The Talkie
Thursday, April 9, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள் உலகத் திரைப்படங்கள்

ஆஸ்கர் 2025 – பாகம் 03

The Talkie by The Talkie
May 17, 2025
in உலகத் திரைப்படங்கள், கட்டுரைகள்
A A
0
Complete Unknown
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon அய்யனார் விஸ்வநாத்

A Complete Unknown

ஆஸ்கர் 2025 இன் சிறந்த படப் பிரிவின் பரிந்துரைப் பட்டியலில் இருந்த படங்களில் எனக்குப் பிடித்த இன்னொரு படம் A Complete Unknown.

இசைக்கலைஞர் பாப் டிலான் (Bob Dylan) வாழ்வை ஒட்டிய படம். அவரின் முழுமையான Biopic எனச் சொல்லிவிட முடியாது. ஆனால் பாப் டிலான் ஒரு இசைக்கலைஞராக எப்படி உருவாகி வந்தார் என்பதைச் சொல்லும் படம். கூடவே அவருக்கு உத்வேகமாக இருந்த முன்னத்தி ஏர் இசைக் கலைஞர்கள், சக இசைக் கலைஞர்கள், நாட்டுப்புற இசை மேலெழுந்து வந்த காலகட்டம், விடுதலையின் ஏக்கம் மற்றும் மீறல்கள், அசல் கலைஞர்கள் மற்றும் அவர்களின் தனித்துவமான சிக்கல்கள் என எல்லாவற்றையும் இந்த திரைக்கதை உள்வாங்கி இருக்கிறது. எனவே இந்தப் படத்தை பாப் டிலானின் வாழ்வைச் சொல்லும் படமாக மட்டும் அடையாளப்படுத்த முடியாது.

1961 இல் நியூயார்க் நகரத்திற்கு டிலான் வந்ததையும், நாட்டுப்புற இசை உலகில் அவர் விரைவாகப் புகழ் பெற்றதையும் இந்தப் படம் சற்று விரிவாக காட்சிப்படுத்துகிறது. டிலான் தன்னை ஓர் அடையாளமாக முன் நிறுத்த விரும்பாதவர் எனவேதான் இசை உலகில் அவரது இருப்பு மர்மமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. பாரம்பரியங்களை உடைப்பது, வளர்ந்த அடையாளத்தை திடீரென அழித்துக் கொள்வது போன்ற இருப்பு சார்ந்த விளையாட்டையும் ஆடிப் பார்த்தார்.

இரண்டு நிகழ்வுகள் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று 1965 ஆம் ஆண்டு Newport Folk Festival இல் டிலான் எலெக்ட்ரிக் கிதார் வாசித்தது- இதனால் பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும் ரசிகர்களும், விமர்சகர்களும் டிலானை “ஏழைகளின் குரல்” என்பதாக அடையாளப்படுத்துகின்றனர் ஆனால் அவர் அதை மறுத்து, ராக் இசையைத் தேடிச் சென்றார். முழுக்க பிறரால் உருவாகி வரும் அடையாளத்தை மறுப்பவராகத்தான் டிலான் வாழ்ந்திருக்கிறார்.

அவரே சொல்வதுபோல், “I’m not the one you think I am.” என்பதுதான் டிலானின் முழுமையான சித்திரமாக இருக்க முடியும். படம் முழுக்க அவர் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறார். கூடவே அவருக்குப் பிடித்தமானதையே தேர்ந்தெடுப்பவராகவும் இருக்கிறார்.

படத்தில் பலக் காட்சிகள்  உணர்ச்சிப்பூர்வமாக சித்தரிக்கப்படுகின்றன. இரவுப் பின்னணியில் தனியான ரயில் பயணங்கள், மேடையிலும்-திரளான மக்கள் முன்னரும் தோன்றும் தனிமை உணர்வுகளை கவித்துவமாக காட்சிப்படுத்தியிருக்கின்றனர். மேலும் டிலானின் ஆரம்ப காலப் பாடல்களை சரியான இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.“Don’t Think Twice, It’s All Right” – பாடலை காதல் பிரிவின் இடத்திலும் Like a Rolling Stone – டிலான் தனது அடையாளங்களை மாற்றிப்போடும் தருணத்திலும் பயன்படுத்தியிருப்பது திரைக்கதைக்கும் உதவுகிறது.

படத்தில் இரண்டு விஷயங்களை பிரதானமாகக் கூற முடியும். டிலானின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் (Timothée Chalamet) டிமோத்தி சாலமேயின் தீவிரமான நடிப்பு படத்திற்கு அசல் தன்மையைத் தருகிறது. மற்றும் ஒளிப்பதிவும் தரமாக வந்திருக்கிறது. புகை, மங்கலான ஒளி, பழைய பிளாக்-அண்ட்-வைட் டோன்கள், எதிர்பாராத கலர்ஃபிளாஷ்கள் போன்றவை படம் நெடுக வருகின்றன. இந்த அனுகுமுறை 60 களின் காலகட்டத்தையும் டிலானின் மனநிலையையும் சரியாகப் பிரதிபலிக்கும்படி இருக்கிறது. படத்தின் போதாமையாக நான் நினைப்பது ஒரு பயோபிக் கடத்த வேண்டிய ஆழத்தை படம் தவறவிடுகிறது. சிதறலான கதை கூறல் முறைமை இவ்வகைப் படங்களுக்கு பலகீனம்தான்.

படம் பார்த்து முடித்த பின்பு நம் இளையராஜாவை நினைத்துக் கொண்டேன். வடக்கில் கூட நாட்டுப்புற பாடகர் Chamkila வுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நல்ல படம் அதே பெயரில் வந்திருக்கிறது.

இவர்களையெல்லாம் பல படிகள் தாண்டிய இளையராஜாவுக்கு தமிழில் எந்த திரைப்படப் பதிவும் இல்லை என்பது நம் சூழலுக்கு இழுக்கு மற்றும் அவமரியாதை. நாம் கலைஞர்களை அவமதிப்பதில் தேர்ந்தவர்கள் என்பதால் இறுக்கமாக முன் நகர்கிறோம். சில மாதங்களுக்கு முன்பு ராஜாவின் வாழ்வை தமிழில் தனுஷ் தயாரிக்கிறார் மற்றும் நடிக்கிறார் – அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார் என்பதாக செய்திகளைப் பார்த்தேன். பயந்தேன். உண்மையில் இவர்களால் ராஜாவின் இசை மேதமையை தமிழில் பதிவு செய்ய முடியுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.  என் சந்தேகம் பொய்த்தால் நல்லதுதான்.

Emilia Pérez

இந்தப் பிரிவில் இன்னொரு குறிப்பிடும்படியான படம் Emilia Pérez. பிரஞ்சு இயக்குநர் (Jacques Audiard) ஜாக் ஓடியார்ட் இயக்கியது. இவர் இயக்கத்தில் வந்த A Prophet, Rust and Bone போன்ற படங்களைப் பார்த்திருப்பதாலும் இந்தப் படம் ஏற்கெனவே கான் விழாவின் ஜூரி பரிசை வென்றிருப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகம் இருந்தது.

படத்தின் கதைக்களம் மெக்ஸிகோ என்பதால் வழக்கம்போல போதை மருந்து கார்டெல் பின்னணியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நெட்ஃபிலிக்ஸ் இல் மட்டுமே நூற்றுக்கணக்கான படங்கள் மற்றும் தொடர்கள் மெக்ஸிகோவின் போதை மருந்து குற்றவியல் உலகைப் பேசுகின்றன.Pablo Escobar வாழ்வை சாகசமாக முன் வைத்த Narcos தொடரின் மிகப் பெரிய வெற்றி இந்த வகைப் படங்களுக்கான வித்தாக இருக்கலாம். மெக்ஸிகோ வை திரையில் காண்பித்தாலே அலுப்பு ஏற்படும் அளவிற்கு இந்த கணிசமான ஒரே வகைப் படங்கள் நம்மை மாற்றியிருக்கின்றன.

இந்தப் படமும் ஒரு டானின் கதை என்பதாக ஆரம்பித்தாலும் அரை மணி நேரத்தில் பாதை மாறுகிறது. துரத்தும் ஆபத்துகளால் ஒரு கார்டெல் தலைவன் திருந்தி வாழ நினைத்து, நூதனமாக தன் பாலியல் அடையாளத்தை மாற்றிக் கொள்கிறான். பிரமாதமான ஒன்லைன் இல்லையா? ஆனால் இந்த வியப்பு திரைக்கதையாக நீடிக்க முடியாமல் போகிறது.

பெண்ணாக மாறி இன்னொரு புதுவாழ்வை வாழ்ந்தாலும் அவனால் தன் குடும்பத்தை பிரிந்து வாழ்வதின் ஏக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறான்/ள். எனவே தன்னை இறந்து போன டானின் சகோதரியாக அறிவித்துக் கொண்டு குடும்பத்தாரோடு இணைகிறான்/ள். கூடவே அவனுடைய பழைய கணக்குகளை நேர் செய்யவும் மெனக்கெடுகிறான்/ள். சமூக மாற்றத்திற்கான சேவைகளையும் ஆரம்பிக்கிறாள். இதற்கெல்லாம் உதவுகிற சட்ட வல்லுநர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ZOE SALDAÑA சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார்.

ஒரே வீட்டில் பழைய மனைவியோடு – இறந்து போன கணவனின் சகோதரி அடையாளத்தோடு வாழ நேரிடுவது, தன்னுடைய பிள்ளைகளைக்கு அத்தையாக இருப்பது போன்ற  உணர்வுப் பூர்வமான குழப்பங்களில் எமிலியா கிடந்து அல்லாடுகிறாள்.

ஒரு கட்டத்தில் திரையில் பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்ப்படமா என்கிற பிரமையும் நமக்கு வந்து போகிறது. படத்தின் முடிவும் தமிழ்ச்சினிமாவை ஒட்டியே இருக்கும். ஒடியார்ட் தன்னுடைய அடுத்த படத்தை முழுமையாக தமிழிலேயே இயக்கலாம் என்கிற அளவுக்கு நம் செண்டிமெண்ட் களை சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்.

ஆனால் சொல்ல வந்த கதை மெக்ஸிகோ நிலத்தினுடையது என்பதையும் பாலியல் மாற்றங்களை சந்தர்ப்பவசத்திற்காக பயன்படுத்திக் கொள்வதின் குற்ற உணர்வுக்குள்ளேயே போகாமல் வெறும் செண்டிமெண்டைப் பிழிந்து திரைக்கதை தடுமாறியிருக்கிறது. எமிலியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்லா சோபியா காஸ்கோன் சிறப்பான பங்களிப்பை நல்கியிருந்தார். சிறந்த நடிப்புப் பிரிவின் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் அந்தப் பிரிவில் போட்டி பலமாக இருந்தது அவரது துரதிர்ஷ்டம்தான்..

I’m Still Here (Brazil)

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான பிரிவில் இந்தப் படம் தேர்வு பெற்றது. இந்தப் படத்தின் இயக்குநர் Walter Salles அவ்வளவு எளிதில் மறக்க முடியாதவர். சே குவாரோவின் இளமைக்காலத்தை The Motorcycle Diaries என்கிற அற்புதமான படமாக உலகிற்குத் தந்தவர். மேலும் வால்டர் சாலஸின் அனைத்து படங்களுமே (Central Station, On the Road, Behind the Sun, Dark Water ) எனக்குப் பிடித்தமானவை. உணர்வுப் பூர்வமும் சமூக நோக்கமும் பின்னிப் பிணைந்த படங்கள்.

இந்தப் படமும் அரசியல் படம்தான். 1970 களில் பிரேசிலின் இராணுவ ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் உருவான அரசியல் திரைப்படம். கூடவே ஒரு குடும்பத்தின் ஐம்பது வருட வாழ்வை அசலாகவும் நெருக்கமாகவும் இரண்டே கால் மணிநேரம் காட்சிப்படுத்துகிறது. பல காட்சிகளில் நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் கரைந்தும் போக முடிந்தது. ஐந்து குழந்தைகள் கொண்ட ஒரு மகிழ்வான குடும்பம் ராணுவக் கொடுங்கோல் ஆட்சியால் எப்படி சிதைந்து போகிறது என்பதை மிக நிதானமாகவும் நுணுக்கமாகவும் சொல்லியிருக்கிறார்கள். அதே நேரம் கணவன் காணாமலாக்கப்பட்ட பிறகு நான்கு பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் தாங்கும் அற்புதப் பெண்ணான ஈயூனிஸ் பாய்வா வின் போராட்ட சுயசரிதமாகவும் இந்தப் படத்தை அனுக முடியும். இந்தக் கதாபாத்திரத்தை பெர்னாண்டா டோரஸ் ஏற்று நடித்திருக்கிறார்.

பிரேசிலின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபென்ஸ் பாய்வா, தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக புனையப்பட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டு மாயமாக்கப்படுகிறார். அவரது இருப்பைக் குறித்தும் அவரை திரும்பக் கேட்டும் மனைவி ஈயூனிஸ் பாய்வா நடத்தும் இருபத்தைந்து வருட நெடிய  போராட்டம் தான் இந்தக் கதையின் மையம்.

பெர்னாண்டா டோர்ஸ் நடித்த ஈயூனிஸ் பாத்திரம் வலுவானது. ஒரு பெண், தாயாகவும் மனைவியாகவும், குரூரமான அரசியல் காலகட்டத்தில் தன் குடும்பத்தை காப்பாற்றப் போராடுகிறாள். கூடவே சட்டம் படித்து உலக அரங்கில் உள்ள செய்தி நிறுவனங்களின் வழியே தன் கணவன் இன்று வரை திரும்ப வராததை தொடர்ந்து அறிவித்தபடியிருக்கிறாள். கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு அவளின் கணவன் இவர்களால்தான் கொல்லப்பட்டான் என்கிற சான்றைப் பெறுகிறாள்.

பிரேசில் நாட்டின் வாழ்வையும் மக்களையும் மிக அசலாக திரையில் கொண்டு வந்திருப்பதில் துவங்கி, சரியான அரசியலையும் உண்மையையும் அழுத்தமாகப் பேசுவது வரை சகலமும் இந்தப் படத்தில் சரியாகக் கூடி வந்திருக்கிறது. ஒரு மாஸ்டரின் திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்பதை முதல் காட்சியிலேயே நம்மால் உணந்து கொள்ள முடியும். 1970 களின் காலகட்டம் முதல் 1990 மற்றும் 2014 காலகட்டம் வரை மூன்று பகுதிகளாக கதை சொல்லப்படுகிறது. சற்று நீளமான மெதுவாக நகரும் படம்தான் என்றாலும் சொல்லப்படும் கதை மிக ஆழமானது உண்மையானது என்பதால் ஒன்றிப் பார்க்க முடிகிறது.

ஆஸ்கர் பரிந்துரைப் படங்களில் கடைசியாக இந்தப் படத்தை பார்க்க முடிந்ததில் திருப்தியும் நிறைவும் கிடைத்தது. இந்த ஆஸ்கர் கட்டுரைத் தொடரை இந்தப் படத்தோடு நிறைவு செய்கிறேன். மூன்று பகுதிகளையும் வாசித்த உங்களுக்கு நன்றி.

I’m Still Here” (பிரேசில்)

இயக்குனர்: வால்டர் சாலஸ்

கதை:

🎥 மற்ற நாமினேட் செய்யப்பட்ட திரைப்படங்கள்

“The Girl with the Needle” (டென்மார்க்)

இயக்குனர்: மேக்னஸ் வான் ஹார்ன்

“Emilia Pérez” (பிரான்ஸ்)

இயக்குனர்: ஜாக் ஓடியார்ட்

குறிப்பு: ஆங்கிலமல்லாத திரைப்படமாக 13 நாமினேஷன்கள் பெற்று சாதனை படைத்தது.

“The Seed of the Sacred Fig” (ஜெர்மனி)

இயக்குனர்: மொஹம்மது ரசூலோஃப்

“Flow” (லாட்வியா)

இயக்குனர்: கின்ட்ஸ் சில்பலோடிஸ்

Author Image

அய்யனார் விஸ்வநாத்

அய்யனார் விஸ்வநாத் – எழுத்தாளர். இவருடைய ‘ஓரிதழ் பூ’ , ‘பழி’ நாவல்கள் கவனம் பெற்றவை. கட்டடக்கலை சார்ந்த பணியில் இருக்கிறார். சினிமா குறித்து தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
Dead Poets Soceity

நான்கு அரண்கள் : கவிதை, அழகு, காதல் அன்பு

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?