது போல இருந்தது; என்று சொன்னதாகச் சொல்கிறார் கட்டர்.

அங்கு வரும் பார்டனிடம் ‘என்ன வேண்டும் பார்டன்?” என்று கட்டர் கேட்கிறார்.

ஜூலியாவின் இறப்புக்கு வருத்தம் தெரிவிக்கிறான் பார்டன்.

‘எந்த முடிச்சைப் போட்டாய்?” என்று கேட்கிறான் ஏஞ்ஜியர்.

‘எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டுச் செல்கிறான் பார்டன்.

பார்டன் செல்லச் செல்ல ‘உனக்குத் தெரியாதா?” தெரியாதா?” என்பதைத் திரும்பத் திரும்பக் கேட்கிறான்

விடுதி அறை

ஏஞ்ஜியர் வீடு

ஜூலியா தண்ணீருக்குள் மரண போராட்டம் நடத்தியது காட்டப்படுகிறது.

வாஷ்பேஷினுக்குள் நிரப்பப்பட்ட நீரினுள் முகத்தை அழுத்தியிருக்கிறான் ஏஞ்ஜியர்.

மூச்சுத்திணறல் தாங்க முடியாமல் போகிறது.

தரையில் வந்து விழுந்து அழுகிறான்.

ஜூலியா போராடியது ஏஞ்ஜியருக்கு நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறது.

குலுங்கி குலுங்கி அழுகிறான்.

விடுதி அறை

ஏஞ்ஜியர் அந்த டைரியைப் படித்துவிட்டு கோபமாகிறான்.

“எப்படி தெரியாமல் போகும்?”

என்று பார்டனின் டைரியைத் தரையில் வீசி எறிகிறான்.

“அவனுக்குத் தெரியும்..நிச்சயம் தெரியும்” என்கிறான்.

சிறைச்சாலை

ஏஞ்ஜியரின் டைரியைப் படித்துவிட்டு சிரிக்கிறான் பார்டன்.

“எப்படித் தெரியாமல் போகும்?” என்று கேட்டுவிட்டு சத்தமாக சிரிக்கிறான்.

ஏனென்றால் ஏஞ்ஜியர் வாழ்க்கை சிக்கலானது, மனிதர்கள் சிக்கலானவர்கள், முடிச்சுகள் சிக்கலானவை” என்கிறான்.

பார்டன் அந்த டைரியைப் பார்க்கிறான்.

பார்டனின் பின்னணிக் குரல் கேட்கிறது

“எனக்கு எப்படித் தெரியாமல் போகும்? என்னுடைய கதையைப் படித்தும் உனக்கு எப்படிப் புரியாமல் போனது?” என்கிறான்.

தெரு – மேஜிக் ஷோ நடக்கும் இடம்

தெருவில் ஆள் நடமாட்டம் தெரிகிறது..  ஒரு கட்டடத்தின் வாசலில் ‘The Professor மேஜிக் ஷோ  என்கிற வரவேற்புத் தட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

அதனுள் பார்வையாளர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். பார்டன் இரண்டு மெட்டல் வளையங்களை ஒன்றிணைக்கும் மேஜிக் வித்தை செய்து காட்டிக் கொண்டிருக்கிறான்.

கூட்டம் ‘போரடிக்கிறது’ என்கிறது.

‘நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது இதைத் தானே’ என பார்வையாளர்கள் முன்பாகத் துப்பாக்கியை நீட்டுகிறான் பார்டன்.

அனைவரும் அச்சத்தோடு பின் நகருகிறார்கள்.

‘என்னைச் சுடுவதற்கு யாருக்குத் தைரியம் இருக்கிறது?’ என்று கேட்கிறான் பார்டன்.

சிலர் முன்னேறி வருகிறார்கள். ஃபாலன் அவர்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருக்கும்போதே, பார்டன் துப்பாக்கியை தயார் செய்கிறான். துப்பாக்கியை யார் கையிலோ தந்துவிட்டு மார்பைக் காட்டியபடி நிற்கிறான்.

துப்பாக்கி பிடித்தவனின் முகம் தெரிகிறது.

அவன் மாறுவேடத்தில் வந்திருக்கும் ஏஞ்ஜிசயர் என்பது பார்டனுக்கு புரிகிறது.

சுதாரிக்கிறான் பார்டன்.

‘நோ..நோ’ என்கிறான்.

ஏதோ விபரீதம் என்பது ஃபாலனுக்கு புரிகிறது.

‘எந்த முடிச்சினைப் போட்டாய் பார்டன்?” என்றபடி துப்பாக்கியை நீட்டுகிறான்.

அதற்குள் ஃபாலன் எஞ்சியரைத் தள்ளிவிடுகிறான்.

துப்பாக்கிக் குண்டு பார்டனின் விரலில் பட்டு ரத்தம் வருகிறது.

ஏஞ்ஜியர் திரும்பிப் போகிறான்.

கூட்டம் அச்சத்தோடு பார்க்கிறது.

சிலர் மட்டும் சிரிக்கிறார்கள்.

‘நான் உண்மையைத் தான் சொன்னேன்’ என்று வலியில் ஃபாலனிடம் கதறுகிறான் பார்டன்.

பார்டனின் விரல்களில் காயம்பட்டிருக்கின்றன. வலியில் துடிக்கிறான். ‘அன்றைய தினத்தை விட காயம் எப்படி மோசமாக மாறியது’ எனக் கேட்கிறாள் சாரா.

‘மீனுட்ம் மேஜிக் ஷோ நடத்தப்போவதாகவும், அதில் புதிய யுத்தியை செர்க்கப்போவதாகவும் சாராவிடம் பார்டன் சொல்கிறான்.

நீதிமன்றம் – பகல்

கட்டர் பார்வையாளர்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கிறார். பார்டன் பார்வையாளர்களைப் பார்க்கிறான். அவன் யாரையோ  தேடுவது தெரிகிறது. கடைசியில் ஃபாலனைப் பார்த்து விடுகிறான். ஃ’பாலன் தனியாக இருக்கிறான்.

நீதிபதி உள்ளே வருகிறார். தீர்ப்பினை வாசிக்கிறார்

ராபர்ட் ஏஞ்ஜியரைக் கொலை செய்த குற்றத்திற்காக சாகும் வரைத் தூக்கிலிட உத்தரவிடுகிறார்.

பார்டன் முகத்தில் சலனம் எதுவுமில்லை.

சிறைச்சாலை

பார்டன் ஃபாலனிடம் பேசிக்கொண்டிருக்கிறான்.

“அவளை அழைத்து சென்று விட்டார்களா?” என்று ஃபாலனிடம் கேட்க அவன் தலையாட்டுகிறான். வேதனையில் கண்களை மூடும் பார்டன், கண்களைத் திறந்து “அவனிடம் நான் மறுபரிசீலனை செய்துவிட்டேன் என்று சொல்” என்று ஒவன்ஸின் கார்டினைத் தருகிறான்

பார் – இரவு

பார் ஒன்றில் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்கிறான் ஏஞ்ஜியர். அவனுடைய கிளாசின் அடியில் ஸ்டிக்கர் ஒன்று ஓட்டப்பட்டிருக்கிறது. எதில் எதோ எழுதப்பட்டிருக்கிறது. சுற்றும் முற்றும் பார்க்கிறான் ஏஞ்ஜியர்.

ஒரு மேஜையில் கட்டர் அமர்ந்திருக்கிறார். அவரிடத்தில் எழுந்து வருகிறான் ஏஞ்ஜியர்.

“ஒரு க்ளாஸுக்கு அடியில் எனக்கு வேண்டிய பதில் கிடைக்கும் என்று நான் நினைத்ததில்லை”

என்று ஏஞ்ஜியர் சொல்ல,

கட்டர் அதற்கு ஏஞ்ஜியரிடம் மீண்டும் மேஜிக் ஷோ நடத்துமாறும் அதற்கு இடம் பார்த்திருப்பதாகவும் சொல்கிறார்.

“எதற்காக எனக்கு நீங்கள் இதைச் செய்கிறீர்கள்?” என ஏஞ்ஜியர் கேட்க,

“கண் முன்னால் ஜூலியா தண்ணீர்த் தொட்டியில் விழுந்து இறந்து போனபிறகு யார் என்னைப் போன்ற பொறியாளனை வேலைக்கு எடுப்பார்கள்?” என்கிறார்.

“அதற்கு நீங்கள் காரணமில்லை. பார்டன் போட்ட முடிச்சு தான் காரணம்”

“அவனுடைய கெட்ட நேரம். அவன் கையில் புல்லட் துளைத்துவிட்டதாம்”

“தண்ணீருக்கடியில், நுரையீரல் முழுக்க தண்ணீர் நிரம்ப..அந்த மரணம் எப்படி இருந்திருக்கும் கட்டர்? அவள் எப்படி அனுபவித்திருப்பாள்?””

“எனக்கு ஒரு பழைய மாலுமியைத் தெரியும். அவர் தண்ணீரில் மூழ்கியதை வீட்டுக்கு சென்று வந்தது போல இருந்தது” என்றார்.

இந்த பதில் ஏஞ்ஜியருக்கு சற்று ஆசுவாசம் தருகிறது.

“பார்டன் அன்று எந்த முடிச்சினைப் போட்டான் கட்டர்?

“அது அவனுக்கேத் தெரியவில்லை” என்கிறார் கட்டர்.

பட்டறை – பகல்

கட்டரும் ஏஞ்ஜியரும் மேஜிக் நடக்கப்போகும் ஒரு ஸ்டுடியோவுக்குச் செல்கின்றனர். வெள்ளையடித்தால் நன்றாக இருக்கும் என்கிறார் கட்டர். ‘உதவியாளர் ஒருவர் வேண்டும்’ என்கிறார் எஞ்சியர். ‘ஏற்பாடு செய்வதாக கட்டர் சொல்கிறார். The Great Danton என்று பெயர் வைத்துக் கொள்ளப்போவதாக ஏஞ்ஜியர் சொல்கிறார்.

பட்டறை – பகல்

புறாவை வைத்து செய்யப்போகும் மேஜிக் ஒன்றைத் தயார் செய்கிறார் கட்டர். அதைப் பார்த்ததும் ‘புறாக்களைக் கொல்லும் வித்தை வேண்டாம் ‘ என்கிறான் ஏஞ்ஜியர். ‘மேஜிக் நிபுணரின் கை கறைபடாமல் இருக்க முடியாது’ என்கிறார்.

ஒரு பெண்ணை அழைத்து வருகிறார் கட்டர். அவளை வென்ஸ்காம்ப் என்று அழைக்கிறார். அந்தப் பெண்ணை பீரோ மாதிரியான ஒன்றினுள் போகச் சொல்கிறார். அவள் அங்கு அமர்ந்திருக்கும் ஏஞ்ஜியரைப் பார்க்கிறாள்.

‘நீ இதற்குள் இறங்க வேண்டும்; என்று குனிந்து எதையோ திறக்கிறார். அவள் அதில் இறங்குகிறார். “முடிந்தவரை மூச்சுவிட்டுக் கொள்” என்கிறார்.

ஏஞ்ஜியரும் கட்டரும் பேசிக்கொள்கிறார்கள்.

“அவள் அனுபவசாலி அல்ல. ஆனால், அழகான பெண்கள் பார்வையாளர்களின் கவனத்தைத் திசைதிருப்ப உதவுவார்கள்” என்கிறார்.

பெட்டிக்குள் இருந்து தும்மல் போடும் சத்தம் கேட்கிறது.

“அவளை வெளியே வரவைக்க வேண்டும்” என்கிறார் ஏஞ்ஜியர். 

சாராவின் வீடு

சாராவுக்கு முன்பு பார்டன் அமர்ந்திருக்கிறான். பார்டன் கையில் காயம்பட்டிருக்கிறது. ஏற்கனவே அடிபட்ட காயமாக இருக்கிறது.

“அடிபட்ட இடத்திலேயே அடிபட்டிருக்கிறது. அந்தக்காயம் ஆறிப்போயிருந்தது, இப்போது எப்படி அதே இடத்தில் புதிதான காயம் போல மாறியிருக்கிறது? எப்படி இந்தக் கையை வைத்துக் கொண்டு மேஜிக் ஷோ நடத்துவாய்?” என்று கேட்க

“எனக்கென்று ஒரு யுத்தியினைக் கண்டுபிடிப்பேன்” என்கிறார் பார்டன்.

மேஜிக் ஷோ நடக்கும் இடம் – பகல்

ஏஞ்ஜியரின் உடம்பில் மேஜிக்கிற்குத் தேவையான அணிகலன்களை கட்டர் மாட்டுகிறார்.

மேடையில் நிற்கும் ஏஞ்ஜியர் தன்னுடைய தொப்பி போன்றவற்றை பெண் உதவியாளர் ஒலிவியாவிடம் தர, அவள் சிரித்துக் கொண்டே வாங்குகிறாள்.

“எனக்கு இரண்டு தன்னார்வலர்கள் வேண்டும்” என பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் திசையை நோக்கி ஏஞ்ஜியர் கேட்கிறார். ‘மிஸ்டர் மெரிட் வருகிறீர்களா?” எனக் கேட்க,

பார்வையாளர் அமரும் இடத்தில் எல்லாம் காலியாக இருக்க, படித்துக் கொண்டிருந்த பேப்பரை கீழே வைத்துவிட்டு மெரிட் எழுகிறார்.

கூண்டுக்குள் உள்ள புறாவின் கால்களில் நூலினைக் கட்டுகிறார் கட்டர். அதனைக் கவனமாகப் பார்க்கிறார் எஞ்சியர்.

மேடைக்கு ஒரு புறாக்கூண்டினை எடுத்து வருகிறாள் ஒலிவியா. மேடை மேல் மெரிட் ஏறி வருகிறார். பக்கவாட்டில் கட்டர் நின்று கொண்டிருக்க, அவரிடமிருந்து எதையோ வாங்கி வருகிறார் ஏஞ்ஜியர். ஏஞ்ஜியரின் கையில் கூண்டு ஒன்றினைத் தந்து அதில் புறாவை வைக்கிறார். இப்போது கூண்டினை நசுக்க வைக்கிறார்.

மேடையில் அதன் தொடர்ச்சியை செய்து காட்டுகிறார் எஞ்சியர். நொடி நேரத்தில் புறா காணாமல் போக, அசந்து போகிறார் மெரிட்.

புறா காணாமல் போனதின் வியப்பில் இருந்து ஏஞ்ஜியர் இன்னும் மீளாமல் இருக்கிறார்.

புறாவை மீண்டும் கொண்டு வருகிறார் எஞ்சியர்.

மெரிட் ஆச்சரியத்தோடு இருக்கிறார்.

நூலால் கட்டபப்ட்ட புறாவை எடுத்து எஞ்சியரின் கையில் கொடுக்கிறார் கட்டார். ‘நிச்சயம் ஷோ கிடைக்கும்’ என்கிறார்.

எஞ்சியருக்கு ஷோ நடத்துவதற்கான அனுமதியைத் தருகிறார் மெரிட். “நீங்கள் கூட்டம் செர்க்கவிழலி என்றால், புல்லட் கேட்ச், வாட்டர் எஸ்கேப் செய்பவர்கள் கூட்டத்தை ஈர்த்து விடுவார்கள் என்கிறார் மெரிட்

அவையெல்லாம் மட்டமான யுத்திகள் என்கிறார் கட்டார்.

மேஜிக் ஷோ நடக்கும் அரங்கம் – பகல்

The Great Danton என்கிற விளம்பர வாசகங்கள் அரங்கத்தின் வாசலில் வைக்கப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்கள் உள்ளே வருகின்றனர். மேடையில் மேஜிக் சாகசம் நிகழ்த்தி முடித்தபின் தொப்பியை ஒலிவியாவிடம் ஏஞ்ஜியர் தருகிறார். பார்வையாளர்களில் இருவரின் பொருள் மாறி வந்திருப்பதை மேடையில் இருந்தபடி சொல்லி கை தட்டி வாங்குகிறார்.

அடுத்த சாகசத்திற்காக மேடையின் பக்கவாட்திற்குச் செல்கிறார். அவன் மேல் அதற்கான இயந்திரத்தைப் பொருத்தி கோட் போட்டு விடுகிறார் கட்டர்.

“நீ வரும்போது இதைக் கொண்டாட ஷாம்பெயின் தயாராக இருக்கும்’ என்கிறார் கட்டர்.

புறாவோடு மேடைக்குப் போகிறார் ஏஞ்ஜியர். கூண்டோடு வருகிறாள் ஒலிவியா.

பார்வையாளர்களில் இருந்து இரண்டு பேரை அழைக்கிறார் ஏஞ்ஜியர்.

ஒரு ஆணும் பெண்ணுமாக மேடைக்கு வருகிறார்கள்.

இருவரையும் கூண்டினைப் பிடிக்கச் சொல்கிறார் ஏஞ்ஜியர்.

அப்போது தான் தெரிகிறது வந்திருப்பது மாறு வேடத்தில் இருக்கும் பார்டன் என்று.

அதிர்ச்சியாகிறார் ஏஞ்ஜியர்.

சுதாரிப்பதற்குள் கூண்டின் கம்பியினை இழுத்து விடுகிறான் பார்டன்.

கூண்டு நசுங்கியதில் உடன் இருந்த பெண்ணின் கை மாட்டிக் கொள்கிறது. ரத்தம் வருகிறது. அவள் கத்துகிறாள்.

பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.

பார்டன் திரும்பிப் போகிறான்.

அரங்கம்

உடைமாற்றிக் கொண்டிருக்கிறான் ஏஞ்ஜியர். ‘இனி உங்களது ஷோ இங்கு நடக்காது. நாளை காலை உங்கள் பொருட்கள் இங்கிருந்தால் எரித்து விடுவேன். ஷோ என்கிற பெயரில் கைகளை முறிக்கிறீர்கள்’ என்று கோபப்படுகிறார் மெரிட்.

‘அடுத்த ஷோவுக்கு புது யுத்தியைப் பிடிப்பதாகச் சொல்கிறார் கட்டர்.

பெயரை மாற்ற வேண்டும் என்கிறார்.

‘இந்தப் பெயரை மாற்ற முடியாது’ என்கிறான் ஏஞ்ஜியர்.

“ஆல்பர்ட் ஹாலில் நடக்கப்போகும் ஒரு ஷோவில் பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கலந்து கொள்கிறார்கள். அதைப் போய்ப் பார்’ என்கிறார் கட்டர்.

ராயல் ஆல்பெட் ஹால் – மதியம் – வெளியே

பெரிய அரங்கத்தினுள் உள்ளேயும் வெளியேயும் ஆட்கள் போய்க் கொண்டு வந்து கொண்டும் இருக்கிறார்கள்  அங்கங்கு விளம்பரங்கள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. அந்த அரங்கத்தில் நீராவி இஞ்சின் நிற்கிறது. அதைப் பார்த்துக் கொண்டே போகிறார் ஏஞ்ஜியர்.

ஆல்பர்ட் ஹால் – லாபி – மதியம்

அங்கங்கு நிற்கும் மாடல் உபகரணங்களை சுவாரஸ்யம் இல்லாமல் பார்த்தபடி போகும் ஏஞ்ஜியர் அங்கு மின்சாரத்தை பற்றிய மாடலைப் பார்த்ததும் ஆச்சரியமாகிறான்.

டிக்கெட் விற்பவர்  ஏஞ்ஜியரிடம் “நீங்கள் எதிர்காலத்தை அறிய விரும்புகிறீர்களா? உலகத்தை மாற்றப்போகும் இருவர் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார். இனி கண்டங்களாக பிரிந்திருப்பது இருக்கப்போவதில்லை. சுதந்திரமாக, சுத்தமாக இருக்கப்போகிறது. உலகத்தின் ரகசியங்களுக்கு விடை கிடைக்கப்போகின்றன.

அங்குள்ள போஸ்டரில் உயரமான, பார்க்க புத்திசாலித் தனமான தோற்றம் கொண்ட ஒருவர் இருக்கிறார். அதில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது

THE WONDERS OF ‘ALTERNATIVE CURRENT” …NIKOLA TESLA

ஆல்பர்ட் ஹால் – உள்ளே

ஹால் முழுவதும் இருட்டாக இருக்கிறது. எஞ்சியர் ஒரு நீல நிற லைட்டினைத் தொடர்ந்து தனக்கான இடத்தில் அமருகிறான். மேடையில் நீளமான ஒரு இருப்புக் கம்பியில் ஸ்டீல் பந்துகள் இருக்கின்றன. அதில் இருந்து மின்சாரம் பாய்ந்து மற்றொரு புறத்தில் இருக்கும் பந்துகளில் பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒருவர் நடந்து அந்த  மின்சார பாய்ச்சலுக்கு இடையில் நடந்து வருகிறார். எல்லோரும் அதிசயமகாப் பார்க்கிறார்கள். அவர் டெஸ்லா. ஆனால் ஏஞ்ஜியர் மேடையில் இருந்து தூரமாக அம்ர்ந்திருபப்தால் அவனால் டெஸ்லாவை தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

“இது மாதிரியான அமைப்பினை வைத்துக் கொண்டு என்னால் ஒரு முழு நகரத்துக்கும் இரண்டே வருடங்களில் மின்சார வசதியினை ஏற்படுத்தித் தர முடியும்” என்கிறார்.

எல்லோரும் சிரிக்கிறார்கள்.டெஸ்லா பைத்தியக்காரராக இருக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

“மிஸ்டர் எடிசனின் நேரடியான மின்சார அமைப்பு தவறாகிவிட்டது. அது ஆபத்தனாதும் கூட.ஆனால் , என்னுடையது” என்று சொல்ல

பார்வையாளர்களில் இருந்து ஒருவர் எழுந்து “நீ ஒரு ஃபிராடு” என்கிறார். பாதுகாப்பு குறித்து வாக்குவாதம் வந்து சண்டை ஏற்படுகிறது.

மேடையில் ஏலியும், இரண்டு போலிஸ்காரர்களும் நிற்கிறார்கள்.

ஏலி மைக்கினில் சமாதானம் சொல்ல, போலீஸ்காரர்கள் இது தக்க பாதுகாப்பு இன்றி நடக்கிறது என்கின்றனர்.

பாதுகாப்பு பற்றி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த பார்வையாளன் , ‘இது வெடிக்கப்போகிறது’ என்று கத்துகிறான்.

பார்வையாளர்கள் பயத்தோடு கலைகின்றனர்.

ஏஞ்ஜியர் அங்கே பார்டனைப் பார்க்கிறான். ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது.

பார்டனைப் பார்த்துக் கொண்டே ஏஞ்ஜியர் அங்கிருந்து எழுகிறான்.

அரங்கத்தில் இருந்து வெளிவரும் பார்டனை அவனையுமறியாமல் பின் தொடர்கிறான் ஏஞ்ஜியர். 

தெரு – பகல்

பார்டன் சில தெருக்களைக் கடந்து போகிறான். ஏஞ்ஜியர் அவனைப் பின்தொடர்கிறான். கடை வீதி ஒன்றுள் கைக்குழந்தையான ஜெஸ்ஸுடன் சாரா நிற்கிறாள்.பார்டன்  குழந்தையைக் .கொஞ்சுகிறான்..  சாராவிடம் ‘ஐ லவ் யூ’ என்கிறான்.

‘இன்று நீ உண்மையாக சொல்கிறாய்’ என்கிறாள் சாரா.

இவர்களின் சந்தோஷமான சந்திப்பை எஞ்சியரால் ஏற்றுக்கொள்ள ம்டுயயவில்லை.

‘நான் அவர்களிடத்தில் சந்தோஷத்தைப் பார்த்தேன். அது எனக்குக் கிடைத்திருக்க வேண்டிய மகிழ்ச்சி;

விடுதி இரவு

ஏஞ்ஜியர் தன்னுடைய டயரியில் எழுதுகிறான். பார்டனின் டைரியைப் பார்க்கிறான்.

“அவனுடைய டைரியைப் படிக்கையில் “அவனுடையதை படிக்கையில் நான் பொறாமைப்படும் அளவுக்கு அவன் வாழவில்லை என்று புரிந்தது” என்கிற ஏஞ்ஜியரின் குரல் கேட்கிறது.

பார்டனின் டைரியைப் படிக்கும் ஏஞ்ஜியர், “அவன் குடும்ப வாழ்க்கைக்காக ஏங்குகிறான். உடனேயே சுதந்திரத்தினை விரும்புகிறான். அவன் மனது இரண்டாகப் பிரிந்திருக்கிறது”.என்கிறான்.

சிறைச்சாலை – பகல்

பார்டன் கட்டிலில் உட்கார்ந்திருக்கிறான். ஏஞ்ஜியரின் டைரியைப் படிக்கிறான்.

எஞ்சியரின் பின்னணிக்கு குரல் கேட்கிறது

“அவனுடைய ஆன்மா அமைதியிழந்திருக்கிறது. அவனுடைய மனைவியும், குழந்தையும் அவனுடைய கொந்தளிக்கும் இயல்பைப் பார்த்து அச்சத்தில் இருக்கிறார்கள்..”

இதைப் படித்ததும் பார்டன் அழுகிறான். அவன் அந்த டைரியைக் கீழே போட்டுவிட்டு அறையின் வாசலுக்குப் போகிறான்.

அங்கிருந்து காவலாளியை அழைக்கிறான்

“என்ன வேண்டும் பிரஃபசர்?”

கேட்க, “பேப்பரும், பென்சிலும்” என்கிறான்

சிறைச்சாலை நூலகம்

பார்டன் ஒரு மேஜையில் அமர்ந்திருக்கிறான்.

ஒரு மேஜையின் மேல் எதோ எழுதிக் கொண்டிருக்கிறான் பார்டன். அப்போது அங்கு வரும் காவல் அதிகாரி ஒருபார் பார்டனிடமிருந்து பேப்பரைப் பிடுங்கி அதில் உள்ளதை வாசிக்கிறார்.

‘ஒருநாள் பிரஃபசரின் அத்தனை யுத்திகளையும் கற்றுக்கொள்வேன்’ என்பதாக அதில் எழுதப்பட்டிருக்கிறது.

வாசிதததும் பேப்பரைக் கசக்குகிறார் காவல் அதிகாரி.  ‘இதெல்லாம் வீணான யுத்திகள்’. இங்கிருந்து தப்பிக்க முடியாது; என வம்பிழுக்கிறார்.

‘சொல்ல முடியாது  எது வேண்டுமானலும் நடைக்கும் ஒருநாள் உன்னைப் பார்த்து கவனமாகப் பார்க்கிறாயா?” எனக் கேட்பேன் என்றபடி சின்ன பந்தினை மூன்று முறை தூக்கிப் போடுகிறார்.

மூன்றாவது முறை பந்து கீழே விழுகிறது. எதிர்பாராமல் விழுந்த பந்தினை எடுக்க கீழே குனிகிறான் பார்டன்.

பார்டன் பந்தினைத் தவறவிட்டதைப் பார்த்து காவலதிகாரி சிரித்து ஏளனம் செய்கிறார்.

பார்டன் அங்கிருந்து எழுந்து போகிறான். பார்டனை எச்சரித்தவாறே அவன் பின்னால் சில அடிகள் எடுத்து வைக்கும் அதிகாரி. திடிரென எதோ தடுக்குய் கீழே விழுகிறான்.

காவல் அதிகாரி காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது.

அங்கிருக்கும் மற்ற கைதிகள் இதைப் பார்த்து சிரிக்கின்றனர். கை தட்டுகின்றனர்.

பார்டனும் சிரிக்கிறான். அவனை மற்ற போலீஸ்காரர்கள் பிடிக்கின்றனர். காவல் அதிகாரி கோபத்தில் கத்திக் கொண்டிருக்கிறார்.

ஏஞ்ஜியரின் பட்டறை – பகல்

நாளிதழ் ஒன்றில் The Professor மேஜிக் ஷோ பற்றிய விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஏஞ்ஜியர்.

தன்னுடைய முடியில் எண்ணெய் தெரித்துக் கொண்டிருக்கிறார். ஒட்டு மீசையை எடுத்து வைத்துக் கொள்கிறார். அவருக்குப் பின்னால் ஒலிவியா வந்து நிற்கிறாள்.  அவள் வந்ததும் நாளிதழை மறைக்கிறார்.

“நீங்கள் பார்டனின் ஷோவிற்கு போகிறீர்களா? அவர் தான் நஷ்ட ஈடு பெற்று விட்டாரே?” என்கிறாள்.

“என்னுடைய குடும்பமும் அவனது இரண்டு விரல்களும் ஒன்றா?” எனக் கேட்கிறார்.

அவள் ஏஞ்ஜியருக்கு மாறுவேடம் போட்டு விடுவதாகச்  சொல்கிறாள்.

ஏஞ்ஜியர் ஆச்சரியமாகிறார்.

மேஜிக் ஷோ நடக்கும் அரங்கம்

பார்டன் ஒரு சின்ன அரங்கில் மேஜிக் ஷோ நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். பார்வையாளர் வரிசையில் வந்து அமர்கிறார் மாறுவேடத்தில் இருக்கும் ஏஞ்ஜியர்.

“எனக்கு ஒரு வாலண்டியர் வேண்டும்” என்றதும் நிமிர்ந்து உட்காருகிறார் ஏஞ்ஜியர்.

பார்வையாளர்கள் வரிசையில் வந்து அமர்கிறான் மாறுவேடத்தில் இருக்கும் ஏஞ்ஜியர்.

‘எனக்கு ஒரு வாலண்டியர் வேண்டும்’ என்றதும் நிமிர்ந்து உட்காருகிறான் ஏஞ்ஜியர்.

ஏஞ்ஜியரின் பட்டறை 

ஏஞ்ஜியர் யோசனையோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறான். என்ன ஆச்சு? என்கிற ஒலிவியாவின் குரல் கேட்கிறது. ஒரு சேரில் அமர்ந்து தன் ஒட்டு தாடி மீசையைப் பிரித்துக் கொண்டிருக்கிறான் ஏஞ்ஜியர்.

அங்கு வரும் ஒலிவியா “என்ன ஆச்சு?” என்று கேட்கிறாள்.

“நீங்கள் அவனைக்  காயப்படுத்தினீர்களா?” என்றபடி மதுக்கோப்பையை நீட்டுகிறாள்.

“என்ன ஆச்சு?” என்று  மீண்டும் கேட்கிறாள்.

ஏஞ்ஜியர் அவளைப் பார்க்கிறான்.

சிறிய அரங்கம் – மாலை 

அப்போது அங்கு கட்டர் நின்று கொண்டிருக்கிறார். அவர் மேடையையேப் பார்த்துக் கொண்டிருக்கிறார்

ஏஞ்ஜியரின் பின்னணிக்குரல் கேட்கிறது

“இதுவரை நான் பார்த்ததிலேயே அதிசயமான மேஜிக் அது” என்கிறார்.

பார்டன் ஒரு சிறிய ரப்பர் பந்தினை எடுத்து பார்வையாளர்கள் வரிசையில் உள்ள ஒருவர் மீது எறிகிறான். அவர் அதனைப் பிடிக்கிறார்.

பார்வையாளர் அதனைத் திரும்பவும் பார்டனிடம் எறிகிறார்.

“இது ரப்பர் வந்து தான் ஆனால் சாதாரண ரப்பர் பந்து அல்ல. அவனிடம் புதிய தந்திரம் இருக்கிறது. என்கிற ஏஞ்ஜியரின் குரல் கேட்கிறது.

மேடை மேல் பீரோ போன்றிருக்கும் ஒன்றினைத் திறந்து காட்டுகிறான் பார்டன்.

பின்பு மேடையின் மற்றொருபுறம் இருக்கும் அதே போன்ற பீரோவினைத் திறந்து , அதன் முன் நின்று ரப்பர் பந்தினைத் தரையில் போட்டு பிடிக்கிறான்.

பார்டன் ரப்பர் பந்தினைக்கீழே போட்டுவிட்டு, பீரோவுக்குள் சென்று கதவை மூடிக் கொள்கிறான்.

மேடையில் யாருமில்ல. அந்த பந்து மட்டும் துள்ளிக் கொண்டே இருக்கிறது. அது துள்ளி இரண்டாவது பீரோவுக்கு அருகில் செல்லும்போது சாத்தியமில்லாத ஒன்று நடந்தது.

அப்போது அந்த பீரோவின் கதவு திறந்து பாடன் வெளியே வந்து அந்த பந்தினைப் பிடிக்கிறான்.

கட்டார் பார்டனையே பார்க்கிறார். பார்வையாளர்கள் நம்பமுடியாமல்; பார்த்துவிட்டு பின்னர் கை தட்டுகிறார்கள்.

ஏஞ்ஜியரின் பட்டறை – பகல்

ஏஞ்ஜியர் கட்டரிடம் பேசிக்கொண்டிருக்கிறான்

“பார்வையாளர்கள் எப்படி கைதட்டினார்கள்” என்று ஏஞ்ஜியர் கேட்க “அவர்களிடம் அதிக உற்சாகம் இல்லை” என்கிறார் கட்டர்.

சிறிய அரங்கம்- பகல்

ஏஞ்ஜியர் மாறுவேடத்தில் இருக்கிறார். பலமாகக் கைத்தட்டுகிறார். பார்டன் அந்த பந்தினை மாதொரு முறை துள்ள விட்டுவிட்டு குனிந்து மரியாதை செய்துவிட்டு உள்ளே போகிறான். மக்கள் கைத்தட்டுகிறார்கள்.

ஏஞ்ஜியரின் பட்டறை பகல்

ஏஞ்ஜியர் கட்டரை நோக்கித் திரும்புகிறான்.

பார்டன் சிறந்த மேஜிக் நிபுணன்., ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம் தான் அவனுக்குத் தெரியவில்லை என்கிறார் கட்டர்.

அவனிடம் புதிய தந்திரம் இருக்கிறது. என்கிறான்

பார்டன் தன்னைப் போலவே ஒருவனை நடிக்க வைத்துள்ளான் என்கிறார் கட்டர்.

அப்படியிருக்க வாய்ப்பு குறைவு என்கிறான் ஏஞ்ஜியர்.

தன்னுடைய விரல்கள் துண்டாடியது தெரியாமல் கையுறை போட்டு மறைந்திருந்தான். இரண்டவாது வந்தவனும் கையுறை போட்டிருந்தான். நான் அதனைப் பார்த்தேன் என்கிறாள் ஒலிவியா.

இதைக் கேட்டு தான் நினைத்தது சரியாகிவிட்டது என்பது போல சிரிக்கிறான் ஏஞ்ஜியர். ‘நான் அவனுடைய யுத்தியைக் களவாடப்போகிறேன்’ என்கிறான் ஏஞ்ஜியர். ‘அப்படி செய்யாதே. அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கு. அலல்து அவன் ஒய்வுகாலம் வரை பொறுத்திரு” என்கிறார். “என்னுடைய வாழ்க்கையைக் கெடுத்தவன் அவன். அவனிடம் திருடுவதில் தவறில்லை” என்கிறான் ஏஞ்ஜியர் .

“உன்னைப் போல ஒருவனைக் கண்டுபிடிப்பது என் பொறுப்பு’ என்கிறார் கட்டர்..

‘என்னை நன்றாகப் பார்த்துவிட்டு என்னைக் கண்டுபிடித்து விடுங்கள்’ என்கிறார் எஞ்சியர்.

விடுதி – இரவு

பார்டனின் டைரியில் இருந்து சில குறிப்புகளை எடுத்துக் கொள்கிறான் ஏஞ்ஜியர். மழை பெய்வதும், மின்னல் அடிப்பதும் விடுதிக்குள் பிரதிபலிக்கிறது. உணவு விடுதியில் பணியாளர்களைத்  தவிர  யாரும் இல்லை. அப்போது ஏலி அங்கு வருகிறான். டெஸ்லாவை  ஏஞ்ஜியர் சந்திக்க சம்மதித்துவிட்டார் என்று சொல்கிறான்.

ஏஞ்ஜியர் கையில் இருக்கும் டைரியை வாங்கிப் பார்க்கிறான் ஏலி. அதைத் திரும்ப வாங்கிக் கொள்கிறான் ஏஞ்ஜியர். அது திருடப்பட்ட டைரி என்கிறான் ஏலி.

அதில் உள்ள ரகசியங்களைக் கண்டுபிடித்ததாலேயே தான் அங்கு வந்திருப்பதாகச் சொல்கிறான் ஏஞ்ஜியர்.

ஏலி ஏஞ்ஜியரைத் தன்னுடன் வருமாறும், அவர்கள் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டப்போவதாகவும் சொல்கிறான்.

குன்று– இரவு

ஏஞ்ஜியரும் , ஏலியும் இரவு நேரத்தில் நடந்து வருகிறார்கள்.

டெஸ்லா அந்த நகரத்துக்கே மின்சாரம் கொடுத்ததையும், அதனால் தான் அவர்களால் ஆய்வு செய்ய முடிகிறது என்றும் சொல்கிறான் ஏலி.

நகரத்தில் அனைவரும் தூங்கிய பிறகே ஆராய்ச்சி தொடங்கும் என்றும் ஏனென்றால், யாரையும் கலவரப்படுத்த டெஸ்லா விரும்புவதில்லை என்றும் ஏலி கூறுகிறான்.

அப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே சுற்றிலும் வெளிச்சம் வருகிறது.

தன்னைச் சுற்றிப் பார்க்கிறான் பார்டன்.

அங்கு பெரிய பல்புகள் தரையில் வைக்கப்பட்டிருக்கின்ரான. அதிலிருந்து தான் வெளிச்சம் வருகிறது என்பதை பார்டன் புரிந்து கொள்கிறான்.

தரையில் இருந்து ஒரு பல்பைத் தூக்குகிறான் ஏலி.

உடனே பல்பு அணைகிறது. அதனை ஏஞ்ஜியரின் கையில் தருகிறான்.

மீண்டும் அந்த பல்பைத் தரையில் வைக்க, அது எரிகிறது.

ஒயர்கள் இல்லாமல் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெனரேட்டர் வசதியோடு பல்புகள் எப்படி எரிகின்றன என்பது ஏஞ்ஜியருக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

“கடைசியில் டெஸ்லா என்னைப் பார்க்க சம்மதித்து விட்டார்’ என குரல் ஒலிக்கிறது.

பரிசோதனைக் கூடத்தினுள் உருளை வடிவ இயந்திரம் ஒன்றினில் இருந்து பல மின்னல்கள் வெளிவருகின்றன.

அதன் நடுவே  திடிரென்று தோன்றுகிறார் டெஸ்லா. அப்படியே நடந்து வருகிறார்.

ஏஞ்ஜியரிடம் வந்து ‘உங்களுடைய ஷோவைப் பற்றி ஏலி பலமுறை என்னிடம் புகழ்ந்து பேசியிருக்கிறான்’ என்றபடி கைகுலுக்குகிறார். அப்படியே கையைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையை நீட்டச் சொல்கிறார்.

அந்தக் கையில் பெரிய பல்பு ஒன்றினை ஏலி கொடுக்கிறார்.

ஏஞ்ஜியரின் கைக்கு பல்பு போனதும் அது சட்டென்று எரிகிறது.

‘எப்படி எந்தக் கனெக்ஷனும்  இல்லாமல் எரிகிறது?’  எனக் கேட்கிறார் ஏஞ்ஜியர்.

‘நம்முடைய உடம்பில் உள்ள மின்சார சக்தியால்” என்கிறார் டெஸ்லா.

‘நீங்கள் சாப்பிட்டீர்களா?” எனக் கேட்கிறார் டெஸ்லா.

சாப்பிடும் இடம் – காலை

ஏஞ்ஜியர், ஏலி, டெஸ்லா மூவரும் அருமையான இயற்கை சூழ்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டு சாண்ட்விட்ச்கள் சாப்பிடுகிறார்கள்.

ஏஞ்ஜியர் புதிய இயந்திரத்தை செய்து தரும்படி கேட்கிறான். டெஸ்லா ‘நீங்கள் ஒரே விஷயத்தையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்கிறார்.. ‘நீங்கள் ஒரே விஷயத்தை நினைத்துக் கோடி இருப்பதில்லையா? என்று ஏஞ்ஜியர் கேட்க, “நான் அபப்டித் தான் ஆரம்பத்தில் இருந்தேன்..இப்போதும் ஆப்டித்தன “ என்று சொல்ல, “அப்படிஎன்றால் உங்களுக்கு என்னைப் புரியும்” என்கிறார். “எனக்குப் புரிகிறது. ஆனால், இந்த இயந்திரம் உங்களை நாசமாக்கிவிடும்” என்கிறார்.

“ஆனால் எனக்கு அது வேண்டும்” என்று ஏஞ்ஜியர் சொல்ல, 

“என்னுடைய கண்டுபிடிப்பை பயன்படுத்திக் கொள்ள எவ்வளவு பணம் தருவாய்” எனக் கேட்கிறார் டெஸ்லா..

“பணம் ஒரு பிரச்சனையே இல்லை” என்கிறான் ஏஞ்ஜியர்.

“இதை மறந்திவிடு” என்கிறார் டெஸ்லா மீண்டும்.

ஏஞ்ஜியர் அவரிடம் சமாதானமாக பேசுகிறார்.

டெஸ்லா கடைசியில், “நான் ஏற்கனவே இந்த இயந்திரத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டேன். நீங்கள் இங்கே இருந்து மலையின் அழகை ரசியுங்கள். இதனை செய்து முடிக்க நாளாகும்” என்கிறார் டெஸ்லா.

பார் – இரவு

ஒலிவியா, ஏஞ்ஜியர், கட்டர் மூவரும் பாரினுள் வருகிறார்கள். அங்கு ஜெர்ரி ரூட் என்பவனை அறிமுகம் செய்து வைக்கிறாள். ஜெர்ரி பார்ப்பதற்கு ஏஞ்ஜியரின் சாயலில் இருக்கிறான்.

ஏஞ்ஜியரிடம் ஜெர்ரி குடிபோதையில் கோமாளித்தனமானவும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்கிறான்.

‘இவனை ஒரே மாதத்தில் உன்னுடைய சகோதரன் போல உருமாற்றுகிறேன் என்கிறார் கட்டர்

“சகோதரன் போல அல்ல, என்னைப் போல..அவன் தான் நான்..நான் தான் அவன்” என்கிறான் ஏஞ்ஜியர்

தெரு – பகல்

ஜெஸியின் கைபிடித்து சாராவும் பார்டனும் நடந்து வருகிறார்கள்.

அங்கு வரிசையாக வீடுகள் உள்ளன.

ஓரிடத்தில் நின்று ஜெஸ்ஸிடம் குனிகிறான் பார்டன்.

தன் விரலுக்கிடையில் ஒரு சாவியை வரவழைக்கிறான்.

அது அவர்கள் வாங்கியிருக்கும் புதுவீடு என்று சொல்ல சாரா சந்தோஷப்படுகிறாள்.

மேஜிக் ஷோ நடக்கும் ஒரு அரங்கம்

மேடையில் இரண்டு பீரோ அமைப்புள்ள அறைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஏஞ்ஜியரும், ஒலிவியவும் ஒத்திகைப் பார்க்கின்றனர்.

ஒரு அறையைத் திறந்து உள்ளே நுழைந்ததும், பாதாள அறைக்கு செல்வது போல் தரையில் ஒரு கதவு திறந்து கொள்கிறது.

அதில் குதிக்கிறான் ஏஞ்ஜியர். மெத்தை ஒன்றின் மேல் விழுகிறான். ஒலிவியாவை குதிக்கச் சொல்கிறான். அவளும் குதிக்கிறாள்.

அங்கிருந்து சிறிது தூரத்தில் மேடைக்கு மீண்டும் செல்வதற்கான லிஃப்ட் உள்ளது.

“உன்னையே நீ பார்க்க வருகிறாயா?” என கட்டர் மேடையில் இருந்து ஏஞ்ஜியர் நோக்கிக் கேட்கிறார்.

ஏஞ்ஜியரும் ஒலிவியாவும் யாருமற்ற நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.

ஜெர்ரி ரூட் மேடையில் தள்ளாடியபடி நடந்து வருகிறான். பார்ப்பதற்கு ஏஞ்ஜியர் போலவே இருக்கிறான்.

அவனது தள்ளாட்டத்தைப் பார்த்து கிண்டல் செய்கிறான் ஏஞ்ஜியர்.

ரூட் தனது பேன்ட் பாக்கெட்டிலிருந்து மதுக்குப்பி எடுத்து ஒருமுறை விழுங்குகிறான்.

மீண்டும் நடிக்கிறான். இப்போது கச்சிதமாக அவனால் நடிக்க முடிகிறது.

ஏஞ்ஜியர் ஆச்சரியப்படுகிறான்.

மேஜிக் ஷோ நடக்கும் அரங்கம்.- மாலை

அரங்கத்தினுள் மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். மேடையில் ஏஞ்ஜியரும் ஒலிவியாவும் நின்று கொண்டிருக்கிறார்கள். ஏஞ்ஜியர் தான் அடுத்து காட்டப்போகும் வித்தை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறான். பேசும்போதே ரோஜா பூவினை வரவழைத்து ஒலிவியா கையில் தருகிறான்.

கூட்டம் கைதட்டுகிறது.

அடுத்த வித்தை சாதாரணமானது அல்ல, இமாலயத்தில் உள்ள யோகிகள் செய்வது, பாதுகாப்பானது என்கிறான்.ஒரு பீரோ அறையின் முன் நின்று தொப்பியை விடுகிறான். சட்டென்று கதவைத் திறந்து உள்ளே போகிறான்.

தொப்பி பறந்து போய் அடுத்த பீரோ அறைக்கு செல்லும் நேரத்திற்குள், அதிலிருந்து ரூட் ஏஞ்ஜியர் வெளிப்படுகிறான்.

கூட்டம் கைத்தட்டுகிறது வெகு நேரமாக.

உள் அறையில் நிற்கும் ஏஞ்ஜியர் அந்தக் கைத்தட்டலை ரசிக்கிறான். உள்ளிருந்தபடியே தலை குனிந்து ஏற்றுக் கொள்கிறான்.

ஒப்பனை செய்யும் அறை

கட்டர், ஏஞ்ஜியர் ஒலிவியா மூவரும் சந்தோஷமாக மது அருந்துகிறார்கள்.

பார்வையாளர்களின் உற்சாகக் கைத்தட்டலை தன்னால் பார்க்க முடியவில்லையே என வருந்துகிறான் ஏஞ்ஜியர்.

மக்கள் எப்போதும் காணாமல் போனவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, தன் முன்னால் தோன்றுபவர்களுக்குத் தான் கை தட்டுகிறார்கள் என்கிறான். 

“நான் காணாமல் போனவரைப் பற்றித் தான் யோசிக்கிறேன்” என்கிறாள் ஒலிவியா.

ரூட்டினை காணாமல் போகச் செய்து தான் தோன்றுவது போல் மாற்ற முடியாதா எனக் கேட்கிறான் ஏஞ்ஜியர்.

ரூட் உன்னைப் போல சாதூர்யமாக பேசத் தெரியாதவன். அவன் வாயைத் திறந்தால் நாம் மாட்டிக்கொள்வோம் என்கிறார் கட்டர்.

‘என்னால் முடியும். நான் Great Danton Great Danton என்றபடி மேஜையின் அடியில் இருந்து குடிபோதையில் தள்ளாடி எழுகிறான் ரூட்.

அவன் இன்னமும் தன்னைப் போலவே உடையில் இருப்பதைப் பார்த்து எரிச்சலடைகிறான் ஏஞ்ஜியர்.

கட்டர் ரூட்டினை அழைத்துப் போகிறார்.

இருவரும் போனதும் ஒலிவியா ஏஞ்ஜியரை முத்தமிடுகிறாள்.

அவன் ஆர்வமில்லாமல் இருக்கிறான்.

பார்டன் வேறு எதுவோ வித்தை செய்கிறான். அது தெரிந்தால் தன்னால் இன்னும் கூட சிறப்பாக செய்கிறான் ஏஞ்ஜியர்.

பார்டனின் வித்தை ரகசியத்தைத் தெரிந்து கொள்ள ஒலிவியா பார்டனிடம் வேலைக்கு சென்று தன்னுடைய உளவாளியாக இருக்க வேண்டும் என்கிறான். அதிர்ச்சியாகிறாள் ஒலிவியா.

தன்னை பார்டன் நம்பமாட்டான் என்கிறாள்

‘நீ எனது வித்தையின் ரகசியத்தை அவனிடத்தில் சொல். அவன் நம்புவான்’ எனச் சொல்லி அவளை முத்தமிடுகிறான். அவள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

டெஸ்லாவின் பரிசோதனைக் கூடம்

டெஸ்லா எதோ படித்துக் கொண்டிருக்கிறார். ஏலியும் ஏஞ்ஜியரும் அங்கு வருகிறார்கள்.

“நீங்கள் போதுமான பணத்தைக் கொடுத்து விட்டீர்கள். நீங்கள் கொடுத்தபணம் என்னவாக மாறியிருக்கிறது என்று நீங்கள் பார்க்க வேண்டாமா?” என்றபடி ஏஞ்ஜியரை வரவேற்கிறார் டெஸ்லா.

ஏலி, ஏஞ்ஜியர் டெஸ்லா மூவரும் அங்கே மேடையில் இருக்கும் உருளை வடிவ இயந்திரத்தின் அருகில் செல்கிறார்கள். இந்த இயந்திரம் தான் படத்தின் ஆரம்பக் காட்சியில் காட்டப்பட்ட உருளை வடிவ இயந்திரம்.

ஏலி ஏஞ்ஜியரின் தொப்பியைக் கேட்டு வாங்குகிறான். அதனை இயந்திரத்தின் கீழே வைக்கிறான். இயந்திரத்தை இயக்குகிறான்.

அதிலிருந்து மின்சாரம் வெளிப்படுகிறது. தொப்பியில் படுகிறது. இதைப் பார்த்ததும் டெஸ்லாவின் முகம் இறுகுகிறது.

ஏஞ்ஜியர் தனக்கு ஒன்றும் புரியவில்லை என்கிறான். ஏலி ஏஞ்ஜியருக்கு சமாதானம் சொல்லியபடி ‘அடுத்த வாரம் வாருங்கள்’ என்றபடி அழைத்துப் போகிறான்.

ஏஞ்ஜியர் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போகிறான். அந்த இடத்தை விட்டு அசையாமல் சிலை போல நிற்கிறார் டெஸ்லா.

பார்டனின் மேஜிக் பட்டறை

பார்டன் ஏதோ வேலை செய்து கொண்டிருக்கிறான். அங்கு ஒலிவியா வருகிறாள். தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள்.

பார்டன் தனக்கு அவளைத் தெரியும் என்கிறான். ஒலிவியா தான் ஏஞ்ஜியரிடமிருந்து வெளிவந்து விட்டதாகவும் பார்டனிடம் சேரப்போவதாகவும் செல்கிறாள்.

பார்டனின் Transported Man ரகசியத்தைத் தன்னால் வெளிப்படுத்தி அதன் மூலம் பார்டனின் வித்தை ரகசியத்தைத் திருடுவதற்காக தான் வந்திருப்பதாகச் சொல்கிறாள்.

ஏஞ்ஜியர் என்ன யுத்தி பயன்படுத்துகிறான் என்பதை சர்வ சாதாரணமாகச் சொல்கிறார் பார்டன். “ஏஞ்ஜியர் மறைந்து போக, அடுத்த நொடி இன்னொரு கதவில் இருந்து சற்று குண்டான, தள்ளாட்டமான மதுயருந்தியிருக்கும் ஏஞ்ஜியர் வெளிவருகிறான்..இது எனக்குத் தெரியும்” என்கிறான். ஒலிவியா ஆச்சரியமாகப் பார்க்கிறாள்.

“ஏஞ்ஜியர் மேடைக்குக் கீழ் நின்று எப்படி பார்வையாளர்களின் கைத்தட்டலை எதிர்கொள்கிறான்..அவனுக்கு அது பிடிப்பதில்லையே” என்கிறான்.

“ஆமாம்..அவருக்கு அது தாங்க முடியாததாக இருக்கிறது. அதனால் தான் நீங்கள் எப்படி வித்தை செய்கிறீர்கள் என தெரிந்து கொள்ள என்னை உளவு பார்க்க அனுப்பி வைத்தார்..ஆனால் எனக்கு திரும்பவும் அவரிடம் வேலை செய்ய இஷ்டமில்லை. நான் உங்களுக்கு விசுவாசியாக இருக்கிறேன்” என்கிறாள்.

அரங்கத்தில் ஒரு பகுதி

ஜெர்ரி ரூட் கட்டர் அருகில் வருகிறான். வழக்கத்தை விட அதிகமாகக் குடித்திருக்கிறாய் என்கிறார் கட்டர்

கட்டரிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்கிறான் ரூட்.

ஏஞ்ஜியரின் ஒப்பனை அறை

கட்டர் இப்போது ஏஞ்ஜியரின் முன் அமர்ந்திருக்கிறார். ஏஞ்ஜியர் ஷோவிற்காக ஒப்பனை செய்து கொண்டிருக்கிறான்.

“ரூட் அதிகம் பணம் கேட்கிறான். தொழில் போட்டிக்காக நம்மால் கட்டுப்படுத்த முடியாததையெல்லாம் செய்கிறாய்’ என்கிறார் கட்டர்.

‘இப்போதைக்கு அவன் கேட்கும் பணத்தைக் கொடுங்கள். பார்டனின் ரகசியம் தெரிந்ததும் பார்த்துக் கொள்ளலாம்’ என்கிறான்.

;சரி’ என எழுந்து செல்கிறார் கட்டர்.

ஏஞ்ஜியர் அறை

ஏஞ்ஜியர் டைரியைப் படித்துக் கொண்டிருக்கிறான். பின்னணி குரல் ஒலிக்கிறது.

“ரூட் இவ்வளவு மோசமாக இத்தனை சீக்கிரமாக மாறியதில் கட்டருக்கு ஆச்சரியம்’

பார்

ரூட் பாரில் மது அருந்திக் கொண்டிருக்கிறான். அவன் யாரிடமோ உரையாடிக் கொண்டிருப்பது அவன் முகத்தில் தெரிகிறது.

அந்த அன்பர், “நீ தானே The Great Danton என்கிறான்.

“ஆமாம்..விளம்பரப்படுத்தாதே கூட்டம் என்னை சூழ்ந்து கொள்ளும்” என்கிறான்.

ஏஞ்ஜியர் மேஜிக் ஷோ மேடை

THE TRANSPORTED MAN ஷோவினை ஏஞ்ஜியர் செய்து காட்டிக் கொண்டிருக்கிறான். அதைப் பற்றிய அறிமுகத்தைத் தருகிறான்.

பார்

ரூட் எதிரில் இருப்பவனிடம், “நீ யார்?” என்று கேட்கிறான். ‘நான் ஒரு ரசிகன்..வித்தைக்காரனும் கூட’ என்கிறான். ‘வெரி குட் ‘ என்கிறான் ரூட். (அந்த நபரின் முகம் காட்டப்படவில்லை)

ஏஞ்ஜியர் மேஜிக் மேடை. உள் அறை

ஏஞ்ஜியர் தொப்பியை வீசிவிட்டு கதவைத் திறந்து பாதாள அறைக்குள் குதிக்கிறான். மெத்தையில் விழுந்தவன் அதிர்ச்சியில் எழுகிறான். அவன் முகத்தில் அதிர்ச்சி தெரிகிறது.

பார்

ரூட் எதிரில் இருக்கும் நபரிடம் நான் இன்று நடிக்கப்போவதில்லை என்கிறான்.

பாதாள அறை

ஏஞ்ஜியர் அதிர்ச்சியோடும், கோபத்தோடும் ‘மேலே போ’ என்று கத்துகிறான்.

எதிரில் ரூட் மெதுவாக மது மது அருந்திக் கொண்டிருக்கிறான்.

ஏஞ்ஜியர் கத்துகிறான்.

பார்

எனக்கு உன் வித்தையின் ரகசியம் தேவையில்லை’ ஏனெனில் என்னிடமும் இதே போல யுத்தி இருக்கிறது என்கிறான் ரூட்டிடம் அந்த நபர்.

ஏஞ்ஜியர்அறை

ஏஞ்ஜியர் அவசரமாக டைரியின் பக்கத்தினைப் புரட்டுகிறான்.

பின்னணிக்குரலில் முந்தைய காட்சியின் இரண்டாம் வரி கேட்கிறது,

பார்.

‘நானும் இதே யுத்தியைத் தான் பயன்படுத்துகிறேன்’ என்கிறான் அந்த அன்பர்.

‘நானும் இரட்டையனைத் தான் பயன்படுத்துகிறேன்’ என்று சொல்லும்போது பேசிக்கொண்டிருப்பது பார்டன் என்பது தெரிகிறது.

“அவன் என்னை முழுமையாக ஆக்கிரமிக்கிறான்” என்கிறான் பார்டன்.

பாதாள அறை, மேஜிக் ஷோ மேடை

லிஃபட்டில் ரூட் நின்று கொண்டிருக்கிறான். அது மேலே செல்கிறது.

மேடையில் ரூட் கதவைத் திறந்து கொண்டு வருகிறான். கீழே கிடந்த தொப்பியை எடுக்கிறான். எப்போதும் போல இல்லாமல் கோமாளித்தனமாக செய்கிறான்.

மேடையின் பக்கவாட்டில் நிற்கும் கட்டர் எரிச்சலாகிறார்.

திரையினை இழுக்கச் சொல்கிறார்.

பார்

”யாரையும் உன்னை ஆக்கிரமிக்கவிடாதே” என்கிறான் பார்டன்.

“உன் எச்சரிக்கைக்கு நன்றி” என்கிறான் ரூட்.

ஏஞ்ஜியர் ஷோ நடத்தும் மற்றுமொரு மேடை

ஏஞ்ஜியர் THE Transported Man வித்தைக்கான அறிமுகத்தைத் தந்துவிட்டு தொப்பியை வீசுகிறான்.

மரக்கதவைத் திறக்கிறான்.

எஞ்ஜியர் பாதாள அறையில் விழுகிறான். அங்கு மெத்தையின்றி தரையில் விழுகிறான். காலில் அடிபடுகிறது.

வலியோடு நிமிரும் அவன் முகத்தில் அதிர்ச்சி தெரிகிறது.

அங்கு பார்டன் நிற்கிறான்.

லிஃப்ட்டில் மேலே செல்கிறான்.

ஏஞ்ஜியர் அதிர்ந்து போகிறான்.

மேடையில் கிடந்த தொப்பியை எடுக்கிறான்.

வேறு ஒரு ஆள் வந்ததைப் பார்த்து பார்வையாளர்கள் சிரிக்கும் சத்தம் கேட்கிறது.

பாதாள அறையில் இருக்கும் ஏஞ்ஜியர் கோபத்திலும், வலியிலும் திகைக்கிறான்.

பார்டன் மேடையில் கோமாளித்தனம் செய்கிறான்.

மேடையில் மேலிருந்து ஒரு கயிற்றில் வாயும், கால்களும் கட்டப்பட்ட நிலையில் ரூட் இறக்கி விடப்படுகிறான்.

இதோ உங்கள் The Great Danton என்று கேலியாகச் சொல்கிறான் பார்டன். பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள்.

அங்கு ஃபாலனும் அமர்ந்திருக்கிறான்.

தன்னுடைய ஷோ நடக்கும் இடத்தினை அறிவித்துவிட்டு பார்வையாளர்கள் மத்தியில் தொப்பியை வீசிவிட்டுச் செல்கிறான் பார்டன்.

ஒப்பனை அறை

ஏஞ்ஜியரின் காலில் கட்டர் கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார். ‘ஒருவேளை அவள் சொல்லியிருப்பாளோ’ எனக் கேட்கிறார்.

அரங்கம் – இரவு

எல்லா டிக்கெட்டுகளும் விற்பனையாகிவிட்டன என்ற்கிற அறிவிப்பு தொங்குகிறது. அதைப் பார்த்து யோசனையோடு நிற்கும் ஏஞ்ஜியரிடம் ஓருவன் வந்து கள்ளத்தனமாக டிக்கெட்டினை விற்றுச் செல்கிறான்.

மேடையில் பார்டன் மேஜிக் நடத்திக் கொண்டிருக்க, கூட்டத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் ஏஞ்ஜியர்.

ஒலிவியா மேடையில் பார்டனிடம் இணக்கமாக நடந்து கொள்வதைப் பார்க்கிறான்.

ஒலிவியா தங்கியிருக்கும் இடம்

ஒலிவியா அறைக்குள் வருகிறாள்.

அங்கே ஏஞ்ஜியர் அமர்ந்திருக்கிறான்.

அவள் அவனை எதிர்பார்க்கவில்லை எனத் தெரிகிறது.

ஒலிவியா தான் தன்னுடைய வித்தை ரகசியத்தை பார்டனிடம் சொல்லித் தந்ததாக குற்றம் சாற்றுகிறான்

பார்டனுக்கு ஏற்கனவே எல்லாம் தெரிந்திருந்தது என்கிறாள் ஒலிவியா.

பார்டனிடமிருந்து அவனது டைரியை எடுத்துக் கொண்டு வந்ததாகக் காட்டுகிறாள். “நான் இன்றிரவு மட்டும் இதனைப் படிப்பதற்கு எடுத்து வந்திருக்கிறேன்” என்கிறாள்.

“உன்னால் மாதக்கணக்கானாலும் படிக்க முடியாது. எல்லாமே சங்கேத வார்த்தைகள்” என்கிறான் ஏஞ்ஜியர். சொல்லிவிட்டு தன்னுடைய பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறான்.

“அந்த டைரியை தான் எடுத்துக் கொண்டு போகப் போவதாக ஏஞ்ஜியர் சொல்கிறார்.

ஒலிவியா தடுக்கிறாள். ‘இதனால் உன்னுடைய மனைவி திரும்பக் கிடைக்கப்போவதில்லை’ என்கிறாள்.

‘எனக்கு மனைவி தேவையில்லை. ரகசியங்கள் தான் தேவை” என்கிறான்.

‘கட்டர் சொன்னது போல இரட்டையரைத் தான் பார்டன் பயன்படுத்துகிறான். மேடைக்குக் கீழ் ஒட்டு தாடி, மீசை எல்லாம் பார்த்தேன்’ என்கிறாள் ஒலிவியா.

‘இல்ல..அது உன்னை திசை திருப்ப பார்டன் போடும் நாடகம்’ என்கிறான்.

ஏஞ்ஜியர் கிளம்பும்போது ‘பார்டனை நான் காதலிக்கிறேன்’ என்கிறாள் ஒலிவியா.

‘நீ ரொம்ப பாவம்’ என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான் ஏஞ்ஜியர்.

பார்டனின் மேஜிக் பொருட்கள் வைக்கபப்ட்டிருக்கும் அறை

அறையெங்கும் பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. ‘நோட் புக்’ என்று ஃபாலனைக் கேட்கிறான் பார்டன்.

ஃபாலன் ‘ஆமாம்’ என்பது போலத் தலையாட்டுகிறான்.

‘அப்படியானால் இப்போது தான் அவன் தொடங்கியிருப்பான்’ என்கிறான் பார்டன்.

பார்டன் மேஜிக் ஷோ நடத்தும் மேடை

பார்டனும் ஒலிவியாவும் மேடையில் நிற்கிறார்கள்.

 மேடையின் நடுவே மின்சாரத்தைப் பாய்ச்சும் சாதனம் இருக்கிறது.

பீரோ போல் இரண்டு அறைகள் இருக்கின்றன.

ரப்பர் பந்தினைத் தரையில் போட்டுவிட்டு பீரோ ஒன்றிற்குள் நுழைகிறான் பார்டன்.

மற்றொரு பீரோ அறையில் இருந்து வெளியே வந்து துள்ளும் பந்தினைப் பிடிக்கிறான்.

ஒலிவியா நடந்து பார்டனின் அருகில் வருகிறாள்.

ஒலிவியாவின் கையை முத்தமிடுகிறான்.

இருவரும் குனிந்து பார்வையாளர்களுக்கு வணக்கம் செலுத்துகின்றனர்.

தெருக்கள்

பார்டனும் ஃபாலனும் அரங்கிலிருந்து வெளியே வருகின்றனர். மக்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்.

தான் நடந்து போகப் போவதாக ஃபாலனிடம் பார்டன் கூறுகிறான்.

ஏஞ்ஜியர் பார்டனைப் பின் தொடர்கிறான்.

ஃபாலன் ஏஞ்ஜியரைப் பின் தொடர்ந்கிறான். ஒரு இடத்தில் ஃபாலனை மரப்பெட்டிக்குள் தள்ளி ஆணி அடித்து விடுகிறார் கட்டர். மூச்சு விடுவதற்கு மட்டும் சிறுதுளை ஏற்படுத்துகிறார்.

அதில் கட்டருக்கு கையில் காயம் ஏற்படுகிறது.

அங்கு வரும் ஏஞ்ஜியர் ஃபாலனிடமிருந்து சுத்தியலை வாங்கி ஆவேசமாக ஆணியை அடிக்கிறான்.

கல்லறைத் தோட்டம்

கல்லறைத் தோட்டத்தின் நடுவே பார்டன் நடந்து வருகிறான்.

ஏஞ்ஜியரை சந்திக்கிறான்.

ஃபாலனைக் காப்பாற்ற வேண்டுமானால் The Tranported Man ரகசியத்தை விரிவாக எழுதிக் கொடுக்கச் சொல்கிறான்.

தன்னுடைய டைரி ஏஞ்ஜியரிடம் இருப்பது தனக்குத் தெரியும் என்கிறான் பார்டன்

மீண்டும் மீண்டும் the Transported Man xஇரகசியத்தையே கேட்கிறான் ஏஞ்ஜியர்.

பார்டன் ஒரு காகிதத்தில் எதையோ எழுதிக் கொடுக்கிறான்.

ஃபாலனை உயிரோடு புதைத்த இடத்தைக் காட்டிவிட்டுச் செல்கிறான் ஏஞ்ஜியர்.

பார்டன் அவசரமாக அந்த இடத்தைத் தோண்டுகிறான்.

மருத்துவமனை

கையில் கட்டுடன் கட்டர் அமர்ந்திருக்கிறார்.

ஏஞ்ஜியர் அங்கு வருகிறான்.

‘போன காரியம் என்னவாயிற்று?” எனக் கேட்கிறார். பார்டன் எழுதிக் கொடுத்ததை கட்டரிடம் தருகிறான் ஏஞ்ஜியர்.

அவர் அதைப் பிரித்துப் பார்த்துவிட்டு, இதற்கு என்ன அர்த்தம்? என்று கேட்கிறார்.

ஏஞ்ஜியர் அதை வாங்கிப் பார்க்கிறான்

அதில் TESLA என்று எழுதப்பட்டிருக்கிறது.

ஏஞ்ஜியர் சிரிக்கிறான் .’நாம் அமெரிக்காவிற்கு செல்லப்போகிறோம்; என்கிறான் ஏஞ்ஜியர்.

‘நீங்கள் இளைஞர்கள். இதெல்லாம் உங்களுக்கு விளையாட்டு. என்னால் இனி உன்னோடு வர முடியாது’ என்கிறார் கட்டர் மென்மையாக.

ஏஞ்ஜியர் சிறிது வருத்தத்துடன் ஏற்றுக் கொள்கிறான்.  

உணவகம்

டேபிள் ஒன்றின் முன் சாரா அமர்ந்திருக்கிறாள்.

அங்கு பார்டன், ஃபாலன், ஒலிவியா மூவரும் வருகிறார்கள்.

ஒலிவியா வந்தது சாராவுக்குப் பிடிக்கவில்லை என்பதுதெரிகிறது.

பார்டனை ஒலிவியா ‘ஃபிரெடி’ என்று அழைக்கிறாள்.

பார்டனிடம் ஒலிவியா உரிமை எடுத்துக் கொள்வது சாராவுக்குப் பிடிக்காமல் போகிறது.

ஒலிவியாவைக் கொண்டு போய் விடும்படி ஃபாலனிடம் சொல்கிறாள் சாரா.

அவர்கள் போனதும் ‘உன்னை அவள் ஏன் ஃபிரெடி என்று கூப்பிடுகிறாள்?’ என்கிறாள்.

வெளியில் என்னை எப்படியும் அழைப்பார்கள் என்கிறான் பார்டன்.

பார்டனின் நடவடிக்கைகள் வினோதமாக இருக்கின்றன என்கிறாள்.

“தன்னுடைய வாழ்க்கை ரகசியங்களால் நிரம்பியது” என்கிறான் பார்டன்.

‘குறுந்தாடியைக் கூட கழற்றாமல் இருக்கிறாய். நடிப்பெல்லாம் மேடையில் வைத்துக் கொள். என்னிடம் இயல்பாக இரு” என்கிறாள் சாரா.

அவளுக்கு கோபமும், ஆற்றாமையாகவும் இருக்கிறது வேகமாக மதுவினைக் குடிக்கிறாள்.

ஒன்றும் பேசாமல் அமர்ந்திருக்கிறான் பார்டன்.

ஏஞ்ஜியர்  தங்கும் விடுதி

ஏஞ்ஜியர் விடுதிக்குள் வருகிறான்.  விடுதியின் வாசலில் இரண்டு புதியவர்கள் பொருட்களை இறக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏஞ்ஜியரையே பார்க்கிறார்கள்.

ஏஞ்ஜியரிடம் மேலாளர் “இவர்கள் புதிதாக வந்திருக்கிறார்கள். தாமஸ் எடிசனுக்காக வேலை பார்க்கிறார்கள்” என்கிறார்.

ஏஞ்ஜியர் தாங்கும் விடுதியின் அறை

பார்டனின் டைரியைப் படித்துக் கொண்டிருக்கிறான் ஏஞ்ஜியர்.

அதில் பின்னணிக் குரல் “இன்று புதிய முன்னேற்றம்.. ஏஞ்ஜியரின் உதவியாளர்” என தொடங்க

பார்டனின் பட்டறை

பின்னணிக் குரல் “என்னைத் தேடி வந்தாள்” பார்டன் எதோ வேலை செய்து கொண்டிருக்கிறான்.

ஃபாலன் கதவைத் திறப்பதும் ஒலிவியா உள்ளே வருவதும் தெரிகிறது.

(ஏற்கனவே காட்டப்பட்ட காட்சியின் சில ஷாட்டுகள் காட்டப்படுகின்றன)

ஒலிவியா பார்டனின் கையில் உள்ள கட்டைப் பிரிக்கிறாள்.

இரண்டு விரல்கள் அதில் இல்லை.

“நீங்க வேண்டுமென்றே கைவிரல்களை மறைக்கிறீர்கள். இந்த விரல்களற்ற கை வெளியில் தெரிந்தால் என்ன? அப்போது தானே நீங்கள் இரட்டையரைப் பயன்படுத்தவில்லை என்பது தெரியும். எப்படி பிரசன்ட் செய்ய வேண்டும் என நான் சொல்லித் தருகிறேன்” என்கிறாள்.

பார்டன் “தேவையில்லை” என்று மறுக்கிறான்.

பின்னணிக் குரல் ஒலிக்கிறது

“அவள் சொல்வது சரி தான் எனப்பட்டது”

சாரட் வண்டி , தெரு

பின்னணிக்குரல் தொடர்கிறது”ஆனால் அவளை நம்பக்கூடாது”

சாரட் வண்டிக்குள் சாரா அமர்ந்திருக்கிறாள்.

ஃபாலன் சாட் வண்டியின் கதவினைப் பிடித்தபடி நின்று கொண்டிருக்கிறான்.

வண்டி போய்க் கொண்டிருக்கிறது.

மேஜிக் ஷோ மேடை

பின்னணிக் குரல் தொடர்கிறது

“நான் அவளைக் காதலிக்கிறேன்.

எனக்கு அவள் வேண்டும்”

மேடையில் பார்டனும் ஒலிவியாவும் நிகழ்வு முடிந்தததற்கான அறிகுறியாக கைகளைக் கோர்க்கின்றனர்.

படுக்கையறை

பின்னணிக் குரல் “ இப்படி என்னைத் திறந்த மனதுடன் வைத்துக் கொள்வதும், இப்படி ஒரு உறவை அனுமதிப்பதும் ஆபத்தானது”

ஒலிவியாவும் பார்டனும் நெருக்கமாய்க் கட்டியணைத்தபடி படுத்திருக்கின்றனர்.

தெரு

பின்னணிக் குரல் “ இந்தக் காதலுக்கு நம்பகத்தன்மை தேவைப்படுகிறது.

ஒலிவியா கடைத்தெருவில் நடந்து கொண்டிருக்கிறாள்.

படுக்கையறை

பின்னணிக் குரல் “ எப்படி உறுதி செய்வது?”

பார்டன் படுக்கையறையில் தனியாக சாய்ந்தபடி யோசிக்கிறான்.

தெரு

ஒலிவியா கடைத்தெருவில் நடந்து வருகிறாள்.

படுக்கையறை

பின்னணிக் குரல் : இதற்கு ஒரே வழி அவள் மனதைத் தெரிந்து கொள்வது தான்

பார்டன் கட்டிலில் சாய்ந்திருக்கிறான்.

“நீ எப்படி ஏஞ்ஜியரிடமிருந்து வந்தாய்?” என்று கேட்கிறான்.

எதிரில் ஒலிவியா அமர்ந்திருக்கிறாள்.

ஏஞ்ஜியர் தாங்கும் விடுதி

இதை டைரியில் படிக்கும் ஏஞ்ஜியர் அதிர்கிறான்.சில பக்கங்களை அவசரமாகப் புரட்டுகிறான்.

ஒரு பக்கம் வந்ததும் வாசிக்க ஆரம்பிக்கிறான்.

பின்னணிக் குரல் : என் துணைவியின்  உண்மைத்தன்மையை அறிந்த நாள் அது

பார்டன் மேஜிக் ஷோ நடக்கும் இடம்

பார்டனும், ஒலிவியாவும் மேடையில் இருக்கிறார்கள்.

பின்னணிக் குரல் : என்னிடம் அல்ல. உனக்குப் புரிகிறதா?

ஏஞ்ஜியர் விடுதி அறை

ஏஞ்ஜியர் டைரியைப் படித்துக் கொண்டிருக்கிறான். அவன் முகத்தில் பரபரப்பு தெரிகிறது.

பின்னணிக் குரல் :ரூட்டிடம் அவள் என்னை அழைத்து சென்றபோது நான் சமாதானமாகிவிட்டேன்”

பார்

பாரில் அமர்ந்திருந்த ரூட் காட்டப்படுகிறான்.

ஏஞ்ஜியர் விடுதி அறை\

பின்னணிக் குரல் “ இன்று ஒலிவியா என் மீதான காதலை உறுதிப்படுத்திவிட்டாள். ஆம். ஏஞ்ஜியர் என்னுடைய வேண்டுகோளுக்கிணங்க தான் அவள் எனது டைரியை உன்னிடம் கொடுத்தாள்.

டைரியைப் படிக்கும் ஏஞ்ஜியர் அதிர்கிறான்.

ஒலிவியா ஏஞ்ஜியருக்கு டைரியைக் கொடுக்கும் ஷாட் காட்டப்படுகிறது

பின்னணிக் குரல் : ஆம். TESLA என்பது எனது டைரியின் குறியீட்டு வார்த்தை மட்டுமே. அவ்வளவு சீக்கிரம் என் ரகசியங்களைத் தெரிந்து கொள்ள முடியாது. குட் பை..

ஏஞ்ஜியரால் நம்ப முடியவில்லை. அவமானம் கோபம் எல்லாம் வருகிறது. டைரியை கசக்குகிறான்.

அவமானத்தில் முகமும் கண்களும் சிவக்கின்றன. கண்ணீர் முட்டிக் கொண்டு வருகிறது.

டெஸ்லா பரிசோதனைக் கூடம்

ஏஞ்ஜியர் கோபத்துடன் டெஸ்லாவின் பரிசோதனைக் கூடத்திற்கு வருகிறான்.

“என்னுடைய பணத்தை வீணாக்கிவிட்டீர்கள். எடிசனின் ஆட்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை இங்கே அழைத்து வரலாம் என்று தான் இருந்தேன்’ என ஏலியிடம் கத்துகிறான்.

“அப்படியா? இங்கு வந்திருக்கிறார்களா? அவர்களை இங்கே அழைத்து வருவதை மட்டும் செய்துவிடாதீர்கள்” என்கிறான் ஏலி.

டெஸ்லா அங்கு வருகிறார்.

அவர் கையில் கூண்டு ஒன்றிருக்கிறது. அதில் ஒரு பூனை இருக்கிறது.

“எங்களிடம் பணம் இல்லை என்பது உண்மை தான். நீங்கள் தான் எங்களுக்கு இப்போது இருக்கக்கூடிய ஒரே முதலிட்டாளர். ஆனால் உங்களை நாங்கள் ஏமாற்றவில்லை” என கூண்டினைத் திறக்கிறார்.

அதிலிருந்த கருப்பு பூனை  ஒன்றினை ஏலியிடம் தருகிறார்.

“இதுவரை தொப்பியை வைத்து செய்ததெல்லாம் வேலைக்கு ஆகவில்லை. அதனால் பொருளை மாற்றுகிறேன்” என்று பூனையைக் காட்ட, தான் வளர்க்கும் பூனை என்பதால் ஏலி அதனை எதிர்க்கிறார்.

“என் பூனைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு நீங்கள் தான் என்றபடி பூனையை மேடையின் நடுவே வைக்கிறான் ஏலி.

ஏஞ்ஜியர் குழப்பத்தோடு இதைப் பார்த்தபடி நிற்கிறான்.

இயந்திரத்தை இயக்குகிறார் ஏஞ்ஜியர்.

பூனையின் மேல் மின்சாரம் பாய்கிறது.

பூனை எந்தவொரு பாதிப்புமின்றி நிற்கிறது.

டெஸ்லாவின் முகம் மாறுகிறது.

ஏஞ்ஜியர் ஏமாற்றமாகிறார்

பூனை அங்கிருந்து ஓடுகிறது.

அதைப் பிடிப்பதரற்காக ஏலி அதன் பின்னாலேயே ஓடுகிறான்.

ஏஞ்ஜியர் அங்கிருந்து கிளம்புகிறான்.

பரிசோதனைக் கூடத்தின் வளாகம்

ஏஞ்ஜியர் பூனை போன வழியில் நடக்கிறான்.

ஒரே மாதிரியான இரண்டு பூனைகள் அங்கே தரையில் கிடக்கின்ற மேஜிக் தொப்பிகளுக்கு நடுவே சண்டை போட்டுக் கொள்கின்றன.

தரையில் ஏராளமான தொப்பிகள் கிடக்கின்றன.

அதைப் பார்த்ததும் அதிர்ச்சியாகி ‘ஏலி’ என்று கத்துகிறான்.

ஏலி அங்கு வருகிறான். தன்னுடைய பூனையைப் போலவே இன்னொன்றைப் பார்த்தவுடன் அவனும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைகிறான். தன் பூனை எது என்று தெரியாமல் ஒன்றைத் தூக்க, அவனிமிருந்து துள்ளி குதித்து, மற்றொரு பூனையைத் துரத்திக் கொண்டு ஓடுகிறது பூனை.

பரிசோதனைக் கூடம்

டெஸ்லா தொப்பிகளை பரிசோதிக்கிறார்.

“அப்படியென்றால் இயந்திரம் வேலை செய்கிறது” என்கிறார். “நாம் எதிர்பார்ப்பது போல விஞ்ஞானம் வேலை செய்வதில்லை. அதற்கென்று ஒரு பாதை வகுத்துக் கொள்கிறது. அது தான் விஞ்ஞானத்தின் அழகே” என்கிறார் டெஸ்லா.

டெஸ்லா தன் கையில் இருக்கும் தொப்பியைக்  கூர்ந்து கவனிக்கிறார். அதில் சிறிய கிழிசல் இருக்கிறது. மற்றொரு தொப்பியை எடுத்துப் பார்க்கிறா.ர் அதிலும் அந்த கிழிசல் இருக்கிறது. அதைப் பார்த்ததும் எதையோ தீவிரமாக யோசிக்கிறார் டெஸ்லா.

“இயந்திரத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டுள்ளது. சரி செய்து விட்டு சொல்லி அனுப்புகிறேன்” என்கிறார்.

ஏஞ்ஜியர் கிளம்பும்போது , “உங்களுடைய தொப்பியை மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள்” என்கிறார் டெஸ்லா.

“எது என்னுடைய தொப்பி?”: என்று கேட்கிறான் ஏஞ்ஜியர்.

“எல்லாமே உங்களுடையது தான்” என்கிறார் டெஸ்லா புன்னகையுடன்.

பார்டன் வீடு

பார்டனிடம் ஜெஸ் தன்னை மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துப் போகும்படி கேட்கிறாள்.

“இன்று தனக்கு வேலை இருப்பதாக சொல்கிறான்”

“என்னை அழைத்துப் போவதாக வாக்குறுதி தந்தீர்கள்” என்கிறாள் ஜெஸ்

“அப்படியா? நானா?” என்று கேட்டுவிட்டு “சரி” என்கிறான்.

பிறகு அங்கிருக்கும் செய்தித்தாளைக் காட்டி “இது யார்?” என்ர்கிறான்”அதில் இங்கிலாந்தின் முதன்மை மேஜிக் நிபுணர் The Professor ன் மேஜிக் ஷோ “ என்று எழுதியிருக்கிறது.

“நீங்கள் தான் “ என்கிறாள் ஜெஸ்.

அவளை பெருமையாகப் பார்க்கும் பார்டன் “நீ கிளம்பி வா..ஜூவுக்குப் போகலாம்” என்கிறான். ஜெஸ் போகிறாள்.

அங்கு சாரா வருகிறாள். சோர்வாக இருக்கிறாள். மதுவினை ஊற்றிக் கொள்கிறாள். அவளது கண்கள் சிவந்திருக்கின்றன. அவளை பார்டன் பார்க்கிறான்.

“நாம் இருவருக்கும் தனித்தனியே சட்டங்கள் உள்ளன. தவறுகள் செய்கிறோம்” என்கிறாள்.

‘ஐ லவ் யூ’ என்கிறான் பார்டன்.

“இன்று நீ உண்மையாகச் சொல்கிறாய்” என்கிறாள் சாரா.

“நம் இருவருக்கும் இடையில் ஜெஸ்ஸைத்  தவிர யாருமில்லை” என்கிறான் பார்டன்.

“நீ என்னிடம் அன்பாக இல்லாத பொழுது எனக்கு பயமாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேதனையுடன் செல்கிறாள். அவளையே வலியுடன் பார்க்கிறான் பார்டன்.

பூங்கா

பார்டன் பூங்காவிற்கு வருகிறான். யாருக்காகவோ காத்திருப்பது போல முன்னும் பின்னும் நடக்கிறான். ஃபாலன் அங்கு வருகிறான்.

ஜெஸ்ஸை ஜூவுக்கு அழைத்துப் போகும்படி சொல்கிறான். “நீ அழைத்துப் போகவில்லை என்றால் நானா நாளை அழைத்துப் போகிறேன்” என்கிறான். அப்படி சொல்கையில் ஃபாலனின் பார்வையைத் தவிர்க்கிறான்.

சாராவுக்கு எதோ தவறு நடக்கிறது என்பது புரிகிறது. அவள் அதிகம் யோசிக்கிறாள். சாராவை நான் மிகவும் நேசிப்பதாக நீ தான் சொல்லி சமாதானம் செய்ய வேண்டும்” என்று கேட்கிறான். ஃபாலன் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து போகிறான்.,

ஒலிவியா வீடு

பார்டனைப் பார்த்ததும் ஒலிவியா மகிழ்ச்சியுடன் முத்தமிட வருகிறாள். ‘ஃபிரெடி’ என்று அழைக்கிறாள்.

இனி தன்னை  அப்படி அழைக்க வேண்டாம் என்கிறான் பார்டன்.

“நான் எத்தனை தடவை சொல்லிவிட்டேன். என்னிடம் வரும்போது, நீ எனக்கானவனாக மட்டும் இரு. உன்னுடைய குடும்பத்தை அங்கேயே விட்டுவிட்டு வா” என்கிறாள்

“அப்படித் தான முயற்சி செய்கிறேன்..சில நேரங்களில் அப்படி முடிவதில்லை” என்கிறான்.

ஃபாலன் அங்கேயே சுற்றி சுற்றி வருவதாகவும், அவனை நம்ப வேண்டாம்” என்றும் சொல்கிறாள்.

“என்னை நீ நம்புகிறாய் என்றால், ஃபாலனையும் நம்பு’ என்கிறான் பார்டன்

 ஏஞ்ஜியர் விடுதி

ஏற்கனவே பார்த்த எடிசனின் ஆட்கள் கள் இருவர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஒரு வண்டியில் அவர்களது பொருட்களை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏஞ்ஜியர் அவர்களைப் பார்த்துக் கொண்டே போகிறான். சிரித்தபடி பேசிக்கொண்டே இருக்கும் அவர்கள் ஏஞ்ஜியரைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தி அவனையே பார்க்கிறார்கள். ஏஞ்ஜியர் போனதும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

ஏஞ்ஜியர் வெளியே வர, பரிசோதனைக் கூடம் இருந்த குறில் இருந்து புகை அடர்த்தியாக சென்று கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து ஏஞ்ஜியர் அதிர்ந்து போய் அங்கிருந்து செல்கிறார்.

டெஸ்லாவின் பரிசோதனைக் கூடம்

ஏஞ்ஜியர் டெஸ்லாவின் பரிசோதனைக் கூடத்தை நோக்கி வருகிறான்.

அங்கு எரியூட்டபப்ட்டு நெருப்பு இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது.

பரிசோதனை கூடத்தின் மிச்சங்கள் எல்லாம் கருகிப் போய் இருக்கின்றன.

அவனது காலடியில் இருக்கும் ஒரு உலோகத்தைத் தனனுடைய கைத்தடியால் திருப்ப, அது ‘அந்நியர்கள் உள்ளே வரவேண்டாம்; என்று சொல்கிற  அறிவிப்பு பலகையாக இருக்கிறது

அதைப் பார்த்து திகைத்து போய் நிற்கிறான் ஏஞ்ஜியர்.

சிறைச்சாலை 

சிரித்தபடி டைரியை வாசித்துக் கொண்டிருக்கிறான் பார்டன்.

அடுத்த பக்கத்தைத் திருப்புகிறான் பார்டன்.

அதில் எதோ எழுதப்பட்டிருக்கிறது.

ஏஞ்ஜியர் தங்கியிருக்கும் விடுதி  

ஏஞ்ஜியர் விடுதி வரவேற்பறை. ஏஞ்ஜியர் அறையை காலி செய்கிறார். அதற்கான பணத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

டெஸ்லா அங்கிருந்து சென்றது தங்களுக்கு வருத்தமளிப்பதாக விடுதி மேலாளர் சொல்கிறார்.

ஒரு பெட்டியின அவர் விட்டுச் சென்றிருக்கிறார் என்கிறார் மேலாளர்.

“என்ன பெட்டி?” என்று ஏஞ்ஜியர் கேட்க

பெட்டி இருக்கும் அறைக்கு விடுதி மேலாளரும், ஏஞ்ஜியரும் வருகிறார்கள்.

உயரமான மரப்பெட்டி இருக்கிறது. அது உரலை வடிவிலான  ஏஞ்ஜியருக்காக பரிசோதனை செய்து கொண்டிருந்த பெட்டி.

ஏஞ்ஜியருக்கு அதில் ஒரு கடிதம் வைக்கப்பட்டிருக்கிறது.

சொல்லாமல் சென்றதற்காக டெஸ்லா அதில் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

Intercut to

புதியவர்கள் இரண்டு பேர் பரிசோதனைக் கூடத்திற்கு நெருப்பு வைக்கிறார்கள்.

டெஸ்லாவும் ஏலியும் சாரட் வண்டியில் கிளம்புகிறார்கள்.

டெஸ்லாவின் பின்னணிக் குரல் “ இந்த இயந்திரத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று ஏலி விரிவாக எழுதியிருக்கிறான். எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டுமென நினைத்தால், இந்த இயந்திரத்தை அழித்து விடு. கடலின் ஆழத்தில் தள்ளி விடு..இது உங்களுக்கு துயரத்தையே தரப்போகிறது”

என்கிற டெஸ்லாவின் குரல் தொடர்கிறது.

Intercut to

இதைப் படித்ததும் ஏஞ்ஜியர் நிமிர்கிறான்.

ஏஞ்ஜியரின் பரிசோதனைக்கூடம்

பின்னணிக் குரல் “ டெஸ்லா தந்த இயந்திரத்தை அவர் பேச்சை மீறி பயன்படுத்துகிறேன். எது வேண்டுமானாலும் நடக்கலாம். நான் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

ஏஞ்ஜியர் துப்பாக்கியை வைத்து சோதனை செய்து பார்க்கிறான்.

பின்பு அவனே மின்சார கதிர்களுக்குள் வருகிறான். ஏஞ்ஜியருக்கு என்ன ஆயிற்று என்பது தெரிவதற்குள் White Flashஅடிக்கிறது.

சிறைச்சாலை அறை

டைரியைப் படித்துக் கொண்டிருக்கிறான் பார்டன். அதிர்கிறான்.

பின்னணிக் குரல் : ஆம் பார்டன் நீ இதனை சிறைச்சாலையில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பாய்..அதிலும் என்னைக் கொலை செய்ததற்காக “

இதைப் படித்ததும் டைரியை அறைந்து மூடுகிறான். அதையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

சிறைச்சாலை/ பார்வையாளர்கள் அறை

சிறைச்சாலையில் ஓவென்ஸ் முன்னால் நிற்கிறான் பார்டன்.

“லார்ட் கால்ட்லோவுக்கு ஒருவரின் இறப்புக்குப் பின்னால் என்ன நடக்கும் என்பது எல்லாம் தெரியும் போல் இருக்கிறது. அவர் தான் இதனை எழுதியிருக்கிறார்” என்று சொல்ல

“இல்லை. ஏஞ்ஜியர் தான் தன்னுடைய கைப்பட இதை எழுதியிருக்கிறார். உங்களுக்கு ஏன் அப்படித் தோன்றியது” என்று கேட்கிறான் ஓவென்ஸ்.

“ஒன்றுமில்லை” என்று சொல்லிவிட்டு ஒவென்ஸிடம் தனது மேஜிக் யுத்திகள் எழுதப்பட்ட காகிதங்களை ஒப்படைக்கிறான்.

“இதில் எல்லாமே உள்ளது. நீங்கள் கேட்ட The Transported Man  உட்பட” என்று சொல்ல,

“இது நிச்சயம் லார்ட் கால்ட்லோவை மகிழ்விக்கும்” என்கிறார் ஓவென்ஸ்.

“இல்லை..வாய்ப்பு குறைவு. நான் The Pledge மற்றும் The Turn மட்டுமே எழுதியிருக்கிறேன் அதில் The Prestige மட்டும் எழுதப்படவில்லை” என்கிறான் பார்டன்.

“அது எப்படி? The Prestige இருந்தால் தானே அது முழுமையடையும்” என்று கேட்கிறான் ஓவென்ஸ்

தனது மகளை அழைத்து வந்தால் முழுவதையும் தருவதாகச் சொல்கிறான்

அவளுக்கு குட் பை சொல்ல வேண்டும் என்கிறான் பார்டன்.

பார்டன் வீடு

ஜெஸ் திகைப்போடும், அழுகையோடும் அமர்ந்திருக்கிறாள்.  

பார்டனுக்கும் சாராவுக்கும் வாக்குவாதம் நடக்கிறது.

“எனக்கும் ஒலிவியாவுக்கும் இடையில் எதுவும் இல்லை. நான் உன்னைத் தான் நேசிக்கிறேன்” என்கிறான்.

“நீ யார் என்று எனக்குத் தெரியும். நான் ஒலிவியாவிடம் சொல்லப் போகிறேன்” என்கிறாள் சாரா.

“அப்படி செய்யாதே சாரா. உனக்கு என்னிடமிருந்து என்ன தேவை?”என்று கேட்கிறான் பார்டன்

“பொய்களற்று

யுக்திகளற்று

ரகசியங்களற்று நீ எனக்கு வேண்டும் ..

நீ என்னை விரும்புகிறாயா?” என்று கேட்கிறாள்”

“இன்று இல்லை” என்கிறான் பார்டன்.

“நன்றி” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்கிறாள் சாரா.

இந்தச் சண்டையை வேதனையோடு கேட்டுக் கொண்டிருக்கிறாள் ஜெஸ்.

ஃபாலன் வந்து அவளைத் தூக்கிக் கொண்டு போகிறான்.

பார்டன் பட்டறை

சாரா அங்குள்ள பொருட்களைப் பார்க்கிறாள்.

அவளுக்கு சில நினைவுக்கு வருகின்றன.

 பார்டனை முதலில் சந்தித்தது

உணவகத்தில் சந்தித்தது

பட்டறையில் உள்ள கயிறைத் ததொடுகிறாள்.

மேலே பார்க்கிறாள்.

புறாக்கள் கூண்டுக்குள் சடசடவென்று அடித்துக் கொள்கின்றன.

சாரா தூக்கு மாட்டியிருக்கிறாள்.

பார்

கட்டர் மது அருந்திக் கொண்டிருக்கிறார்.

கோப்பையின் அடியில் சங்கேதம் சீட்டு ஒட்டப்பட்டிருக்கிறது. அந்தச் சீட்டின் பின்பக்கம் ஒரு முகவரி எழுதப்பட்டிருக்கிறது.

பாழடைந்த கட்டடம். தெரு

தெரு ஒன்றில் நடந்து போகிறார்.

பாழடைந்த இடம் போல இருக்கும் ஒன்றினுள் நுழைகிறார்

அங்கு கண் பார்வை சரியாகத் தெரியாத இரண்டு வயதானவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் தன்னுடைய நண்பரைப் பார்க்க வந்திருப்பதாகச் சொல்கிறார்.

அங்கு ஏஞ்ஜியர் வருகிறான்.

தான் கடைசியாக ஷோ செய்யப்போவதாக சொல்கிறான்.

“கடைசி ஷோவா?” என்று ஆச்சரியப்படுகிறார் கட்டர்.

“ஒருமுறை ஒருவர் என்னிடம் ஒன்றைக் குறித்து யோசித்துக் கொண்டே இருப்பது இளைஞர்களின் வேலை என்றார். இப்போது நான் அதில் இருந்து விலகிவிட்டேன். இது தான் எனது கடைசி ஷோ. இது தான் உண்மையான The Transported Man” என்கிறான் ஏஞ்ஜியர் .

டெஸ்லாவின் இயந்திரத்தைக் காட்டி இது தான் ஷோவின் கிளைமாக்ஸ். இதை சுற்றியே ஷோ அமைய வேண்டும் என்கிறான்.

கட்டர் எக்காரணம் கொண்டும் மேடைக்குப் பின்புறம் செல்லக்கூடாது என்கிறான்.

“இதற்கு பார்டன் வந்தே தீர வேண்டும். அவனால் தவறவிட முடியாதபடி விளம்பரம் அமைய வேண்டும்” என்கிறான் ஏஞ்ஜியர்.

பாழடைந்த கட்டடம்/ தெரு

சாரட் வண்டியில் ஏக்கர்மேன் வந்து இறங்குகிறார்.

கட்டடத்திற்குள் வருகிறார்.

கட்டர் அவரை வரவேற்கிறார்.

“ஒரே ஒரு வித்தையை மட்டும் பார்க்கும்படி நேநேகள் என்னை அழைத்ததும் எனக்கு ஆர்வமாகிவிட்டது. அதனால் தான் கிளம்பி வந்தேன்” என்கிறார் ஏக்கர்மேன்.

அங்கு ஏஞ்ஜியர் வருகிறார்.

ஏஞ்ஜியர் டெஸ்லாவின் இயந்திரத்துக்குள் செல்ல, மின்சாரக் கதிர்கள் பாய்கின்றன.

வண்ண வண்ண நிறங்களைப் பார்த்துவிட்டு “நன்றாக இருக்கிறது” என்கிறார்.

ஏஞ்ஜியர் டெஸ்லாவின் இயந்திரத்துக்கு சென்று காணாமல் போகிறான்

முக்கியஸ்தர் திடுக்கிடுகிறார்.

“ஆனால், ஏஞ்ஜியர் திரும்பி வர வேண்டும். அது தான முக்கியம்” என்று சொல்ல

Yes, the Prestige

என்று அவரின் பின்பக்கத்தில் இருந்து குரல் கேட்கிறது.

அவர் திரும்பிப் பார்க்கிறார்.

அங்கிருந்து ஏஞ்ஜியர் வருகிறான்.

அசந்து போகிறார் முக்கியஸ்தர்.

‘இது தான் உண்மையான மேஜிக். ஷோவிற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்” என்கிறார்.

உணவகம்

பார்டனும் ஒலிவியாவும்  உணவகத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

“ஏன் சாராவை பற்றி ஒன்றுமே பேச மாட்டேன் என்கிறாய் ..அவள் இறப்பதற்கு முன்தினம் என்னிடம் உன்னைப் பற்றி எதோ சொல்ல வேண்டும் என்றாள்”

“நான் சாராவை ஒருபோதும் விரும்பவில்லை. என்னில் ஒரு பாதி தான் அவளை விரும்பியது. நான் உன்னைக் காதலிக்கிறேன். அது தான் உண்மை” என்கிறான்.

ஒலிவியா நம்ப மறுக்கிறாள்.

ஏஞ்ஜியர் திரும்ப வந்து விட்டான் என்பதை சொல்லிவிட்டு அங்கிருந்து செல்கிறாள்.

அரங்க மேலாளர் அறை

நகரின் முக்கியஸ்தர் ஏக்கர்மேன் மேலாளரிடம் ஏஞ்ஜியருக்கு ஷோ ஒதுக்கும் நாளில் மற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிடும்படி சொல்கிறார்.

டிக்கெட் கட்டணத்தை அதிகமாக்கும்படியும் சொல்கிறார்.

ஷோ அரங்கம்

ஏஞ்ஜியர்மேடையின் நின்று கொண்டிருக்கிறான்

பார்வையாளர் வரிசையில் பார்டன் அமர்ந்திருக்கிறான்.

“தான் செய்யப்போகும் தந்திரக்காட்சி ஆபத்தானது என்றும் யாரேனும் உங்கள் கண் முன்னால் தண்ணீரில் மூழ்குவதைப் பார்த்திருந்தால் அவர்கள் எழுந்து போய் விடலாம். ஏனென்றால் இதற்கு முன்பு ஒரு பெண் இதைச் செய்யும்போது நீரில் மூழ்கி இறந்து போனாள்”என்கிறான்.

பார்டன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ஜூலியா தண்ணீரில் தத்தளிக்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன.

ஏஞ்ஜியர் டெஸ்லாவின் இயந்திரத்துக்குள் செல்கிறான்.

காணாமல் போகிறான்.

பார்டன் உணர்ச்சிக்கொந்தளிப்பில் இருக்கிறான்.

பார்வையாளர்கள் தேடுகிறார்கள்.

இப்போது பால்கனியில் வந்து நிற்கிறான் ஏஞ்ஜியர்.

பார்வையாளர்கள் ஆரவாரம் செய்கிறார்கள்.

இரு கைகளையும் விரித்து அதனை ஏற்றுக் கொள்கிறான் ஏஞ்ஜியர்.

ஆழமாக யோசிக்கத் தொடங்குகிறான் பார்டன்.

பார்டன் பட்டறை

பார்டன் கோபத்தில் இருக்கிறான்.

ஃபாலன் வரைந்து கொண்டிருக்கிறான்.

“அவன் திறமையில்லாதவன். ஆனால்  இன்று அவனைத் தான் இங்கிலாந்தில் சிறந்த மேஜிக் நிபுணர் என்கிறார்கள். ஐம்பது அடி தூரத்தை ஒரு நொடியில் எப்படி கடக்க முடிந்தது? இதை உன்னால் எப்படி யோசிக்க முடியாமல் போனது? மேடைக்குக் கீழ் என்ன நடக்கிறது?” என்று கோபமாகக் கேட்டு ஃபாலனின் கையில் இருக்கும் வரைபடத்தைத் தள்ளிவிடுகிறான்.

மங்கலான தெரு

பார்வை மங்கிய வயதானவர் இருவர் உயரமான சாதனம் ஒன்றை கயிறைக் கட்டி நகர்த்துகிறார்கள். அந்த இடமே மங்கலாகிறது. யாரோ நின்று பார்ப்பது தெரிகிறது.

பார்டன் பட்டறை

‘ஒவ்வொரு நாளும் ஷோ முடிந்த பின்னரும் இதை அவர்கள் செய்கிறார்கள்; என்று சொல்லிவிட்டு தனக்குத் தானே யோசிக்கிறான பார்டன்.

தெரு

அந்த சாதனத்தை குதிரை வண்டியில் ஏற்றிச் செல்கின்றனர்.

அதைப் பார்த்த ஃபாலன் திரும்பி நடக்கிறான்.

சாட் வண்டி ஓரிடத்தில் நிற்கிறது.

அங்கிருந்து சாதனம் கீழே இறக்கிவைக்கப்படுகிறது.

கட்டர் இதனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பார்டன் பட்டறை

“நமக்கு எல்லாம் முடிந்துவிட்டது. அவனுடைய ரகசியங்கள் எதுவும் நமக்கு வேண்டாம். அவனைத் தனியாக விட்டுவிடுவோம். நமக்கு எல்லாம் முடிந்துவிட்டது” என்கிறான் பார்டன் துக்கத்துடன.

பாழடைந்த கட்டடம்

கட்டர் அங்கு வருகிறார். அங்கு எதோ வேலை நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனிக்கிறார். கண் தெரியாமல் இருக்கும் வயதானவரிடம் ஏஞ்ஜியரைப் பார்க்க வேண்டும் என்கிறார். ஏஞ்ஜியர்  அங்கு வருகிறார். “இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? இவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்கிறார். The Prestige வித்தைக்கான உபகரணங்களை அழிக்கிறார்கள் என்கிறான் ஏஞ்ஜியர் . தரையில் பள்ளம் தோண்டப்பட்டிருக்கிறது.

எதோ சொல்வதற்காக ஆரம்பிக்கிறார் கட்டர்.

“நீங்கள் மேடையின் பின்புறம் வரவேண்டியதில்லை” எனக் கடுமையாக் சொல்கிறான் ஏஞ்ஜியர். அவர் தலையசைக்கிறார்.

“ஏன் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?” என்று கடுமையாகக் கேட்க

“வேண்டாம்” என்று சொல்லிவிட்டு கட்டர் அங்கிருந்து செல்கிறார்.

ஏஞ்ஜியர் மேஜிக் ஷோ நடத்தும் மேடை

பார்வையாளர்கள் வரிசையில் பார்டன் அமர்ந்திருக்கிறான் இயந்திரத்தை சோதனை செய்ய வருமாறு வ் பார்வையாளர்களை அழைக்கிறான்.

தடி வைத்துக் கொண்டு மாறுவேடத்தில் இருக்கும் பார்டனும் கை தூக்குகிறான். ஏஞ்ஜியரின் உதவியாளர் பெண் பார்டனை மேடைக்கு அழைக்கிறாள். அவனுடன் மூன்று பேர் மேடைக்கு வருகிறார்கள்.

ஆச்சரியத்துடன் இயந்திரத்தைப் பார்க்கிறான் பார்டன். ஏஞ்ஜியர்  புன்னகையுடன் நிற்கிறான். இயந்திரத்தை சோதனை செய்து விட்டுத் திரும்பும் போது மேடைக்குக் கீழ் ஓடுகிறான் பார்டன்.

அங்கு போவது யார்? என யாரிடமோ கட்டர் கேட்கிறார்.

ஏஞ்ஜியர் சாகசத்திற்காக மேடையில் தயாராகிறார்.

அரிக்கேன் விளக்குடன் மேடைக்குக் கீழ் உள்ள இடத்தைப் பார்வயிடுகிறான் பார்டன்.

அங்கு தண்ணீர்த் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

அங்கு கண் தெரியாத பெரியவர் மட்டும் அமர்ந்திருக்கிறார்.

அந்தத் தண்ணீர்த்தொட்டி ஏன் அங்கு இருக்கிறது என்பதைப் போலப் பார்க்கிறான் பார்டன். அதனை சோதனை போடுகிறான்.

அரங்கத்தில் ஷோ நடந்து கொண்டிருக்கும் சத்தம் கேட்கிறது.

ஏஞ்ஜியர் மேடையில் இருந்து மறைகிறான்.

அடுத்த நொடி, ஏஞ்ஜியர் தண்ணீர்த் தொட்டிக்குள் விழுகிறான். அது மூடிக் கொள்கிறது,

பார்டன் அதிர்கிறான். ஏஞ்ஜியர் தத்தளிக்கிறான்.

பார்டன் அங்கிருக்கும் கோடரி வைத்து தண்ணீர்த் தொட்டியை உடைக்கிறான்.

அவனால் முடியவில்லை. ஏஞ்ஜியர் பார்டனையே பார்க்கிறான்.

பார்வையாளர்கள் இன்னும் ஏஞ்ஜியர் வரவில்லையே என்பது போலப் பார்க்கிறார்கள்.

கோடாரியை வைத்து மீண்டும் மீண்டும் உடைக்க, கண்ணாடி உடைகிறது. அதிலிருந்து ஏஞ்ஜியர் பார்டன் மீது விழுகிறான். அவனுடைய மூக்கில் இருந்து இரத்தம் வருகிறது. தண்ணீர் நுரையீரலில் நிரப்பியதால் வருகிற ரத்தம் அது.

கட்டர் அங்கு வருகிறார்.

அதிர்கிறார்.

ஏஞ்ஜியர் இறந்து போயிருக்கிறான்.

என்ன நடக்கிறது என்று கேட்கிறார் கட்டர்.

போஸ்ட் மார்ட்டம் அறை

ஏஞ்ஜியரின் சடலத்தை கட்டர் பார்த்துவிட்டுப் போகிறார்.

சடலத்தின் கண்கள் திறந்தே இருக்கிறது. அது கட்டரையே பார்க்கிறது.

நீதிமன்றம்

கோர்ட்டில் பார்டன் எழுந்து நிற்கிறான்.

ஏஞ்ஜியரைக் கொலை செய்ததற்கான தண்டனையாக பார்டனுக்கு தூக்குத் தண்டனையை நீதிபதி அறிவிக்கும் குரல் கேட்கிறது.

ஏஞ்ஜியரின் மேஜிக் போர்ட்கள் வைக்கபட்டிருக்கும் நீதிமன்ற அறை

கட்டர் நின்று கொண்டிருக்கிறார். ஓவன்ஸ் அங்கு வருகிறார்.

‘லார்ட் கால்ட்லோ ஏஞ்ஜியரின் பொருட்களை வாங்கியிருக்கிறார், ஆனால் இந்த ஒரு பொருள் மட்டும் எனக்குத் தேவைப்படுகிறது’ என டெஸ்லாவின் இயந்திரத்தைக் காட்டிக் கேட்கிறார் கட்டர்.

“தர முடியாது என்று மறுக்கிறார் ஓவென்ஸ்.

லார்ட் கால்ட்லோவை சந்திக்க முடியுமா எனக் கேட்கிறார் கட்டர்.

“சாத்தியமில்லை” என்று மறுக்கும் ஓவன்ஸ் “முயற்சிக்கிறேன்” என்கிறார்.

சிறைச்சாலை அறை

பார்டன் அறையில் படுத்துக் கொண்டிருக்கிறான். லார்ட் கால்ட்லோ ஒரு சிறுமியுடன் பார்டனை பார்க்க வந்திருப்பதாக காவலர் சொல்கிறார்.

பரபரப்புடன் எழுந்து போகிறான் பார்டன். ஜெஸ்ஸைப் பார்த்ததும் சந்தோஷப்படுகிறான்.

லார்ட் கால்ட்லோவைப் பார்த்ததும் அதிர்ச்சியாகிறான்.

அது ஏஞ்ஜியர் என்பது தெரிகிறது.

“நம் இருவரில் நீ தான் சிறந்த மேஜிக் நிபுணர் என்பது இருவருக்கும தெரியும். ஆனால் கடைசியில் நான்தான் ஜெயித்தேன்” என்கிறான் ஏஞ்ஜியர்

“சின்ன குழந்தையை வைத்து விளையாடுகிறாய்..உனக்குத் தேவை ரகசியம் தானே” என ரகசியம் எழுதபப்ட்ட காகிதத்தைத் தருகிறான்.

ஏஞ்ஜியர் அதைக் கிழித்துப் போடுகிறான்.

“நமக்கு விருப்பமானவரை பிரிவது எவ்வளவு கடினம் என்று நீ உணர்ந்து கொள்ளவேண்டும்” என்று ஜெஸ்ஸைத் தன்னோடு அழைத்துப் போக, “அவளுக்கு நானா குட் பை சொல்லவேண்டும்” என்கிறான்…

நிற்கிறான் ஏஞ்ஜியர்.

ஜெஸ் திரும்பவும் பார்டனிடம் வருகிறாள்.

“எப்போது என்னை வீட்டுக்கு அழைத்துப் போவாய்?” என்று கேட்கிறாள்.

“சீக்கிரமே” என்கிறான்.

ஏஞ்ஜியர் ஜெஸ்ஸை அழைத்துக் கொண்டு செல்கிறான்.

பார்டன் “என்னைத் தூக்கிலிடப் போகிறார்கள் ஏஞ்ஜியர்” என்று கத்துகிறான்.

“இவனைக் கொலை செய்தததற்காகத் தான் என்னை சிறையில் அடைத்திருக்கிறீர்கள் என காவலரிடம் கத்துகிறான்.

ஏஞ்ஜியர் போய்க் கொண்டே இருக்கிறான்.

“என்னை இங்கே அடைத்து வைத்துவிட முடியும் என்று நினைக்கிறாயா? உன்னால் முடியாது” என்கிறான் பார்டன்.

லார்ட் கால்ட்லோ பங்களா

அரண்மன போன்றதொரு வீட்டின் அருகில் சாரட் வண்டி போகிறது.

வீட்டுக்குள் ஜெஸ்ஸுடன் ஏஞ்ஜியர் நுழைகிறான்.

பணிப்பெண்ணிடம் ஜெஸ்ஸினை ஒப்படைக்கிறான்.

யாரோ வந்திருப்பதாகச் சொல்கிறாள் பணிப்பெண்.

கட்டர் காத்திருக்கிறார்.

 ஏஞ்ஜியரைப் பார்த்தும் அதிர்ச்சியாகிறார்.

“நீ இறந்து கிடப்பதை நான் பார்த்தேன்” என்று கேட்க

“ஒரு மேஜிக் நிபுணன் தன்னுடைய ரகசியத்தை சொல்வதில்லை”

என்று சொல்லும்போது “குட்நைட்” சொல்வதற்காக ஜெஸ் அங்கு வருகிறாள்.

ஜெஸ்சை அங்கு பார்த்ததும் கட்டர் மேலும் அதிர்கிறார்.

“இவளுக்கு அவளுடைய அப்பா வேண்டும். நீ இறந்ததாக நினைத்து நானும் உனக்கு உதவியிருக்கிறேன்” என்று வருத்தமாக சொல்லிவிட்டு கதவை நோக்கி செல்கிறார்.

பிறகு திரும்பி, .

“நான் லார்ட் கால்ட்லோவிடம் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ள வந்தேன். இப்போது நான் உன்னிடம் கெஞ்சப்போவதில்லை” என்கிறார்.

“இயந்திரத்தை இனி நான் பயன்படுத்தப்போவதில்லை” என்கிறார் ஏஞ்ஜியர்.

அங்கிருந்து செல்கிறார் கட்டர்.

சிறைச்சாலை

பார்டன் ஃபாலனிடம் பேசிக் கொண்டிருக்கிறான். ஃபாலன் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கிறான்.

“நீ சொன்னது போல நான் அவனை விட்டிருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் என்னை மன்னித்து விடு. சாராவுக்காக மன்னித்துவிடு. இனி உன்னுடைய வாழ்க்கையை நீ முழுமையாக வாழ வேண்டும்..குட் பை”

என்றவாறே நடக்கிறான்.

போகும்போதே சிறிய ரப்பர் பந்தினைத் தூக்கி எறிகிறான் பார்டன்.

ஃபாலன் அதைப் பிடித்துக் கொள்கிறான்.

‘குட்பை’ என்கிறான் மெல்லிய குரலில்

லார்ட் கால்ட்லோ பங்களா

ஜெஸ் விளையாடிக் கொண்டிருக்கிறாள்.

கட்டர் அங்கு வருகிறார்.

ஜெஸ்ஸப் பார்த்ததும் சிரித்தடி கையாட்டுகிறார்.

தெரு

டெஸ்லாவின் இயந்திரத்தை சாரட் வண்டியில் வைத்து ஒட்டிக் கொண்டு வருகிறார்கள்.

வண்டி நிற்கிறது.

அதில் அமர்ந்திருக்கும் கட்டர் இயந்திரத்தை இறக்கும்படி  உடன் வந்தவர்களுக்கு சைகைக் காட்டுகிறார்.

சிறைச்சாலை

பார்டன் காவலர்கள் சூழ நடந்து கொண்டிருக்கிறான்..

பாழடைந்த இடம்

கட்டர் இயந்திரத்தோடு இருக்கிறார்

சிறைச்சாலை

பார்டன் காவலரிடம் ‘கவனமாகப் பார்க்கிறாயா?” என்று கேட்கிறான்.

காவலன் திகைத்துப் போய்ப் பார்க்கிறான்.

தூக்கு மேடைக்கு அருகே பார்டனை அழைத்து செல்கிறார்கள்.

பாழடைந்த இடம்

கட்டரும், ஏஞ்ஜியரும் இயந்திரத்தைக் கயிறு கட்டி தள்ளுகிறார்கள்

சிறைச்சாலை

பார்டன் தூக்கு மேடையின் மேல் ஏறுகிறான்.

பாழடைந்த இடம்

கட்டரும், ஏஞ்ஜியரும் இயந்திரத்தை தள்ளிக் கொண்டே போகிறார்கள்.

பார்டனின் உடலைக் கட்டுகிறார்கள்.

பாழடைந்த இடம்

“நானொருமுறை உன்னிடம் ஒரு மாலுமி பற்றிச் சொன்னேன்” என்கிறார் கட்டர்.

தண்ணீரில் மூழ்கிய மாலுமி அது நிம்மதியாக இருந்தது என்று சொன்னதாகச் சொன்னீர்கள் என்கிறான் ஏஞ்ஜியர்.

“இல்லை . நான் பொய் சொன்னேன் அது வேதனை மிகுந்ததாக இருந்தது” என்றார் கட்டர்.

கட்டர் கிளம்பிப் போகிறார்.

ஏஞ்ஜியர் யோசனையோடு பார்த்துக் கொண்டு நிற்கிறான்.

சிறைச்சாலை

பார்டனின் இடுப்போடு சேர்த்து பெல்ட் கட்டப்படுகிறது. பார்டனின் முகம் இறுக்கமாக இருக்கிறது.

பாழடைந்த இடம்

டெஸ்லாவின் இயந்திரத்தை ஏஞ்ஜியர் தடவிப் பார்க்கிறான்.

கட்டர் வெளியில் வருகிறார். தெருவினைக் கடக்கும்போது எதிரில் வரும் ஒருவனைப் பார்த்து தலையசைத்து விட்டுச் செல்கிறார். அது ஃபாலன் என்று தெரிகிறது.

ஃபாலன் பாழடைந்த இடத்திற்குச் செல்கிறான்.

சிறைச்சாலை தூக்கு மேடை

பார்டனின் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்படுகிறது.

பாழடைந்த இடம்

‘மறைந்து போனவர்களை யாரும் கண்டுகொள்வதில்;ளை” என்கிறான் ஏஞ்ஜியர்.

எதோ சத்தம் கேட்க திரும்பிப் பார்க்கிறான்.

சட்டென்று திரும்பிப் பார்க்கிறான்’

‘கட்டரா?”

கட்டர் என்று அழைக்கிறான்.

சிறைச்சாலை தூக்குமேடை

கழுத்தில் கயிறு கட்டப்பட்ட நிலையில் நிற்கிறான் பார்டன்.

“ஏதாவது கடைசியாக சொல்ல விரும்புகிறாயா?” என யாரோ சொல்வது கேட்கிறது.

புரியாத மொழியில் எதோ சொல்கிறான்.

Abacadabra என்கிறான்

அடுத்த நொடி தூக்கில் தொங்குகிறான்.

பாழடைந்த இடம்

தட் தட் என்று ஏதோ ஏஞ்ஜியர் நோக்கி வருவது போல சத்தம் கேட்கிறது.

கட்டர் கட்டர் என்று அழைக்கிறான் ஏஞ்ஜியர்.

ரப்பர் பந்து உருண்டு வந்து ஏஞ்ஜியர் காலில் படுகிறது.

“யார் என நிமிர்ந்து பார்க்கிறான்.

அடுத்த நொடி ஏஞ்ஜியர் மேல் தோட்டா பாய்கிறது.

நம்ப முடியாத அதிர்ச்சியில் கீழே விழுகிறான்.

ரப்பர் பந்தினை ஒரு கை எடுக்கிறது. இரண்டரை விரல்கள் இல்லாத கைகள்.

ஃபாலன் தன்னுடைய தொப்பியை எடுக்க, அது பார்டன் என்று தெரிகிறது.

“நீ ஃபாலன் தானே? நீங்கள் இரட்டையர்களா? எப்போதும் இப்படியே இருந்தீர்களா?” எனக் கேட்கிறான் ஏஞ்ஜியர்.

பின்னணிக் குரல் :நாங்கள் ஃபாலனாகவும் இருந்தோம். பார்டனாகவும் இருந்தோம்”

ஃபாலனின் முகம் காட்டப்படுகிறது.

பார்டன் ஃபாலனாக மாறுவேடம் போடுவது.

ஏஞ்ஜியர் திகைக்கிறான்

“பெட்டிக்குள் போனது யார்? வெளியில் வந்தது யார்?” எனக் கேட்கிறான் ஏஞ்ஜியர்.

Flash Cut

மேடையில் பெட்டிக்குள் பார்டன் போவதும் , மற்றொரு பெட்டியில் இருந்து வெளியேறுவதும் காட்டப்படுகிறது.

Ends

“இரண்டு பேரும் மாறி மாறி தான்” என்கிறான் ஃபாலன்

Flash Back

பார்டனும் , ஃபாலனும் மாறுவேடம் போட்டுக் கொள்வது மேடையில் யுத்தி செய்து காட்டுவது.

கட்டருக்குத் தெரியும். இது ரொம்ப எளிமையானது என்று நான் நினைத்தேன்” என்கிறான்.

“இல்லை” என்கிறான் ஃபாலன்

“மேஜை மேல்  இரு கை வைக்கப்படுகிறது.

Ends

“எளிமையானது. ஆனால் சுலபமல்ல” – ஃபாலன்

Flash Back

பின்னணிக் குரல் “ ஒருவரின் வாழ்க்கையை இருவரும் வாழ்வதென்பது சுலபமல்ல.

மேஜையில் கைகளை வைத்திருக்கும் ஃபாலனின் விரல்களை பார்டன் வெட்டுகிறான்

Flashcut

“எப்படி இப்படி மீண்டும் ரத்தம் வருகிறது என்பது தெரியவில்லை” என்றபடி கட்டுப் போடுகிறாள் சாரா.

ENDS

“ஒலிவியாவும் உன்னுடைய மனைவியும்” என்று ஏஞ்ஜியர் கேட்க

“நாங்கள் அவர்களில் ஒருவரை தனித்தனியாகக் காதலித்தோம்”

FLASHCUT

ஒலிவியாவை ஃபாலன் பார்ப்பது.

சாராவிடம் சந்தோஷமாக பார்டன் பேசுவது.

சாராவிடம் ஃபாலன் கோபப்படுவது.

பின்னணிக் குரல் : நான் சாராவை விரும்பினேன். அவன் ஒலிவியாவை விரும்பினான்.

ENDS

“ஒருவரின் முழு வாழ்க்கையை பாதியாக நாங்கள் வாழ்ந்தோம்”

Flash Cut

ஜெஸ்ஸை சமாதானப்படுத்தும் ஃபாலன்.

Ends

ஃபாலன் பேசுகிறான்.

Flash Cut

சாராவை சமாதானப்படுத்தும் பார்டன்.

Ends

“தியாகம் என்பது பற்றி உனக்கென்ன தெரியும்?” – ஃபாலன்

“நானும் தியாகம் செய்திருக்கிறேன்” – ஏஞ்ஜியர்

“மற்றவருடையதை திருடுவது தியாகமாகாது” – பார்டன்

“ஆகும்” – ஏஞ்ஜியர்

பாழடைந்த அரங்கம்

ஏஞ்ஜியர் டெஸ்லாவின் இயந்திரத்தின் முன் நிற்கிறான். அதில் பிஸ்டலை வைக்கிறான்.

தன்னுடைய ஜாக்கெட்டினை கழற்றி வைத்து விட்டு அந்த இயந்திரத்துக்குள் செல்கிறான்.

அவன் மேல் வெளிச்சம் பாய்கிறது.

ஏஞ்ஜியர் மறைந்து போகாமல் அங்கேயே நிற்கிறான்.

“இந்த மெஷின் வேலை செய்யவில்லை”

ஏஞ்ஜியரின் பின்னணிக் குரல் கேட்கிறது.

“ஆனால் அது வேலை செய்தது”

என்கிறான்.

ஏஞ்ஜியர் திரும்புகிறான்.

மற்றொரு ஏஞ்ஜியர் அங்கு நிற்கிறான். அவனுடைய தோளிலிருந்து ஆவி பறக்கிறது.

முதல் ஏஞ்ஜியர் பிஸ்டலை கையில் எடுத்து அவனைக் குறி வைக்கிறான்.

இரண்டாவது ஏஞ்ஜியர் பயந்து போய் “வேண்டாம்…..இரு” என்கிறான்.

முதல் ஏஞ்ஜியர் இரண்டாவது ஏஞ்ஜியரை சுட்டு விட, அவன் கீழே விழுகிறான். அவனுடைய சட்டையில் இருந்து ஆவி பறந்து கொண்டே இருக்கிறது.

பாதாள அறை – பாழடைந்த அரங்கம் – இரவு

ஏஞ்ஜியர் கீழே பார்க்கிறான். அவனுடைய முகத்தில் சிறு புன்னகை தெரிகிறது. அவன் அங்குள்ள அரிக்கேன் விளக்கைக் காட்டுகிறான்.

மிக பலவீனமாக பேசுகிறான் ஏஞ்ஜியர்.

“இது எனக்கு என்ன செய்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? நீ எங்கிருக்கிறாய் என்பதை நீ கவனிக்கவில்லை. உனக்கு நான் காட்டுகிறேன்”

என்று தவழ்ந்து போய் அறிகிறேன் விளக்கை எடுக்க நினைக்கிறான். ஆனால் அவனால் அதை எடுக்க முடியவில்லை.

“ஒவ்வொரு முறையும் அந்த இயந்திரத்துக்குள் செல்வதற்கு தைரியம் வேண்டும்”

அரங்க மேடையின் கீழ்ப்பகுதி  – மாலை – FLASHBACK

தண்ணீர் இருக்கும் தொட்டி இருக்கிறது. நாம் ஏற்கனவே பார்த்த கண் தெரியாத மனிதரின் இரட்டையர் அங்கே இருக்கிறார். புகை பிடித்துக்  கொண்டிருக்கிறார்.

ஏஞ்ஜியரின் குரல் பின்னணியில் கேட்கிறது

“நான் தான் The Prestige பகுதியில் வெளிவருகிறேனா என்பதே எனக்குத் தெரியாது அல்லது ”

திடிரென , ஒரு கதவுத் திறந்து அதில் இருந்து ஏஞ்ஜியர் கீழே தண்ணீரில் விழுகிறான். டாங்க் மூடிக் கொள்கிறது.

ஏஞ்ஜியரின் பின்னணிக் குரல் கேட்கிறது

“அல்லது  பாக்ஸில் இருக்கும் மனிதனா….”    

ஏஞ்ஜியர் அந்தக் கண்ணாடியினை வேகமாக உதைக்கிறான். கண் தெரியாத மனிதர் எந்த சலனமும் இல்லாமல் புகை பிடித்துக கொண்டிருக்கிறார்.

பட்டறை – பகல் – FLASHBACK

இரண்டு கைகள் பறவைக் கூண்டினை அறைந்து சாற்றுகிறது

கண் தெரியாத மனிதர் அந்தப் பெரிய தண்ணீர் உருளையை அரங்கத்தின் பின் வாசலுக்கு தள்ளிக் கொண்டு போகிறார்.

பாதாள அறை பாழடைந்த அரங்கம் – இரவு

ஏஞ்ஜியர் நகருவதை நிறுத்தி சாய்ந்து கொள்கிறான். மூச்சு வாங்குகிறது.

பார்டன் , “நீ பாதி உலகத்தை சுற்றி வந்துள்ளாய். நிறையசெலவு செய்திருக்கிறாய். பயங்கரமான காரியங்களை எல்லாம் செய்திருக்கிறாய் ..ஆனால் எல்லாமே பிரயோஜனமில்லாமல் போய்விட்டது” என்கிறான்

ஏஞ்ஜியர் அவனை அப்போதும் ஒரு போட்டி மிகுந்த பார்வையைப் பார்க்கிறான்.

ஏஞ்ஜியர், “ ஒன்றுமில்லையா? நீங என்ன செய்திருக்கிறேன் என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை. நான் ஏன் இதனை செய்கிறோம்?

பார்வையாளர்களுக்கு உண்மை தெரியும். இத்ன்ஹா உலகம் எளிமையானது, பரிதாபமானது என்பது தெரியும். ஆனாலும் அவர்களை நம்மால் முட்டாளாக்க முடியும் , ஒரு நொடிக்காவது.  அவர்களை அதிசயிக்க வைக்க முடியும். அதற்கு நீ சிறப்புள்ளவனாக ஆக வேண்டும்..இது உனக்குத் தெரியாதா?”

சொல்லிவிட்டு புன்னகைக்கும் ஏஞ்ஜியரைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் பார்டன்.

ஏஞ்ஜியரின் உடல் ஆடுகிறது. அரிக்கேன் விளக்கு கீழே விழுகிறது. அதில் இருந்து எண்ணெய் பரவ, அநேக்ல்லாம் நெருப்பும் பற்றிக் கொள்கிறது.

கட்டரின் பின்னணிக் குரல் கேட்கிறது

“ஒவ்வொரு மேஜிக்கிலும் மூன்று பாகங்கள் இருக்கின்றன…”

பார்டன் ஏஞ்ஜியரைப் பார்க்கிறான். பின்பு அங்கிருந்து செல்கிறான்.

பட்டறை – பகல்

படத்தின் தொடக்கத்தில் காட்டப்பட்ட பட்டறை காட்டப்படுகிறது. அது பார்டனுடையது என்பதை இப்போது நாம் புரிந்து கொள்கிறோம். கட்டர் ஜெஸ்ஸுக்கு பறவை மேஜிக்கை செய்து காட்டிக் கொண்டிருக்கிறார்.

கட்டரின் பின்னணிக்குரல் “முதல் பகுதியை The Pledge என்கிறோம்

கட்டர் பறவையைக் காட்டுகிறார்.

பாழடைந்த அரங்கம் – இரவு

பாதாள அறை முழுக்க நெருப்புப் பற்றிக் கொண்டிருக்கிறது.

கட்டரின் பின்னணிக் குரல் கேட்கிறது

“இரண்டாவது பாகத்தின் பெயர் The Turn. நான் சாதாரண ஒன்றினை எடுத்துக் கொள்வேன்”

ஏஞ்ஜியர் ரத்தத்தின் மீது படுத்திருக்கிறான்.

அவனுடைய கண்கள் சுற்றிலும் பார்க்கிறது. சுற்றிலும் உள்ள நெருப்பின் வெளிச்சம் அவன் மீது படுகிறது.

பட்டறை – பகல்

கட்டர் கூண்டினை மூடியிருக்கும் துணியினை விலக்குகிறார். கூண்டும், பறவையும் இப்போது காணவில்லை.

கட்டரின் பின்னணிக் குரல் கேட்கிறது “ஆனால் நீங்கள் கை தட்ட மாட்டீர்கள்”

ஜெஸ் ஆர்வத்துடன் எதிர்பார்ப்புடன் பார்த்து கொண்டிருக்கிறாள். கட்டர் துணியினால் தன் கைகளை மூடுகிறார்.

கட்டரின் பின்னணிக் குரல் கேட்கிறது “ஏனெனில் ஒன்றைக் கானால செய்வது என்பது போதாது..”

என்று சொல்லிவிட்டு கையிலிருந்த துணியை எடுக்க, கூண்டு தெரிகிறது.

கட்டரின் பின்னணிக் குரல் கேட்கிறது “அதைத் திருப்பிக் கொண்டு வர வேண்டும்” என்கிறார்.

அப்போது எதையோ பார்த்துவிட்டு துள்ளி குதித்து ஓடுகிறாள் ஜெஸ்.

அங்கு பார்டன் உள்ளே வருகிறான். அவனைப் பார்த்ததும் ஓடிப்போய் அவன் மேல் ஏறிக் கொள்கிறாள். அவனது கழுத்தில் முகத்தை புதைக்கிறாள்.

அவனைப் பார்த்ததும் கட்டர் தலையாட்டுகிறார். அங்கிருந்து செல்கிறார்.

பார்டன் தன் பாக்கெட்டில் இருந்து ரப்பர் பந்தினை ஜெஸ் கையில் தருகிறான். அவள் சிரிக்கிறாள் அவனைக் கட்டிக் கொள்கிறாள்.

கைவிடப்பட்ட அரங்கம் – இரவு

பார்டன் ஏணிப்படியில் ஏறுகிறான். எரிகிற நெருப்புக்கு இடையில் சுவரில் எதோ அசைவது அவனுக்குத் தெரிகிறது.

கட்டரின் பின்னணிக் குரல் கேட்கிறது “இப்போது நீங்கள் ரகசியத்துக்காகக் காத்திருப்பீர்கள்..”

பார்டன் மெதுவாக பாதாள அறையைப் பார்க்கிறான். நெருப்புக்கு இடையில் உற்றுப் பார்க்கிறான்.

கட்டரின் பின்னணிக் குரல் கேட்கிறது “ஆனால் உங்களால் கண்டுபிடிக்க முடியாது..”

பார்டன் பாதாள அறையைப் பார்க்க, அவனது முகம் வார்த்தையால் விவரிக்க முடியாத நிலைக்கு செல்கிறது.

பெரிய நீர்த் தொட்டிகள் இருக்கின்றன. டஜன் கணக்கில் இருக்கும். வரிசை வரிசையாக நிற்கிறது.

கட்டரின் பின்னணிக் குரல் கேட்கிறது  “ஏனென்றால், நீங்கள் அதனைத் தெரிந்து கொள்ள விரும்ப மாட்டீர்கள்”

தண்ணீர்த் தொட்டியில் அழுகிய நிலையில் உள்ள உடையோடு ஏஞ்ஜியரின் உடல்கள் மிதக்கிறது.

பாழடைந்த அரங்கம் – பகல்

கட்டர் அந்த பாழடைந்த அரங்கத்தின் பாதாள அறையை செங்கற்களால் மூடிக் கொண்டிருக்கிறார்.

காடு – பகல் – FLAHSBACK

ஒரு பூனை தொப்பிகளுக்கு இடையில் ஓடி, காட்டுக்குள் ஓடி மறைகிறது.

கட்டரின் பின்னணிக் குரல் கேட்கிறது  “நீங்கள் முட்டாளாக விரும்புகிறீர்கள்” என்று கேட்கிறது.

நாம் தொப்பிகளுக்கு இடையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்

FADE OUT

CREDITS

END…

திரைக்கதை : Christopher Nolan, Jonathan Nolan
இயக்கம் : Christopher Nolan

Author Image

ஜா.தீபா

எழுத்தாளர். ‘மேதைகளின் குரல்கள்’ ‘கறுப்புத் திரை’ போன்ற திரைப்படம் சார்ந்த புத்தகங்களையும், “நீலம் பூக்கும் திருமடம்’, ‘மறைமுகம்’ சிறுகதைத் தொகுப்பும் கவனம் பெற்றவை. தொலைகாட்சித் தொடர்களுக்கு திரைக்கதைகள் எழுதி வருகிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
Thug_Life_

Thug Life - ஒரு பார்வை

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?