The Talkie
Saturday, April 11, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home தொடர்கள் திரை புத்தகம்

திரை புத்தகம் 02

The Talkie by The Talkie
May 13, 2025
in திரை புத்தகம்
A A
0
திரை புத்தகம் 02
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon கருந்தேள் ராஜேஷ்


மிகச்சிறிய வயதிலேயே டாரண்டினோ திரைப்படங்களைப் புரிந்துகொள்ளத் துவங்கிவிட்டார் என்பதை சென்ற கட்டுரையில் பார்த்தோம். அவரது கருத்துகளை Cinema Speculation என்ற அவரது புத்தகத்தில் விரிவாகக் கொடுத்திருக்கிறார். விட்டதில் இருந்து தொடர்வோம். இந்தக் கட்டுரையும் Cinema Speculation புத்தகத்தை முன்வைத்தே எழுதப்படுகிறது.

1970இல் இருந்து 1972 வரை, டாரண்டினோவுக்கு எட்டு முதல் பத்து வயது வரை, அவரது மனதை பாதித்த வன்முறை நிறைந்த படங்களைக் குறிப்பிடுகிறார். அவற்றில் Toll Booth, Godfather, Catch-22, The New Centurions, Bloody Mama போன்றவற்றின் வன்முறைக் காட்சிகளை, அந்தப் படங்களின் கதைகள் தெரிந்ததால் எளிதில் புரிந்துகொள்ள முடிந்ததாக டாரண்டினோ சொல்கிறார். அதே சமயத்தில், திரைப்படங்களை விட, இடையில் திரையிடப்பட்ட ட்ரெய்லர்களில் சில காட்சிகளைப் பார்த்தே மிகவும் பயந்துபோனதாகக் குறிப்பிடுகிறார். அவைகளில் Wait Until Dark, Women In Love, Fortune and Men’s Eyes, 200 Motels ஆகியவை முக்கியமானவை (இங்கே குறிப்பிடப்பட்ட அத்தனை படங்களுமே 70களின் திரையரங்குகளைக் கட்டி ஆண்ட மிக முக்கியமான திரைப்படங்கள். அமெரிக்காவின் ரசனையை வளர்த்தவைகளில் பெரும்பங்கு வகித்தவை என்பதை மனதில் கொண்டு படிக்கவேண்டும். இந்தப் படங்களைப் பற்றித் தேடிப் பாருங்கள்). 

அதேசமயத்தில், வால்ட் டிஸ்னி நிறுவனம் வெளியிட்டு உலகெங்கும் மிகப்பெரிய சூப்பர்ஹிட் ஆன கார்ட்டூன் திரைப்படமான Bambi பற்றி ஒரு மிக முக்கியமான கருத்தை எழுதுகிறார் டாரண்டினோ. என்னவென்றால், அந்தத் திரைப்படம் பாம்பி என்ற மான்குட்டியைப் பற்றிய படம். உங்களுக்கு The Lion King படத்தின் கதை தெரிந்தால் Bambi கதை எளிதில் புரிந்துவிடும். பாம்பி என்ற ஆண் மான்குட்டி, காட்டின் இளவரசனான தந்தையுடனும் தாயுடனும் அமைதியான வாழ்க்கை வாழ்கிறது. அதற்கு இரண்டு நண்பர்களும் உண்டு.  திடீரென்று மிகச்சிறு வயதிலேயே  ஒரு வேட்டைக்காரனால் தன் தாய் கொல்லப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறது. அதன்பின் தந்தையின் வளர்ப்பில் காட்டில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றித் தெரிந்துகொள்கிறது. அப்போது ஒரு மானுடன் காதல் வயப்படுகிறது. எதிரி ஆண் மான்களிடம் இருந்து தனது காதலியைக் காக்கிறது. மிக மோசமான காட்டுத்தீயில் இருந்து தப்பிக்கிறது. படத்தின் இறுதியில் தனது தந்தையின் இடத்தில் அமர்ந்துகொண்டு காட்டைக் காக்கும் பொறுப்பை ஏற்கிறது. இதுதான் Bambiயின் சுருக்கமான கதை.

இந்தக் கார்ட்டூன் படத்தை மிகச்சிறு வயதில் பார்த்த டாரண்டினோ, இதன் தாக்கத்தால் மனம் பாதிக்கப்பட்டதாகச் சொல்கிறார். அவர் மட்டும் அல்லாமல், அந்தப் படத்தை எந்தக் குழந்தை பார்த்தாலும் மிக நீண்ட காலத்துக்கு அந்தப் படம் ஏற்படுத்தும் மனக்கலக்கத்தை மறக்கவே முடியாமல் போகும் என்றும் எழுதுகிறார். இப்படி அந்தப் படத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏராளம் என்பது அவர் கருத்து. 

காரணம்? குட்டி மானின் தாய் கொல்லப்படும் காட்சி அதைப் பார்க்கும் அத்தனை குழந்தைகளையும் பாதித்தது என்பது டாரண்டினோவின் கருத்து. அதேபோல் அந்தப் படத்தில் வரும் மிகப்பெரிய, கொடூரமான காட்டுத் தீ. எல்லாவற்றிலும் முக்கியமாக, அமைதியாகத் துவங்கும் அந்தப் படம், திடீரென மிகவும் உணர்ச்சிகரமாக மாறி, சோகமயமாகவே செல்லும். இந்த உணர்ச்சிகளின் கலவையால் பாதிக்கப்படாத குழந்தையே இல்லை என்பது டாரண்டினோவின் ஆணித்தரமான கருத்து. (‘Those sequences in Bambi have been fucking up Children for decades’). ஆனால் வால்ட் டிஸ்னி நிறுவனமோ, பாம்பி தனது நண்பர்களுடன் படத்தின் துவக்கத்தில் செய்யும் சேட்டைகளை மையமாக வைத்தே ட்ரெய்லர்களை உருவாக்கி வெளியிட்டது என்றும், வேறு எதைப்பற்றியும் கவலையேபடவில்லை என்றும் டாரண்டினோ சொல்கிறார். 

அந்த காலகட்டத்தில், ஒருசில படங்களைச் சிறுவன் டாரண்டினோ பார்க்க விரும்பியும், அவரது அம்மா அப்படங்களுக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று மறுத்திருக்கிறார். இது என்ன எல்லாப் படங்களுக்கும் அழைத்துச் செல்லக்கூடிய அம்மா, இவற்றை மட்டும் மறுக்கிறாரே என்று சிறுவன் டாரண்டினோ கேட்க, அவரது அம்மா சொன்ன பதில் மிக முக்கியமானது. 

‘க்வெண்டின்… அந்தப் படங்கள் வன்முறையானவை. ஆனால் அதற்காக உன்னை நான் கூட்டிச்செல்ல மாட்டேன் என்று சொல்லவில்லை. மாறாக, அந்த வன்முறைக் காட்சிகளுக்குப் பின்னே இருக்கும் நியாயமான காரணங்கள் உனக்குப் புரியாது. எனவே நீ வன்முறைக்காகவே அந்தக் காட்சிகளின் பக்கம் ஈர்க்கப்படுவாய். அது எனக்குப் பிடிக்கவில்லை என்பதால் மட்டுமே உன்னை அழைத்துச் செல்ல முடியாது என்கிறேன்’ என்பதே அந்தப் பதில். இந்தப் படங்கள், குறிப்பிட்ட Blaxploitation வகையைச் சேர்ந்தவை (கறுப்பினத்தவர்கள், அடக்குமுறைக்கு எதிராக வெகுண்டு எழும் வகை). அவர்கள் திரைப்படங்களில் கையாளும் வன்முறை பற்றியே டாரண்டினோவின் அம்மா சொல்லியிருக்கிறார் (பிந்நாட்களில் டாரண்டினோ எடுத்த Django Unchained திரைப்படத்தை நினைவு கொள்க). 

 இந்தக் காலகட்டத்தில் எப்படியெல்லாம் பிறரின் கவனத்தைக் கவரும் வகையில் பிரம்மாண்டமான திரைப்பட பேனர்கள் வைக்கப்பட்டன, எஃப்.எம் ரேடியோவில் எப்படியெல்லாம் விளம்பரங்கள் வந்தன, என்றும் விரிவாகக் குறிப்பிடுகிறார் டாரண்டினோ. 

இதன்பின் வரிசையாகக் குழந்தைப் பருவத்தில் பார்க்காமல் விட்ட Blaxploitation மற்றும் குங்ஃபூ படங்களையெல்லாம் 1976இல் தொடர்ந்து பார்த்ததைக் குறிப்பிடுகிறார் *14 வயதில்). 70களிலும் 80களிலும் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் திரையிடப்பட்டு ஓடிய படங்களும் அவற்றில் அடங்கும் (Five Fingers of Death, Lady Kung fu, Chinese Connecton ஆகியவை அவற்றில் சில). 

உண்மையிலேயே அமெரிக்காவில் திரைப்படங்கள் பார்ப்பது ஒரு வரம் என்றே சொல்லவேண்டும். அங்கு சென்று படம் பார்த்தவர்களுக்கு இது புரியும். திரை ரசிகர்களுக்கு ஏராளமான விருப்பத் தேர்வுகள் அங்கே உண்டு. திடீரென ஒரு குறிப்பிட்ட வகைப் படங்கள் மட்டும் வரிசையாக ஓடும். திடீரென ஒரு ஸ்டாரின் படங்களுக்கான விழா நடக்கும். வரிசையாக டபிள் பில் என்ற பெயரில் ஒரே டிக்கெட்டில் இரண்டு படங்கள் பார்க்கமுடியும்.. இன்னும் நினைத்தே பார்க்க முடியாத ஏராளமான போனஸ்கள் உண்டு. அதிலும் திரைப்படங்களின் பொற்காலமான எழுபதுகளில் திரைப்பட வெறியனாக இருந்த ஒரு சிறுவனைப்பற்றி யோசித்துப் பாருங்கள். அப்படித் திரைப்படங்களே கதி என்று பார்த்துத் தீர்த்திருக்கிறார் டாரண்டினோ. அந்த அனுபவங்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். 

இதனால் எந்தெந்தப் படங்கள் எப்படியெல்லாம் இருந்தன என்றும், எந்தக் காலகட்டங்களில் அவை பிரபலமாயின என்றும், அதற்கான காரணங்களும் அவரால் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. மக்களின் ரசனையைக் காலகட்டங்கள் தோறும் புரிந்துகொள்ள இந்தத் தகவல்கள் அவசியம் உதவி செய்கின்றன. 

இந்தக் காலகட்டத்தில்தான் Black Gunn திரைப்படம் வெளியாகிறது. அதில் நடித்தவர், கறுப்பின மக்களிடையே சூப்பர் ஸ்டாராக இருந்த ஜிம் ப்ரௌன். அவர் ஒரு ரக்பி வீரர். கூடவே கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். அப்படிப்பட்டவர் ஒரு Blaxploitation படத்தில் அதிரடியாகத் துப்பாக்கி ஏந்தி எதிரிகளைப் பந்தாடினால் எப்படி இருக்கும்? அந்தப் படத்தைப் பார்த்து அசந்துபோய்விட்டதாக டாரண்டினோ சொல்லியிருக்கிறார். எப்படியென்றால், அந்தப் படம் வெளியான திரையரங்கில் படம் பார்க்க வந்த அத்தனை பேருமே கறுப்பினத்தவர்களே. அவர்களுக்கு நடுவே ஒரே ஒரு வெள்ளையனாக டாரண்டினோ மட்டுமே சிறுவயதில் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார். அதைப் போன்ற ஒரு அற்புத அனுபவம் வேறு எந்தப் படம் பார்க்கையிலும், படங்கள் எடுக்கையிலேயே கூடக் கிடைத்ததே இல்லை என்று டாரண்டினோ சொல்கிறார் (இதுபோன்ற Blaxploitation படங்கள் இப்போதுமே இணையத்தில், யூட்யூப் போன்ற தளங்களில் கிடைக்கின்றன. அவற்றை நீங்கள் பார்த்தால் மட்டுமே டாரண்டினோ சொல்லும் உச்சபட்சப் பரவச உணர்வைப் புரிந்துகொள்ளமுடியும். அவை பத்து Django Unchained படங்கள் கொடுக்கும் பரவசத்தை இயல்பாகக் கொடுப்பவை). அப்போது பார்த்த அந்த Blaxploitation படங்கள்தான் பின்னாளில் Jackie Brown, Django Unchained, The Hateful Eight போன்ற படங்களை எடுக்க டாரண்டினோவுக்கு உறுதுணையாக இருந்தன. 

சிறுவயதில் படம்பார்த்து இத்தனை அனுபவங்களையும் மிக விரிவாக எழுதியபின், அவரை பாதித்த படங்களை ஒவ்வொன்றாக, ஒவ்வொரு அத்தியாயமாக இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். Bullitt (1968), Dirty Harry (1971), Deliverance (1972), The Getaway (1972), The Outfit (1973), Sisters (1973), Daisy Miller (1974), Taxi Driver (1976), Rolling Thunder (1977), Paradise Alley (1978). Escape from Alcatraz (1979), Hardcore (1979), The Funhouse (1981) ஆகிய படங்கள் பற்றித் தனித்தனி அத்தியாயங்கள் உண்டு. கூடவே, ஆத்தர் (Auteur) என்று அழைக்கப்படும் சினிமா மேதைகளும், ஜாலியாகப் படம் எடுத்த சினிமாப் போக்கிரிகளும் என்றே இன்னொரு அத்தியாயமும் உண்டு. அதேபோல், மார்ட்டின் ஸ்கார்ஸேஸியின் டாக்ஸி ட்ரைவர் படத்தை ப்ரையன் டி பா(ல்)மா இயக்கியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்றும் இன்னொரு அத்தியாயம் உண்டு. ப்ரையன் டி பா(ல்)மா ஒரு மாபெரும் கல்ட் இயக்குநர் என்று திரை ரசிகர்களுக்குத் தெரியும். அவர் டாரண்டினோவுக்கு முன்னோடியாக இருந்தவர். 

மேலே கொடுக்கப்பட்டுள்ள படங்கள் எல்லாவற்றையும் பார்த்தால்தான் க்வெண்டின் டாரண்டினோ எப்படிப் படங்களை எழுதி எடுக்கிறார் என்பது ஓரளவு புரியும். அவரது மூளைக்குள் நாம் நுழைந்து பார்க்க இப்படங்கள் உதவும். அவரது ஒவ்வொரு படத்தின் ஒவ்வொரு வசனமும் காட்சியும் நன்றாகத் தெரிந்தவன் என்ற முறையில், அவரது எழுத்து பற்றியும் இயக்கம் பற்றியும் புரிந்துகொள்ள அவசியம் இப்படங்களை நீங்கள் பார்க்கவேண்டும். 

திரை ரசிகர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு அற்புதமான புதையல் என்பதில் சந்தேகமே இல்லை. அத்தனை தகவல்கள், அத்தனை குறிப்புகளை அநாயாசமாகக் கொட்டிச் சென்றிருக்கிறார் டாரண்டினோ. அவற்றில் நமக்குக் கிடைக்காத நன்மைகள் இல்லை. எனவே, அனைத்துத் திரை ரசிகர்களும், குறிப்பாக டாரண்டினோ ரசிகர்கள் – Cinema Speculation என்ற இந்தப் புத்தகத்தைப் படித்தே ஆகவேண்டும் என்பது என் விருப்பம். 

அடுத்த பகுதியில் வேறொரு முக்கியமான, உபயோகமான, சுவையான திரைப் புத்தகத்துடன் சந்திப்போம். 


Author Image

கருந்தேள் ராஜேஷ்

திரைக்கதை ஆலோசகர். திரைக்கதை ஆசிரியர். மொழிபெயர்ப்பாளர். சினிமா குறித்து தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். Karunthel.com இவரது இணையதளம்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
Trendkottai 3

ட்ரெண்டு கொட்டாய் - 3

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?