The Talkie
Saturday, April 11, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home திரைக்கதைகள்

GLADIATOR

The Talkie by The Talkie
April 15, 2025
in திரைக்கதைகள்
A A
0
GLADIATOR
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon ஜா.தீபா


திரையில் எழுத்து வருகிறது. 

ரோம சாம்ராஜ்யம் விரிவடைந்ததைப் பற்றிச் சொல்கின்றன எழுத்துக்கள். 

ரோம சாம்ராஜ்யம் தன்னுடைய அதிகாரத்தின் உச்சத்தில் பரந்திருந்தது. ஆப்ரிக்காவின் பாலைவனத்தில் இருந்து வட இங்கிலாந்தின் எல்லை வரை விரிவடைந்திருந்தது. உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் சீசரின் ஆட்சிக்குக் கீழ் பிறந்தும் மடிந்தும் கொண்டிருந்தனர்.

கி.பி 180ஆம் ஆண்டு சக்கரவர்த்தி மார்கஸ் அரேலியஸ் ஜெர்மானிய இனத்துக்கு எதிராக பனிரெண்டு ஆண்டு காலம் போர் செய்து முடிவுக்கு கொண்டு வந்திருந்தார். 

இந்த ஒற்றை எதிரியையும் அழித்த பிறகு ரோம் நாடு தன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சாம்ராஜ்யம் முழுவதும் இனி சமாதானம் நிலவும் என உறுதியளித்திருந்தது.   

எழுத்துகள் மறைகின்றன.

ஒரு கரடுமுரடான வலுவான கை கோதுமை வயல்களில் விளைந்த பயிர்களைத் தடவிச் செல்கிறது. உயர்ந்து வளர்ந்த கோதுமை பயிர்களுக்கு இடையில் ஒரு பெண்ணும் (மாக்ஸிமஸின் மனைவி), ஒரு சிறுவனும் (மாக்ஸிமஸின் மகன்) நடந்து வருகிறார்கள். பின்னணியில் ஒரு சிறுவன் சிரிக்கும் ஒலி மெலிதாகக் கேட்கிறது. ரோமானிய வீரன் உடையில் நாம் இப்போது பார்ப்பது தளபதி மாக்ஸிமஸ். 

மாக்ஸிமஸ் அறிமுகம். குருவி ஒன்று பறப்பதைப் பார்த்து மாக்ஸிமஸ் புன்னகைக்கிறார். குழந்தைகள் சிரிக்கும் சத்தம் MILD HUMMING BGM மெலிதாக கேட்கிறது. அவர் அங்கிருந்து உடனடியாக விலகுகிறார்.

இப்போது காட்சி மாறுகிறது. 

குளிர்ப்பிரதேசத்திற்குரிய சாம்பல் வண்ணத்தில் காடு காட்டப்படுகிறது. காட்டின் அருகே உள்ள சமவெளியில் குதிரைகள் மேல் போர்வீரர்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். தரை, சேறும் சகதியுமாக இருக்கிறது. குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ள சிலர் அடர்ந்த குல்லா அணிந்திருக்கிறார்கள். காட்டில் அங்கங்கு எரியூட்டப்பட்ட தடயங்கள் தெரிகின்றன. புகை மேலே கிளம்பிக் கொண்டிருக்கிறது. திரையில் Germania என்ற எழுத்து வருகிறது. போருக்கான ஆயத்தங்களோடு வீரர்கள் நிற்கிறார்கள். மாக்ஸிமஸ் அவர்களுக்கு நடுவில் நடந்து வரும் போது அனைவரும் மரியாதையுடனும், பரபரப்புடனும் எழுந்து நிற்கிறார்கள். ரோமானிய மெய்க்காப்பாளர்களுக்கு நடுவில் வயதான சீசர் மார்கஸ் அரேலியஸ் குதிரை மீது அமர்ந்திருக்கிறார். அவர் இருக்கும் உயரமான இடத்தில் இருந்து போர்க்களம் தெரிகிறது. 

மாக்ஸிமஸ் நடந்து வரும்போதே போருக்காக   தளவாடங்கள் தயாராக இருப்பது நமக்குத் தெரிகிறது. 

போர் தொடங்குவதற்கான  உத்தரவிற்காக  வீரர்கள் காத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. 

மாக்ஸிமஸ் தன்னிடம் வந்து நிற்கும் க்விண்டஸ் மற்றும் வலேரியஸிடம் “அவன் போய் எவ்வளவு நேரம் ஆனது? ஏதேனும் பதில் வந்ததா?” என்று கேட்க “இரண்டு மணி நேரமானது. அவன் வருவதற்கான எந்தச் சுவடும் இல்லை” என்கிறார் வலேரியஸ். 

படைவீரர்கள் புரிந்து கொண்டவர்கள் போல ஆங்கங்கே தங்களது ஆயுதங்களைக் கூர்தீட்டிக் கொள்கிறார்கள். தயாராகிறார்கள். 

தூரத்தில் ஜெர்மானியத்தைச் சேர்ந்த அயல்நாட்டவரின் குரல்கள் கேட்கின்றன. ‘நீங்கள் எல்லாம் நாய்கள்” எனக் கத்துகிறார்கள். அங்கு குதிரை ஒன்று வேகமாக வருகிறது. அதில் தலையில்லா வீரன் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். அது ஒரு ரோம வீரனின் உடல் என்பது அவனது உடையில் தெரிகிறது. தூது சென்ற ஒருவனுடைய தலையை வெட்டியிருக்கிறார்கள் என்பது புரிகிறது. ரோமானியர்கள் போருக்குத் தயாராகிறார்கள். அயல்நாட்டான் ஒருவன் சாபமிட்டுக் கொண்டே குதிரையில் மீதமருந்திருந்த சடலத்தின்  வெட்டப்பட்ட தலையை வீசி எறிந்து விட்டு கத்துகிறான். “அவர்கள் போருக்குத் தயார் என்கிறார்கள்” என்கிறார் மாக்ஸிமஸ். “தாங்கள் எப்போது ஆளப்பட வேண்டுமென்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்..இல்லையா?” என்று க்விண்டஸ் கேட்க, “அப்படியா க்விண்டஸ்..நீயும் நானும் அப்படித் தான் ஆளப்படுகிறோமா?” என்று கேட்கிறார் மாக்ஸிமஸ். குரலில் விரக்தி தெரிகிறது. மாக்ஸிமஸ் குனிந்து மண்ணைக் கையில் எடுத்து கசக்கி முகர்ந்து கொள்கிறான்.எங்கோ குதிரையில் வேகமாகப் போகிறான். அவனுடைய நாய் அவனைப் பின்தொடர்ந்து வேகமாக ஓடுகிறது. 

மாக்ஸிமஸ் குதிரையிலேறி ஒரு வீரன் மட்டும் பின்தொடர காட்டுக்குள் வேகமாக போகிறான். கூடவே வந்து ஓநாயும்  ஓடுகிறது. காட்டுக்குள் ஏற்கனவே சில வீரர்கள் இருக்கிறார்கள். 

மாக்ஸிமஸ் பேசுவதை வைத்து அவர்கள் எல்லோரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது புரிகிறது. ‘இன்னும் மூன்று வாரங்களில் நான் எனது வயலில் அறுவடை செய்து கொண்டிருப்பேன். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? சகோதரர்களே , நான் நமது வாழ்க்கையில் என்ன செய்யவிருக்கிறோமோ அதுவே இறுதியில் எதிரொலிக்கும் ” என்று சொல்லி உற்சாகப்படுத்துகிறான். 

ஒரு வீரன் மாக்ஸிமஸிடம் அவனது ஹெல்மெட்டைத் தருகிறான். மாக்ஸிமஸ் உருவாக்கிய ஃபெலிக்ஸ் என்கிற பட்டப்பெயர் கொண்ட படையணி ஆமையின் வடிவமுறையில் நிற்கிறது, (தன்னைத் தற்காத்துக் கொண்டு நிற்கும் போர்வியூகம். ஒவ்வொரு போர் வீரனும் தனக்கு முன்பாக  கேடயத்தினை வைத்துத் தங்களை மறைத்திருப்பார்கள்)) காட்டுக்குள் அயல்நாட்டுக் கூட்டம் இருக்கிறது. அங்கிருந்து தாக்குதல் நடத்துகிறார்கள். மாக்ஸிமஸ் உத்தரவு தர, ஒரு வீரன் தீ பறக்கும் அம்பினைக் காட்டுக்குள் எறிகிறான். அதன் பின்னர் அடுத்தடுத்து நெருப்பு அம்புகள் எய்யப்படுகின்றன.

காட்டுக்குள் நிற்கும் எதிரிகளின் மேல் நெருப்பு படுகிறது. அவர்களை அந்த அம்புகள் தாக்குகின்றன. காட்டு மரங்களின் மீது நெருப்புப் பட்டு அவை எரியத்தொடங்குகின்றன. ஜெர்மானியர்களை நோக்கி படை நகர்கிறது. வாட்கள் உரசுகின்றன. தாக்கத் தொடங்குகின்றன. மாக்ஸிமஸின் ஓநாய் நெருப்புக்கு நடுவில் இருந்து பாய்ந்து போர்க்களத்துக்குள் நுழைகிறது. மாக்ஸிமஸ் ஒரு அயல்நாட்டவனின் தலையை மரத்தோடு சேர்த்து வெட்டுகிறார். ஒருவர் மாக்ஸிமஸ் குதிரையைத் தாக்கிவிட, சரிந்து கீழே விழும் மாக்ஸிமஸ் போராடத் தொடங்குகிறார். அவர் முகத்தில் ஆவேசம் தெரிகிறது. ஒரு ஜெர்மானியன் கோடாரியோடு தாக்கவர, தாக்குதலில் கீழே விழுந்து கிடக்கும் மாக்ஸிமஸ் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்.  கோடாரியோடு வரும் ஜெர்மானியனின் காலை வெட்டுகிறான். அவன் நிலைகுலைந்து விழ, மாக்ஸிமஸ் எழுவதற்குள் மற்றொரு ஜெர்மானியன் தாக்க வருகிறான். படுத்துக் கொண்டே ஜெர்மானியனை கீழே தள்ளி வாளால் குத்துகிறான் மாக்ஸிமஸ். எழுந்து நின்று ஏற்கனவே குத்திய ஜெர்மானியனை மற்றொரு முறை குத்துகிறான்.  மாக்ஸிமஸ் எழுந்து ஓட, மற்றொருமொரு எதிரியை போகிற போது தாக்கிவீழ்த்திவிட்டு ஓடுகிறான். ஓடுகிறபோது மற்றுமொரு வீரனை தாக்கப் போக, அது அவனது படையணியைச் சேர்ந்தவன் என்றதும் புன்னகைக்கிறான். அந்த நிலையிலும் ஒரு நொடி சிரிப்பைத் தந்துவிட்டு ஓடுகிறான் மாக்ஸிமஸ்.

ஜெர்மானியர்களின் படைத்தலைவனை ரோமானியர்கள் தாக்குகிறார்கள், தாக்கும் ஒவ்வொரு ரோமானியப் படைவீரரும் அந்தத் தலைவரின் பலத்தால் கீழே விழுகிறார்கள். அந்தத் தலைவர் ஒரு மாபெரும் சூரனைப் போல ஒவ்வொருவரையும் தாக்குகிறார். தாக்கும்போது அவரது தொண்டையில் இருந்து கர்ஜனை சத்தம் கேட்கிறது. மாக்ஸிமஸ் அந்தத் தலைவரை நோக்கி வருகிறான். இடையில் சில எதிரிகளை வீழ்த்திக் கொண்டே வருகிறான் மாக்ஸிமஸ். ஒருபக்கம் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்க, மறுபக்கம் ஓநாய் எதிரிகளை கடித்துக் கொண்டிருக்கிறது. ஜெர்மானியன் ஒருவன் மாக்ஸிமசைத் தாக்கவர எங்கிருந்தோ பாய்ந்து வந்து ஓநாய் அவனது கையைக் கடிக்கிறது. 

மாக்ஸிமஸ் சண்டையிடும்போது அவனுக்குப் பின்னால் யாரோ அலறிக்கொண்டே வரும் சத்தம் கேட்கத் திரும்புகிறான். அங்கே உடையில் நெருப்பு பற்றிக்கொண்ட நிலையிலும் ஒருவன் மாக்ஸிமசைத் தாக்க கோடாரியோடு  வருகிறான். வந்தவன் கோடாரியை சுழற்ற, குனிந்து தப்பித்துக் கொள்கிறான் மாக்ஸிமஸ். மற்றொரு முறை கோடாரியை அவன் சுழற்ற, சரியான சமயத்தில் குதிரையின் மீது வந்த ஒரு ரோமானிய வீரன் தாக்க வந்தவனைக் குத்திக் கீழே தள்ளுகிறான். 

ஜெர்மானிய படைத்தலைவனோடு உக்கிரமாகப் போராடி வீழ்த்துகிறான் மாக்ஸிமஸ். ஓநாயின் உறுமல் சத்தம் பின்னணியில் கேட்டுக் கொண்டே இருக்ககிறது. 

சுற்றிலும் எல்லாரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். போர்க்களத்தின் வெவ்வேறு காட்சிகள் காட்டப்படுகின்றன. 

மார்கஸ் இவை எலலாவற்றையும் உயரமான இடத்தில் இருந்து மெய்ப்காப்பாளர்கள் சூழ தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக ஒருவனைக் குத்திவிட்டு மாக்ஸிமஸ் வேறு யாரும் இருக்கிறார்களா எனத் திரும்பிப் பார்க்கிறான். மாக்ஸிமஸ் சோர்வடைந்திருக்கிறான் என்பது தெரிகிறது. அவனுக்கு மூச்சு வாங்குகிறது. சுற்றிலும் ஒரு எதிரி வீரன் கூட இல்லை என்பதைப் பார்க்கிறான் மாக்ஸிமஸ்.

மாக்ஸிமஸ் தன்னுடைய வாளைத் தலைக்கு மேலாகத் தூக்கி, “ரோம் வென்றது” என்று முழக்கமிடுகிறான். மற்ற வீரர்களும் வாளினை உயர்த்தி முழக்கமிடுகிறார்கள்.  

சீஸரின் முகம்  நிம்மதியடைகிறது. கண்ணை மூடி நிம்மதியாகிறார். முகம் உணர்ச்சிபிரவாகத்தில் இருக்கிறது.   

காட்சி மாறுகிறது 

காட்டின் நடுவே குதிரை வீரர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். நடுவே பல்லக்கு போன்ற அமைப்பில் ஒரு கூண்டு சென்று கொண்டிருக்கிறது. அதனுள் கேமரா செல்கிறது. ஒரு பெண் பார்க்கும்போதே அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பது தெரிகிறது. அவள் லுசில்லா. படுக்கையில் படுத்து கொண்டிருக்கிறாள். எதிர்ப்புறம் ஒருவன் அவளிடம் பேச்சைத் தொடங்குகிறான். அவன் கமாடஸ். இருவரும் பேசிக்கொள்ளும் எதுவும் முழுமையானதாக இல்லை. 

கமாடஸ் :அவர் இறந்து கொண்டிருக்கிறார் என்பதை நீ நம்புகிறாயா?

லுசில்லா : அவர் பத்து வருடங்களாகவே இறந்து கொண்டுதான் இருக்கிறார்.

கமாடஸ் : அவர் இறக்கும் தருவாயில் இல்லையென்றால், நம்மை ஏன் அழைக்கப் போகிறார். 

லுசில்லா : ஒருவேளை அவர் நம்மைத் தேடுகிறாரோ என்னவோ? தயவுசெய்து … இரண்டு வாரங்களாக இந்தப் பயணத்தில் இதையெல்லாம் கேட்டு கேட்டு என் தலை வலிக்கிறது. 

கமாடஸ்  :அவர் முடிவு எடுத்திருப்பார். அதை அவர் அறிவிக்கப் போகிறார். அவர் என் பெயரைத் தான் சொல்லப் போகிறார். அப்படியானால் நான் முதலில் என்ன செய்வேன் தெரியுமா? விளையாட்டுகளை நடத்தி அவரை கௌரவிப்பேன். 

லுசில்லா : நான் முதலில் வெந்நீரில் குளிக்க வேண்டும் 

என்று சொல்ல, பேசிக்கொண்டே லுசில்லாவின்  கையைப் பற்றுகிறான் கமாடஸ். வண்டிக்கு வெளியிலிருந்து யாரோ அவனை மரியாதையாக அழைக்கும் சத்தம் கேட்கிறது. வண்டி நின்றிருக்கிறது.  வண்டியில் இருந்து வெளிய வந்து பார்க்கிறான்.  “நாம் வந்து சேர்ந்துவிட்டோம்” என்கிறான் கமாடஸை அழைத்தவன்

அப்போது குதிரையில் ஒரு போர்வீரன் வருகிறான். அவன் நேரடியாக போர்க்களத்தில் இருந்து வருகிறான் என்பதை அவனது உடையும், சிறு காயங்களும், ரத்தக்கறைகளும் காட்டுகின்றன. அவனுடைய முகம் கரி பூசியது போல இருக்கிறது. அவனிடம் “சக்கரவர்த்தி எங்கே?” என்று கேட்கிறான் கமாடஸ் .

குதிரை வீரன் பதில் சொல்ல, அதில் எதையும் பெரிதாக கவனம் செலுத்தாதவன் போல கமாடஸ் குதிரை மீது ஏறுகிறான் போகிறான் . போகும் போது லுசில்லாவிடம் “முத்தம்” என்கிறான். அவள் பறக்கும் முத்தத்தினைத் தர, அங்கிருந்து போகிறான் . 

காட்சி மாறுகிறது

வாள் ஒன்று மரத்தில் செருகப்பட்டிருக்கிறது. வாளில் பனி சொட்டிக் கொண்டிருக்கிறது. மாக்ஸிமஸ் வாளினை உருவி எடுக்கிறான். நினைவுகளோடு அதனைத் தடவுகிறான். மார்கஸ் அரேலியஸ் வருகிறார் புன்னகை முகத்துடன். 

மார்கஸ்: மற்றுமொரு வெற்றியும் உன்னால் கிடைத்திருக்கிறது ஜெனரல்…

மாக்ஸிமஸ்: இனி ரோம் சண்டையிடுவதற்கு எதிரிகளே இல்லை… 

மார்கஸ்: எதிரிகள் இல்லாமல் இருக்கவே முடியாது.

வெற்றிப் பெற்றுத் தந்த உன்னை எப்படிப் பாராட்டுவது? 

மாக்ஸிமஸ்: நான் வீட்டிற்கு போகலாமா?  

மார்கஸ்: வீடு

என்று சொல்லி யோசிக்கிறார் மார்கஸ்.  இருவரும் சேர்ந்து நடந்துவர, வழியில் நிற்கும் வீரர்கள் வெற்றியைக் கொண்டாடும் வகையில் உற்சாகமாக முகமன் சொல்கிறார்கள். 

மாக்ஸிமஸ் “ அவர்கள் உங்களை வாழ்த்துகிறார்கள்.”

மார்கஸ் : இல்லை அந்த வாழ்த்தெல்லாம் உனக்குத்தான் 

மாக்ஸிமஸ் தன்னுடைய வாளை உயர்த்த, காத்திருந்தது போல வீரர்கள் முழக்கமிடுகிறார்கள். இதனை கமாடஸ் உயரமான பகுதியில் இருந்து  பார்க்கிறான். மாக்ஸிமஸ் மற்றும் மார்கஸ் ஒன்றாக நடந்து வருவதையும், வீரர்கள் முழக்கமிடுவதையும் பார்க்கிறான். தன்னுடைய குதிரையை செலுத்திக் கொண்டு மாக்ஸிமஸ் மற்றும் மார்கஸ் இருக்கும் இடத்துக்கு வருகிறான். 

மாக்ஸிமஸ் பேரரசின் கையைப் பிடித்துக் கொண்டு வருகிறான்.   குதிரையில் இருந்து இறங்கி அப்பாவிடம் வந்து போரில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்துகிறான். “நான் போரினைத் தவற விட்டேனா?” என்று கேட்க “நீ யுத்தத்தை தவறவிட்டிருக்கிறாய் என்கிறார் மார்கஸ். “உங்களுடைய வெற்றியைக் கொண்டாடும் விதமாக நூறு காளைகளை பலி கொடுக்கப்போகிறேன்” என்கிறான் .  “காளைகளை விட்டுவிடு , யுத்தத்தை வெற்றிப் பெறச் செய்தது மாக்ஸிமஸ் தான்” என்கிறார் மார்கஸ். வெற்றிக்கு காரணம் மாக்ஸிமஸ் தான் என்று மார்கஸ் சொல்ல கமாடஸின் முகம் சுருங்கி பின் சகஜ நிலைக்குத் திரும்புகிறது. மார்கஸ், மாக்ஸிமசின் அருகில் சென்று “உனக்கு ரோம் நகரம் வணக்கம் செலுத்துகிறது. நீ எனக்கு சகோதரன் போன்றவன்’” என்கிறான். மாக்ஸிமஸ் மரியாதை நிமித்தமாக தலையைக் குனிய, கமாடஸ் அங்கிருந்து செல்கிறான். போகும்போது மார்கஸ், “எனக்கென்னவோ விடைபெறும் நேரம் வந்துவிட்டதாகத் தோன்றுகிறது” என்கிறார். ‘என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள். போகலாம்’ என்கிறான் கமாடஸ். மார்கஸ் ஒரு குதிரை மேல் ஏறிக் கொள்கிறார். பேரரசர் குதிரை மேல் உட்காருவதற்கு மாக்ஸிமஸ் உதவி செய்கிறான். தன்னை மறுத்து மாக்ஸிமஸ் உதவியுடன் மார்கஸ் குதிரை மீது ஏறியது கமாடஸுக்கு கோபத்தை உண்டு பண்ணியதை முகம் காட்டுகிறது ‘உன்னால் இன்னும் பெருமை கிடைத்திருக்கிறது’ என்கிறார் மார்கஸ், மாக்ஸிமஸிடம்.  கமாடஸின்முகம் இன்னும் குரோதமாகிறது.

காட்சி மாறுகிறது 

போரினால் ரத்தக் காயங்கள் பட்டு கை தனியாகவும், கால் இல்லாமலும் கிடக்கும் வீரர்களுக்கு நடுவில் மாக்ஸிமஸ் பார்த்துக் கொண்டே வருகிறான். முகம் துயரம் தோய்ந்ததாய் இருக்கிறது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அடிபட்டவர்களின் வேதனைக் குரல்கள் அங்கங்கே கேட்கின்றன. 

காட்சி மாறுகிறது 

இதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாதது போல் ஓரிடத்தில் கூடாரத்தைச்சுற்றியும் உள்ளேயும்  கொண்டாட்டமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது மாக்ஸிமஸ் அந்தக் கூடாரத்திற்குள் நுழைகிறபோது போரின் வெற்றியை வீரர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மாக்ஸிமஸ் ரத்தம் தோய்ந்த தனது கைகளைக் கழுவுகிறான். ஒருபகுதியில் கமாடஸ் மற்றும் மார்கஸ் இருப்பதைப் பார்க்கிறான். க்விண்டஸ் அருகில் வந்து நிற்கிறான். 

க்விண்டஸ் : தளபதி!

மாக்ஸிமஸ் : இன்னும் உயிரோடு தான் இருக்கிறோமா?

க்விண்டஸ் : உயிரோடு இருக்கிறோம்

மாக்ஸிமஸ் : கடவுளர்களுக்கு நகைச்சுவை உணர்வு இருந்திருக்க வேண்டும்.

க்விண்டஸ் : கடவுளர்கள் உங்களை நேசிக்கிறார்கள்.

வலேரியஸ் : உங்களுடைய வீட்டுக்குப் போகிறீர்களா? இல்லை ரோமுக்கா?

மாக்ஸிமஸ் : வீட்டுக்கு. எனது மனைவி, எனது மகன், எனது அறுவடை.

க்விண்டஸ் மாக்ஸிமஸ் ஒரு விவசாயி. இதனை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

மாக்ஸிமஸ் : இரத்தத்தை விட சேற்றினை சுலபமாகக் கழுவிவிட முடியும் க்விண்டஸ்

மாக்சிமஸ் நோக்கி வருகிறான் கமாடஸ். அவருடன் இரண்டு பேர் வருகிறார்கள்.

கமாடஸ்  : இதோ இங்கே இருக்கிறார்.

மாக்ஸிமஸ் : இளவரசே!

 கமாடஸ்: செனட்டர் காயிஸ், செனட்டர் ஃபால்கோ..

என்று இரண்டு செனட்டர்களையும் மாக்ஸிமஸுக்கு அறிமுகம் செய்துவிட்டு 

கமாடஸ் : காயிஸிடம் ஜாக்கிரதையாக இருங்கள். அவர் உங்கள் காதுகளில் தேனை ஊற்றுவார்..பிறகு நீங்கள் விழித்துக் கொண்டு ‘குடியாட்சி! குடியாட்சி! என்று சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள். 

காயிஸ் : ஆமாம்..ரோம் குடியாட்சியாகவே உருவாக்கப்பட்டது 

 கமாடஸ்: ஆமாம். குடியாட்சியில் செனட்டுக்குத் தான் அதிகாரம் எல்லாம். ஆனால், அதனால் செனட்டர் காயிஸ் ஈர்க்கப்பட்டிருக்க மாட்டார் என்றே இல்லையா..

ஃபால்கோ : நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள் தளபதி? செனட்டா? சக்கரவர்த்தியின் பக்கமா?

மாக்ஸிமஸ் : ஒரு போர் வீரனுக்கு தனது எதிரிகளை அவர்களது கண்களைக் கொண்டே பார்த்தறிய முடியும் செனட்டர்..

காயிஸ் : ஒரு போர்ப் படை உங்களுக்குப் பின்னால் இருந்தால், நீங்கள் அதிகமும் அரசியல்மையமாவீர்கள்.

 கமாடஸ் : நான் உங்களை எச்சரித்தேன். ஆனால் உங்களை என்னால் பாதுகாக்க முடியும் செனட்டர்களே. 

என்று சொல்லிவிட்டு மாக்ஸிமசை அங்கிருந்து தனியே அழைத்துப் போகிறான் கமாடஸ் . அவர்கள் சென்ட்டர்களிடமிருந்து தள்ளி வருகிறார்கள்.  

கமாடஸ் :எனக்கு உன்னைப் போல நல்ல மனிதர்கள் தேவைப்படுவார்கள் 

மாக்ஸிமஸ் : நான் எப்படி உங்களுக்கு பணி செய்ய முடியும் 

 என்று எச்சரிக்கையுடன் கேட்கிறான்.

கமாடஸ் : உனக்கு எப்படி கட்டளையிட வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. நீ இடும் கட்டளைகள் கேட்கப்படுகின்றன, மதிக்கப்படுகின்றன, போரும் ஜெயிக்கப்படுகிறது. ஆனால், இந்த செனட்டர்கள், இவர்கள் திட்டமிடுகிறார்கள்,துரோகம் செய்ய நினைக்கிறார்கள். நாம் இந்த அரசியல்வாதிகளிடமிருந்து ரோமைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டு மார்கஸைப் பார்க்கிறான் . “நேரம் வரும்போது நீ என்னுடன் துணை நிற்பாயா?

மாக்ஸிமஸ் ஒருமுறை மார்கஸைப் பார்க்கிறான். பிறகு

மாக்ஸிமஸ் : இளவரசே, உங்கள் தந்தை என்னை விடுவித்தால், நான் என்னுடைய வீட்டுக்குச் செல்வதாக இருக்கிறேன் 

கமாடஸ் : வீட்டுக்கா?  உன்னை நீ மிக சௌகரியமாக்கிக் கொள்ளாதே. நான் உன்னை சீக்கிரமாகவே என்னுடன் சேர்த்துக் கொள்வேன். லுசில்லா இங்கே வந்திருக்கிறாள் தெரியுமா? 

அரசியல் பேசிக்கொண்டிருக்கும்போதே லுசில்லாவைக் குறித்து  பேசுகிறானே என்பதைப் போல பார்க்கிறார் மாக்ஸிமஸ்.

கமாடஸ் : அவள் உங்களை மறக்கவில்லை. இப்போது வேறு நீங்கள் பெரிய மனிதராகி விட்டீர்கள்   

கூடார அறையின் மற்றொரு பகுதி.

கூடாரத்தின் வழியே கொண்டாட்டம் நடக்கிற அறையை (மாக்ஸிமஸை) பார்த்துக் கொண்டிருக்கிறாள் லுசில்லா . அந்த அறைக்குள் வருகிற மார்கஸ் இதைப் பார்க்கிறார். ‘லுசில்லா… நீ மட்டும் ஆணாய் பிறந்திருந்தால், அடுத்த சீஸர் நீ தான். தைரியமானவள் நீ. உன்னுடைய தம்பி உன்னை மிகவும் நேசிக்கிறான். வேறு எப்போதையும் விட அவனுக்கு இப்போது தான் நீ தேவைப்படுகிறாய்’ என்கிறார் மார்கஸ். 

காட்சி மாறுகிறது 

அதிகாலை நேரம்.. கூடாரங்கள் இருக்கின்றன. பனித்துகள்கள் விழுகின்றன. DISSOLVE. ரோமன் கொடி காட்டப்படுகிறது. வீரர்கள் வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். மாக்ஸிமஸ் வீர்கள் சிலரை விசாரித்தபடி வருகிறான். குதிரையை பரிசோதிக்கிறான். காட்டின் நடுவே பேரரசரின் மகன் கமாடஸ்  வாள் பயிற்சி செய்வதைப் பார்க்கிறான்.  வாள் பயிற்சியில் கமாடஸ் தேர்ச்சி பெற்றவன் என்பது தெரிகிறது .

கூடாரத்தில் மார்கஸ் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறார்.  அவருக்கு பின்னால் யாரோ வந்து நிற்பது OUT OF FOCUS ல்  தெரிகிறது.

மாக்ஸிமஸ் குரல்: என்னை அழைத்து வரச் சொன்னீர்களா? 

பதில் வராமல் போகவே தயங்கி விட்டு மீண்டும் 

மாக்ஸிமஸ்: சீசர் 

மார்கஸ்: திரும்பி ஒரு முறை சொல் மாக்ஸிமஸ், நாம் எதற்காக இங்கே இருக்கிறோம்? 

மாக்ஸிமஸ்: சாம்ராஜ்யத்தின் வெற்றிக்காக… 

எழுதுவதை நிறுத்திவிட்டு பெருமூச்சுடனும், களைப்புடனும் நாற்காலியில் சாய்ந்து கொள்கிறார் மார்கஸ். 

மார்கஸ்: ஆமாம்… எனக்கு ஞாபகமிருக்கிறது. நீ அந்த வரைபடத்தைப் பார்த்தாயா மாக்ஸிமஸ்

என சுட்டிக்காட்ட, மாக்ஸிமஸ் அந்தத் திசையில் பார்க்கிறான். 

மார்கஸ்: இந்த உலகத்தை நான் உருவாக்கி இருக்கிறேன். இருபத்தைந்து வருடங்களாக போர் செய்து ரத்தம் சிந்தி சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினேன்.

சீஸரானதிலிருந்து நான்கு வருடங்கள் மட்டும் தான் நான் போர் செய்யாமல் இருந்தேன். 

இருபது வயதில் அந்த சமாதானமான நான்கு வருடங்கள் கிடைத்தன. இதெல்லாம் எதற்காக?

எழுந்து மாக்ஸிமஸுக்கு அருகில் வருகிறார். 

மார்கஸ்: வாளைக் கொண்டு வந்தேன். வேறெதுவும் இல்லை. 

மாக்ஸிமஸ்: சீசர்…  உங்கள் வாழ்க்கை… 

மார்கஸ் கையமர்த்துகிறார். 

மார்கஸ்: தயவு செய்து என்னை அப்படி அழைக்காதே… வா உட்காரு.

மாக்ஸிமஸ் வந்து அமர்ந்ததும்,

மார்கஸ்: நாம் இருவரும் இப்போது பேசுவோம் சாதாரண மனிதர்களைப் போல… 

பேசு மாக்ஸிமஸ்… 

மாக்ஸிமஸ்: (கோவத்துடனும் வலியுடனும்) உறைகிற சேற்றில் என்னுடைய ஐந்தாயிரம் வீரர்கள் இருக்கிறார்கள். அதில் மூவாயிரம் பேர் ரத்தக் காயப்பட்டிருக்கிறார்கள். 

இரண்டாயிரம் பேரால் இங்கிருந்து நகரக் கூட முடியாது. 

அவர்கள் எதற்காக சண்டையிடுகிறார்கள், செத்துப் போகிறார்கள் என்பது கூட தெரியவில்லை… 

மார்கஸ்: நீ என்ன நம்புகிறாய்? 

மாக்ஸிமஸ்: அவர்கள் உங்களுக்காகவும் ரோமுக்காகவும் சண்டை போட்டார்கள்.

மார்கஸ்: ரோம் என்பது என்ன? 

மாக்ஸிமஸ்: நான் உலகின் மற்ற பகுதிகளையும் பார்த்திருக்கிறேன். அது கொடூரமாகவும், கொடுமையாகவும் இருட்டாகவும் கிடக்கிறது. ரோம் வெளிச்சமானது. 

மார்கஸ்: இன்னும் நீ அங்கு போகவில்லை… அது என்னவாக இருக்கிறது என்பதை நீ இன்னும் பார்க்கவில்லை. நான் செத்துக் கொண்டிருக்கிறேன் மாக்ஸிமஸ்.

மாக்ஸிமஸ் மார்கசையேப் பார்த்துக் கொண்டிருக்கிறான் 

மார்கஸ்:  ஒவ்வொரு மனிதனும் தனது கடைசி காலத்தில் வாழ்க்கையில் ஏதோ ஒரு கடமை இருப்பதை உணர்கிறான். 

மார்கஸ்: வரும் காலங்களில் என்னைப் பற்றி உலகம் என்ன பேசும்? ஒரு தத்துவவாதியாக அறியப்படுவேனா? போர் வீரனாக?  கொடுங்கோலனாக?  அல்லது ரோமின் சுயத்தை மீட்டுக் கொடுத்த பேரரசனாக? 

எனக்கொரு கனவிருந்தது. அது ரோமாக இருந்தது. 

நீ அதை மெல்லிய குரலில் தான்  சொல்லியிருந்திருக்க முடியும்…  இல்லையென்றால் காணாமல் போயிருக்கும்.

அவ்வளவு பலவீனமாக இருந்தது. ஒரு குளிர்காலத்திற்கு கூட தாக்கு பிடிக்காது என்று தான் பயந்திருந்தேன். மாக்ஸிமஸ், நாம் இப்போது மெல்லிய குரலில் பேசுவோம். உனக்கு ஒரு மகன் இருக்கிறானில்லையா? 

சின்ன சிரிப்புடன் தலையசைக்கிறான் மாக்ஸிமஸ்.  

மார்கஸ்: உன்னுடைய வீட்டைப் பற்றி என்னிடம் சொல், மாக்ஸிமஸ். 

மாக்ஸிமஸ் முகம் சின்ன வருத்தத்திற்குள் போகிறது. மார்கஸ் சொல்லும்படி உற்சாகபடுத்துகிறார். மெ

மாக்ஸிமஸ்: என்னுடைய வீடு ட்ருயிலோவிற்கு மேலே ஒரு குன்றில் இருக்கிறது. ரொம்ப எளிமையான இடம். 

மார்கஸ் ஆர்வத்துடன் கவனிக்கிறார். 

மாக்ஸிமஸ் குரல்: பிங்க் கற்கள் சூரியனில் பட்டுத் தெறிக்கும். சமயலறையில் இருக்கிற மூலிகைத் தோட்டம் நாளெல்லாம் மணம் பரப்பும். மாலையானால் மல்லிகை… கதவு வழியே தென்றல்.. ராட்சத பாப்லர் மரம்…அத்தி, ஆப்பிள் மரங்கள் 

சின்ன வெட்க சிரிப்புடன், 

மாக்ஸிமஸ்: மண் கருப்பு நிறத்தில் இருக்கும். என் மனைவியின் கூந்தலின் கறுப்பு நிறம் போல… 

மார்கஸ் சிரிக்கிறார் 

மாக்ஸிமஸ்: தெற்குச் சரிவில் திராட்சைகளும், வடக்கில் ஆலிவ்களும்… குட்டிக் குதிரைகள் வீட்டின் அருகே சுற்றிக் கொண்டிருக்கும். அவை என் மகனை கேலி செய்யும். 

அவற்றில் ஒன்றாக இருக்க வேண்டுமென என் மகன் விரும்புவான். 

சின்ன சிரிப்புடன், 

மார்கஸ்: கடைசி முறை வீட்டில் எப்போது இருந்தாய்? 

மாக்ஸிமஸ்: இரண்டு வருடங்கள், 264 நாட்கள், பிறகு இந்த காலை. 

மார்கஸ்: எனக்கு உன்னைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. நல்ல வீடு, அதற்காக சண்டை போடலாம். 

சம்மதமாய் மெல்லியதாக தலையசைக்கிறான் மாக்ஸிமஸ். 

மார்கஸ் பேசிக்கொண்டே எழுகிறார். 

மார்கஸ்: நீ வீட்டிற்கு போவதற்கு முன்பு உனக்கொரு கடமை இருக்கிறது.

மாக்ஸிமஸ் வேகமாக எழுந்து, கம்பீரமாக கேட்கிறான். 

மாக்ஸிமஸ்: நான் என்ன செய்ய வேண்டும் சீசர்? 

மார்கஸ்: எனக்குப் பிறகு ரோமுக்கு நீ தான் பாதுகாவலனாக இருக்க வேண்டும். உனக்கு நான் தனித்த அதிகாரத்தை அளிக்கிறேன். ரோம் மக்களுக்கே அதிகாரத்தைத் திருப்பித் தந்து விட வேண்டும். ரோமை செயலிழக்கச் செய்யும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மாக்ஸிமஸ் திகைத்து போய் பார்க்கிறான். 

மார்கஸ்: இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்வாயா மாக்ஸிமஸ்? 

மாக்ஸிமஸ்: என் மனதிலிருந்து சொல்கிறேன், முடியாது.

பெருமையுடன் – மாக்ஸிமஸ் கன்னத்தைப் பிடித்து – 

மார்கஸ்: மாக்ஸிமஸ், இதனால் தான் நீ இருக்க வேண்டுமென்கிறேன். 

மாக்ஸிமஸ்: செனட்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னை விட அரசியல் தெரியும். 

மார்கஸ்: ஆனால் நீ ரோமின் அரசியலால் பாழ்படாமல் இருக்கிறாய்.

என தோளை தட்டி விட்டு.. 

மாக்ஸிமஸ்: கமாடஸ்? 

மார்கஸ்:  அவன் நியாயமான மனிதன் இல்லை. அவனுடைய சிறு வயதில் இருந்தே இது உனக்குத் தெரியும். கமாடஸால் ஆட்சி செய்ய முடியாது. அவன் ஆட்சி செய்யவே கூடாது. உன்னைத் தான் நான் மகனாக பெற்றிருக்க வேண்டும்.

மாக்ஸிமஸ் உணர்ச்சிவசப்பட்டுயுடன் திரும்பி பார்க்கிறான். 

மார்கஸ்:  என் முடிவை ஏற்றுக் கொள்வான். அவனுக்குத் தெரியும் நீ படை நடத்தும் விதம் பற்றி. 

மாக்ஸிமஸ்: எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். 

மார்கஸ்: சரி.. சூரியன் மறைவதற்குள் நீ ஒப்புக்கொள்வாய் என நம்புகிறேன். இப்போது என்னை உற்சாகப்படுத்து. இந்த கிழவனுக்கு ஒரு போர்வை எடுத்துக் கொடுத்துவிட்டுப் போ. 

மாக்ஸிமஸ் கூடாரத்தை விட்டு வெளியே  வருகிறான். முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருக்கிறான். லுசில்லா பக்கத்துக் கூடாரத்தில் இருந்து வெளியே வருகிறாள். அவனுக்காகக் காத்திருந்திருக்கிறாள் என்பது அவளது வருகையை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.

மாக்ஸிமஸிடம் லுசில்லா பேச்சுக் கொடுக்கிறாள். “என்னுடைய அப்பா உன்னிடம் என்ன சொன்னார்” என்று கேட்கிறாள்

மாக்ஸிமஸ் : நான் எனது வீட்டிற்கு கிளம்பும் முன் வாழ்த்துகளைத் தெரிவிக்க வரச் சொன்னார்

லுசில்லா : பொய் சொல்லாதே மாக்ஸிமஸ். நீ பொய் சொன்னால் நான் கண்டுபிடித்துவிடுவேன். நீ அதில் தேர்ச்சி பெறவில்லை

மாக்ஸிமஸ் அவளைத் திரும்பிப் பார்க்கிறான். அவனது பார்வை கூர்மையாக இருக்கிறது. அவளை நெருங்கி வருகிறான்.

மாக்ஸிமஸ் :உன் அளவுக்கு எனக்கு அதில் தேர்ச்சி இல்லை தான்.

லுசில்லா : உண்மை. ஒரு வீரனுக்கு வாழ்க்கை மிக எளிமையானது. நீ என்னை இரக்கமற்றவள் என நினைக்கிறாயா?

மாக்ஸிமஸ் : நீ பிழைத்து வாழ்வதற்கான திறமையைக் கொண்டுள்ளாய் 

என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பப் போகிறான்.

லுசில்லா சிரிக்கிறாள். அவனிடம் பேச்சினை வளர்க்க விரும்புகிறாள்.

லுசில்லா: மாக்ஸிமஸ் நில்லு. என்னைத் திரும்பப் பார்ப்பது உனக்கு அத்தனை கொடுமையானதாக இருக்கிறதா?

மாக்ஸிமஸ் : இல்லை. நான் போரினால் களைப்படைந்திருக்கிறேன் 

லுசில்லா : என்னுடைய அப்பாவை அத்தனை பலவீனமாக பார்ப்பதற்கு உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை இல்லையா? 

மாக்ஸிமஸ் ஆமாம் என்பது போல தலையாட்டுகிறான்,

லுசில்லா : என்னுடைய அப்பா அடுத்த பட்டத்துக்காக தன்னை அறிவிக்க வேண்டும் என கமாடஸ் விருப்பப்படுகிறான். நீ என் அப்பாவுடன் இருந்தது போலவே கமாடஸுடன் இருப்பாயா?

மாக்ஸிமஸ் : நான் எப்போதும் ரோமுக்கு சேவை செய்வேன்.

லுசில்லா : உனக்குத் தெரியுமா? நான் எப்போதும் எனது பிரார்த்தனையில் உன்னை இணைத்துக் கொள்கிறேன். ஆமாம். இன்னும் பிரார்த்திக்கிறேன்.

மாக்ஸிமஸ் : உங்களுடைய கணவனின் இறப்புக்கு வருந்துகிறேன். இரங்கல்கள்

லுசில்லா : நன்றி 

மாக்ஸிமஸ் : உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் என்று கேள்விப்பட்டேன் 

லுசில்லா : ஆமாம். லூசியஸ். அவனுக்கு இப்போது எட்டு வயதாகப்போகிறது 

மாக்ஸிமஸ் : என்னுடைய மகனுக்கும் எட்டு வயதாகப்போகிறது. 

தன்னுடைய குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது அவன் சற்று நிறுத்துகிறான்.  

மாக்ஸிமஸ் : உங்களது பிரார்த்தனைகளுக்கு எனது நன்றி.

என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்கிறான். தனித்து விடப்பட்ட லுசில்லா அவன் போவதையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். 

காட்சி மாறுகிறது

மாக்ஸிமஸ் தனது கூடாரத்தில் முன்னோர்களிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான். மனைவியையும், மகனையும் பாதுகாக்கும்படி வேண்டுகிறான். மகன், மனைவி முகம் மனதில் வந்து போகிறது.

பிரார்த்தனையை முடித்து விட்டு வந்து ஒரு நாற்காலியில் அமருகிறான் மாக்ஸிமஸ்.  தனது நண்பனும் பணியாள்  சிசேரோவிடம், “உனது கடமையைச் செய்ய உனக்கு கடினமாக இருக்கிறதா? என்று கேட்க,

சிசேரோ : சில நேரங்களில் எனக்குப் பிடித்ததை செய்கிறேன்.  மற்ற நேரங்களில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறேன் 

மாக்ஸிமஸ் தன்னுடைய தாடியைத் தடவிக்கொண்டே யோசனையுடன் 

மாக்ஸிமஸ் : நாம் இதற்கு பிறகும் கூட வீட்டிற்குப் போவோம் என்று தோன்றவில்லை 

என்கிறான்

காட்சி மாறுகிறது

மார்கஸின் கூடாரத்திற்குள் வருகிறான் கமாடஸ். தனது அப்பாவான மார்கஸின் சிற்பம் ஒன்றினைத் தொடப்போகும்போது மார்கஸ் அவன் பின்னால் வந்து நிற்கிறார்.

மார்கஸ் : ரோமிற்கு உன்னுடைய கடமையைச் செய்யத் தயாராக இருக்கிறாயா ?

  சிறிய புன்னகையுடன் 

கமாடஸ்:  ஆமாம் அப்பா

மார்கஸ் : நீ பேரரசாக முடியாது 

கமாடஸின் முகத்தில் இருந்த புன்னகை காணாமல் போகிறது. அவனது மனதின் வலி முகத்தில் தெரிகிறது 

கமாடஸ் : எந்த வயதான, அறிவாளி என்னுடைய இடத்தினை எடுத்துக் கொள்ளப்போகிறார்?

மார்கஸ் : என்னுடைய அதிகாரம் நம்பிக்கையின் அடிப்படையில் மாக்ஸிமஸுக்கு அளிக்கப்பட இருக்கிறது. இதெல்லாம் செனட் மீண்டும் ஆட்சி செய்யும் வரையிலும். ரோம் மீண்டும் குடியாட்சியாக மாறும் 

கமாடஸ் : மாக்ஸிமஸ்?

மார்கஸ் கமாடஸின் முகத்தைத் தொடப்போகிறார். அவன் முகத்தைத் திருப்பிக் கொள்கிறான்., 

மார்கஸ் : என்னுடைய முடிவு உனக்கு ஏமாற்றமாக இருக்கிறதா?

கமாடஸ் : நீங்கள் ஒருமுறை எனக்கு எழுதியிருந்தீர்கள். நான்கு விதமான தகுதிகள் குறித்து. ஞானம், துணிச்சல், நீதி, நிதானம். என்னிடம் இவை எதுவுமே இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், என்னிடம் வேறு சில தகுதிகள், இருந்தன. இலட்சியம் – இந்த ஒரு தகுதி நம்மை சிறப்பாக்கக் கூடியது.  தைரியம்..போர்க்களத்தில் மட்டும் தான இருக்க வேண்டும் என்பது இல்லை..தைரியத்துக்கு பல வடிவங்கள் உண்டு. என்னிடம் பக்தி உண்டு. எனது குடும்பத்தின் மீது..உங்கள் மீது  ஆனால் இவையெல்லாம் உங்கள் பட்டியலில் இல்லை.  அப்போதிருந்தே உங்கள் மகனுக்கு அது தேவையில்லை என்றே நினைத்துவிட்டீர்கள். 

மார்கஸ்  : மகனே நீ எங்கோ செல்கிறாய்

மார்கஸ் சொன்ன முடிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திலும், அழுகையிலும்  உடைந்துபோய் பேசுகிறான் 

கமாடஸ்:  உங்களை வசீகரிக்கச் செய்யும், பெருமைப்படுத்தும் கடவுள்களின் முகத்தினை நான் தேடிக்கொண்டே இருந்தேன். உங்களிடமிருந்து ஒரு இதமான வார்த்தை, ஆரத்தழுவல், என்னை உங்கள் நெஞ்சோடு அணைத்து இறுக்க…இது எனது நெஞ்சில் ஏற்றி வைக்கப்பட்ட ஆயிரங்காலத்து சூரியன் அப்பா..நீங்கள் இவ்வளவு தூரம் வெறுக்குமளவுக்கு என்னிடத்தில் என்ன இருக்கிறது? உங்களைப் போல வாழ்வதற்கே நான் எப்போதும் விருப்பம் கொண்டிருந்தேன் சீசர்…அப்பா .

மார்கஸ் , மகனே என்று அழைத்துக் கொண்டே அவன் முன் மண்டியிடுகிறார். 

மார்கஸ் : ஒரு மகனாக உன்னுடைய பிழை என்பது தந்தையாக என்னுடைய தோல்வி 

என்று சொல்லிவிட்டு கமாடஸினை அணைக்க, இரு கைகளையும் விரிக்கிறார். அது ஒரு வகையில் மன்னிப்பு கோரும் விதமாக இருக்கிறது. கமாடஸ் அவரை அனைத்துக் கொள்கிறான். இருவரும் அழுகிறார்கள்,. 

 கமாடஸ் : உங்களுக்கு என் மேல் அன்பு ஏற்பட வேண்டுமானால் இந்த உலகத்தையே கொன்று குவிப்பேன்

என சொல்லிக் கொண்டே மார்கஸை இறுக்கி அணைக்கிறான் கமாடஸ். அவனுடைய முகம் மாறுகிறது. அவன் பிடியை விடவேயில்லை மார்கஸ் திமிருகிறார். அவன் இன்னும் இறுக்குகிறான். மார்கஸ் துவள்கிறார். ஒரு சிறுவனைப் போல அழுகிறான் கமாடஸ்.  

சீசர் மார்கஸின் சிற்பம் காட்டப்படுகிறது  

காட்சி மாறுகிறது

மாக்ஸிமஸ் தனது கூடாரத்தின் கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறான். யாரோ ஒருவர் வந்து அவனைத் தொட வர, திடுக்கிட்டு கத்தியை எடுத்து வந்தவனைத் தாக்கத் தயாராகிறான். வந்தது க்விண்டஸ் எனத் தெரிய வருகிறது. கூச்சத்தில் சிரிக்கிறான் மாக்ஸிமஸ். ‘பேரரசர் உன்னைப் பார்க்க விரும்புகிறார். அவசரம்’ என்கிறான் க்விண்டஸ். கூடாரத்தை விட்டு வேகமாகச் செல்கிறான் மாக்ஸிமஸ். கூடவே க்விண்டஸும் செல்கிறான்.  

மார்கஸின் கூடாரம் திறந்திருப்பதை மாக்ஸிமஸ் கவனிக்கிறான். அங்கு  நின்று கொண்டிருப்பதைப் பார்க்கிறான் மாக்ஸிமஸ். காமடஸின் முகம் இறுகிப் போயிருக்கிறது. மார்கஸ் இறந்த செய்தியை மாக்ஸிமஸுக்கு சொல்ல, நம்பமுடியாமல் சீஸரின் சடலத்தை நோக்கி செல்கிறான் மாக்ஸிமஸ். தூக்கத்தில் வலியின்றி உயிர் பிரிந்ததாக மருத்துவர் சொன்னார் என்கிறான் கமாடஸ் . 

மாக்ஸிமஸ் மார்கஸ் அருகில் செல்கிறான் “அப்பா” என்கிறான். அவரது நெற்றியில் முத்தமிடுகிறான். அந்த கூடாரத்தின் இருளான பகுதியில் லுசில்லா அமர்ந்திருக்கிறாள். அழுது கொண்டிருக்கிறாள் என்பதை மாக்ஸிமஸ் பார்க்கிறான். மாக்ஸிமஸ் கமாடஸிடம் எதுவும் பேசாமல் கூடாரத்துக்கு வெளியே செல்கிறான். க்விண்டசை அழைக்கிறான். க்விண்டஸ் துக்கத்துடன் பார்க்கிறான். 

கூடாரத்தின் உள்ளே லுசில்லா கமாடஸின் அருகில் வருகிறாள். அவனது கண்களையே உற்றுப் பார்க்கிறாள். அவனது கன்னத்தில் அறைகிறாள். பின்பு அவன் கையைப் பற்றி ‘Hail ceaser’ என முத்தமிடுகிறாள். 

காட்சி மாறுகிறது 

கூடாரத்திற்குள் வேகமாக வரும் மாக்ஸிமஸ் சிசேரோ உதவியுடன் கவசத்தை அணிந்து கொள்கிறான். வேகமாக உத்தரவுகளைப் பிறப்பிக்கிறான். செனட்டர்களை அழைக்க வேண்டும் என்கிறான் அவர்களின் ஆலோசனை தேவை என்கிறான். ‘வாள்” என்று கத்த வாளினை மாக்ஸிமஸ் கையில் சிசேரோ தருவதற்குள் க்விண்டஸ் கூடாரத்துக்குள் வருகிறான். க்விண்டஸ் ஆயுதங்களுடன் இருப்பதைப் பார்த்து சந்தேகம் கொள்கிறான் மாக்ஸிமஸ். பேரரசர் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறான் மாக்ஸிமஸ். “இல்லை இயற்கையான மரணம் தான்” என்கிறான் க்விண்டஸ். வீரர்கள் மாக்ஸிமசை சூழ்ந்து கொள்கிறார்கள். சிசேரோ மாக்ஸிமசுக்கு வாளினைத் தர, வேண்டாம் என்று மறுத்து விடுகிறான் மாக்ஸிமஸ். 

“விடியும் வரை சென்று கொண்டே இருங்கள். பிறகு கொன்று விடுங்கள்” என்று வீரர்களுக்கு சொல்ல 

மாக்ஸிமஸ் : க்விண்டஸ்.. பார்..என்னை பார்…என்னுடைய குடும்பத்தினை பார்த்துக் கொள்வேன் என்று சொல்லு 

க்விண்டஸ் :  உன்னுடைய குடும்பம் மறு உலகத்தில் உன்னை சந்திக்கும் 

மாக்ஸிமஸ் அவனை நோக்கி ஆவேசமாக வர, வந்து பின்னந்தலையில் வாளின் கைப்பிடி கொண்டு தாக்குகிறான் வீரன் ஓருவன்.

காட்சி மாறுகிறது 

மாக்ஸிமஸ் கையில் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்படுகிறான். தலைமை பாதுகாவலன் மாக்ஸிமஸிடம் ‘மண்டியிடு’ என்கிறான். ஒரு வீரன் மாக்ஸிமஸின் முதுகுக்குப் பின்னால் ஓங்கிய வாளோடு நிற்கிறான். மாக்ஸிமஸ் மண்டியிட்டு முன்னோருக்கான பிரார்த்தனையைச் சொல்கிறான். பிறகு அங்கிருக்கும் தலைமை பாதுகாவலனிடம் ‘ஒரு வீரனுக்கான சாவைக் கொடுங்கள்’ என்று கேட்டதும் பின்னங்கழுத்தில் குத்துவதற்காக நிற்கும் வீரனை நோக்கி தலைமை பாதுகாவலன் தலையசைக்க அவன் முன்னால் வந்து நிற்கிறான். வந்தவன் வாளை உயர்த்த, நொடிக்கும் குறைவான நேரத்தில் வீரர்களை மாக்ஸிமஸ் தாக்குகிறான். தலைமை பாதுகாவலன் தன்னுடைய உறையில் இருந்து வாளினை எடுக்கும் முன்பு அவனையும் வீழ்த்துகிறான். மற்றொரு வீரன் குதிரைக்கு மேலிருந்து கொண்டு மாக்ஸிமசை நோக்கி வருகிறான், நாம் காற்றில் எதோ கிழிப்பது போல ஒரு ஒலியினைக் கேட்கிறோம். அடுத்த நொடி வீரன் குதிரையில் இருந்து கீழே விழுகிறான்.  

ஒரு குதிரை வீரன் நடந்தது தெரியாமல் போத்தலில் இருக்கும் விஸ்கியை குளிருக்கு இதமாகக்  குடித்துக் கொண்டிருக்க , அவனை அழைக்கிறான் மாக்ஸிமஸ். அவன் திரும்புகிறான். எதிரில் மாக்ஸிமஸ் வாளோடு நிற்பதைப் பார்த்து அவனை நோக்கி வருகிறான். அடுத்த  நொடி அவன் அவன் குதிரையோடு சற்றுத் தள்ளிப் போய் நின்று பின்பு கீழே விழுகிறான். மாக்ஸிமஸின் தோளில் காயம்பட்டிருக்கிறது. இரண்டு குதிரைகளுடன் அங்கிருந்து கிளம்புகிறான்.

காடு, மேடு, பாறைகள் என பல இடங்களில் மாக்ஸிமஸ் இரண்டு குதிரைகளுடனும் பயணம் செய்கிறான். இடையில் நெருப்புக்கு முன்பாக அமர்ந்து தோளில் ஏற்பட்ட காயத்துக்கு கட்டுப் போட்டுக் கொள்கிறான்.  களைப்படைந்திருக்கிறான் 

‘கடைசியாக வீட்டில் எப்போது இருந்தாய்?’ எனக் கேட்ட சீசரின் குரலும் அதற்கு பதில் சொன்ன மாக்ஸிமஸின் குரலும் overlap ஆகிறது. எப்போதும் முணுமுணுக்கும் முன்னோர்களுக்கான பிரார்த்தனையை மனதில் சொல்கிறான், மாக்ஸிமஸ். விடிகிறது. அவன் இரவில் தங்கியிருந்தது மலைப்பகுதி எனத் தெரிய வருகிறது. 

மிகுந்த களைப்புடன் குதிரை மேல் அமர்ந்து வருகிறான் மாக்ஸிமஸ். இரண்டு குதிரைகளில் ஒன்றில் மட்டும் இப்போது அவன் பயணம் இருக்கிறது. தோளில் காயம்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் வந்து கொண்டேயிருக்கிறது. 

அழகிய மலை கிராமம். பச்சை பசேலென வயல்கள். இதுவரை மாக்ஸிமஸ் பாயின்ட் ஆஃப் வியூவில் பார்த்த அவனது மகனும், மனைவியும் அங்கு இருக்கிறார்கள். மகன் குதிரை குட்டிகளுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறான். பக்கத்தில் நின்று மனைவி பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவர்களது இடத்துக்குள்  குதிரைப் படை வீரர்கள் சிலர் வருகிறார்கள். மகன் சந்தோஷமாக, ‘அப்பா வந்துவிட்டார்’ என்று கத்துகிறான். 

குதிரை மேல் சோர்வாக படுத்திருக்கும் மாக்ஸிமஸ் திடுக்கிட்டு எழுகிறான். காயம்பட்ட கையிலிருந்து ரத்தம் வழிகிறது. நிமிர்ந்து திகைத்து போய் பார்க்கிறான்.

மாக்ஸிமஸ் மனைவி எதிர்பார்ப்புடன் பார்க்கிறாள்.

குதிரையின் கால்கள் வேகமாக ஓடுகின்றன. மாக்ஸிமஸ் வேகமாக வந்து கொண்டிருக்கிறான்.  

சரிவில் மாக்ஸிமஸின் மகன் அப்பா என்றபடியே ஓடி வருகிறான். முகம் சந்தோஷமாக இருக்கிறது. குதிரை வீரர்கள் வருகிறார்கள். மகனின் பின்னால் மனைவி ஓடி வருகிறாள். குதிரை வீரர்கள் மகனை போகிற போக்கில் அடித்து தள்ளி விட்டு முன்னேற மனைவி திகைக்கிறாள்.

காட்சி மாறுகிறது 

மாக்ஸிமஸ் வேகமாக வருகிறான். அவனுடைய வீடு இருக்கும் இடத்திற்கு அருகில் வந்ததும் குதிரை இனி நடக்க முடியாது என்கிற நிலையில் களைப்பில் படுத்துக் கொள்கிறது. கீழே விழுகிறான் மாக்ஸிமஸ். மிக மெலிதான ஒரு காற்று சத்தம். மட்டும் கேட்கிறது. தட்டுத் தடுமாறி எழுந்து பார்க்கிறான் மாக்ஸிமஸ். அவன் நடந்து வரும் இடத்தில் தீ கொளுத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. அங்கேயே கரிக்கட்டையாய் உடல்கள் கிடக்கின்றன. சூறையாடப்பட்ட தடங்கள் தெரிகின்றன. மனைவி, மகனை பார்க்கும் பொருட்டு நடந்து வரும் அவன் அதிர்ச்சியில் மடிந்து உட்காருகிறான்.

அவன் முன்னால் மனைவி, மகன் கால்கள் தொங்க விடப்பட்டிருக்கின்றன. கொளுத்தியதின் அடையாளமாய் கரி பூசியிருக்கிறது. 

வெடித்து அழுகிறான் மாக்ஸிமஸ். மனைவியின் கால்களை பற்றி எச்சில் வடிய முத்தமிடுகிறான் அழுதபடியே.

இரண்டு சமாதிகள் காட்டப்படுகின்றன. அதன் மேல் வயலட் மலர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. 

சமாதிகளுக்கு நடுவில் மாக்ஸிமஸ் மயங்கிக் கிடக்கிறான். 

வேறு மொழி பேசுகிற சில குரல்கள் கேட்கின்றன. யார் பேசுகிறார்கள் என்று காட்டப்படவில்லை. அவர்கள் மாக்ஸிமஸைத் தூக்குகிறார்கள். “உயிர் இருக்கிறது” என்கிறார்கள். 

காட்சி மாறுகிறது 

சூரியன் உதயத்தில் தகிக்கும் கற்பாறைப் பகுதி. TIME LAPSE SHOT 

மாக்ஸிமஸ் கண்கள் மூடியிருக்க அவன் அந்தரத்தில் இருப்பது போல் காட்டப்படுகிறது. 

மாக்ஸிமஸுக்கு ஏதேதோ நினைவுகள் வந்து போகின்றன

அவனது கற்பனையில் வீட்டின் சுவரும் அவனது கை கோதுமை வயலை ஸ்பரிசிப்பதும் (குழந்தையின் சிரிப்பு சத்தம்) இப்போது அவன் கைகள் கற்களைத் தொட்டபடி செல்ல, ஒரு கல் உருளுகிறது.

வெள்ளை குதிரை ஒன்று ஓடுகிறது. HIGH SPEED மேகங்கள் நகருகின்றன. 

சூரிய வெளிச்சத்தில் கண் கூச பார்க்கிறான் மாக்ஸிமஸ். கூண்டில் கழுதைப்புலி சுற்றி வருகிறது. 

‘நீ அவர்களை மீண்டும் மறுஉலகில் சந்திப்பாய்’ என்கிற குரல் ஒன்று கேட்க மனைவியும், மகனும் எதிர்பார்த்தபடி நின்று கொண்டிருப்பது காட்டப்படுகிறது. 

மாக்ஸிமஸ் முகம் சுருக்கி கத்துகிறான். குதிரை ஒன்று மிரள்கிறது. அதன் மேல் தலைப்பாகை கட்டிய ஒருவன் உட்கார்ந்திருப்பது தெரிகிறது. 

‘மாக்ஸிமஸ் நினைவுகளில் –

கூடாரத்தில் அவன் முன்னோர்களை வேண்டுவது காட்டப்படுகிறது. DISSOLVE – மாக்ஸிமஸ் திடுக்கிட்டு எழ முயற்சிக்கிறான். வட ஆப்ரிக்காவிச் சேர்ந்த  ஒருவனின் முகம் தெரிகிறது. (பின்னால் ஜூபா என்று அழைக்கப்படப்போகிறான்) 

மாக்ஸிமஸ் வண்டி ஒன்றின் அடியில் படுக்க போட்டு கட்ட வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. மாக்ஸிமஸ் காலின் மேல் குரங்கு உட்கார்ந்திருக்கிறது. ஆப்பிரிக்கன் வண்டியோடு நடந்து வருகிறான். மாக்ஸிமஸ் கையில் உள்ள காயத்தில் புழு நெளிகிறது. ‘அவர்கள் சுத்தப்படுத்திவிடுவார்கள். காத்திருந்து பார்!’ என்கிறான் ஜூபா. கற்களாலான பாதையில் கூட்டமாய் வண்டிகளுடனும், குதிரைகளுடனும் ஊர்வலம் போல் சென்று கொண்டிருக்கிறார்கள்.

மணல் பாங்கான இடத்தில் ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது – 

மாக்ஸிமஸ் களைப்புடன் திரும்பிப் பார்க்க, தாடி வைத்த ஒருவன் முறைக்கிறான். ஒவ்வொரு ஆட்களாகப் பார்க்கிறான். அரேபியர்கள் போல் இருக்கிறார்கள். 

ஜூபா: செத்துவிடாதே.. உன்னை சிங்கத்துக்கு இரையாக்கிவிடுவார்கள். நம்மை விட அவை அவர்களுக்கு உயர்ந்தது.

வாயில் இருந்து சூயிங்கம் போல் எதையோ எடுத்து அவன் காயத்தில் ஒட்டுகிறான். 

களைத்துப் போய் மீண்டும் கண்ணை மூடிக் கொள்கிறான் மாக்ஸிமஸ். 

காட்சி மாறுகிறது

வறண்ட செம்மண் நிலத்தில் உள்ள ஊருக்குள் ஊர்வலம் வந்து சேருகிறது. ZUCHHABAR, Roman Province என திரையில் காட்டப்படுகிறது.

கூட்டத்திற்கு நடுவில் கடுமையான முகமும் பச்சை நிற கண்களும் கொண்ட ப்ராக்ஸிமோ எதையோ குடித்துக் கொண்டிருக்கிறான். ‘ உனக்கு இன்று அதிர்ஷ்டம் காத்திருக்கிறது’ என்று குரல் வருகிற திசையை நோக்கி திரும்புகிறான். ப்ராக்ஸிமோ. சொன்னவன் அருகில் வந்ததும் அவனுடைய உறுப்பை பிடித்துக் கொண்டு, ‘ நீ எனக்கு விற்ற ஒட்டகச், சிவிங்கிகள், சாப்பிடவும், மேயவும் செய்கின்றன ஆனால் இணை சேரவில்லை… மொட்டை சிவிங்கிகளைக் கொடுத்து என்னை ஏமாற்றியிருக்கிறாய் என்கிறான். ‘ அவன் வழியில் துடித்தபடி, ‘ இன்று நான் கொண்டு வந்திருப்பதை முதலில் பார்த்து விடு’ என்கிறான். 

ப்ராக்ஸிமோவும், வியாபாரியும் நடந்து வருகிறார்கள். அது அடிமைகளை விற்கும் சந்தை என்பது தெரிகிறது. அந்த ஊரின் சூழல் காட்டப்படுகிறது. கருநாகம் வைத்துக் கொண்டு விளையாடி கொண்டிருக்கிறார்கள். 

ப்ராக்ஸிமோ : இவர்கள் யாரேனும் சண்டையிடுவார்களா? ஒரு போட்டி வரவிருக்கிறது 

அடிமை வியாபாரி : சிலர் நன்றாக சண்டையிடுவார்கள். சிலர் செத்துப் போவார்கள். உனக்கு இரண்டுமே நடக்க வேண்டும் இல்லையா?

ப்ராக்ஸிமோ ஜூபாவின் பற்களை சோதனையிடுகிறான். 

ப்ராக்ஸிமோ : இதற்கு முன்பு என்ன வேலை பார்த்துக் கொண்டிருந்தாய்?

ஜூபா : நான் வேட்டையாடுபவன் 

அடிமை வியாபாரி : இல்லை இல்லை. இவனை நான் உப்பு சுரங்கத்தில் இருந்து அழைத்து வந்திருக்கிறேன். 

அடிமை வியாபாரி ஜூபாவை உட்காருமாறு பதற்றமாக சொல்கிறான்.

சேற்றில் அழுக்காக அமர்ந்திருக்கும் மாக்ஸிமஸின் அருகில் ப்ராகிஸிமோ வருகிறான். மாக்ஸிமசைப் பார்த்துக் கொண்டு 

ப்ராக்ஸிமோ : வீரன் போலிருக்கிறான்..போரில் இருந்து ஓடி வந்துவிட்டானோ?.

அடிமை வியாபாரி : இருக்கலாம்..யாருக்குத் தெரியும்? இவன் ஒரு ஸ்பானியன் 

ப்ராக்ஸிமோ “ இந்த ஆறு பரையும் ஆயிரத்துக்கு வாங்குகிறேன் 

அடிமை வியாபாரி : இந்த வட ஆப்ரிக்கன் மட்டுமே இரண்டாயிரம் தேறுவான் 

ப்ராகிஸிமோ :இந்த அடிமைகள் எல்லாம் அழுகிக் கொண்டிருக்கிறார்கள் 

அடிமை வியாபாரி : அது இன்னும் வாசனையைக் கூட்டும்

ப்ராக்ஸிமோ அங்கிருந்து நடக்கத் துவங்குகிறார் 

பின்னர் பேரம் படிகிறது. 

கூண்டு வண்டி ஒன்றில் விலை பேசப்பட்ட அடிமைகள் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் போகும் வண்டியில் கம்பீரமாக போய்க் கொண்டிருக்கிறார் ப்ராக்ஸிமோ. அவர் கையில் மயில் தோகை விசிறி இருக்கிறது. ‘ சீக்கிரம் போய்த் தொலையுங்கள். என் வீட்டிற்கு போக இவ்வளவு நேரமா?’ என வண்டியோட்டிகளிடம் கத்துகிறார்.

அடிமைகள் வரிசையாக நிற்கிறார்கள். மாக்ஸிமஸ் சுற்றிலும் பார்க்கிறான். வீரர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாதி அழுகிய நிலையில் இருக்கும் சடலத்திற்கு அருகில் கழுகுகள் உட்கார்ந்திருக்கின்றன. சிங்கத்துக்கு மனித உடல் பாகங்களை உணவாக கொடுக்கின்றனர். தன்னை ப்ராக்ஸிமோ அறிமுகப்படுத்திக் கொள்கிறார். எதற்காக அவர்கள் அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள் என்பதை ப்ராக்ஸிமோ சொல்கிறார். சண்டை நடக்கிற போது கை தட்டும் சத்தம் கேட்பது தான் உங்களுக்கான உற்சாகம் என்கிறார் ப்ராக்ஸிமோ. உங்களை வணங்குகிறேன் GLADIATORS என்கிறான். ஒட்டகச் சிவிங்கிகள் நிற்பது காட்டப்படுகிறது.

அடிமைகளை பரிசோதிக்கும் இடம்  காட்டப்படுகிறது. அங்கு அடிமைகள் சண்டை செய்து கொண்டிருக்கிறார்கள். ப்ராக்ஸிமோ. அங்கு அமர்ந்து ஒவ்வொரு அடிமையின் சண்டைப் பயிற்சியைப் பார்த்து சிவப்பு, மஞ்சள் என பிரிக்கிறார் ப்ராக்ஸிமோ. 

ஜூபா அடுத்ததாக சண்டையிட வேண்டும். அவன் ஒரு மர வாளை எடுத்துக் கொள்கிறான், ஹேகன் என்பவனுடன் நன்றாக சண்டை போடுகிறான் ஜூபா. அதனைப் பார்க்கும் ப்ராக்ஸிமோ, அவனுக்கு சிவப்பு என்கிறான். ஜூபாவுக்கு சிவப்பு சாயும் பூசப்படுகிறது. அடுத்ததாக மாக்ஸிமஸ் அழைக்கப்படுகிறான். எந்த ஆர்வமுமின்றி வருகிற மாக்ஸிமஸ் தன்னுடைய வாளைக் கீழே போடுகிறான். ப்ராக்ஸிமோ கண் ஜாடை காட்டியதும் அவனை வாள் பயிற்சி செய்பவன் அடிக்கிறான். அடி தாங்கி எழுந்து நிற்கிறான் மாக்ஸிமஸ். ‘ அவனுக்கான நேரம் வரட்டும்’ என்று சொல்லி விடுகிறான் ப்ராக்ஸிமோ. வாள் பயிற்சி கொடுப்பவன் மாக்ஸிமஸைப் பார்த்து நக்கலாக சிரிக்கிறான்.

அடிமைகளின் கூடாரம் இருளும், கொஞ்சம் வெளிச்சமுமாக குகை போல் இருக்கிறது. ஜூபா ‘ நீ ஏன் சண்டை போடவில்லை. நாம் சண்டை போட்டாக வேண்டும்’ என்கிறான். மாக்ஸிமஸ் தன் தோலில் பொறிக்கப்பட்டுள்ள படைவீரனுக்கான அடையாளத்தை கூர்மையான கல் கொண்டு அழித்துக் கொண்டிருக்கிறான். அது மிகுந்த வலிமிக்கதாய் இருக்கிறது என்பது சிவந்திருக்கும் மாக்ஸிமஸ் முகத்தைப் பார்த்தால் தெரிகிறது. ஜூபா கேட்ட கேள்விக்கு மாக்ஸிமஸ் பதில் சொல்வதற்கு முன்பு “என்னால் முடியாது” என்று ஒரு குரல் கேட்கிறது.  ஜூபா திரும்பிப் பார்க்கிறான். கீழே ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். ‘நான் எழுத்தாளன். என்னால் சண்டை போட முடியாது. எனக்கு ஏழு மொழிகள் தெரியும்’ என்கிறான். ‘அப்படியென்றால் நாளைக்கு நீ ஏழு மொழிகளில் கதறுவாய்’ என்கிறான் அங்கு வரும் வாள் பயிற்சி கொடுப்பவன். மைதானத்தில் சண்டை போட யாருமே இல்லாத போது, 100 பேரைக் கொன்ற பிறகு விடுதலை கிடைக்கும் என்று சொல்லிவிட்டு செல்கிறான். “:இது உனது கடவுளரா?” என்று ஜூபா கேட்க, அந்தக் கேள்வியில் இருக்கும் முரணை நினைத்து புன்னகைக்கிறான் மாக்ஸிமஸ். “இது அவர்களை கோபப்படுத்தாதா?” என்று கேட்க, வலிக்கு நடுவிலும் கல்லைக் கொண்டு கீறிக்கொண்டே விரக்தியாக புன்னகைக்கிறான் மாக்ஸிமஸ். கையில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது  

குதிரை ஒன்றின் மேல் ரத்தம் தெளிக்கப்படுகிறது. குகைக்குள் இருந்து அடிமை கிளாடியேட்டர்கள் வருகிறார்கள். சுற்றிலும் சிவப்பு சாயம் பூசப்பட்ட தோரணங்கள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. ‘சிவப்பு – கடவுளுக்கான நிறம். நன்றாக பிரார்த்தித்துக்கொள்’ என்கிறான் ஹேகன். சுற்றிலும் மக்கள், குழந்தைகள் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாக்ஸிமஸ் போகும் வழியில் இருக்கும் காட்சிகளைப் பார்த்தபடி செல்கிறான். வெவ்வேறு இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அடிமைகள், கூண்டுக்குள் உலாவும் சிங்கங்கள் என பல்வேறு காட்சிகள் காட்டப்படுகின்றன. ப்ராக்ஸிமசிடம் ஒருவன் அடிமைகளைப் பற்றி விசாரிக்கிறான். எல்லோருடைய கவனமும் ஜூபாவின் மீது இருக்கிறது. மாக்ஸிமஸைக் காட்டி அவனைப் பற்றி விசாரிக்க, ‘அவன் ஆணும் பெண்ணுமற்றவன்’ என்கிறான் ப்ராக்சிமஸ். 

மைதானம் ஒன்று காட்டப்படுகிறது. மக்கள் கூட்டம் உற்சாகமாக கையசைத்தபடியும் ஆரவாரமாகவும் இருக்கிறார்கள். 

ப்ராக்சிமஸ் ஒரு அறையில் அடிமை க்ளாடியேட்டர்களிடம் எப்படி சாகடிக்க வேண்டுமென பேசிக் கொண்டிருக்கிறான். அவன் குரலில் உறுதி தெரிகிறது. ‘கேளுங்கள்’ என்கிறான் ப்ராக்சிமஸ். ‘Kill Kill Kill’ என்று மக்கள் கத்திக் கொண்டிருக்கிறார்கள். ‘நாம் ஏற்கனவே செத்துப் போகப் போகிறவர்கள் தான். எப்படி என்பதைத் தான் நாம் தான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் மனதில் நாம் ஆணாக நினைவில் இருக்க வேண்டும்’ என்கிறான் ப்ராக்சிமஸ். அனைவரையும் வரச் சொல்லி அழைப்பு வருகிறது. எழுத்தாளன் பயந்து போய் உட்கார்ந்திருக்கிறான். மாக்ஸிமஸ் கீழே கிடந்த மணலை எடுத்து கையில் தேய்த்துக் கொள்கிறான். மஞ்சள், சிவப்பு வீரர்களின் கை விலங்குகள் ஒன்றிணைக்கப்படுகின்றன. 

போட்டி மைதானத்தில் மக்கள் ஆரவாரம். முகமூடியும், இரும்பு கவசமும் அணிந்த சிலர் மைதானத்தில் பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருக்கிறார்கள். பெரிய மனிதர்கள் போல் இருப்பவர்கள் பெண்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

அறைக்கு உள்ளே இரண்டு இரண்டு பேராக நிற்கிறார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் உறுதி தெரிகிறது. மாக்ஸிமஸ் சலனமின்றி நிற்கிறான். கதவிற்கு வெளியே மைதானத்தில் இருந்து ஆரவார குரல்கள் கேட்கின்றன. கதவின் சின்ன இடைவெளி வழியே உள்ளே வெளிச்சம் வருகிறது. வாழ்வா, சாவா முடிவில் கதவைப் பார்த்தபடி க்ளேடியேட்டர்கள் நிற்கிறார்கள். எழுத்தாளன் முகம் உச்சக்கட்ட பயத்தில் இருக்கிறது.அவனது கை ஹேகனுடன் பிணைக்கப்பட்டுள்ளது.  எழுத்தாளன் பயத்தில் உடையிலேயே சிறுநீர் கழிக்கிறான். அவன் பின்னால் நிற்கும் மாக்ஸிமஸ் எந்த சலனமுமின்றி ஒரு அடி பின்னால் நகர்ந்து கொள்கிறான். கதவு திறக்கப்பட வெளிச்ச வெள்ளம் உள்ளே பாய்கிறது. 

உள்ளே இருந்து வந்த வீரர்களைக் கொல்வதற்கு தயாராக நிற்கிறார்கள் வீரர்கள். முதலில் வெளிவந்த அடிமை வீரர்களில் சிலர் இறந்து போகிறார்கள். இரண்டு வீரர்களின் கைகளாக கோர்க்கப்பட்டு வலது கையில் மட்டும் வாள் கொடுக்கப்பட்டிருக்கிறது. உக்கிரமான போட்டி நடக்கிறது. எழுத்தாளன் இறந்து போகிறான். அவனோடு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வாள் பயிற்சி அடிமை வீரன் சங்கிலியைத் துண்டாக்கிவிட்டு ஆவேசமாக கொன்று குவிக்கிறான். மாக்ஸிமஸும், ஜூபாவும் சேர்ந்து நிறைய பேரை ஒற்றுமையுடன், ஒத்திசைவுடன் கொல்கிறார்கள். மைதான தளத்தில் இருந்து ப்ராக்ஸிமோஸ் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். எதிரிகள் அனைவருமே கொல்லப்பட மாக்ஸிமஸும், ஜூபாவும் நிற்க, மக்கள் ஆரவாரமாக கத்துகிறார்கள். 

காட்சி மாறுகிறது

ரோமின் வீதிகளும், கட்டடங்களும், பெரிய சிலைகளும் காட்டப்படுகின்றன. மக்கள் வீதியோரங்களின் நின்று கொண்டிருக்கின்றனர். சாரட் வண்டி ஒன்றில் கமாடஸும், லுசில்லாவும் வருகிறார்கள். மக்கள் பகுதியில் இருந்து சில குரல்கள் கலவையாக கேட்கின்றன.  மக்களைப் பார்க்கிறான். அவனது வருகையை மக்கள் எதிர்ப்பது போல் இருக்கிறது. அரண்மனைப் படிக்கட்டுகளில் செனட்டர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்;. சிறுவன் லூசியஸ் நின்று கொண்டிருக்கிறான். .  அரண்மனை வளாகத்திற்குள் வருவதைப் பார்த்துவிட்டு, செனட்டர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

க்ரேஸஸ்:  எதையோ சாதித்துவிட்டது போல் வருகிறான். ஆனால் அவன் என்ன சாதித்தான்? 

ஃபால்கோ: அவனுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.. இன்னும் அவன் இளைஞன் தான்… அவன் நிச்சயம் நல்லது செய்வான் 

க்ரேஸஸ்: யாருக்கு ரோமுக்கா? உனக்கா? 

என்று சொல்ல, சாரட் வண்டி நின்று அதிலிருந்து இறங்குகிறார்கள். லூசியஸ் ஓடிப்போய் அம்மா லுசில்லாவைக் கட்டிக் கொள்கிறான். ஃபால்கோ உற்சாகமாக கமாடஸை வரவேற்கிறான். ‘உங்களது கவனத்துக்கு நிறைய விஷயங்கள் கொண்டு வர வேண்டியிருக்கிறது சீஸர்’ என்று க்ரேஸஸ் சொன்னதும் அதைக் கேட்டபடி உள்ளே போகிறான் கமாடஸ்

காட்சி மாறுகிறது 

செனட்டர்கள் கூடியிருக்கும் சபை. சுற்றிலும் இருக்க, க்ரேஸஸ் ரோமில் பரவி வரும் ப்ளேக் நோயைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். கமாடஸ் அவரது பேச்சில் உற்சாகம் இல்லாமல் இருக்கிறான். முள்ளின் மேல் உட்கார்ந்திருப்பது போல பொறுமையின்றி அமர்ந்திருக்கிறான். 

கிரேஸஸ் பேசிக்கொண்டிருக்க , இடைமறிக்கிறான் கமாடஸ்.

கமாடஸ் : என்னுடைய அப்பா என்னால் நேரமும் புத்தகம் படிப்பதிலும், தத்துவங்களை கற்றுக் கொள்வதிலுமே செலவழித்தார். செனட்டர்கள் கொண்டு வருவதை எல்லாம் படித்துக் கொண்டிருந்தார். இடையில் மக்கள் இருப்பதையே மறந்து போனார் 

கிரேஸஸ் : செனட் என்பது மக்கள் தான். மக்களிடமிருந்து  மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 

கமாடஸ் : எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் சாப்பிடுவது போலத் தான் மக்கள் எல்லாரும் நன்றாக சாப்பிடுகிறார்களா? உங்களைப் போலவே அசரடிக்கிற அழகில் மனைவியைக் கொண்டிருக்கிறார்களா? எனக்கு என் மக்களை புரிந்து கொள்ள முடியும் 

கிரேஸஸ் : பேரரசர் எங்களுக்கு அதை தங்களது மேலான அனுபவத்தின் மூலமாக நாங்கள் புரிந்து கொள்ளும்படி சொன்னால் நன்றாக இருக்கும் 

என்று சொல்ல செனட்டர்களுக்கு இடையே மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்கிறது.

கமாடஸ் : நான் இதனை அன்பு என்று சொல்வேன். இந்த மக்கள் என்னுடைய பிள்ளைகள். நான் அவர்களின் தந்தை. நான் அவர்கள் மேல் எவ்வளவு அன்புடன் இருக்கிறேன் என்பதைக் காட்டுவேன். அவர்களை என் நெஞ்சோடு அணைத்துக் கொள்வேன். 

என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கிரேஸஸ் இடைமறிக்கிறார்

கிரேஸஸ்: பிளேக்கினால் செத்துக் கொண்டிருப்பவர்களை நெஞ்சோடு அணைத் கொள்வீர்களா அரசே!

என்று கேட்க 

கமாடஸ் நிறுத்தச் சொல்கிறான். வாளினை இருகைகளிலும் தூக்கித் தலைக்குப் பின்னால் வைத்து அதில் தலை வைத்து சாய்கிறான். மெதுவாகத் திரும்பி கிரேஸசைப் பார்க்கிறான். லுசில்லா எதோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து இடைமறிக்க எழுகிறாள். எதோ நடந்துவிடும் போன்றதான நொடிகளாக இருக்கின்றன.

கமாடஸ் : மாட்டேன். ஆனால் இன்னொரு முறை இடைமறித்தால்..

என்று எச்சரிப்பது போல சொல்லிவிட்டு எழுந்து உள்ளே போகிறான்.

லுசில்லா : செனட்டர், என் தம்பி களைப்பாக இருக்கிறான். உங்களுடைய பட்டியலை என்னிடம் தாருங்கள். அரசர் ரோமுக்குத் தேவைப்படுவதைச் செய்வார்.

கிரேஸஸ்: நீங்கள் எப்போதுமே பணிவின் துணை கொண்டு பேசுகிறீர்கள் அம்மா என்கிறார்

காட்சி மாறுகிறது

மாளிகையின் உள். செனட்டில் இருந்து வருகிறாள் லுசில்லா 

கமாடஸ் : எனக்கு அறிவுரை தரும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் தந்தது?

லுசில்லா : கமாடஸ், செனட்டுக்கென ஒரு விதிமுறை உள்ளது 

கமாடஸ் : என்ன விதிமுறை? அவர்கள் செய்வதெல்லாம் பேசிக்கொண்டே இருப்பது தானே..

இனி நீயும் நானும் ரோமும் மட்டுமாக இருப்போம்…

லுசில்லா : இப்படியொரு எண்ணமே வேண்டாம் கமாடஸ். செனட் எப்போதும் இருக்கும் .

கமாடஸ் : ரோம் மாறிவிட்டது. அது தன்னை ஆள்வதற்கு பேரரசரைத் தேர்வு செய்து விட்டது 

லுசில்லா : ஆமாம். ஆனால் மக்களை அவர்களுடைய விருப்பப்படி வாழவிடு..

கமாடஸ் : கற்பனைகளோடா?

லுசில்லா :பண்பாட்டோடு 

கமாடஸ் ; என்னுடைய அப்பா அயல்நாட்டவர்களோடு போர் புரிந்து ஜெயித்தார். அதனால் எதுவும் சாதிக்கவில்லை என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். ஆனாலும் மக்கள் அவரை நேசித்தார்கள்

லுசில்லா : மக்களுக்கு எப்போதுமே வெற்றிகள் பிடிக்கும்.

கமாடஸ் : ஆனால் ஏன்? அவர்கள் போரினைப் பார்தததில்லை. அவர்கள் ஜெர்மானியாவைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

லுசில்லா : அவர்கள் ரோமினுடைய வலிமை பற்றி அக்கறை கொள்பவர்கள்.

கமாடஸ் : ரோமின் வலிமையா? அது என்ன?

லுசில்லா :  அது ஒரு சிந்தனை. வலிமை. அது ஒரு கனவு 

கமாடஸ் : மிகச்சரி அது ஒரு கனவு. நான் மக்களுக்கு ஒரு கனவினைக் காட்டுவேன். அதற்காக அவர்கள் என்னை விரும்புவார்கள். சீக்கிரத்தில் பிரசாரம் செய்யும் இந்த வயதான கிழவர்களை மறப்பார்கள். அவர்கள் வாழ்க்கையின் மாபெரும் கனவினை நான் காட்டுவேன்.

காட்சி மாறுகிறது 

பெரிய கேலரி போன்ற மைதான மினியேச்சர் வடிவில் இரண்டு சின்ன பொம்மைகளை வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான் . 

ரோம் நகரத்தின் பிரம்மாண்டம் காட்டப்படுகிறது. மினியேச்சர் வடிவ கேலரி பிரம்மாண்டமானதாக காட்டப்பட, உள்ளே விளையாட்டுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 

ரோம் வீதிகளில் க்ளாடியேட்டர் விளையாட்டுக்கான நோட்டீஸ் விநியோகம் செய்யப்படுகிறது. விளையாட்டு பார்க்க வருபவர்களுக்கு ரெட் ஒயின் வழங்கப்போவதாக யாரோ தொடர்ந்து அறிவித்துக் கொண்டே இருக்கும் குரல் கேட்கிறது. செனட்டர் காயிஸ் நோட்டீஸுடன் க்ரேஸியஸ் இருக்கும் இடத்திற்கு வருகிறார். 

காயிஸ் : விளையாட்டுகள் ! 150 நாட்களுக்கு விளையாட்டுகள் 

கிரேஸஸ்:  நான் நினைத்ததை விட புத்திசாலியாக இருக்கிறான் 

காயிஸ் : புத்திசாலியா? அவனைச் சுற்றி இருக்கும் படைவீரர்களைப் பற்றிய பயம் மட்டும் இல்லையென்றால், என்றோ மொத்த ரோமும் அவனைப் பார்த்துச் சிரித்திருக்கும் 

கிரேஸஸ் : அச்சமும், ஆச்சரியமும். மிக சக்திவாய்ந்த சேர்க்கை

காயிஸ் : இதனால் மக்கள் உண்மையிலேயே ஈர்க்கப்படுவார்களா?

கிரேஸஸ்: அவனுக்கு ரோம் என்றால் என்னவென்று தெரிந்திருக்கிறது. ரோம் என்பது கும்பல். அவர்களுக்கு முன்னால் மாயதந்திர வித்தையினைக் காட்டினால் அவர்களது கவனம் சிதறும். அவர்களுடைய சுதந்தரத்தை பறித்துக் கொண்டால் கூட அவர்கள் ஆராவாரம் செய்வார்கள். ரோமின் துடிக்கிற இதயம் என்பது செனட்டின் மார்பிள் தளத்தில் அல்ல, அவை அந்த விளையாட்டு அரங்கத்தின் மணலில் இருக்கிறது அவர்களுக்கு அவன் மரணத்தைக் கட்டுவான், அதற்காக அவர்கள் அவனை நேசிப்பார்கள்.

கிரேஸஸ் பேசப் பேச விளையாட்டு மைதானத்தின் ஆரவாரம் கேட்கிறது 

காட்சி மாறுகிறது 

ZUCCHBAR பகுதியின் மலை முகடும், விளையாட்டு அரங்கமும் (colleusem) காட்டப் படுகிறது. கூண்டுக்குள் வரிசையாக அடிமைகள் உட்கார்ந்திருக்கிறார்கள். ப்ராக்ஸிமஸ் மாக்ஸிமஸிடம், ‘பொழுது போக்காளன் நீ… எல்லோரையும் சந்தோஷப்படுத்து’ என்கிறான். SPANIARD SPANIARD என்று மக்கள் ஆரவாரம் செய்யும் ஒலி கேட்கிறது. உடனிருக்கும் அடிமைகளும் அவனை SPANIARD என்று அழைக்கிறார்கள். போட்டிக்கு போகும்போது மற்ற வீரர்கள் அவனை மரியாதையாக அனுப்பிவைக்கின்றனர். தனியாளாக நான்கு பேர்களை சமாளிக்க நிற்கிறான் மாக்ஸிமஸ். அவன் வந்து நின்றதும் மக்கள் ஆரவாரம் செய்கின்றனர். நொடிப் பொழுதில் எதிரிகளைக் கொன்றுவிட்டு கடைசி வீரனின் தலையை கோபமாக வெட்டி வீழ்த்துகிறான் மாக்ஸிமஸ். மக்கள் சந்தோஷக் கூக்குரல் எழுப்ப, கையிலிருக்கும் வாளைத் தூக்கி கேலரி பக்கம் எறிகிறான். சூழல் நிசப்தமாகிறது. ‘இது தான் உங்கள் பொழுது போக்கா? இதற்குத் தான் நீங்கள் வந்திருக்கிறீர்களா?’ என காறித் துப்புகிறான். மக்கள் ‘SPANIARD, SPANIARD’ என கத்துகின்றனர். எதிரொலி மலை முகட்டில் பரவுகிறது.  

ப்ராகிஸிமோவின் தங்குமிடம். மாக்ஸிமஸ் அவனுக்கு அருகில் இருக்கிறான்,

ப்ராகிஸிமோ : நீ இன்னும் மாபெரும் நட்சத்திரமாக மாற வேண்டும்

மாக்ஸிமஸ் : நான் கொல்ல வேண்டிய தேவை இருந்தது. அதனால் கொன்றேன். அது போதும் 

ப்ராகிஸிமோ:  அது தேசங்களை வெல்வதற்கு சரியானதாக இருக்கும். ஆனால், ரோமுக்கு அல்ல 

என்று கூண்டுக்குள் இருக்கும் கழுதைப் புலிக்கு உணவைப் போடுகிறான்.

ப்ராகிஸிமோ: இளம் பேரரசன் தன்னுடைய அப்பா மார்கஸ் அரேலியசின் வெற்றியைக் கொண்டாட தொடர் போட்டிகளை நடத்த நினைக்கிறான். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாம் தெரிந்த மார்கஸ், அரேலியஸ் தான் இதனை நிறுத்தி வைத்திருந்தார். ப்ளேக் கிராமங்களில் பரவியிருக்கிறது. இப்போது ஐந்தாண்டுகளுக்குப் பிறகு எங்கு தொடங்கினோமோ அங்கு செல்கிறோம். ரோமுக்குப் போகிறோம். Spaniard, நீ ரோமைப் பார்க்க வேண்டும். 50,000 ரோமானியர்கள் உன்னுடைய ஒவ்வொரு வாள்சுழற்சியையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நீ ஒருவனை வீழ்த்தியதும் அமைதி எழும். அடுத்த நொடி, ஆரவாரம் வெடிக்கும். அது தனது குரலை உயர்த்தி கொண்டே போகும். ஒரு புயல் போல, சூறாவளியைப் போல..நீ தான் அப்போது இடியின் கடவுளாக இருப்பாய் 

மாக்ஸிமஸ் : நீங்கள் கிளேடியேட்டராக இருந்தீர்களா?

ப்ராகிஸிமோ: ஆமாம். இருந்தேன் 

என்று சொல்லும்போது கடந்த காலத்தின் பெருமைமிகு தருணங்களை ப்ராகிஸிமோ நினைக்கிறார் என்பது அவரது பரபரப்பில் தெரிகிறது

மாக்ஸிமஸ் : நீங்கள் உங்கள் விடுதலையைப் பெற்றீர்களா?

ப்ராகிஸிமோ: முன்பொரு முறை பேரரசர் மார்கஸ் அரேலியஸ் என்னிடம் ஒரு மரத்திலான வாளைக் கொடுத்தார். அது விடுதலைக்கான அடையாளம். அவர் ஒருமுறை என் தோளைத் தொட்டார். நான் சுதந்திரமானவனானேன்.

மாக்ஸிமஸ் சிரித்துக் கொண்டே சந்தேகத்தில் கேட்கிறான்.

மாக்ஸிமஸ் : உங்களுக்கு மார்க்ஸ் அரேலியசைத் தெரியுமா?

ப்ராகிஸிமோ :அவரைத் தெரியும் என்று நான் சொல்லவில்லை. அவர் என் தோளைத் தொட்டார் என்று சொன்னேன்

மாக்ஸிமஸ் ப்ராகிஸிமோவின் அருகில் வந்து குரலைத் தாழ்த்திப் பேசுகிறான்.

மாக்ஸிமஸ் : எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டீர்கள். எனக்கு  உங்களைப் போல பேரரசரின் முன்னால் சென்று நிற்க வேண்டும் 

இடது புருவத்தை மேலே தூக்கி 

ப்ராகிஸிமோ : அப்படியானால் நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நான் எல்லாரையும் சீக்கிரமாகக் கொண்டு குவித்ததால் சிறந்தவனாகவில்லை. கூட்டத்திற்கு என்னைப் பிடித்ததால் சிறந்தவனாக இருந்தேன்.

கூட்டத்தை ஜெயித்துவிடு. உன்னுடைய விடுதலையை ஜெயிக்கலாம்

மாக்ஸிமஸ் ஒரு போர் வீரனைப் போல நேராக நிமர்ந்து நிற்கிறான் பிறகு தளர்கிறான். (அவன் மனதில் குடும்பத்தை இழந்தபின் கிடைக்கிற விடுதலையால் என்ன பயன் என்கிற  கேள்வி எழுந்திருக்கலாம் )  

மாக்ஸிமஸ் : நான் கூட்டத்தை ஜெயிப்பேன். அவர்கள் அதுவரை கண்டிராத ஒன்றைக் கட்டுவேன். 

ப்ராகிஸிமோ சந்தோஷப்படுகிறார். 

மாக்ஸிமஸுக்கு பாதுகாப்பு கவசத்தைத்  தருகிறார் பிராக்ஸிமோ. ,மாக்ஸிமஸ் அங்கிருந்து செல்ல, ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறான். மகிழ்ச்சியில் தோளைத் தூக்கிக் கொண்டிருக்கிறார் ப்ராகிஸிமோ.

காட்சி மாறுகிறது

மொட்டைமாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் மாக்ஸிமஸ் மற்றும் ஜூபா. இருவரும் மட்டும் அங்கே இருக்கிறார்கள்

ஜூபா : எங்கோ ஓரிடத்தில் என்னுடைய நாடு என்னுடைய வீடு இருக்கிறது. என்னுடைய மனைவி உணவு தயாரித்து கொண்டிருப்பாள். எனது மகள் ஆற்றில் தண்ணீர் எடுத்து வருவாள். நான் அவர்களை மறுபடியும் பார்ப்பேனா? எனக்குத் தோன்றவில்லை 

மாக்ஸிமஸ் : இறந்தபிறகு அவர்களை மீண்டும் பார்ப்போமென்று சொல்வதில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?

ஜூபா : அப்படித் தான் நினைக்கிறேன் அப்படித் தான என்றலும் கூட நான் சீக்கிரம் செத்துப் போய்விடுவேன். அவர்கள் பல வருடங்களுக்கு சாக மாட்டார்கள். நான் அங்கும் காத்திருக்க வேண்டும்

மாக்ஸிமஸ் : என்னுடைய மனைவியும், மகனும் எனக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஜூபா : நீ அவர்களைத் திரும்பப் பார்ப்பாய். ஆனால இப்போதைக்கு இல்லை 

என்று மாக்ஸிமஸின் கையைத் தன் கையோடு இணைத்துக் கொள்கிறான் 

காட்சி மாறுகிறது 

மழை வரப் போகும் அறிகுறி காட்டும் மேகம்- சூரியன் உதயம்- மேகங்கள் உலாவுகின்றன-

வயல்வெளியின் நடுவே இரு குழந்தைகள் ஓடி வருகின்றனர். சாலை மேல் வண்டிகள் போகின்றன. ரோம் நகரம் தெரிகிறது. ரோம் நகர வீதிகளில் வண்டிகள் வந்து கொண்டிருக்கின்றன. 

க்ளாடியேட்டர்கள் தங்குமிடத்திற்கு வண்டி வருகிறது. கதவுத் திறந்துவிடப்பட, வண்டிக்குள் இருந்து மாக்ஸிமஸ் மற்றும் ஜூபா இறங்குகிறார்கள். மற்ற க்ளாடியேட்டர்களும் இறங்குகிறார்கள். பிராக்ஸிமஸ் அங்கிருக்கும் மார்கஸ் சிலையைத் தொட்டு முத்தமிடுகிறான். “மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி எனது பழைய நண்பரே..எனக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுங்கள்” என்கிறார். மாக்ஸிமஸ் மற்றும் ஜூபோ எதையோ அண்ணாந்து பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். பிரமாண்டமான அரங்கம் தெரிகிறது. ‘

ஜூபா :இதற்கு முன் இப்படிப் பார்த்திருக்கிறாயா?’ இது மனிதர்கள் கட்டிய மாதிரி தெரியவில்லை

ப்ராகிஸிமோ இவர்களைக் கடந்து செல்கையில் மாக்ஸிமசைப் பார்த்து “கூட்டத்தை வெல்” என்று சொல்லிச் செல்கிறார் 

காட்சி மாறுகிறது

OUT OF FOCUS ஒரு முகம் தெரிகிறது. FOCUS ஆகிற போது அது கமாடஸ் எனத் தெரிகிறது. அவன் குனிந்து தூங்கிக் கொண்டிருக்கும் லூசியஸைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். இதைப் பார்த்தபடி அங்கு வருகிறாள் லுசில்லா. 

கமாடஸ் : இவன் நன்றாகத் தூங்குகிறான். ஏனெனில் அவன் விரும்பப்படுகிறான் 

லுசில்லா அங்கிருந்து கமாடஸை அழைத்துச் செல்கிறாள். 

கமாடஸ் : நான் ரோமினை காலத்துக்கும் வியக்கும்படி மாற்றுவேன். இதனை கிரேஸஸும் அவரது நண்பர்களும் புரிந்து கொள்ளவில்லை. என்னுடைய ஆசைகள் எல்லாம் என் தலைக்குள் துண்டு துண்டாக சிதறிக் கிடக்கின்றன. 

அவனுக்கு மருந்து கலந்து கொடுக்கிறாள். 

லுசில்லா : கமாடஸ் இந்த மருந்தைக் குடி 

கமாடஸ் : நமது அப்பாவுக்கான கொண்டாட்டம் நடக்கிறபோதே செனட்டைக் கலைக்கும் உத்தரவினையும் இடப்போகிறேன். இது சரியான நேரம் தானா என்று சொல். மக்கள் இதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்களா?

லுசிலா : இப்போது நீ ஓய்வெடுக்கும் நேரம் 

கமாடஸ்:  நீ என்னுடன் தங்கி இருப்பாயா?

லுசில்லா : இன்னும் இருட்டைப் பார்த்து பயப்படுகிறாயா? 

கமாடஸ் : எப்போதுமே 

லுசில்லா : என்னால் இங்கே தங்க முடியாது

கமாடஸ் : சரி முத்தமிடு 

அவள் அவனது நெற்றியில்  முத்தமிடுகிறாள். 

லுசில்லா : தூங்கு தம்பி 

என்று சொல்லிவிட்டு அவன் கேட்டபடி  நெற்றியில் முத்தமிட்டு விட்டு அங்கிருந்து செல்கிறாள். அவள் போனதும் கமாடஸ் மெலிதாக சிரித்துக் கொள்கிறான் . 

காட்சி மாறுகிறது

தீவர்த்திகளுடன் சிலர் இருட்டில் சென்று கொண்டிருக்கிறார்கள். கதவைத் தட்டுகிறார்கள். கிரேஸியஸ் கதவைத் திறக்க, வந்திருப்பது லுசில்லா எனத் தெரிகிறது. கிரேஸியஸ், லுசில்லா, காயிஸ் மூவரும் ரோமின் எதிர்காலம் பற்றியும், கமாடஸின் நடவடிக்கைகள் குறித்தும் பேசுகிறார்கள். லூசியஸை  ஏதாவது செய்துவிடுவானோ எனப் பயப்படுகிறாள் சிசிலஸ். கமாடஸைக் கொள்வது மட்டும் தான் தீர்வு என்கிறாள், ‘இப்போது ரோம் மக்கள் அவன் பக்கம். கொஞ்சம் நாளில் அவனுக்கு எதிரிகள் அதிகமாவார்கள். இப்போது நமது பேச்சு வலுவில்லாத காற்று மட்டும் தான். அதனால் அமைதியாக பொறுமையாக, வன்மத்துடன் காத்திருப்போம்’ என்கிறார் கிரேஸஸ். 

மாக்ஸிமஸ், ஜூபா மற்றும் கிளாடியேட்டர்கள் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். மாக்ஸிமஸின் கவனம் முழுக்க பிரம்மாண்ட colleasum மேலேயே இருக்கிறது.யார் ஜெயிப்பார்கள் என அங்கங்கே கும்பலாக நின்று பந்தயம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  ப்ராக்ஸிமோ மற்றும் கேசியஸ் நடக்கப்போகும் போட்டி குறித்து விவாதித்தபடி வருகிறார்கள். 

ப்ராகிஸிமோ: பேரரசுக்கு சண்டை போட வேண்டும் என்பதற்காக என்னுடைய சிறந்த வீரர்களை இழக்க முடியாது 

கேசியஸ் : மக்கள் கூட்டத்துக்கு சண்டைகள் வேண்டும். அதனால் பேரரசர் அவர்களுக்கு சண்டைகளைக் காண்பிக்கிறார். கதார்ஜ் போரினை நீ பார்க்கப் போகிறாய்.

ப்ராகிஸிமோ : கதார்ஜ் படுகொலையா? சிறையில் இருக்கும் திருடர்களையும் பிச்சைக்காரர்களையும் இதற்கு அழைத்து வந்திருக்கலாம் 

கேசியஸ் : அதையும் நாங்கள் செய்தோம்

ப்ராகிஸிமோ : இந்த சாம்ராஜயத்துக்காக சிறந்த கிளாடியேட்டர்களைத் தர வேண்டும் என்றால் எனக்கு ஒப்பந்தக் கூலியை இருமடங்கு உயர்த்திக் கொடுக்க வேண்டும் 

கேசியஸ் : ஒப்பந்தக் கூலியை உயர்த்த முடியாது. பிடிவாதம் செய்தால், ஒப்பந்தம் ரத்தாகும். உனக்குப் பிடிக்கவில்லை என்றால் போய்விடு. போய் எங்கிருந்து வந்தாயோ அந்த சேற்றுக் குழியில் விழுந்து கிட

என்று சொல்ல இது ப்ரோக்ஸிமஸை காயப்படுத்துகிறது. அவன் முகம் மாறுகிறது

காட்சி மாறுகிறது

லூசியஸ் அடிமைகள் இருக்கும் இடத்திற்கு வருகிறான். சிறை போன்ற அறைக்குள்  இருந்து அவனையேப் பார்த்துக் கொண்டிருக்கிறான் மாக்ஸிமஸ். லூசியஸ் மாக்ஸிமஸை விரலசைத்து அழைக்கிறான்.  சின்ன சிரிப்புடன் எழுந்து போகிறான் மாக்ஸிமஸ். 

லூசியஸ் :‘ நீ தான் எல்லோரும் சொல்கிற ஸ்பார்னியடா?’ 

எனக் கேட்க 

மாக்ஸிமஸ் : ‘ஆமாம்’ 

லூசியஸ் : நீ ஒரு ராட்சசன் என்கிறார்கள். ஒருவர் மண்டையையே உன் கையால் உடைத்து விடுவாயாம்..

மாக்ஸிமஸ் : இல்லை..ஒரு சிறுவனுடைய மண்டையை 

என்று கிண்டலுடன் சொல்கிறான்

லூசியஸ் : ‘உங்கள் நாட்டில் குதிரைகள் இருக்கிறதா?’ 

என்று  கவசத்தில் உள்ள இரண்டு குதிரை சின்னங்களைப் பார்த்துக் கேட்கிறான். 

மாக்ஸிமஸ் : இவை இரண்டும் என்னுடைய குதிரைகள். என்னிடமிருந்து எடுத்துச் சென்று விட்டார்கள்’ 

என்று சொல்லும் போதே மாக்ஸிமஸ் முகத்தில் துயரம் படிகிறது. 

லூசியஸ் : உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. உனக்காக நான் உற்சாகப்படுத்துவேன்’

மாக்ஸிமஸ் : போட்டி விளையாட்டுகளைப் பார்க்க உன்னை அனுமதிப்பார்களா?

லூசியஸ் : அது என்னை வீரமிக்கவனாக்கும் என என் மாமா சொன்னார்

மாக்ஸிமஸ் : உன்னுடைய அப்பா என்ன சொன்னார்?

லூசியஸ் : என் அப்பா உயிரோடு இல்லை 

அப்போது உடன் வந்த பாதுகாவலர் ‘மாஸ்டர் லூசியஸ் நேரமாகிவிட்டது’ என்கிறார் 

லூசியஸ் : நான் கிளம்ப வேண்டும் 

மாக்ஸிமஸ்  : உன் பேர் லூசியஸா?

லூசியஸ் : லூசியஸ் வேராஸ். என் அப்பாவுக்குப் பிறகு கிடைத்த பெயர் அது.

சட்டென்று சுதாரிக்கும் மாக்ஸிமஸ், வேறு யாரேனும் அங்கு இருக்கிறார்களா என சந்தேகத்துடன் சுற்றும் முற்றும் பார்க்கிறான்..

அறையின் பின்பக்கத்துக்கு நகர்ந்து கொள்கிறான். 

காட்சி மாறுகிறது

விளையாட்டு நடக்கும் இடம் 

அடிமைகள் அறையில் போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அனைவருக்கும் முகமூடியும் கவசங்களும், ஈட்டிகளும் தரப்படுகின்றன. மாக்ஸிமஸ் முழுவதும் முகம் மறைக்கப்பட்ட கண்கள் மட்டும் வெளியே தெரிகின்ற ஒரு முகமூடியைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்கிறான் 

‘சக்கரவர்த்தி வந்ததும் உங்கள் வாளை உயர்த்துங்கள். அவருக்கு முதுகு காட்டக்கூடாது. போய் மரியாதையுடன் மரணியுங்கள் என்று சொல்லி அனுப்பப்படுகிறார்கள். 

 colleuseum முழுக்க மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள். மாக்ஸிமஸ் மற்றும் மற்ற கிளாடியேட்டர்கள் மைதானத்தையும் சுற்றிலும் ஆர்ப்பரிக்கும் மக்களையும் பார்க்கிறார்கள். 

கேசியஸ் அறிவிப்பாளராக அறிவிப்புகள் தந்துகொண்டிருக்கிறான் 

கமாடஸ், லுசில்லா, லூசியஸ் சீசருக்கென ஒதுக்கப்பட்ட இடத்துக்கு வருகிறார்கள். 

கமாடஸின் புகழாரங்களை கேசியஸ் பேசிக் கொண்டிருக்கிறான். 

மைதானத்தில் க்ளாடியேட்டர்கள் நிற்கிறார்கள். 

மாக்ஸிமஸ் : யாரேனும் இங்கே போர்ப் படையில் இருந்தீர்களா?

ஒருவர் : ஆம் 

மற்றொருவர்  : விந்தோபோனாவில் நான் உங்களுடன் பணியாற்றியிருக்கிறேன் 

மாக்ஸிமஸ் : நீங்கள் எனக்கு உதவ முடியும்

இந்தக் கதவுகளுக்குப் பின்னால் இருந்து எது வந்தாலும் நாம் இணைந்து இருந்தால் அதனை எதிர்கொண்டு பிழைத்திருக்கலாம் புரிகிறதா?

ஒன்றாய் இருந்தால் பிழைக்கலாம் 

கதவுத் திறக்கப்பட நான்கு பக்கங்களில் இருந்தும் குதிரை வண்டிகள் வருகின்றன. வண்டிச் சக்கரங்களில் நீளமான கம்பிகள் இருக்கின்றன. 

மாக்ஸிமஸ் கட்டளை இட்டுக் கொண்டே இருக்கிறான். சில க்ளேடியட்டர்கள் அம்புகள் பட்டு இறந்து போகிறார்கள். மாக்ஸிமஸ் ‘வைரம்’’ என்று கத்துகிறான். சட்டென்று கேடயத்தை முன்னால் வைத்து எல்லோரும் குனிந்து அமர்ந்து கொள்கிறார்கள். வண்டிச்சக்கரத்தில் இருக்கும் கம்பியால் அவர்களை ஒன்றும் செய்ய இயலவில்லை. 

ஹேகனின் கால் தசையில் அம்பு துளைக்கிறது. குதிரை வண்டி அவனை நோக்கி வருகிறது. ஹேகனுக்கு என்ன செய்வது எங்கு போவது என்று தெரியவில்லை. மாக்ஸிமஸ் அவன் பேரைச் சொல்லிக் கத்துகிறான். அவன் நகராமல் இருக்க, மாக்ஸிமஸ் ஓடிப்போய் அவனைத் தள்ளி தானும் கீழே விழுகிறான். குதிரை வண்டி அவர்களைக் கடந்து செல்கிறது. 

எந்த நொடியையும் தாமதிக்காதுகட்டளைகளை இட்டுக் கொண்டே இருக்கிறான்.  “ரதத்தை நோக்கி வரிசை காட்டுங்கள்…என்னோடு கூடவே இருங்கள் என்கிறான் மாக்ஸிமஸ். 

மாக்ஸிமஸ் குதிரை வண்டியைக் கீழே தள்ளி ஒரு குதிரையின் மீது ஏறுகிறான். அடுத்தடுத்து கட்டளைகளைத் தந்து கொண்டே இருக்கிறான். தாக்குகிறான். தாக்க வந்தவர்கள் கீழே விழுகிறார்கள், 

இவை எல்லாவற்றையும் அரியணையில் அமர்ந்து  பார்த்துக் கொண்டிருக்கிறான் கமாடஸ். சிறுவன் போல குதூகலிக்கிறான். நாக்கை வெளியே நீட்டுகிறான். அவனது வாய் திறந்தே இருக்கிறது.  

கமாடஸ் தன்னருகில் நிற்கும் கேசியஸிடம் ,

கமாடஸ் : யார் இது ? 

கேசியஸ் : அவனை ஸ்பானியர்ட் என்று அழைக்கிறார்கள்

கமாடஸ் : நான் அவனை சந்திக்க வேண்டும் 

கேசியஸ் : நிச்சயமாக

போட்டி மைதானத்தில் ரோமானிய வீரர்கள் வந்து நிற்கிறார்கள். கிளாடியேட்டர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தயாராகிறார்கள். 

ரோமானிய வீரன் : உங்கள் ஆயுதங்களைக் கீழே போடுங்கள் 

மாக்ஸிமஸ் தலையாட்ட ஆயுதங்களை மற்ற கிளாடியேட்டர்கள் கீழே போடுகிறார்கள்.

ரோமானிய வீரன் : கிளாடியேட்டர் , பேரரசர் உன்னைப் பார்க்க விரும்புகிறார் 

மாக்சியம்ஸ் : பேரசரர் கட்டளைக்கிணங்க 

என்று சொல்ல கமாடஸ் மைதானத்துக்குள் வருகிறான்

மாக்ஸிமஸ் அங்கே கிடக்கும் உடைந்த அம்பு ஒன்றினைப் பார்க்கிறான். மண்டியிடுவது போல குனிந்து அந்த அம்பினை எடுத்து வைத்துக் கொள்கிறான்.

மற்ற கிளாடியேட்டர்களும் மண்டியிடுகிறார்கள்.  அம்பினைக் கையில் எடுக்க, கமாடஸுடன் சிறுவன் லூசியா ஓடிவந்து இணைந்து கொள்கிறான் அவனைப் பார்க்கும் மாக்ஸிமஸ். அம்பினைத் தன் கைக்குள் மறைத்துக் கொள்கிறான்.  

கமாடஸ் மாக்ஸிமஸ் அருகில் வந்து நின்று 

கமாடஸ் : ஸ்பானியர்ட் , உனக்குக் கிடைத்திருக்கிற புகழ் தகுதியானதே..

வேறு எந்த கிளாடியேட்டரும் உனக்கு இணையாக முடியாது. இந்த இளைஞன் சொல்கிறான் நீ ஹெக்டரின் மறுபிறவியாம்..அல்லது ஹெர்குலஸ் என்கிறான் லுசியாவைக் கையில் பிடித்துக் கொண்டு 

கமாடஸ் : நீ ஏன் உன்னுடைய உண்மையான பெயரைச் சொல்லக்கூடாது? உனக்குப் பேர் இருக்கும் இல்லையா?

மாக்ஸிமஸ் : என் பெயர் கிளாடியேட்டர் 

மாக்ஸிமஸ் மெதுவாகத் திரும்ப மற்ற கிளாடியேட்டர்களுடன் நடக்கத் துவங்குகிறான்.

கமாடஸ் : எவ்வளவு தைரியம் எனக்கு முதுகைக் காட்டி செல்கிறாய் உன்னுடைய தலைக்கவசத்தை கழற்றி உன் பெயரைச் சொல் 

மாக்ஸிமஸ் நிற்கிறான்.

ரோமானிய வீரர்கள் தயாராக நிற்கிறார்கள். 

ஆயுதம் ஏதுமற்ற கிளாடியேட்டர்கள் மாக்ஸிமஸுடன் இணைந்து சண்டையிட தயாராவது போல நிற்கிறார்கள். மாக்ஸிமஸ் நிற்கிறான். ஆழ்ந்த பெருமூச்சினை விடுகிறான். தனது தலைக்கவசத்தை நீக்குகிறான். கமாடஸை நோக்கித் திரும்புகிறான்

மாக்ஸிமஸ் : என் பேர் மாக்ஸிமஸ் டெஸிமஸ் மெரிடியஸ். வட இராணுவத்தின் கமாண்டர். ஃபெலிக்ஸ் படையின் தளபதி. உண்மையான பேரரசனான மார்கஸ் அரேலியசின் நம்பிக்கைக்குரிய தளபதி. கொலை செய்யப்பட்ட மகனின் தந்தை, கொலை செய்யப்பட்ட மனைவியின் கணவன். அதற்கு இந்த ஜென்மத்திலோ அடுத்த ஜென்மத்திலோ பழி வாங்கப் போகிறவன் 

கமாடஸ் அதிர்ச்சியில் பேச முடியாமல் நிற்கிறான். லுசில்லா மாக்ஸிமசைக் கண்டதும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் எழுந்து நிற்கிறாள் 

க்விண்டஸ் தயாராகிறான். கமாடஸ் க்விண்டசை நோக்கித் திரும்புகிறான். கிவிண்டஸ் ‘தயார்’ என்று சொல்ல, வீரர்கள் வாட்களை உருவுகிறார்கள். 

மக்கள் ஆராவரம் செய்கிறார்கள்.   மாக்ஸிமசை கமாடஸ் கொள்ள நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்டு Live Live’ என்று கத்துகிறார்கள். ஒரே குரலில் எங்கும் Live என்கிற வார்த்தை ஒலிக்கிறது. மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்ததை கமாடஸால் நம்ப முடியவில்லை. அவர்களைப் பார்க்கிறான். ‘ஷ்..ஷ்’ என்கிறான் உதட்டில் கையை வைத்தபடி மக்கள் கத்திக் கொண்டே இருக்கிறார்கள். கையினை மேலே கொண்டு போகிறான். கட்டை விரலைக் காட்டி தம்ஸ் அப் செய்கிறான். முகம் மட்டும் வன்மத்தோடு இருக்கிறது. மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள். கமாடஸ் அங்கிருந்து செல்கிறான்

க்விண்டசைப் பார்த்து தன் நெஞ்சில் கையை வைத்து சைகை போலச் செய்கிறான் மாக்ஸிமஸ். க்விண்டஸ் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து செல்கிறான்.

மாக்ஸிமஸ் தன் கையை உயர்த்த மக்கள் இன்னும் ஆரவாரம் செய்கிறார்கள். 

மாக்ஸிமஸும் கிளாடியேட்டரும் உள்ளே செல்லும் வரை மக்கள் குரல் அடங்காமல்  ஆரவாரம் செய்தபடி இருக்கிறது. 

அடிமைகள் கூடாரத்தில் இருக்கும் அடிமை கிளாடியேட்டர்கள் வென்றுவிட்டு வரும் மாக்ஸிமஸையும் அவனது நண்பர்களையும் வரவேற்கிறார்கள்.  ‘மாக்ஸிமஸ், மாக்ஸிமஸ்’ என்று உற்சாகமாகக் கத்துகிறார்கள்.

காட்சி மாறுகிறது

கமாடஸ் கையில் தீவர்த்தியுடன் தனியாக எங்கோ படியிறங்கி வருகிறான். அவன் வந்து நிற்கும் இடம் ஒரு சிற்ப கூடாரம். ஒரு சிற்பத்தின் முன்னால் போய் நிற்கிறான். ‘அப்பா’ என்று கூப்பிடுகிறான். கீழே இருந்து ஒரு வாளை எடுத்து மார்கஸ் அரேலியஸின் சிற்பத்தை தாறுமாறாக வெட்டுகிறான். கோபம் குறைந்ததும் அழுதுகொண்டே கட்டிப்பிடித்துக் கொண்டு அழுகிறான்.   

காட்சி மாறுகிறது 

ஒரு அறையில் உட்கார்ந்து காகிதங்களில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறான் கமாடஸ். லுசில்லா அங்கே வருகிறாள். , அவள் வந்து நின்றதும், அவளை நிமிர்ந்து பார்க்காமல்,

 கமாடஸ் : அவனைப் பார்த்ததும் உனக்கு எப்படி இருந்தது?

லுசில்லா : எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.

கமாடஸ் : அவன் உன்னை மிகவும் காயப்படுத்தியிருக்கிறான் இல்லையா?

லுசில்லா : அவனை நான் காயப்படுத்தியதைக் காட்டிலுமா?

கமாடஸ் : எப்படி அவன் உயிரோடிருக்கிறான்? அவன் இறந்து விட்டான் என என்னிடம் பொய் சொன்னார்கள். என்னிடம் பொய் சொல்பவர்களுக்கு எப்படி என் மேல் மரியாதை இருக்கும்? மரியாதை இல்லையென்றால் எப்படி அன்பு இருக்கும்’… 

லுசில்லா : உன்னுடைய வீரர்களுக்கு துரோகத்துக்கான தண்டனை என்னவென்பதைக் காட்டு.

கமாடஸ் : நான் உனது எதிரியாக விரும்பவில்லை சகோதரி 

லுசில்லா : அடுத்து என்ன செய்யப் போகிறாய்?

கமாடஸ் சாய்ந்து உட்காருகிறான். அவளையேப் பார்க்கிறான். உதட்டில் கைவைத்து ‘ஷ்..ஷ் ஷ்..’ என்கிறான் 

காட்சி மாறுகிறது

கிளாடியேட்டர்கள் இருக்கும் சிறை. மாக்ஸிமசை மட்டும் அழைத்து வந்து தனியாக ஓரிடத்தில் அமரச் சொல்கிறார்கள். அங்கு அவனை சங்கிலியால் பிணைக்கிறார்கள். பாதுகாவலர்கள் அங்கிருந்து செல்ல இருட்டான மூலையில் இருந்து வெளிப்படுகிறாள் லுசில்லா.

லுசில்லா : தைரியமிக்க வெற்றி வீர்ர்களால் மகிழ்ச்சியடைவதற்கு செல்வசெழிப்புமிக்க தாதிகள் பணம் செலுத்துகிறார்கள்

மாக்ஸிமஸ் : உன்னுடைய சகோதரன் கொலைகாரர்களை அனுப்புவான் என்று தெரியும். ஆனால் அவனுடைய சிறந்த கொலையாளியை அனுப்புவான் என நினைக்கவில்லை.

லுசில்லா : மாக்ஸிமஸ், அவனுக்குத் தெரியாது

மாக்ஸிமஸ் : என்னுடைய குடும்பமே உயிரோடு கொளுத்தப்பட்டார்கள்

லுசில்லா : எனக்கு அது பற்றி எதுவுமே தெரியாது

மாக்ஸிமஸ் : பொய் சொல்லாதே

லுசில்லா : நான் அவர்களுக்காக அழுதேன்

மாக்ஸிமஸ் சட்டென்று அவளருகில் சென்று அவள் கழுத்தைப் பிடிக்கிறான் 

மாக்ஸிமஸ்: உன் அப்பாவுக்காக அழுதது போலவா? உன் அப்பாவுக்காக?

லுசில்லா : அன்றிலிருந்து நான் அச்சத்தின் சிறையில் வாழ்கிறேன். என் சகோதரனுக்கு பயந்து என்னால் என் அப்பாவுக்காக துக்கம் அனுஷ்டிக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் பயத்தில் வாழ்கிறேன், ஏனென்றால் எனது மகன் தான் நாளை அரியணையில் ஏறப்போகிறவன்..நான் அழுதேன் 

மாக்ஸிமஸ் : எனது மகன் அப்பாவி 

லுசில்லா : என்னுடைய மகனும் தான். நீ என்னை நம்ப வேண்டும் என்றால் அவனும் சாக வேண்டுமா?

என்றதும் மாக்ஸிமஸ் தன் கையை அவளது கழுத்தில் இருந்து எடுக்கிறான்

மாக்ஸிமஸ் : நான் ஏன் உன்னை நம்பவும், நம்பாமலும் இருக்க வேண்டும்? அதனால் என்ன பயன்?

லுசில்லா : கடவுளர் தான் உன்னைக் காப்பாற்றியிருக்கிறார்கள். இன்றைக்கு நான் பேரரசரை விட மிகவும் சக்தி வாய்ந்த ஒரு அடிமையைப் பார்த்தேன். 

மாக்ஸிமஸ் : கடவுளர் என்னைக் காப்பாற்றினார்களா? கூட்டத்தை சந்தோஷப்படுத்த அவர்கள் என்னைக் கருணையுடன் விட்டு வைத்திருந்தார்கள். 

லுசில்லா : அது தான் அதிகாரம். அந்தக் கூட்டம் தான் ரோம். கமாடஸ் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவான். நான் சொல்வதைக் கவனி. என்னுடைய சகோதரனுக்கு எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் அநேகமும் செனட்டர்கள். ஆனால், மக்கள் அவனைப் பின்பற்றத் தொடங்கினால் யாரும் அவனை எதிர்க்க முடியாது…நீயும் கூட 

மாக்ஸிமஸ்: அவர்கள் அவனை எதிர்க்கிறார்கள். ஆனாலும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்

லுசில்லா : சில அரசியல்வாதிகள் ரோமுக்காகவே தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். அவர்களின் ஒருவர் இருக்கிறார். நான் ஏற்பாடு செய்தால், நீ அவரை சந்திப்பாயா?

மாக்ஸிமஸ்: உனக்குப் புரியவில்லையா? நான் இன்று இரவு சிறையிலோ நாளை மைதானத்திலோ கொல்லப்படப்போகிறேன். நான் ஒரு அடிமை! என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய்?

லுசில்லா : நான் சொல்லும் மனிதர் என்ன வேண்டும் என்று சொல்வார்.

மாக்ஸிமஸ் : சரி அவரை வைத்து கமாடஸை கொன்றுவிடு 

லுசில்லா : எனக்கு ஒரு மனிதரைத் தெரியும். அவர் நேர்மையானவர். கொள்கைக்காக வாழ்பவர். அவருக்கு என்னுடைய அப்பாவைப் பிடிக்கும், அப்பாவுக்கும் அவரைப் பிடிக்கும். அந்த மனிதர் ரோமுக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் 

மாக்ஸிமஸ் : அந்த மனிதன் செத்துவிட்டான். உன்னுடைய சகோதரன் அவன் வேலையை நன்றாக செய்துவிட்டான்.

லுசில்லா : நான் உனக்கு உதவுகிறேன் 

மாக்ஸிமஸ் (ரகசியம் பேசும் குரலில் ) : ஆமாம். நீ எனக்கு உதவ முடியும். உனக்கு என்னைத் தெரியும் என்பதையே மறந்துவிடு. திரும்ப வராதே. 

பாதுலாவலரே! இந்தப் பெண் என்னுடன் பேசிமுடித்துவிட்டாள்.

லுசில்லாவின் கண்கள் கலங்குகின்றன. மாக்ஸிமசையே கையறு நிலையில் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

காட்சி மாறுகிறது

அடிமை வீரர்கல் தங்கியிருக்கும் இடம். சிலர் கருநாகத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 

மாக்ஸிமஸ், ஜூபா, ஹேகன் மூவரும் ஓரிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஜூபா ரொட்டியும், பீன்சும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். 

ஹேகன்  : நீ படைகளை வழி நடத்தி சென்றிருக்கிறாயா?’ நிறைய வெற்றிகளைப் பெற்றிருப்பாயே?

மாக்ஸிமஸ் : ஆம் 

ஹேகன் : ஜெர்மானியாவிலா?

மாக்ஸிமஸ் : நிறைய நாடுகளில்

அப்போது சமையல் செய்பவர் ‘ஜெனரல்’ என அழைக்க மாக்ஸிமஸ் திரும்பிப் பார்க்கிறான். மாச்ஸிமஸுக்கு தட்டு நிறைய பீன்ஸ் தருகிறார். மாக்ஸிமஸ் அதை வாங்கிக் கொண்டு தனது மேஜைக்கு வருகிறார்.  சாப்பிடாதே’ என்பது போல் சைகை காட்டுகிறான் ஜூபா. ஹேகன் இதைப் பார்த்துவிட்டு மாக்ஸிமஸ் தட்டிலிருந்து உணவை எடுத்து ஒரு வாய் சாப்பிட்டு விட்டு மூச்சுத் திணறுவது போல செய்கிறான். மாக்ஸிமஸ் பதற்றத்துடன் பார்க்க, ஹேகன் சிரிக்கிறான். அவன் நடிப்பைப் பார்த்து மாக்ஸிமஸும், ஜூபாவும் சிரிக்கிறார்கள். 

ஜூபா :  உனக்கு நல்ல பெயர் இருக்கிறது. உன்னைக் கொல்வதற்கு முன் உன் உன் பெயரைக் கொல்லத் தான் முயற்சி செய்வார்கள் 

ஆமோதிப்பது போல் தலையசைக்கிறான் மாக்ஸிமஸ். எக்காளமிடும் சத்தம் கேட்கிறது. நிமிர்ந்து பார்க்கிறான் மாக்ஸிமஸ்.

காட்சி மாறுகிறது 

எக்காள சத்தம் தொடருகிறது. Colleusem முழுக்க மக்கள் கூட்டம் போட்டியைப் பார்க்க க்ரேஸஸும், ஃபால்கோவும் வந்திருக்கிறார்கள். 

ஃபால்கோ : செனட்டர் கிரேசியஸ்..இது போன்ற அசிங்கமான கூட்டத்தின் சந்தோஷங்களைப் பார்ப்பதற்கு நீங்கள் எல்லாம் வருவீர்கள் என நினைக்கவேயில்லை 

கிரேஸஸ் : நான் மக்களின் ஒருவனாக எப்போதும் நடிப்பதில்லை, மக்களுக்காக வந்திருக்கிறேன்

அங்கு பணியாளர்கள் ரொட்டியையும், உணவுப்பண்டங்களையும் பரிமாறுகிறார்கள். சீசர் வருகிறார். மக்கள் கூட்டம் உற்சாகமாகக் குரல் எழுப்புவதைப் பார்த்து கையசைக்கிறான். கேஸியஸ் அன்று நடக்கப்போகும் அன்றைய தினத்தின் போட்டி குறித்து அறிவிப்பினை சொல்லத் தொடங்குகிறார். அன்றைய தினம் யாராலும் வெல்ல முடியாத Tigris Of Gaul என்கிற க்ளேடியேட்டரை களம் இறக்கப்போவதாகச் சொல்கிறார். 

ஒரு கதவுக்குப் பின்னால் இருந்து சாராத் வண்டியில் Tigris Of Gaul வெள்ளியினாலான கவசம் அணிந்து வருகிறார்.

கூட்டத்தின் நடுவே மாக்ஸிமஸின் உதவியாளனான சிசேரோ உட்கார்ந்திருக்கிறான். மாக்ஸிமசைப் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தில் உட்கார்ந்திருக்கிறான். 

மாக்ஸிமஸ் கதவுக்கு முன்பாக தயாராக நிற்கிறான்.

ப்ராகிஸிமோ :  அவனுக்கு கூட்டத்தை எப்படி தூண்ட வேண்டுமெனத் தெரியும்

மாக்ஸிமஸ் :  மார்கஸ் அரேலியஸுக்கு ரோமைப் பற்றி ஒரு கனவு இருந்தது. அது இது இல்லை’ 

ப்ராகிஸிமோ (கோபமாக) : ‘மார்கஸ் இறந்துவிட்டார் மாக்ஸிமஸ் . நாமெல்லாம் வெறும் தூசி தான்’ 

மாக்ஸிமஸ் மைதானத்திற்குள் செல்கிறான். 

மாக்ஸிமஸ் உள்ளே நுழையும்போது சீசரால் பெருமையுடன் தரப்படும் ஏலியஸ் மாக்ஸிமஸ் என்று அறிவிப்பு செய்கிற கேஸியஸின் குரல் கேட்கிறது.

மாக்ஸிமஸ் மைதானத்திற்குள் நுழைந்ததும் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ஃபால்கோ கிரேஸஸைத் திரும்பிப் பார்க்கிறார்.

லுசில்லா தன்னுடைய உணர்ச்சிகளை எல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டு சாதாரணமாக அமர்ர்ந்திருபப்தைப் போல உட்கார்ந்திருக்கிறாள். 

கமாடஸ் :  ‘இந்த மக்கள் அவர்களில் ஒருவனாய் இவனை நினைக்கிறார்கள்’

லுசில்லா : இன்னும் ஒரு மாதத்தில் மக்கள் இவனை மறந்து போவார்கள்’ 

கமாடஸ் : அதற்கு முன்பாகவே மறந்து விடுவார்கள். அதற்கான ஏற்பாடுகள் செய்தாயிற்று

சின்ன திகைப்புடன் கமாடஸைப் பார்க்கிறாள் லுசில்லா. 

எப்போதும் செய்யும் சடங்கான, களத்தில் வாளை ஊன்றி மண்ணை எடுத்து முகர்கிறான் மாக்ஸிமஸ். Tigris Of Gaul கமாடஸுக்கு வணக்கம் செலுத்துகிறான். மாக்ஸிமஸ் சாதாரணமாக நிற்கிறான்.

அப்போது நான்கு பக்கமும் இருந்து மூன்று மூன்று வீரர்கள் வந்து நிற்கிறார்கள். தரையில் இருந்து சங்கிலியை எடுத்து கையில் வைத்துக் கொள்கிறார்கள். மாக்ஸிமஸ் என்னவென்பதை யோசிப்பதற்குள் Tigris Of Gaul சண்டையை தொடங்குகிறான். சண்டையின் போது மாக்ஸிமஸ் தரையில் விழ அங்கிருந்து ஒரு புலியின் கூண்டு வெளியேறி வருகிறது. ஒரு குறிப்பிட்ட தூரம் வரை புலி வருமாறு சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. அதே போல் இன்னொரு இடத்தில் இருந்தும் புலி வருகிறது. மாக்ஸிமஸ் புலிகளுக்கும், Tigris Of Gaul இடையில் போரிடுகிறான். லுசில்லா கமாடஸைப் பார்க்கிறாள்.  அவன் பெருமையாக சிரிக்கிறான். 

சண்டை ஆவேசமாக நடக்கும் போது பின் பக்கமிருந்து வேறொரு புலி மாக்ஸிமஸைத் தாக்குகிறது. வாளை புலியின் வயிற்றில் சொருகிக் கொண்டே ரோம் வீரனையும் தாக்கி கீழே சாய்க்கிறான் மாக்ஸிமஸ். கூட்டம் KILL KILL என்று மாக்ஸிமஸுக்கு ஆதரவாக கத்துகிறது.  அதிர்ந்து போகிறான் கமாடஸ்.

கிரேஸஸ் கூட்டத்தைப் பார்க்கிறார் ஆச்சர்யமாக. 

தாங்க முடியாத அவமானத்தில் பற்களைக் கடிக்கிறான் கமாடஸ்  லுசில்லா அமைதியாக கமாடஸைப் பார்க்கிறாள். க்விண்டஸ் முகத்தில் சிறிய சலனம். மாக்ஸிமஸ் கோடாரியால் ரோம் வீரனை வெட்டப் போக, மக்கள் வெறி கொண்டது போல ‘KILL, KILL’ என்று கத்துகிறார்கள். 

மாக்ஸிமஸ் கமாடஸைப் பார்க்க, அவன் கொல்லலாம் என்பது போல் சைகை காட்டுகிறான். 

ரோம் வீரனை நோக்கி கோடாரியை உயர்த்தும் மாக்ஸிமஸ் கொல்லாமல் கீழே போடுகிறான். க்ரேஸஸும், காயிஸ்ஸும் ஒருவரையொருவர் திகைத்துப் போய் பார்ப்பதை ஃபால்கோ பார்க்கிறார்.

‘மாக்ஸிமஸ், கருணையுள்ளவன்’ என கூட்டம் இப்போது கத்துகிறது.  கடுப்பாகிறான் கமாடஸ். கூட்டம் மாக்ஸிமஸ் பேரைச் சொல்லிக் கத்திக் கொண்டே இருக்கிறது. 

மைதானத்திற்குள் வருகிறான் கமாடஸ். மாக்ஸிமஸ் நோக்கிப் போகிறான். மாக்ஸிமஸ் களைப்பாக இருக்கிறான்

கமாடஸ் : உன்னை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? ‘ஏன் நீ சாக மாட்டேன் என்கிறாய்? 

மாக்ஸிமஸ்: எனக்கு ஒரே ஒரு வாழ்க்கை தான் இருந்தது. அதுவும் முடிந்து போய்விட்டது

கமாடஸ் : அதை இப்போதே முடித்து வை..

என்று சொல்ல கண்டுகொள்ளாமல் மாக்ஸிமஸ் நடந்து போகிறான். 

கமாடஸ் : அவர்கள் உன் மகனைப் பற்றி சொன்னார்கள் 

என்று சொல்ல, மாக்ஸிமஸ் நின்று திரும்பிப் பார்க்கிறான் 

கமாடஸ் : அவனை சிலுவையில் அறைகையில் அவன் ஒரு சிறுமியைப் போல அலறினானாம்..உன்னுடைய மனைவியை மீண்டும் மீண்டும் மீண்டும் பாழ்படுத்தியபோது வேசியைப் போல முனகினாளாம். 

மாக்ஸிமஸ் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு 

மாக்ஸிமஸ் : உன்னை நீயே கௌரவப்படுத்தும் காலத்துக்கு சீக்கிரம் முடிவுக்கு வரப்போகிறது 

மாக்ஸிமஸ் மெதுவாக அந்த இடத்தை விட்டுச் செல்கிறான்

கூட்டம்  : மாக்ஸிமஸ் மாக்ஸிமஸ் 

என்று கத்திக் கொண்டே இருக்கிறது

மாக்ஸிமஸ் போகும் போது கூட்டத்துக்கு நடுவில் இருந்து சிசேரோ மாக்ஸிமசை  நெருங்க முயற்சி செய்கிறான் “தளபதி..தளபதி “ என்று அழைக்கிறான். முட்டி மோதி மாக்ஸிமஸ் அருகில் வர நினைக்கிறான். சிசேரோ கையில் ஒரு சிறிய தோல் பை இருக்கிறது அதைக்  கையில் வைத்து ஆட்டியபடி தளபதி என்று கத்துகிறான். 

மாக்ஸிமஸ் சிசேரோவைப் பார்த்து விடுகிறான். 

மாக்ஸிமஸ் : எங்கே முகாமிட்டிருக்கிறீர்கள்?

சிசேரோ : ஆஸ்டியாவில்

மாக்ஸிமஸ் : நான் உயிரோடு இருக்கிறேன் என நம்முடைய ஆட்களிடம சொல். என்னைக் கண்டுபிடி.. 

என்று சொல்ல, இதற்குள் வீரர்கள் சிசேரோவைப் பிடித்து இழுக்கிறார்கள். சிசேரோ தன் கையில் உள்ள தோல்பையை மாக்ஸிமஸுக்குத் தந்துவிடுகிறான்.

மாக்ஸிமஸ் அதனைத் தனது உள்ளங்கையில் மூடி வைத்துக் கொள்கிறான்.

காட்சி மாறுகிறது 

இரவு கூடாரத்தில் சிசேரோ கொடுத்ததைப் பிரித்துப் பார்க்கிறான் மாக்ஸிமஸ். அவனுடைய மகன் மற்றும் மனைவியின் உருவ பொம்மைகள் இருக்கின்றன.. அதைப் பார்த்ததும் கண் கலங்குகிறான் மாக்ஸிமஸ்.  அதற்கு முத்தமிடுகிறான்.

ஜூபா : ‘நீ பேசுவது அவர்களுக்கு கேட்குமா? 

மாக்ஸிமஸ் திரும்பிப் பார்க்கிறான். குடும்பமே திரும்பிக் கிடைத்தது போன்ற சந்தோஷத்துடன் ஜூபாவைப் பார்க்கிறான். 

மாக்ஸிமஸ் : யாருக்கு?

ஜூபா : உன்னுடைய குடும்பத்துக்கு? மறு உலகில்?

மாக்ஸிமஸ் : கேட்கும்.

ஜூபா : அவர்களிடம் என்ன சொல்வாய்?

மாக்ஸிமஸ் : ‘ம்’ அவர்களை சீக்கிரம் சந்திப்பதாகச் சொல்வேன். என்னுடைய பையனிடம் குதிரை ஒட்டும்போது பாதங்களை ‘கீழ் நோக்கி வைத்துக் கொள் என்பேன். ‘மனைவியிடம்…’ (தயங்கிவிட்டு) ‘உனக்கு ஏன் நான் அதை சொல்ல வேண்டும்’ 

என்று கேட்க ஜூபா சிரிக்கிறான். மாக்ஸிமஸ் சிரிக்கிறான்.

மாக்ஸிமஸ் முகம் அமைதியாகவும் பரவசமாகவும் இருக்கிறது. அவன் தன் கைகளால் உருவ பொம்மைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறான்

அரண்மனையின் ஒரு பகுதி கமாடஸ் செனட்டர் ஃபால்கோவிடம் பேசிக் கொண்டிருக்கிறான்

கமாடஸ் : ‘இப்போது மாக்ஸிமஸ் கருணையுள்ளவனாக மக்கள் முன்னால் மாறிவிட்டான்.என்னால் அவனைக் கொல்ல முடியாது. அது அவனை இன்னும் இரக்கமுள்ளவனாக மாற்றும். இதெல்லாம் ஏதோ கெட்ட கனவைப் போல இருக்கின்றன 

ஃபால்கோ : அவன் வாழுகிற ஒவ்வொரு நாளும் மக்களும், செனட்டர்களும் தைரியமாக இருக்கிறார்கள் ‘அவனைக் கொன்று விடுங்கள்’  

கமாடஸ் : இல்லை. அவன் தியாகியாவதை நான் விரும்பவில்லை

ஃபால்கோ : நான் ஒரு கடல் நாகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது தன் இரையைப் பிடிக்க புது யுத்தியைப் பயன்படுத்தும். அது கடலுக்கு அடியில் காயம்பட்டது போல படுத்துக் கொள்ளும். அதன் எதிரிகள் அதை நெருங்கும். அப்போதும் அமைதியாகப் படுத்திருக்கும்  அதன் எதிரிகள் கொஞ்சமாய் அதைக் கடிக்கும்..அப்போதும் அமைதியாகப் படுத்திருக்கும் 

கமாடஸ் : ஓ..நாம் அமைதியாக இருக்க வேண்டும்..நமது எதிரிகள் நம்மிடத்தில் வருவார்கள். நம்மைக் கடிப்பார்கள்..பிறகு ஒவ்வொரு செனட்டராக…

கமாடஸும், பால்கோவும் செனட்டர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வருகிற லுசில்லா கேட்டுவிடுகிறாள்.

காட்சி மாறுகிறது

மறுநாள். கிளேடியேட்டர்கள் வாள் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நடுவில் நடந்து கம்பி வேலிக்கு அருகில் வருகிறான் மாக்ஸிமஸ். பாதுகாவலர் கூட மாக்ஸிமஸால் கவரப்பட்டு இருக்கிறார் என்பது அவர் பார்வையில் தெரிகிறது. கம்பி வேலிக்கு அந்தப் பக்கம் சிசேரோ நின்று கொண்டிருக்கிறான். சிசேரோவைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் அவனது கைகளைப் பற்றுகிறான் மாக்ஸிமஸ். 

மாக்ஸிமஸ் : சிசேரோ..என்னுடைய நண்பனே! 

சிசேரோ : நீங்கள் இறந்து விட்டீர்கள் என நாங்கள் நினைத்தோம்’ –  

மாக்ஸிமஸ் : கிட்டத்தட்ட’… நமது படைகள் எத்தனை நாள் வரை ஆஸ்டியோவில் இருக்கும்?

சிசேரோ : குளிர்காலம் முடியும் வரை

மாக்ஸிமஸ் : யார் கமென்டராக இருக்கிறார்?

சிசேரோ : முட்டாள் ரோமன் ஒருவன்

மாக்ஸிமஸ் : எப்போது படை திரட்ட முடியும்?

சிசேரோ : உங்களுக்காக நாளையே கூட

மாக்ஸிமஸ் : சரி எனக்காக ஒரு உதவி செய்

காட்சி மாறுகிறது

ரோம் நகரத்தின் கடைத்தெருவில் சிசேரோ நின்று கொண்டிருக்கிறான். தெரு நாடகம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. மாக்ஸிமஸ் கமாடஸைத் தோற்கடிப்பது போல் புனையப்பட்ட காட்சியைப் பார்த்து மக்கள் சிரித்து கொண்டிருக்கிறார்கள். நகரின் நடுவே பல்லக்கு ஒன்று வருகிறது. சிஸேரோ அந்தப் பல்லக்கு அருகே சென்று, ‘ நான் உங்கள் அப்பாவிற்குக் கீழே வேலை செய்து இருக்கிறேன்’ என்று கத்துகிறான். பல்லக்கினுள் லுசில்லா கண்டு கொள்ளாமல் இருக்கிறாள். பாதுகாவலர்கள் அவனைத் தள்ளி நிற்கும்படி விரட்டுகிறார்கள். ‘நான் ஜெனரல் மாக்ஸிமஸிற்கு கீழ் பணிபுரிந்து கொண்டிருந்தவன். இப்போதும் கூட’ என்கிறான். பல்லக்கை உடனே நிறுத்தச் சொல்கிறாள் லுசில்லா. சிஸேரோ குனிந்து அவளிடத்தில் மெதுவாக, ‘ நீங்கள் சொன்ன செனட்டரைப் பார்க்க மாக்ஸிமஸ் தயாராக இருக்கிறார்’ என்று சொல்ல சொன்னார்’ என்கிறான். உன்னுடைய விசுவாசத்திர்க்காக’  என்று இரண்டு தங்க நாணயங்களைத் தருகிறாள்.

பல்லக்கு நகருகிறது.

காட்சி மாறுகிறது 

கிளேடியேட்டர் அறை. மாக்ஸிமஸ் மத்திய அறைக்கு அழைத்து வரப்படுகிறான். உடன் ப்ராகிஸிமோ இருக்கிறார்

லுசில்லா : எங்களைத் தனியாக விடுங்கள். செனட்டர் கிரேஸஸ்

என்று ப்ராகிஸிமோவை அனுப்பிவிட்டு கிரேஸசை அழைக்கிறாள்

கிரேஸஸ் வருகிறார். 

கிரேஸஸ் : தளபதி. நீங்கள் என்னை நம்பலாம் என்பதற்கு நான் உங்கள் முன் வந்து நிற்பதே போதுமான சாட்சி 

மாக்ஸிமஸ் : செனட் உங்களுடன் இருக்கிறதா?

கிரேஸஸ் : என்னால் செனட்டுடன் பேச முடியும்

மாக்ஸிமஸ் : உங்களால் எனக்கு சுதந்திரம் பெற்றுத்தந்து ரோமை விட்டு வெளியே அனுப்ப முடியுமா?

கிரேஸஸ் : எவ்வளவு தூரத்துக்கு?

மாக்ஸிமஸ் : என்னை இந்த நகரத்தை விட்டு வெளியே அனுப்ப வேண்டும். என்னை ஆஸ்டியாவுக்கு அழைத்துச் செல்ல குதிரைகள் வேண்டும். என்னுடைய படையினர் அங்கு முகாமிட்டிருக்கிறார்கள். இரண்டாம் நாள் இரவின்போது ஐயாயிரம் வீரர்களுடன் நான் திரும்பி வருவேன் 

லுசில்லா : இப்போது படைகள் புதிய கமாண்டரின் கீழ் இருக்கின்றன. அவர்கள் அங்கு தான் விசுவாசமாக இருப்பார்கள்

மாக்ஸிமஸ் : என்னை உயிருடன் எனது படையினர் பார்த்துவிட்டால், அப்போது தெரியும் இவர்கள் விசுவாசம் யார் பக்கம் என்று

கிரேஸஸ் : இது பைத்தியக்காரத்தனம். ரோமுக்குள் நூறாண்டுகளாக எந்தப் படையும் நுழைந்ததில்லை. நான் ஒரு சர்வாதிகாரியிடமிருந்து இன்னொருவரிடம் ரோமை விற்க முடியாது

மாக்ஸிமஸ் : சொற்களுக்கான காலம் தீர்ந்து போய்விட்டது செனட்டர். இனி செயல் தான் 

கிரேஸஸ் : நீ வெற்றிவாகை சூடியபின் ஐயாயிரம் வீரர்களுடன் ரோமை விட்டுச் சென்று விடுவாயா?

மாக்ஸிமஸ் : நான் சென்றுவிடுவேன். என்னுடைய வீரர்கள் செனட்டின் பாதுகாப்புக்காக இங்கு இருப்பார்கள்.

கிரேஸஸ் : ரோம் உன்னுடையதான பிறகு நீ அதை மக்களிடம் திருப்பித் தருவாயா? ஏன் ?

மாக்ஸிமஸ் (லுசில்லாவை நோக்கித் திரும்பி) :  ஏனென்றால் அது தான் இறந்து கொண்டிருந்த அந்த மனிதனின் கடைசி ஆசை.  பின்பு கிரேஸசைப் பார்த்து நான் கமாடஸைக் கொல்வேன். ரோமின் விதியை உங்களிடம் ஒப்படைப்பேன் 

கிரேஸஸ்: மார்க்ஸ் அரேலியஸ் உன்னை நம்பினார். அவருடைய மகள் உன்னை நம்புகிறாள். நான் உன்னை நம்புவேன் ஆனால் நமக்கு என்றம் குறைவாக இருக்கிறது. எனக்கு இரண்டு நாட்கள் நேரம் கொடு. நான் உனக்கு விடுதலை பெற்றுத் தருகிறேன். ஆனால், நீ உயிரோடு இருக்க வேண்டும்..இல்லையெனில் நான் தொலைந்தேன். இப்போது நான் செல்ல வேண்டும் 

காட்சி மாறுகிறது

ப்ராகிஸிமோ தங்கியிருக்கும் இடம் . மாக்ஸிமஸ் அங்கு ப்ராகிஸிமோவுடன் பேசிக்கொண்டிருக்கிறார் 

ப்ராகிஸிமோ : இது வேலைக்கு ஆகாது. ஒரு பேரரசருக்கு எல்லாம் தெரிந்திருக்கும். இது ஆபத்தானது 

இவர்கள் பேசுவதை ஒரு வீரன் வெளியில் இருந்து ஒட்டுக் கேட்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான் 

மாக்ஸிமஸ் : உங்களுக்கு பதில் உதவி செய்யப்படும். நான் என் வாக்கினைத் தருகிறேன் 

ப்ராகிஸிமோ : உன்னுடைய வாக்கா? நீ திருப்பித் தரவில்லைஎன்றால் என்ன செய்வது?

மாக்ஸிமஸ் : நம்பிக்கை வைப்பதென்றால் என்னவென்பதை மறந்து வீட்டீர்களா?

ப்ராகிஸிமோ : நான் யாரை நம்புவது?

மாக்ஸிமஸ் : நான் கமாடஸைக் கொள்வேன் 

ப்ராகிஸிமோ : எனக்கு அது எதற்கு? அவர் தான் என்னை பணக்காரனாக்கினார். எனக்குத் தெரியும், நீ வாக்குக் கொடுத்தால் நிறைவேற்றுவாய் என்று. தளபதி, நீ ஒரு வாக்குகாக உயிரையும் கொடுப்பாய். நீ ரோமுக்காக மரணிக்கவும் செய்வாய். உன்னுடைய முன்னோர்களுன் நினைவுக்காக உயிரைக் கூட தியாகம் செய்வாய். ஆனால், நான் ஒரு பொழுதுபோக்காளன். 

என்று சொல்லிவிட்டு வீரனே என்று வெளியே பார்த்து அழைக்கிறான் 

மாக்ஸிமஸ் : உன்னை விடுவித்தவனை அவன் தான் கொன்றான்

என்று சொல்லிவிட்டு செல்கிறான் 

காட்சி மாறுகிறது 

செனட்டர் கிரேஸஸ் தன் வீட்டில் கோழிகளுக்கும், வாத்துகளுக்கு இரை கொடுத்துக் கொண்டிருக்கிறார். ரோமானியப் படை வீரர்கள் வருவதைப் பார்த்து அவரருகில் இருக்கும் பணியாள் “படைவீரர்கள்” என்கிறான். 

லுசில்லா அரண்மனைக்குள் வருகிறாள். கமாடஸ் அங்கு இருக்கிறான். அவனைத் தவிர்த்துவிட்டு உள்ளே செல்லப்போகிறாள். கமாடஸ் அவளை நிறுத்துகிறான்.

கமாடஸ் : எங்கே சென்றாய்? உனக்காக ஆள் அனுப்பினேனே

லுசில்லா : என்ன ஆனது தம்பி?

கமாடஸ் : கிரேஸஸுக்கு புதுக் காதல் உருவாகியிருக்கிறதா என்ன?

லுசில்லா : எனக்குத் தெரியாது

கமாடஸ் : நான் நினைத்தேன் நீ அவனைப் பார்த்திருப்பாய் என்று. அவர் ஒரு தொற்றுக் காய்ச்சலைப் போல எல்லோரையும் பீடித்திருக்கிறார். ரோமின் நலனுக்காக செனட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும்..அதுவும் கூடிய சீக்கிரமே  

லுசில்லா : ஆனால், இன்று இரவில் அல்ல

கமாடஸ் : ஒருமுறை நம்முடைய அப்பா சொன்னது உனக்கு நினைவிருக்கிறதா? வாழ்க்கை – அது ஒரு கனவு..பயமுறுத்தும் கனவு .. அது உண்மை என்று நினைக்கிறாயா?

லுசில்லா : எனக்குத் தெரியாது

கமாடஸ் : நான் அப்படித் தான நினைக்கிறேன். நான் அதை உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்வேன் 

என்று சொல்ல லுசில்லா அவன் அருகில் வருகிறாள் கமாடஸ் அவள் தோளில் தலையை சாய்க்கிறான். அவளை படுக்கையில் தள்ளுகிறான். அவள் கண்களில் பயம் தெரிகிறது. உறைந்து போய் இருக்கிறாள். கமாடஸ் தனது விரல்களை அவள் உதட்டில் வைத்து ‘வாயைத் திற’; என்கிறான். அவள் தயக்கத்துடன் வாயைத் திறக்க அவளது உதட்டில் தன் விரலை வைத்து பின் தன்னுடைய உதட்டில் வைக்கிறான் அவளது தலையை தன் தோளில் அழுத்தி ‘உனக்குத் தெரியும் ..நான் உன்னை நேசிக்கிறேன் என்று’ என்கிறான் “நானும் உன்னை நேசிக்கிறேன்’ என்கிறாள் லுசில்லா. அவள் அப்படியே பயத்தில் உறைந்து போய் அடுத்து என்ன செய்யப்போகிறான் என்பது போல அமர்ந்திருக்கிறாள். அவன் அவள் மீது சாய்ந்து தூங்கத் தொடங்குகிறான். லுசில்லா எழுந்து மெதுவாக அங்கிருந்து செல்கிறாள்.

காட்சி மாறுகிறது

ப்ராகிஸிமோ லுசில்லாவை மாக்ஸிமஸ் இருக்கும் சிறைக்கு அழைத்து வருகிறார்.  ப்ராகிஸிமோ மற்ற க்ளேடியேட்டர்களை அங்கிருந்து வெளியேறும்படி சொல்கிறார். அவர்கள் மாக்ஸிமஸின் கட்டளைக்காக அவனைப் பார்க்க, அவன் தலையாட்டியதும் அங்கிருந்து செல்கிறார்கள்.

லுசில்லா : என் தம்பி கிரேஸசை கைது செய்திருக்கிறான். நீ உடனே இங்கிருந்து கிளம்பி போ. இன்றிரவு ப்ரோக்ஸிமோ உன்னை வெளியே அனுப்பி வைப்பார். உனது உதவியாளன் சிசேரோ உனக்காக வெளியில் குதிரையில் காத்துக் கொண்டிருப்பான்’  

மாக்ஸிமஸ் : இதெல்லாம் நீ தான் ஏற்பாடு செய்தாயா?’

லுசில்லா : ஆமாம்’ 

மாக்ஸிமஸ் : நீ ஆபத்தை சந்திக்கிறாய். உனது மகனுக்காக நீ பலமுள்ளவளாய் இருக்கிறாய்’ 

லுசில்லா : பலமாக இருந்து களைப்பாகி விட்டது.  கமாடஸ் இந்த உலகத்தையே வெறுக்கிறான். குறிப்பாக உன்னை’ 

மாக்ஸிமஸ் : உன்னுடைய அப்பா என்னைத் தேர்ந்தெடுத்தார். அதனால் தான்’ 

லுசில்லா :  இல்லை. அப்பா உன்னை நேசித்தார். நானும் 

மாக்ஸிமஸ் :  அது ஒரு காலத்தில்…

என்று சொல்லி அவளது கைகளை எடுத்து மென்மையாக முத்தம் தருகிறான்.  

லுசில்லா: ‘ நான் மாறிவிட்டேனா?’ 

மாக்ஸிமஸ் : நீ அப்போதெல்லாம் நிறைய சிரிப்பாய்…’ 

லுசில்லா : ‘ உன்னுடன் இருந்த நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் நான் தனிமையை மட்டுமே உணர்ந்திருக்கிறேன். நான் இப்போது கிளம்பட்டுமா?

மாக்ஸிமஸ் : சரி

இருவரும் நீண்ட நேரம் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.

காட்சி மாறுகிறது

லூசியஸ் உயரமான ஆப்ரிக்க பணியாளர்களுடன் வாள் சண்டை போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான். கமாடஸ் தூக்கத்தில் இருந்து விழிக்கிறான். லூசியஸிடம் செல்கிறான்.  பணியாளரிடம் இருந்து மரத்தாலான வாளை எடுத்துக் கொள்கிறான். லூசியஸுடன் விளையாடத் தொடங்குகிறான்.

கமாடஸ் : போர் வீரனாக விளையாடுவதற்கான காலமா இது?

லூசியஸ்: நான் ஒன்றும் போர் வீரன் இல்லை

கமாடஸ் : போர் வீரன் இல்லையா?

லூசியஸ் : நான் ஒரு கிளேடியேட்டர்

கமாடஸ் : கிளடியேட்டரா? கிளேடியேட்டர் விளையாட்டில் மட்டும் தான் சண்டை போடுவான். நீ ஜூலியஸ் சீசரைப் போல தைரியமான ரோமானிய வீரனாக வேண்டாமா?

லூசியஸ் : நான் மாக்ஸிமஸ், இந்த ரோமின் பாதுகாவலன் 

கமாடஸ் லூசியஸ் முன்பாக மண்டியிடுகிறான். அவனுடைய மரவாள் மார்பிள் தரையில் விழுகிறது.

கமாடஸ் : ரோமின் பாதுகாவலனா? யார் சொன்னது?

லூசியஸ் அவனது காதில் ரகசியம் போல எதோ சொல்கிறான். கமாடஸ் அவனை இறுக்கிக் கட்டிக் கொள்கிறான்.   அவனது பிடி இறுகுகிறது.

லுசில்லா அரண்மனைக்குள் வருகிறாள். லூசியஸ் எங்கே என்று விசாரிக்கிறாள். அவன் கமாடஸுடன் இருக்கிறான் என்று தெரிந்ததும் லூஸியசைத் தேடி பரபரப்பாக ஓடுகிறாள். கமாடஸ் அறைக்கு செல்கிறாள். அங்கு அவள் செல்கையில் கமாடஸ் லூசியஸுடன் பேசும் குரல் கேட்கிறது. லுசில்லா மெதுவாக நடந்து அவன் பேசுவதைக் கேட்கிறாள். பிறகு வேகமாக செல்கிறாள்

லூசியஸ் : …..அவள் அப்படி செய்திருக்கக் கூடாது

கமாடஸ் : ஆமாம். ஆனால் அவள் செய்தாள். அவள் அதனை கூடையில் இருந்து எடுத்தாள். தனது மார்போடு அழுத்திக் கொண்டாள். இதோ இதயத்துக்கு மேலே…ஷ்ஷ்ஷ்

லூசியஸ் : அது அவளைக் கடித்ததா?

கமாடஸ் :  ஆமாம். சில நேரங்களில் அரச பெண்கள் இப்படித் தான் விநோதமாக நடந்து கொள்வார்கள். காதல் என்கிற பெயரில் எதை எதையோ செய்வார்கள்

லூசியஸ் ; இது சின்னத்தனமாக இருக்கிறது

கமாடஸ் : நானும் அப்படித் தான் நினைக்கிறேன்..நானும்

கமாடஸ் லுசில்லா அறைக்குள் வருவதைப் பார்க்கிறான்

கமாடஸ் : அக்கா…வா.. நான் லூஸியசுக்கு வாசித்துக் காட்டிக் கொண்டிருக்கிறேன் 

லூசியஸ் : நானும் படித்தேன்

கமாடஸ் : ஆமாம். இவன் புத்திசாலிப் பையன். ஒருநாள் மிகப்பெரிய பேரரசாக வருவான்

லுசில்லா அவனை பயத்துடன் பார்க்கிறாள்

கமாடஸ் : நாங்கள் மார்க் ஆண்டனி பற்றியும் அவர் எகிப்தில் செய்த சாகசங்களைப் பற்றியும் படித்துக் கொண்டிருக்கிறோம்

லூசியஸ் : அந்த ராணி பாம்பைக் கடிக்கவிட்டு செத்துப் போய்விட்டாள்

கமாடஸ் லூசியசிடம் : நமது மற்ற முன்னோர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் நீ தெரிந்து கொள்ள வேண்டும். நீ நல்ல பிள்ளையா இருந்தால், நாளை இரவு பேரரசர் கிளாடியஸ் குறித்து உனக்கு கதை சொல்வேன். அவன் தனது சொந்தங்களால்..சொந்த இரத்த உறவால் துரோகமிழைக்கபப்ட்டன். அவர்கள் இரவில்..இருளில்…மூளை மூளையாக சென்று சதிதிட்டிடம் தீட்டினார்கள் 

லுசில்லா பயத்தில் இருக்கிறாள். அவளுக்கு பயத்தில் கண்ணீர் வருகிறது 

கமாடஸ் : அந்த பேரரசருக்குத் தெரியும் என்ன நடக்கிறது என்று. அவருக்குத் தெரியும், அவர்கள் சுறுசுறுப்பான தேனீக்கள் என்று. ஓருநாள் இரவு அவர் தனது சொந்த ரத்த உறவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். “அன்பே..எனது சின்ன தேனீயே! என்ன நடக்கிறது என்று சொல்..இல்லையென்றால் உனக்குப் பிரியமானவர்களைக் கொல்வேன்..அந்த இரத்தத்தில் நான் குளிப்பதை நீ பார்ப்பாய்” என்றார்.  அந்த பேரரசருக்கு இதயமே உடைந்து போயிருந்தது. அந்த சிறிய தேனீ அவரை மிகவும் காயப்படுத்தியிருந்தது. அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியுமா லூசியஸ்?

லூசியஸ் : எனக்குத் தெரியாது மாமா

கமாடஸ் லுசில்லாவைப் பார்த்து  : அந்த சிறிய தேனீ அவரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது 

லுசில்லா கண்களில் கண்ணீர் வந்து கொண்டேயிருக்கிறது. 

ஆரம்பத்தில் கதையை மட்டும் கேட்ட லூசியஸ், அதைச்  சொன்ன விதத்தையும், லுசில்லா அழுவதையும் மிரட்சியோடு கவனிக்கிறான்.

காட்சி மாறுகிறது 

கிளாடியேட்டர்கள் தங்கியிருக்கும் இடம், மாக்ஸிமஸ் தன்னுடைய பொருட்களை சேகரிக்கிறான். மனைவி, மகன் உருவபொம்மைகளை தோல் பையில் வைக்கிறான். வெளியே ரோமானிய வீரர்களின் குரல்கள் கேட்கின்றன. 

கொலைகாரர்கள் செனட்டர் காயிஸ் மற்றும் மனைவி தூங்கிக் கொண்டிருக்கும் படுக்கையறைக்குள் செம்பழுப்பு நிற பாம்பினை விடுகிறார்கள். அது ஊர்ந்து அவர்கள் படுக்கைக்கு மேல் செல்கிறது.

பிராக்சிமோ தங்கியிருக்கும் இடத்துக்கு வெளியே வந்து நிற்கும் ரோமானிய வீரர்கள் “பேரரசரின் ஆணையின் பேரில் வந்திருக்கிறோம் கதவைத் திற ப்ராக்ஸிமோ..” என்று கத்துகிறார்கள். 

ப்ராக்ஸிமோ மாக்ஸிமஸிடம் : எல்லாம் தயாராகிவிட்டது. நீ உன்னுடைய சுதந்திரத்தைப் பெற்றுவிட்டாய்

ப்ராக்ஸிமோ மாக்ஸிமஸ் கையில் கொத்து சாவியைக்  கொடுக்கிறார்.

மாக்ஸிமஸ் : ப்ராகிஸிமோ, நல்ல மனிதனாக நீங்கள் மாறியதால் ஆபத்தில் சிக்கிக் கொண்டீர்களா? 

ப்ராக்ஸிமோ : ஹா…

மாக்ஸிமஸ் : ஜூபா..

என்று அழைத்து அவனது கையில் கொத்துச் சாவியை கொடுக்கிறான்.

வெளியே குரல்கள் கேட்கின்றன.

குரல்கள் :பேரரசரின் அத்தனை எதிரிகளும் கொல்லபப்ட வேண்டும் 

அங்கிருப்பவர்கள் மாக்ஸிமசை சூழ்ந்து கொண்டு அவனது கட்டளையைக் கேட்கக் காதிருக்கிறார்கள்

மாக்ஸிமஸ் : எனக்கு சில நொடிகளே உள்ளன. நீங்கள் உங்கள் உயிரைத் தற்காத்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் தேவையில்லை என்பவர்கள் இப்போதே உங்களது சிறைக்கு செல்லலாம்

ஹேகன் : நாங்கள் உனக்காகக் காத்திருப்போம் மாக்ஸிமஸ். உறுதியும்..நேர்மையும்

மாக்ஸிமஸ் செல்கையில், ஜூபா உறுதியும், நேர்மையும் என்கிறான். இரு நண்பர்களும் நெற்றியை முட்டிக் கொள்கிறார்கள். மாக்ஸிமஸ் அங்கிருந்து செல்கிறான். க்ளேடியேட்டரகள் ரோமானிய வீரர்களுடன் தைரியமாக சண்டையிடுகிறார்கள். ஹேகன் கொல்லப்படுகிறான். ப்ராக்ஸிமோ தனது அறையில் வைத்து ஒரு படை வீரனால் கொல்லப்படுகிறான். இறக்கும்போது தன் கையில் உள்ள ஜெபமாலையை உருட்டியபடி ‘ நிழலும் தூசியும்’ என்கிறார். 

மாக்ஸிமஸ் சுரங்கம் வழியாக வெளியே செல்கிறான். வெளியே விசில் அடிக்க, குதிரை வீரன் ஒருவன் குதிரை மேல் நின்றபடி இருப்பதைப் பார்க்கிறான். உற்றுப் பார்த்துவிட்டு ‘சிசேரோ’ என்று குரல் கொடுக்க. அடுத்த நொடி குதிரை ஓடுகிறது, சிசேரோ கழுத்தில் தூக்குக் கயிறு இறுகுகிறது. அவன் அந்தரத்தில் தொங்குகிறான். மாக்ஸிமஸ் பதறியபடி சிசேரோ அருகில் செல்ல “என்னை மன்னித்து விடுங்கள் ‘ என்று சொல்கிறான் சிசேரோ. மாக்ஸிமசை படை வீரர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். சிசேரோவின் உயிர் போவதைப் பார்த்தபடி ‘இல்லை’ என்று கூச்சலிடுகிறான் மாக்ஸிமஸ்.

காட்சி மாறுகிறது

அரண்மனையின் மேல் மாடத்தில் கமாடஸ் நிற்கிறான். அவனுக்கு முன்பு சூரிய உயதயம் ஆகிக்கொண்டிருகிறது . ஃபால்கோ அங்கு வருகிறார் “எல்லாம் முடிந்தது” என்கிறார். கமாடஸ் ரோம் நகரத்தைப் பார்க்கிறான். மெதுவாக ஃபால்கோ நோக்கித் திரும்புகிறான்.

கமாடஸ் : என்னுடைய சகோதரியின் மகனை என்ன செய்வது? அவனுடைய அம்மாவை ? அவள் தன்னுடைய காதலனின் விதியையே தேர்ந்தெடுக்கக் வேண்டுமா? அல்லது நான் கருணையுள்ளவனாக இருக்க வேண்டுமா? கமாடஸ்..கருணையுள்ளவன். லூசியஸ் என்னுடனே இருப்பான். அவனுடைய அம்மா இப்போது என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது போல பார்த்துக் கொண்டிருந்தால், எனக்குப் பிடிப்பதில்லை. அவன் இறந்து தான் போவான். அவள் தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தாலும் இவன் இறந்து போவான். லுசில்லாவைப் பார்த்து நீ என்னை நேசிக்க வேண்டும். நான் உன்னை நேசித்தது போல. நீ எனக்கு என்னுடைய வாரிசினைத் தர வேண்டும். கமாடஸின் சுத்த இரத்தத்தில் பிறந்த வாரிசுகள் தான் இனி ஆயிரம் ஆண்டுகளுக்கு ரோமினை ஆள்வார்கள். நான் கருணையுள்ளவன் இல்லையா? 

என்று அவளது முகத்துக்கு அருகில் சென்று அவளை முத்தமிட முயற்சிக்கிறான். லுசில்லா திரும்பிக் கொள்கிறாள். கமாடஸ் அவளை இழுக்கிறான். அவளது நாடியைப் பிடித்து முகத்துக்கு அருகே சென்று கத்துகிறான் “நான் கருணையுள்ளவன் இல்லையா?” 

லுசில்லா கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது.

  காட்சி மாறுகிறது 

போட்டி நடக்கும் இடம் காட்டப்படுகிறது 

‘மாக்ஸிமஸ்’, ‘மாக்ஸிமஸ்’ என்று மக்கள் ஆரவாரம் செய்கின்றனர். சிவப்பு ரோஜாக்களின் இதழ்களை மைதானத்துக்குள் தூவுகின்றனர். 

சிறையில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறான் மாக்ஸிமஸ். க்விண்டஸ் உள்ளே வருகிறான். மக்கள் கத்துவது உள்ளே எதிரொலிக்கிறது. ‘நான் ஒரு படை வீரன். நான் கீழ்ப்படியத் தான் வேண்டும்’ என்கிறான் க்விண்டஸ் நியாயம் கோரும் பாவனையில். ‘எதற்கும் வளைந்து கொடுப்பவர்கள் எல்லா இடத்திலும் பொருந்தி விடுவார்கள்’ என்கிறான் மாக்ஸிமஸ். அங்கிருந்து அகலுகிறான் க்விண்டஸ். 

மைதானத்துக்குள் ஆராவரம் கேட்டபடி இருக்கிறது.

கமாடஸ் மாக்ஸிமஸ் இருக்கும் இடத்துக்கு வருகிறான். கமாடஸ் வெள்ளை நிற போர் வீரருக்கான உடையை அணிந்திருக்கிறான். அவன் மாக்ஸிமஸ் நோக்கி வருகிறான். 

மற்ற அடிமை வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் கிரேஸஸும் நிற்கிறார்.

கமாடஸ் : மாக்ஸிமஸ்…மாக்ஸிமஸ்..மாக்ஸிமஸ் … எல்லாரும் உன்னையே அழைக்கிறார்கள். ஒரு தளபதி அடிமையானான் அடிமை க்ளேடியேட்டர் ஆனான். க்ளேடியேட்டர் பேரரசரையே எதிர்த்தான். என்னவொரு பிரமாதமான கதை. இப்போது மக்களுக்கு இந்தக் கதை எப்படி முடியப்போகிறது என்று தெரிய வேண்டும். அது ஒரு புகழ்வாய்ந்த மரணத்தால் தான் முடியும். ஒரு பேரரசரை போட்டியில் எதிர்கொள்வதை விட வேறு என்ன புகழ் உனக்கு கிடைத்து விட முடியும்?

மாக்ஸிமஸ்: நீ என்னுடன் சண்டை போடப் போகிறாயா? 

கமாடஸ்: ஏன்? முடியாதா? நான் பயப்படுகிறேன் என்று நினைக்கிறாயா? 

மாக்ஸிமஸ்: நீ உன் வாழ்க்கை முழுக்கவே பயத்தில் தான் கழித்திருக்கிறாய்… 

கமாடஸ் : மாக்ஸிமஸுக்கு மட்டும் தான் பயமே கிடையாது என நினைத்துக் கொண்டிருக்கிறாயா? 

மாக்ஸிமஸ் சிரிக்கிறான். 

மாக்ஸிமஸ் : எனக்கு ஒருவரைத் தெரியும். ‘மரணம் உன்னைக் கண்டு சிரிக்கும் போது, பதிலுக்கு நீயும் சிரித்து விடு’ என்பார் அவர். 

கமாடஸ் : உன்னுடைய, அந்த நண்பர் தான் இறக்கும் போது சிரித்தாரா?

மாக்ஸிமஸ்: உனக்கு அது தெரிய வேண்டும். அவர் உன்னுடைய அப்பா. 

கமாடஸ் : நீ என்னுடைய அப்பாவை நேசித்தாய் என்பது எனக்குத் தெரியும். அதே போல் தான் நானும். அதனால் நீயும் நானும் சகோதரர்கள். எனக்காக இப்போது சிரித்துக் கொள் சகோதரா…

என்றபடி கட்டிப் பிடிக்கிறான். 

கத்தியால் மாக்ஸிமஸ் முதுகில் குத்தி விடுகிறான் கமாடஸ். அவனுடைய கழுத்தில் முத்தமிடுகிறான்.

க்விண்டஸிடம் கமாடஸ் 

கமாடஸ் : அவனது காயத்தை மறைத்து கவசத்தை அணிவி..

மாக்ஸிமஸை திரும்பப் பார்க்கிறான் வஞ்சகமாக.

காட்சி மாறுகிறது

போட்டி மைதானத்தின் கதவுகள் திறக்கின்றன. ரோமானிய வீரர்கள் புடைசூழ கமாடஸ் நடுவில் நிற்கிறான். மைதானத்தின் நடுவில் சுட்டெரிக்கும் சூரியனுக்குக் கீழ் காயம்பட்ட மாக்ஸிமஸ் நிற்கிறான். க்விண்டஸ் மாக்ஸிமசையேப் பார்க்கிறான். மைதானத்தைச் சுற்றி ரோமானிய வீரர்கள் நின்று கொள்கிறார்கள். மாக்ஸிமஸ் மைதானத்தின் நடுவில் தள்ளாடிக் கொண்டு  நிற்கிறான்.  குனிந்து கீழே கிடந்த மண்ணை எடுக்கிறான். அவனுடைய கண்கள் க்விண்டஸ் மீது இருக்கிறது. மாக்ஸிமஸ் வாளினைக் கேட்க, க்விண்டஸ் அதனைத் தூக்கி மாக்ஸிமஸுக்கு எட்டாத தூரத்தில் போடுகிறான். மாக்ஸிமஸ் வலியுடன் போய் வாளினை எடுக்கிறான். ஆனால் அடுத்த நொடி கமாடஸை நோக்கி வாளால் சுழற்றுகிறான். இருவரும் சண்டை செய்கிறார்கள். கமாடஸை தாக்கும்போதெல்லாம் மாக்ஸிமஸ் உறுமுகிறான். கமாடஸ் மாக்ஸிமஸ் காலினை வெட்ட முயற்சிக்க, மாக்ஸிமஸ் காலில் காயம்படுகிறது. மாக்ஸிமஸ் கமாடஸின் கையினை வெட்டுகிறான். கமாடஸ் வாளினை கீழே போடுகிறான்.

மாக்ஸிமஸுக்கு கண்கள் சொருகுகின்றன. அவனுக்கு இறப்புக்கு பிறகான காட்சிகள் தோன்றுகின்றன. அவனது வீடு தெரிகிறது. மாக்ஸிமஸும் வாளினைக் கீழே போடுகிறான். கமாடஸ் க்விண்டஸிடம் ‘வாளைக் கொடு’ என்று கேட்க க்விண்டஸ் ஒன்றும் சொல்லாமல் நிற்கிறான். வீரர்கள் தங்கள் வாட்களை உருவ, க்விண்டஸ் அவர்களை நோக்கி வேண்டாம் என்பது போலத் தலையாட்டுகிறான். வீரர்கள் பின்வாங்குகிறார்கள். கமாடஸ் தான் மறைந்து வைத்திருக்கும் குறுவாளை வெளியில் எடுக்க, மாக்ஸிமஸ் நிகழ்காலத்துக்கு வருகிறான். எந்த ஆயுதமும் இல்லையென்றாலும் மாக்ஸிமஸ் உறுதியோடும் பலத்தோடும் சண்டை போடுகிறான். கமாடஸ் கையில் இருக்கும் குறுவாளால் கமாடஸ் கழுத்தில் வைக்கிறான். அவன் கழுத்தில் மெதுவாக குறுவாளைக் கொண்டு அழுத்த கமாடஸ் மடிந்து கீழே விழுகிறான்.

மாக்ஸிமஸுக்கும் நினைவு தப்பிப் போகிறது. அவனுக்கு மகனும், மக்களும் வரவேற்பது போன்ற காட்சிகள் தெரிகின்றன. மாக்ஸிமஸ் ஒரு கதவைத் திறந்து கொண்டு மனைவி மகன் இருக்குமிடத்துக்கு போவது போலத் தோன்றுகிறது. க்விண்டஸ், “மாக்ஸிமஸ்..மாக்ஸிமஸ்’ என்று அழைக்க மாக்ஸிமஸ் நிகழ்காலத்துக்கு வருகிறான்.

மாக்ஸிமஸ் : க்விண்டஸ்..எனது ஆட்களை விடுவி. செனட்டர் கிரேஸஸிடம் எல்லாவற்றையும் ஒப்படை. ரோமுக்கு ஒரு கனவு இருந்தது. அது நிறைவேற்றப்பட வேண்டும். இது மார்க்ஸ் அரேலியசின் கனவு 

க்விண்டஸ் : கைதிகளை விடுதலை செய்யுங்கள்..இப்போதே

என ஆணையிடுகிறான். வீரர்கள் ஓடுகிறார்கள்.

மாக்ஸிமஸ் எழுந்து நிற்கிறான். அவனால் நிற்க முடியவில்லை. அவனுக்கு கோதுமை வயலும் அவனது மனைவியும், மகனும் வந்து போகிறார்கள். அவனுக்காக காத்திருப்பது போன்றதான காட்சிகள் தெரிகின்றன. 

அவன் ஒரு மரம் போல கீழே விழுகிறான். லுசில்லா அவனை நோக்கி ஓடி வருகிறாள். அவனுக்கு அருகில் மண்டியிட்டு அமர்கிறாள். “மாக்ஸிமஸ்’ என்று அழைக்க, அவளைப் பார்க்கும் மாக்ஸிமஸ் “லூசியஸ் இப்போது பாதுகாப்பாக இருக்கிறான்’ என்கிறான். லுசிலஸ் அவனை கருணையோடும் அன்போடும் பார்த்து ‘அவர்களிடம் போ’ என்கிறாள். மாக்ஸிமஸ் அமைதியாகிறான். தன்னுடைய விரல்களால் அவனது கண்களை மூடுகிறாள். அவனது முகம் இந்த உலகத்தை விட்டுச் சென்ற அமைதியுடன் இருக்கிறது. லுசில்லா அவனிடம் “நீ வீட்டில் இருக்கிறாய்” என்கிறாள். துக்கத்தை ஏற்றுக்கொள்ளும் விதமாக நெஞ்சில் கைவைத்துக் கொள்கிறாள். எழுந்து நிற்கிறாள் கூட்டத்திலிருக்கும் செனட்டர் கிரேஸசைப் பார்க்கிறாள்.  

லுசில்லா : இவர் ரோமின் வீரர். மரியாதை செய்யுங்கள்

கிரேஸஸ் : இவரைத் தூக்குவதற்கு யார் உதவி செய்யப்போகிறீர்கள் ?

பலரும் மாக்ஸிமசைத் தூக்க கூடுகிறார்கள். அங்கிருந்து மாக்ஸிமசைத் தூக்கிச் செல்கிறார்கள். 

மைதானமே அமைதியாக இருக்க,  கமாடஸ் சடலம் மட்டும் தனியாக கிடக்கிறது.

மண்ணில் சின்ன குழி பறித்து மாக்ஸிமஸின் உருவ பொம்மைகளை போட்டு மூடுகிறான் ஜூபா.

ஜூபா : ‘நாங்கள் இப்போது சுதந்திரமாகிவிட்டோம். சீக்கிரமாக உன்னைப் பார்க்க வருவேன். ஆனால் இப்போது இல்லை’ 

என்கிறான் ஜூபா. 

அவன் எழுந்து போக, அது விளையாட்டு மைதானம் என்பது தெரிகிறது என்பது தெரிகிறது. 

சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது. 

-END TITLE-

STORY : DAVID FRANZONI

SCREENPLAY : DAVID FRANZONI, JOHN LOGAN, WILLIAM NICHOLSON

DIRECTION  : RIDLEY SCOTT

Author Image

ஜா.தீபா

எழுத்தாளர். ‘மேதைகளின் குரல்கள்’ ‘கறுப்புத் திரை’ போன்ற திரைப்படம் சார்ந்த புத்தகங்களையும், “நீலம் பூக்கும் திருமடம்’, ‘மறைமுகம்’ சிறுகதைத் தொகுப்பும் கவனம் பெற்றவை. தொலைகாட்சித் தொடர்களுக்கு திரைக்கதைகள் எழுதி வருகிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
Bong_joon ho

என் அனுபவங்களே என் எழுத்து

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?