The Talkie
Saturday, April 11, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home தொடர்கள் I CALL THE SHOTS

 I call the shots 02

The Talkie by The Talkie
September 29, 2025
in I CALL THE SHOTS, தொடர்கள்
A A
0
i call the shots 02
Share on WhatsappShare on FacebookShare on Twitter
ஆரபி ஆத்ரேயா

இந்த முறை கட்டுரையை தாமதமாகத்தான் அனுப்பினேன். ரொம்பத் தாமதமாக. அதிகமான வேலை வந்துவிட்டது. சாரி சொல்வதற்காக காயத்ரிக்கும் தீபாவிற்கும் ஃபோன் செய்தேன். 

கொஞ்சம் கூடுதல் எஃபெக்டிற்காக அசதியான வாய்ஸில் பேசினேன். பேச்சு முடியும்போத எதற்கும் இருக்கட்டும் என்று கொஞ்சம் இருமியும் வைத்தேன்.

குட் கேர்ள்ஸ்! மன்னித்துவிட்டார்கள்.

இவர்களைப் பார்க்கும் போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. திருவல்லிக்கேணியில் ஒரு பிரசித்தியான சங்கீத சபா உண்டு. பெயர் வேண்டாம்! அதில் எங்கள் பாட்டி இயர்லி பாஸ் வைத்திருந்தார்.

(அதை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிக்குத் தனி ஆர்ட்டிகிலே எழுதலாம்).

சிபாரிசுக்காக இரண்டு மாமாவிற்கு சக்கரைப் பொங்கல் வேறு அனுப்பப்படும். “உங்களைப் பத்தி நினைச்சிண்டேன்! அனுப்பிச்சிட்டேன்!” என்பார் பாட்டி.  அவர்களும் ” மாமி மறந்தே போய்ட்டேன் பாசை ரென்யூ பண்ணி அனுப்புகிறேன் என்பார்கள்”. நீட் டீலிங்! செம சுவாரசியமாக இருக்கும்). அந்த சபாவில், மத்தியான கச்சேரியில் ஆமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் பாடலாம். சங்கீத கலையைப் பரப்ப இப்படி ஒரு ஏற்பாடு!

பக்கவாத்தியம்- பாடுவோர் செலவு. ஹால்  இலவசமாகக் கொடுப்பார்கள். ஷால் வாங்கிக் கொடுத்தால் போர்த்தி விட்டு மரியாதை செய்வார்கள். ஸ்ருதி பிசகினாலோ, தாளம் தப்பினாலோ, கண்டு கொள்ளவே மாட்டார்கள். எங்கள் பாட்டியைப் போல் பலர் உட்கார்ந்து கொண்டு விடாமல் என்கரேஜ் செய்வார்கள். சுருதி என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் நானே கூட அங்கு பாடி இருக்கிறேன். எனக்கும் அப்லாஸ் அடித்தார்கள்!

இப்படித்தான் காயத்ரியும் தீபாவும்!

“எல்லாருக்கும் எழுத்து” என்ற ஸ்கீமில் என்னை என்கரேஜ் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. எனக்கென்ன! பாடத் தெரிந்தா சபாவில் பாடினேன்? இங்கும் அப்படித்தான்! அதே டைலர்! அதே வாடகை!

***

எனக்கு எப்பொழுது இன்ஸ்பிரேஷன் தேவைப்பட்டாலும் நான் எண்பதுகளில் வாழ்ந்த அந்த மிடில் கிளாஸ் திருவல்லிக்கேணித் தெருக்களிலேயே தேடி இருக்கிறேன். இதில் எந்த ஒரு எமோஷனல் கிரிஞ்சும் இல்லை!

சிம்பிள் லாஜிக். அங்கு தினசரி தேவைக்கான ரிசோர்சின் இருப்பு கம்மி. அதனால் மக்கள் ஒரு மாதிரியான கூட்டு வாழ்க்கை வாழப் பழகி இருந்தார்கள்.

அதற்காக விக்ரமன் படம் போல “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” என்று பாடிக்கொண்டே இருக்க மாட்டோம். கார்ப்பரேஷன் தண்ணீருக்கான சண்டை, எங்கள் வீட்டுக் கொடியில் உங்கள் வீட்டு மாமாவின் கை வைச்ச பனியன் ஏன் காய்கிறது டைப்பான சண்டைகளும் உண்டு.

அதை எல்லாம் தாண்டி குறைந்த அளவிலான ரிசோர்சை எல்லாரும் உகந்த முறையில் பயன்படுத்த கிரியெட்டிவிட்டியையும் அடாப்டபிலிட்டியையும்  அதிக அளவில் டெவெலப் பண்ணி இருந்தோம்!

சம்மர் லீவில் பத்து கசின்ஸ் எப்பிடி 150 சதுர அடி ஹாலில் தூங்கினோம், சேர், டேபிள் ஃபர்னிச்சரோடு சேர்த்து!

குடித்தனக்காரர் எல்லாரும் காசு போட்டு வீடியோ கேசட்களை வாடகைக்கு எடுத்து, நான்கு படங்களை எப்படி ஒரே நாளில் பார்த்தோம் – அதுவும் ஹவுஸ் ஓனர் வீட்டு டி. வியில். அடாப்டபிலிட்டிதான்!

இதெல்லாம் விட, தலையில் கொம்பு வளர்த்தால் மழைக் காலத்தில்

ஹேங்கர் மாதிரி துணி உலர்த்திக் கொள்ள எக்ஸ்ட்ரா இடம் கிடைக்கும் என்றால், என் அம்மாவும் மற்ற ஆன்டிஸும் நிச்சயம் முயற்சி செய்து எவல்யுஷன் தியரியை சேலன்ஜ் செய்து இருப்பார்கள்.

வசதி குறைந்து இருந்ததால் வழி கண்டுபிடித்தோம். கிரியேட்டிவிட்டி,

அடாப்டபிலிட்டி, இயல்புலேயே இருந்தது. யோசித்துப் பார்த்தால் மற்ற ஸ்கில்சைத் தாண்டி இவைதான் இன்றும் என் பிசினசிற்கு உதவியாக இருக்கிறது.

ஆனால் அந்த வாழ்க்கையை இப்போது நினைத்தால் ஒரு டைனோசர் காலத்தை எண்ணிப் பார்ப்பது போல் வெகு தொலைவில் நிற்கிறது.

டைனோசர்

டைனோசரைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் தேவதச்சனின் “கடைசி டைனோசரே“ நினைவிற்கு வருகிறது.  எனக்கு மிகவும் பிடித்த கவிதை..

“கடைசி டைனோசார் ஒற்றையாய் நின்று

கொண்டிருக்கிறது….”

…. “இன்னும் சில விநாடிகளில் கழுத்தைத் தாழ்த்திக் குனிந்து விஷக் கற்றாழையைக் கடிப்பதற்காய் காத்திருக்கிறது.”

… “இதுவரை பார்க்கப்படாத பறவைகள், தொலைவில் காத்திருக்கின்றன.”

… “சீக்கிரம் செத்துப் போ சீக்கிரம் செத்துப் போ. “

இந்த கவிதையைப் படிக்கும் போதெல்லாம் எனக்குத் தோன்றும்…

சென்னைக்கு மிக மிக அருகே என்பது போல் – அங்கே அஸ்டரோய்ட் தாக்கிய இடத்தின் மிக மிக அருகில் நின்று கொண்டிருக்கும் இந்த டைனோசர், ஃபோர்த் வால் -ஐ உடைத்து நம்மிடம் “லாஸ்ட் வொர்டஸ்” பேசினால் என்ன பேசும்?

 ” கேள் பெண்ணே! நான் பலவீனமானவன் இல்லை. மிகவும் பலமானவன். அதனாலேயே வளைந்து கொடுக்க முடியவில்லை. உடைந்து போகிறேன் என்றா? என் பளு எனக்கே தாங்காமல் மடிந்து போகிறேன் என்றா?என்ன சொல்லும்?!”

கடைசி டைனோசரின் கன்ஃப்யுஷனை இங்கே கட் செய்வோம். அங்கே அது இன்னும் கொஞ்ச நேரம் வாழட்டும். ஷ்ரோடிங்கரின் பூனை போல!

நாம் டார்வினிடம் செல்வோம். அவர் தன் கப்பலில் கிளாஸ் எடுத்து கொண்டிருக்கிறார். கேளுங்கள்!

அவர் அங்கே

“Survival of the  fittest”- “தகுதியானது வாழட்டும்“

என்று சொல்கிறார்.

மீண்டும் கேளுங்கள்!

“Survival of the strongest “-

“வலிமையானது வாழட்டும்” என்று அவர் சொல்லவேயில்லை..

அப்படி என்றால் தகுதியானது எது?

எது தன்னைத் தகவமைத்துக் கொள்கிறதோ அதே தகுதியானது!

இந்த அடாப்டபிலிட்டி கிளாஸ்சைத்தான் கடைசி டைனோசர் கட் அடித்து விட்டு இப்பொழுது கன்ஃபியுஷனில் நிற்கிறது.

கட் பேக் டு டைனோசர். இந்த நேரத்தில் டைனோசரின் மன ஓட்டம் என்னவாக இருக்கும்…

1. இப்படி எக்ஸ்ட்ரா சைஸ்ஸில் இல்லாமல் நார்மல் சைஸ்ஸில் வளர்ந்திருக்கலாம்.

2. அப்படியே வளர்ந்திருந்தாலும், வளைந்து போகும் திறன் கற்று இருக்கலாம்.

3. இதைத்தான் சாப்பிடுவேன் என்று செலிப்ரிட்டி  டான்டிரம் செய்யாமல் எதை வேண்டுமானாலும் தின்று உயிர் வாழும் வித்தையைக் கற்றிருக்கலாம்.

4. ஒரு வளை அமைத்து வாழும் ஸ்கில்லையோ, சிறகு வளர்த்து வாழும் திறமையையோ வளர்த்து இருக்கலாம்.

5. வாழ்ந்தால் டைனோசராகத் தான் வாழ்வேன் என்று ” பிரெஸ்டிஜ் பத்மநாபன் ” போல் வெட்டி வீராப்பு பேசாமல், வான் நோக்கிப் பறந்து இருக்கலாம்.

எவல்யுஷன் என்பது வளர்ச்சி. இருப்பதை மேம்படுத்துவது. முற்றிலும் வேறு ஒன்று உருவாக்குவதல்ல!

இது தெரியாமல் “டைனோசராகவே வாழ்ந்து

டைனோசராகவேதான் சாவேன்”

என்பதில் ஒரு பெருமையும் இல்லை.

 இதற்கு எந்த

மெடலும் கிடையாது!

எவல்யுஷனில் இடமும் கிடையாது!

இதே போன்ற டைனோசர் மொமெண்ட்ஸ் ப்ரோடக்ஷன் பிசினசிலும் உண்டு.

டைனோசர் மொமெண்ட்ஸ்

நிகழ்வு 1: இருபது வருடங்களுக்கு முன்பு வரை, ஹை குவாலிட்டி அட்ஸ் என்றால்

35 எம்எம் அல்லது 16 எம்எம் ஃப்லிமிலோ தான் ஷூட்  செய்ய வேண்டும். வட்டமான மஞ்சள் நிற டின் கேன்சில் வரும் இந்த ஃப்லிம் ரோல்ஸ்-ஐ ஹைபிரிட் பப்பாளி போல ஏ.சியில் வைத்துக் காப்பாற்ற வேண்டும். இதை வாங்க ஒரு மிலிட்டரி ப்ரோசிஜர் வேறு. வடபழனி கோடாக் லேப் சென்று ஐடெண்டிஃபிகேஷன் கொடுத்துத்தான் கேன்ஸ் வாங்கி வர முடியும். காஸ்ட்லி. பெரிய கேமராமேன் வந்து அதிகமான கேன்ஸ் ஷூட் செய்தால், கையறு நிலை தான். கண்களில் இரத்தம் வரும். அதை மும்பையில் ப்ரோஸஸிங்கிற்கு ஏர் கொரியரில் அனுப்பி விட்டு, ஸ்கேனரில் எக் ஸ்போஸ் ஆகி விடக்கூடாதே  என்றும், டிரான்ஸ்போர்டில் டேமேஜ் ஆகி விடக் கூடாதே என்றும் பல முறை நான் லஸ் பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து வேண்டி இருக்கிறேன். இப்பொழுது கோடாக் எங்கே? ஃப்லிம் கேன்ஸ் எங்கே? டிஜிட்டல் டெக்னாலஜி எல்லாவற்றையும் காலி செய்து விட்டது! எவ்வளவு வேண்டுமானாலும் ஷூட் செய்யலாம். அதிக ரெஸல்யுஷனில்! கோடாக் என்ற பெரிய கம்பெனி இப்பொழுது பெயருக்கு இயங்கி வருகிறது!

டெக்னாலஜிக்கு அடப்ட் ஆகவில்லை என்றால் ஆகச் சிறந்த கம்பெனி கூட அவுட் டேட் ஆக வேண்டியதுதான்.

நிகழ்வு 2: எங்கள் கம்பெனி, ஹாப்பி யூனிகார்ன் தொடங்கி முதல் ஐந்து வருடங்களின் வளர்ச்சி அசுரத்தனமானது. விளம்பர உலகின் பெரிய திமிங்கிலங்களுக்கும் சிறிய கோல்ட் ஃபிஷ்களுக்கும் இடையே  க்ளையண்டுகளுக்கு இருந்த நீட்- கேப்பை (தேவைகளின் இடைவெளியை) புரிந்து கொண்டதால் சர சரவென கிராஃப் எகிறியது. புதுமையான  கான்செப்ட்கள் ஷாக் அடிக்காத பட்ஜெட்டில்! எங்களை டாப் லிஸ்ட்டில் அமர்த்தியது.

ஆனால் ஐந்து வருடங்களில் ஒரு தேக்க நிலை. புதியவர்கள் வந்தார்கள். மார்க்கெட்  விரிந்தது. எங்கள் கால்களுக்கு அடியில் இருந்த நிலமும் லேசாக ஆடத் தொடங்கியது. இந்த மாற்றத்தை நாங்கள் அசிரத்தையாக நினைக்கவில்லை. அசால்ட்டாக புறக்கணிக்கவில்லை. அடப்டபிலிட்டியை நோக்கி கவனத்தை செலுத்தினோம்.

இவ்வளவு காலமாக இப்படித்தான் பிசினஸ் செய்தோம், அதை மாற்ற மாட்டோம் என்றெல்லாம் வறட்டு பிடிவாதம் பிடிக்காமல்,  அப்போதையை எங்கள் பிசினஸில் இருந்த தேவையற்ற ஆணிகளை- டெட் வெயிட்டை நீக்கினோம்.

சிம்பிள் அண்ட் லைட்டாக, மாட்யுலராக உருமாறினோம்.  ஆட்டத்தைக் கலைத்துப் போட்டுத் திரும்ப ஆடத் தயாரானோம். புதியவர்களுடன் அப்டேட் வெர்ஷனாக மாறி புதிய ஆட்டம் ஆடினோம். இது தான் மாட்யுலாரிட்டி அல்லது அடப்டபிலிட்டி.

நிகழ்வு 3– 2020 கோவிட் மறுபடியும் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. இது வரை கற்றதை எல்லாம் ஒன்றும் இல்லை என்று ஆக்கியது.பிசினஸ் நின்றது. என்ன நடக்கிறது, எங்கு செல்கிறோம் என்று தெரிவதற்க்குள்ளே அரை வருடம் ஓடிப் போனது.பர்சனல் மீட்டிங் தேவை இல்லை, ஜூம் கால் போதும்! வர்சுவலாக ஷூட் செய்யலாம்! இப்படிப் பல யோசனைகள் எழுந்தன!பட்ஜெட் குறைப்பு நடவடிக்கைகளாக- ஷூட்டிங்கில் இவ்வளவு ஆட்கள் வேண்டாம் என்று பாதியாகக் குறைத்தோம்! யாரும் வராத ஆஃபிஸில் யாருக்காக டீ ஆற்றுகிறோம் என்று ஆ ஃபிஸைக் காலி செய்தோம். தனியான அழகான பங்களாவில் இருந்த எங்கள் ஆபீஸை விட்டு வீட்டில் இருந்தே வேலை செய்தோம். இதற்கு இடையில் கோவிட் OTT பிளாட்ஃபார்ம்களை வீட்டிற்குக் கொண்டு வந்தது. அட்ஸ் மற்றும் போதாது, டைவேர்சிஃ பிகேஷன் முக்கியம் என்று நாங்கள் வெப் சீரிஸும் தயாரிக்க ஆரம்பித்தோம். இதோ, இன்றோடு, பிளாட்ஃபார்மிற்கு ஒன்று என்று 9

வெப்சீரிஸ்கள் தயாரித்தாயிற்று. போஸ்ட் கோவிட், அடுத்த அப்டேடட் வெர்ஷனாக உருமாறியுள்ளோம்.

 கலைத்துக் கலைத்து ஆடினால் தான் ஆட்டம் சிறக்கும்!  அதுக்கு அடப்டாபிலிட்டி முக்கியம். வெட்டி வீராப்பு நம்மை வெற்றி பாதைக்கு இட்டுச் செல்லாது! (செம்ம ரைமிங் இல்ல?)

கட்டுக் கடைசி டைனோசர்– இப்பொழுதும் அது அங்கே ஏதாவது மாய மந்திரம் நடந்து விடுமா என்று காத்துக் கொண்டுதான் நிற்கிறது. எவல்யுஷன் மாய மந்திரத்தின் அடிப்படையில் நடப்பதல்ல. அழும் பிள்ளை பிழைக்கும் என்பதைப் போல், அடப்ட் ஆகும் உயிர் நிலைக்கும்.

இது இன்னும் சில நொடிகளில் அந்த டைனோசருக்கு புரிந்து விடும். நாம் அதற்குள் ப்ரோடக் ஷனின் சீட்-கோட் கற்போம்.

தகுதியானதே வாழும்!

அடாப்டபிலிட்டிதான் அடிப்படை தத்துவம்!

பிசினஸ் லெகோ ப்ளாக்ஸைப் போல !

வீடும் கட்டலாம், மறு நாளே –

தேவைப்படும் நேரத்தில் ப்ளாக்ஸைக் கலைத்து ஸ்பேஸ் ஸ்ஷிப் செய்து அண்டம் விட்டு அண்டமும் செல்லலாம்.

கலைத்துக் கலைத்து ஆட ஒரு குண்டு தைரியம் வேண்டும்.

அடாப்டபிலிட்டி தான் எவல்யுஷனின் அடிப்படை என்ற புரிதல் வேண்டும். அவ்வளவுதான்!

ஒட்டக சிவிங்கி கழுத்து வளர்த்ததும்

இதற்குத்தான்.

யானை மூக்கு வளர்த்ததும் இதற்குத் தான்.

தி. நகர் தோசை அண்ணா அவோகெடோ தோசை போடுவதும் இதற்குத்தான்! இந்த அடாப்டபிலிட்டிக்குத்தான்!

இதுதான் நான் முந்தைய ஆர்ட்டிகளில் சொன்ன DDBR பிசினஸ் தத்துவத்தின் அடிப்படையும்.

தெரியாதவர்களுக்கு..

Disturb, Disrupt, Build, Repeat — இது தான் DDBR. (கண்டுபிடிப்பு எனது, காப்பிரைட்டும் எனதே)

தமிழில் இப்படியும் சொல்லலாம் —

அமைதி குழப்பி, ஒழுங்கு நொறுக்கி , புதிது புனைந்து, புது சுழற்சி தொடங்குவது …

(பழைய கோட்டையெல்லாம் அழிச்சிட்டு, திரும்பவும் ஃபிரெஷ்ஷா, பரோட்டா சாப்பிடற கதை)

அடப்டபிலிட்டிதான் DDBR ன் ஆணிவேர்!

கடைசி டைனோசரும் DDBR ம்!

கடைசி டைனோசருக்கு  இப்பொழுது புரிந்து விட்டது. அந்த விஷக் கற்றாழயை கழுத்தைத் தாழ்த்தி கடித்துதான் ஆக வேண்டும்.

பார்க்கப்படாத பறவைகளுக்கு வழி விட்டுத்தான்  ஆக வேண்டும்.

எவல்யுஷன் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.

DDBR சக்கரம் சுழலக் காத்து இருக்கிறது!

காலம் காதில் சொல்கிறது

செத்து விடு டீ–ரெக்ஸ்

வீழ்ந்து, வாழ விடு!

DDBR சக்கரம்

சுழன்றுதான் ஆக வேண்டும்!

(பிசினசிலும், வாழ்க்கையிலும்)

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?