ஆரபி ஆத்ரேயா
ஹூக்கின் விதியும்,ரசகுல்லாவும், பிசினஸ் எலாஸ்டிசிட்டியும்
எப்பொழுதும் போல கடைசி நிமிஷத்தில் தான் எழுதுகிறேன். தீபாவளி சீசன். ஆபீஸில் டெட் லைன் ப்ரெஷர்.
நாளைக்குள் எப்படியாவது எழுதி முடித்து தீபாவையும், காயத்ரியையும் “வெல் டன் ” சொல்ல வைக்க வேண்டும்.
இதோ மூன்று டோஸ் காபி குடித்தாயிற்று.இன்னும் ஒரு அக்ஷரம் எழுதிய பாடில்லை. மூளையில் கேஃபைனும் கார்ட்டிசோலும் கர்பா ஆடுகிறது. வெளியே பால்கனியில் வெதர் ப்ளேசன்ட்டாக இருக்கிறது. ஒரு லாங் டிரைவ் போனால் நன்றாக இருக்கும். பக்கத்து வீட்டு டாபர்மேன் வேறு விடாமல் குறைக்கிறது. யாரோ பெல் அடிக்கிறார்கள்!யாராக இருக்கும்?
சே! ஆரபி! ஃபோகஸ்!ஃபோகஸ்!
எப்படி இந்த எழுத்தளர்கள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகிறார்கள். ஃபுல் ரெஸ்பெக்ட்!
தூரத்தில் யாரோ 10000 வாலா வெடிக்கிறார்கள்! விசில் சத்தத்துடன் லான்ச் ஆகும் ராக்கெட் வெடியும் கேட்கிறது. வெளியே தீபாவளி மூட் செட் ஆகி விட்டது!
ஓ.ஜி தீபாவளி என்றால் எனக்கு, நாங்கள் எண்பதுகளில் திருவல்லிக்கேணியில் கொண்டாடிய தீபாவளிகள்தான். ஹாப்பி டேஸ்!
தீபாவளி ரசகுல்லாவும்- ஹூக்கின் விதியும்
வெங்கட் அம்மா, ஷீலா அம்மா, ஷோபி அம்மா, “சித்ரா மாமி”… (ஒரிஜினல் பெயர் வேறு. அவரோட கணவர் சித்ரா தியேட்டரில் வேலை பார்த்ததால் எங்களுக்கு, சித்ரா மாமி ஆனார்.அவரது இன்ஃப்ளுயன்சைப் பயன்படுத்தி, ஒரு தீபாவளியன்று ரிலீஸ் ஆன “மனிதன் ” படத்திற்கு கூட்டிச் சென்றார். ‘மனிதன்’ பார்த்ததால் தான் எனக்கு மேத்ஸ்- ல் மார்க் குறைந்தது என்று ஏன் அப்பா வேறு சத்தம் போட்டார். “சினிமா சோறு போடுமா? “என்றார். (ஹி..ஹி..இப்போது போடுகிறதே!)… என் அம்மா எல்லாரும் சேர்ந்து தீபாவளி பட்சணங்கள் செய்வார்கள். எஃபெக்டிவ் ரிசோர்ஸ் பிளானிங்.
சும்மா சொல்லக்கூடாது, இந்த குரூப் ஆண்ட்டிகள் மைசூர் பாக்கு மாஃபியாக்கள், மிக்ஸர் ஸ்பெஷலிஸ்ட்கள், கை முறுக்கு சாம்பியன்கள்.
எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. கல்கத்தாவிற்கு நவராத்திரிக்குச் சென்று திரும்பிய ஷீலா ஆண்ட்டி வரும் வரை. அவர்தான் அந்த அற்புதமான பிளானை முன் வைத்தார். “நாம் ஏன் ரசகுல்லா செய்யக்கூடாது”? எப்போ பார்த்தாலும் மைசூர் பாக்கும் மிக்ஸரும் போர் அடிக்கிறது ” என்றார். “ஒண்ணும் கஷ்டமே இல்லை சிம்பிள் தான்” என்று எல்லாரையும் மோட்டிவேட்டினார்
ரசகுல்லா? ஆண்ட்டிகள் ஒருவரும் ஆந்திரா தாண்டியது கிடையாது. அதுவும் என் அம்மா, குஜராத்திலிருக்கும் என் கசின்ஸ் எல்லாம் “நார்த் இந்தியன்ஸ்” என்றே நம்பினார்.
இவர்கள் எல்லாரும் ஷீலா ஆண்ட்டியின் நாய்க்காது வளர்த்த, 120 பக்க, ரெசிபி நோட்டை மட்டுமே நம்பி, மிஷன்–ரசகுல்லாவில் குதித்தார்கள். இதில் வெங்கட் அம்மா ரசகுல்லா நன்றாக வந்தால் அபர்ணா ஆண்ட்டிக்கு கொடுத்து அசர அடிக்க வேண்டும் என்றார். அபர்ணா ஆண்ட்டி அக்மார்க் பெங்காலி. என்ன ஆணவம்!
அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் ஃபுல் கேயாஸ். பேஜ் பேஜ் ஆக ஓடும் இக்வேஷனில் ஏதோ ஒரு இடத்தில் “எக்ஸ்சிற்கு” வேல்யூ எழுத மறந்து விட்டு, தவிக்கும் சயின்டிஸ்ட் போல, ஷீலா ஆண்ட்டி எல்லா அளவிலும் கோட்டை விட்டார். பாகு பதம் வரவில்லை. பனீரில் கோளாறு. ரசகுல்லாவை உருட்டவே படாத பாடு பட்டார்கள். வெங்கட் அம்மா வேறு கேசரி கலர் பொடி கையோடு சுகர் சிரப்பைத் தொட்டு விட்டார்.
எவர் சில்வர் தூக்கை திறந்தால், ஸ்ட்ரெஸ் பால்ஸ் அளவிற்கு , ரப்பர் இழுவையாக, கேசரி கலரில், செர்நோபில் ரியக்டர் கூலண்டில், மிதப்பதை போல் மிதந்து கொண்டிருந்தன ரசகுல்லாக்கள்.
ரசகுல்லாவிலேயே முழு கவனத்தை செலுத்தியதால் வழக்கமாக சூப்பராக வரும் மைசூர் பாக்கு செங்கல் போல் ஆனது. முறுக்கு “கடுக்” என்று இருந்தது.
குறை சொன்னால் எங்களுக்கு அடி நிச்சயம் என்று தெரிந்ததால், ரசகுல்லாவை வாயில் வைத்துக் கொண்டு “நழ்ழ்ழ்ழாழா இழுழுக்கு” என்று பச்சை பொய் சொன்னோம்.
இந்த அவஸ்தை ஏன்? “ஒண்ணும் கஷ்டமே இல்லை சிம்பிள் தான்” என்று “ஷீலா ஆண்ட்டி சொன்னதை நம்பி, ஓ. ஜி ஸ்கில்ஸை கைவிட்டு, தேவையே இல்லாமல், அளவுக்கு மீறி, திறமைக்கு மீறி,ஸ்ட்ரெட்ச் செய்ததால் வந்த அவஸ்த்தை.
ஹூக்கின் விதியும் – ரசகுல்லா தியரியும்
இங்கு தான் நம் கிச்சனுக்குள் ராபர்ட் ஹூக் தன் “தியரி ஆஃப் எலாஸ்டிசிட்டி” நோட்புக்குடன் நுழைகிறார்.
கட் -டு – ராபர்ட் ஹூக். ஹூக்கின் விதி:
“Within the elastic limit, stress is directly proportional to strain”
ரொம்ப சிம்பிள். ஓரு ரப்பர் பாண்டை இழுக்கும் போது, ஒரு வரம்பு வரைக்கும் தான், அது தன் நிலை திரும்பும். வரம்பு தாண்டினால் அது நிரந்தரமாக சிதைந்து விடும்.
இதில் ரசகுல்லாவை பொருத்தி சொல்ல வேண்டும் என்றால்-
ஆன்டிகளின் ஒரிஜினல் திறமை –
சவுத் இந்தியன் ஸ்னாக்ஸ்.
அதைத் தாண்டி ஸ்கில்சை வளர்க்காமல்
அவசரப்பட்டு அகலக்கால் வைத்து ரசகுல்லா செய்தால்- முதலுக்கே மோசமாகும். “எலாஸ்டிக் லிமிட் “கடந்து போகும். அதிகம் “ஸ்ட்ரெட்ச்”ஆனால் “ஸ்னாப்” ஆகும். அவ்வளவுதான் தாத்பரியம்.
“ஸ்ட்ரெட்ச் அண்ட் ஸ்னாப்” பும் -எங்கள் செட்டிநாடு ஹோட்டலும்
இதே ஹூக்கின் விதி என் மாமனார்- மாமியார் நடத்திய செட்டிநாடு ஸ்பெஷல் ஹோட்டலுக்கும் பழியாய் பொருந்தியது.
மாமியார் சூப்பர் குக்! இட்லி நிஜமாகவே பஞ்சு போல் இருக்கும். வெள்ளை பணியாரம் வேற லெவல் ஆக இருக்கும். இடியாப்பம், கந்தரப்பத்தில் அசர அடிப்பார். “யுனிக்”காக இருந்ததால் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே ஹோட்டல் “ஹிட் ” ஆனது.
எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் அந்த அங்கிள் வந்தார்! “சப்பாத்தி இருக்கா?” என்று கேட்டார். செட்டிநாடு ஸ்பெஷல் என்பதால் சப்பாத்தி போடுவதில்லை என்று சொன்னவுடன் ” என் வொய்ஃபுக்கும் எனக்கும் டயபடிஸ், அதனால் சப்பாத்தி தான் சாப்பிட முடியும் ” என்று “கில்ட் ட்ரிப்” வேறு செய்தார்.
மாமியாரும் மாமனாரும், சாப்பிடும் 400 பேரை விட்டு விட்டு இந்த அங்கிளுக்காக அப்செட் ஆனார்கள். ஏன் இது தான் ஒரே ஹோட்டலா? அதே வரிசையில் மொத்தம் 10 ஹோட்டல்கள் இருந்தன. அந்த அங்கிள் ஏன் அங்கு செல்லவில்லை?அதைப் பற்றி எல்லாம் யோசிக்கவே இல்லை.
மறுநாளும் அங்கிள் வந்தார். சப்பாத்தி கேட்டார். இன்னைக்காவது போட்டீங்களான்னு பார்க்க வந்தேன் என்றார். என்ன லாஜிக் இது?கூடவே கொஞ்சம் பேர் ” நான் இல்லையா ” பராத்தா இருக்கா” என்று கேட்டார்கள்.
மிஞ்சி மிஞ்சி போனால் 10 பேர் கேட்டு இருப்பார்கள். ஆனால் என் மாமனார்- மாமியார் இருவரும், சப்பாத்தி போட்டே தீருவது என்று முடிவு செய்து விட்டார்கள்.
“ஒண்ணும் கஷ்டமே இல்லை… சிம்பிள் தான்” – என்றார் என் மாமியார். ஷீலா ஆண்ட்டி சொன்ன அதே வாக்கியம்.
காரைக்குடி தாண்டாத எங்கள் ஹோட்டல் மாஸ்டர் “நான்”, “சப்பாத்தி” போடத் தயாராகி விட்டார். ஒரு நாள் மெனு போர்டில் “கோபி மஞ்சுரி” ( ஷெஃப்ஸ் ஸ்பெஷல் )என்று கூட பார்த்ததாக ஞாபகம்.
அவ்வளவு தான் செட்டிநாடு ஸ்பெஷல், மல்டி குசின் ஆனது. இட்லியும், வெள்ளை பணியாரமும் ஒழுங்கான ஃபோகஸ் இல்லாததால், தன் “மேஜிக்” இழந்தது. “சப்பாத்தி-நான்”கேட்கவே வேண்டாம்- கடுப்பேத்தியது. மொத்தத்தில் “செட்டிநாடு ஸ்பெஷல்” சுமார் மல்டி-குசின்” ஆனது
ஓ. ஜி இட்லி – தோசை கஸ்டமர்ஸ் வரவில்லை. சப்பாத்தி அங்கிள் வரவே இல்லை.முதலில் ஐந்து நாள் லீவ் விட்டு.. பின்னர் முழுவதுமாக மூடி விட்டோம்.
ஹூக் உரக்க சொல்வது கேட்டது: “எலஸ்டிக் லிமிட் கடந்து விட்டது”. ஸ்ட்ரெட்ச் அண்ட் ஸ்னாப் சிண்ட்ரோம் நடந்தே விட்டது.
விளம்பர உலகில் “ஸ்ட்ரெட்ச் அண்ட் ஸ்னாப் சிண்டிரோம்”
இந்த”ஸ்ட்ரெட்ச் அண்ட் ஸ்னாப் சிண்டிரோம்”
அட்வெர்ட்டைசிங் பிசினசிலும் உண்டு. அளவுக்கு மீறி ஸ்ட்ரெட்ச் செய்வது. பின்னர் நிலை திரும்ப வழி இல்லாமல் ஸ்னாப் ஆவது.
- ஏஜென்சிகள் இன் ஹவுஸ் ப்ரோடக்ஷன் ஹவுஸ் அமைக்கின்றன
- ப்ரோடக்ஷன் ஹவுஸ், பெர்ஃபார்மென்ஸ் மார்க்கெட்டிங் செய்கின்றன.
- பிராண்டிங் நிறுவனங்கள் இன்ஃப்லு யன்சர் மேனேஜ்மென்ட் செய்கின்றன
இந்த “ஸ்ட்ரெட்ச் “எல்லாம் “சஸ்டைனபிலிட்டி” என்ற பெயரில் நடக்கிறது.
வெறும்”ஸ்ட்ரெட்ச் ” “சஸ்டைனபிலிட்டி” ஆகாது
சஸ்டைனபிலிட்டி என்பது, நம் எலஸ்டிக் லிமிட் தாண்டி — எல்லாவற்றையும் நாமே செய்வது இல்லை.
நமக்குத் தெரிந்ததை சிறப்பாக செய்து, அதில் தொடர்ந்து புதுமை புகுத்துவது — தெரியாததை திறமையாவர்களுடன் இணைந்து செய்வது- “கொலேப் செய்வது“- சேர்ந்து ஜெயிப்பது -இதுவே சஸ்டைனபிலிட்டி!
திங்க் அபௌட் இட்!
ஆப்பிள் நிறுவனம் தங்கள் சொந்த சிப் அல்லது ஆப்ஸ் செய்வதில்லை.
நைக்கி, ஷூக்கள் தயாரிப்பதில்லை. அவர்கள் திறமை யானவர்களுடன் கூட்டாக செயல்படுகிறார்கள். தங்களுடைய
“எலஸ்டிக் லிமிட்” எது என்று தெரிந்து விளையாடுகிறார்கள். “கொலேப்” செய்து ஜெயிக்கிறார்கள்.
நாங்களும் எங்கள் நிறுவனமான “ஹாப்பி யூனிகார்னில்” இந்த “கொலேப்- எனர்ஜியை” மட்டுமே நம்புகிறோம். அது மட்டுமே ஒரு மகிழ்ச்சியான, நம்பகமான, எல்லோரும் இணைந்து ஜெயிக்கக் கூடிய ஒரு சூழலை உருவாக்கும் என்று நம்புகிறோம்! ஸ்ட்ரெட்ச் அண்ட் ஸ்னாப் தெரிந்தே விளையாடுகிறோம்.
சஸ்டைனபிலிட்டி- என்னும் சிலந்தி வலை
சஸ்டைனபிலிட்டி என்பது வெறும் விரிவாக்கம்(expansion) மட்டுமில்லை. அது மீள் தன்மை(resilience) பற்றியது. எந்த ஒரு இடர் வந்தாலும் நிலையாய் நிற்பது. அது ஒரு சிலந்தி வலை போல நெய்து நெய்து வலிமை சேர்ப்பது.
அகல உழுவது இல்லை. ஆழ உழுவது.
அது ஒரு நிலையான ” ஈகோ- சிஸ்டத்தை” உருவாக்குவது. எளிதில் அழியக் கூடிய
“க்ரீடி- எம்பையரை” உருவாக்குவது இல்லை.
பாலம் போன்றது சஸ்டைனபிலிட்டி- அது கடத்தும் வேலையை மட்டுமே செய்யும். அதை சிறப்பாக செய்யும். ” சிறந்த பாலம்” என்று எல்லோரும் போற்றும் படி செய்யும். ஆனால் ஒரு போதும் கடந்து போகும் ஒவ்வொருவராகவும் ஆக முயற்சிக்காது. கடத்துதல் மட்டுமே வேலை.
நீங்கள் எல்லாமுமாக ஆக முயற்சிக்கும்போது, உங்கள் ஒரிஜினலிட்டியை, எலஸ்டிசிட்டியை, மீள் தன்மையை இழந்துவிடுவீர்கள்.
லெகோ, யுனிலீவர் மாதிரியான பிராண்டுகள் தொடர்ந்து வளர்கின்றன — தொடர்ந்து புதுமை செய்கின்றன. ஆனால் ஒரு போதும் தங்களுடைய அடிப்படை அடையாளத்தை மறப்பதே இல்லை.
இன்னொவேஷனும், சிலந்தி வலையும்
அப்படியென்றால் நாங்கள் ஒருபோதும் ரஸகுல்லா, சப்பாத்தி செய்யக்கூடாதா என்று குமுறுபவர்களுக்கு- தாராளமாகச்
செய்யுங்கள்!
ஆனால் முதலில் உங்கள் ஸ்ட்ராங் ஸ்கில் ஆன முறுக்கை மாஸ்டர் பண்ணுங்கள். உங்கள் அடித்தளம் உறுதியான பிறகு, விரும்பிய அளவு முயற்சிகள் செய்யலாம்.
“இன்நோவேஷன்” என்பது தோன்றவதை எல்லாம் செய்வது இல்லை — இருப்பதை சிறப்பாக செய்வது. அதில் தொடர்ந்து புதுமை செய்வது.
அது “ஸ்ப்ரெடிங் -தின்” இல்லை —
அது “வீவிங் ஸ்ட்ரோங்” (நெய்து நெய்து வலிமை படுத்துவது)- ஒரு சிலந்தியின் வலை போல.
எலாஸ்டிக் லிமிட்டும், சஸ்டைனபிலிட்டியும்,
ராபர்ட் ஹூக் – ஒரு பொருள் தனது
எலாஸ்டிக் லிமிட்டை கடந்து நீட்டப்பட்டால், அது “deform” ஆகும் என்கிறார் — அதாவது அதன் வடிவம் நிரந்தரமாக மாறிவிடும்.
பிசினஸில் அதே விஷயத்தை ஐடென்டிட்டி க்ரைஸிஸ் என்று சொல்வார்கள் — அதாவது நீங்கள் யார் என்பதை மறந்துவிடும் தருணம்.
கலைத்துக் கலைத்து ஆடுவது தான் பிஸினஸ். ஆனால் அடையாளம் தொலைக்கக் கூடாது. ஸ்ட்ரெட்ச்” செய்து புதுமை புகுத்தும் போது, எலஸ்டிக் லிமிட் தாண்டாமல் சஸ்டைனபிலாக ஆட வேண்டும்.
லிமிட் தெரிந்து ஆடினால் தான் “பிசினஸ்”
லிமிட் தாண்டி ஆடினால் அது “கேம்பிலிங்”
(பஞ்ச் லைன் பக்கா வா?)
கடைசியாக நாம் சொல்ல வரும் மெசெஜ் என்னவென்றால்: மைசூர் பாக்கு நாம் கிளற வேண்டும், ரசகுல்லா அபர்ணா ஆண்ட்டி
செய்யவேண்டும். நாம் இருவரும் கோலேப் செய்து ” ஹாப்பி தீபாவளி ” கொண்டாட வேண்டும்!
ஹாப்பி தீபாவளி பீப்பிள்!
சக்கரம் இன்னும் சுழலும்!











