The Talkie
Thursday, April 9, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள் ஓடிடி திரை

Adolescence – எதிர்கால நலன் கருதி

The Talkie by The Talkie
April 15, 2025
in ஓடிடி திரை
A A
2
Adolescence
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon சவிதா


Adolescence மார்ச் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. வெளிவந்த உடனேயே பேசுபொருளாகியிருக்கிறது. 

நாடு, இன, மத பேதமின்றி உலகமே குழந்தை வளர்ப்பை பயத்துடன் எதிர்கொண்டிருப்பதை இந்த சீரிஸ் உணர்த்திவிட்டது எனலாம். இணையம், செல்ஃபோன், சோசியல் மீடியா போன்ற வெளிப்படையான கூறுகள் மட்டுமே ஒரு குற்றத்தில் பெரும் பங்காற்றுவதில்லை. ஒரு குற்றத்தின் வேர் எங்கிருந்தெல்லாம் தொடங்கியிருக்கிறது என்பதைத் தெளிவாக சொல்லும் கதை.

பள்ளியில் படிக்கும் பதின்ம வயது பெண் கொலை செய்யப்படுகிறாள். அவளைக் கொலை செய்தது அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவன் ஜேமி என்பது போலீசுக்குத் தெரிகிறது. ஜேமியை விசாரணைக்கு போலிஸ் அழைத்து வருகிறது. விசாரணைகளும் ஜேமியின் மனநிலையும், மேற்கத்தியக் குழந்தைகளின் சூழலும், அவர்களை பாதிக்கும் விஷயங்கள் குறித்தும் இந்தத் தொடர் சொல்கிறது. மொத்தம் நான்கு எபிசோடுகள். ஒரு ஆவணம் போல சொல்லியிருப்பதால் இந்தத் தொடர் மிகுந்த வரவேற்பையும், அச்சத்தையும், எச்சரிக்கையினையும்  தந்திருக்கிறது.

கதையாகப் பார்த்தால் முதல் பகுதியிலேயே என்ன நடந்திருக்கிறது  என்பது தெரிந்துவிடுகிறது. ஏன் நடந்தது என ஆராய்ந்து புரியவைக்கும் நோக்கத்திலேயே கதை நகர்கிறது. இது தான் இந்தத் தொடரை பேச வைத்திருக்கிறது. கொலையை நேரடியாகக் காட்டிக் கொண்டே இருக்காமல் சிசிடிவி மூலமே அந்த குரூர சம்பவத்தை நம்மைப் பார்க்க வைக்கிறார்கள். கொலை நடந்தது உறுதியானவுடன், ஏன் நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள போலிஸ் பள்ளிக்கூடத்தில் விசாரணையில் இறங்குகிறது. பள்ளியில் நிகழும் சம்பவங்களில் இருந்து நமக்கு ஒரு பார்வை கிடைக்கும். நான்காவது எபிசோட் மூன்றாவது எபிசோடுக்கு எந்த நேரடித் தொடர்புமின்றி விளக்கமாகவும் விளைவாகவும் எழுதப்பட்டிருக்கும். நடக்கும் சம்பவங்களின் மூலமும், பேசும் வசனங்கள் மூலமும் நடந்ததென்ன என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கும். அது அவரவர் அளவுகோலின்படி பூடகமாக புரிந்துக் கொள்ள வேண்டிய காட்சியனுபவத்தை சிறப்பித்திருக்கிறது.

நாள் -1, நாள் – 3, 7 மாதங்களுக்கு பிறகு, 13 மாதங்களுக்குப் பிறகு என நான்கு பாகங்களில் ஒரு பதின்ம வயது சிறுவனின் வாழ்க்கையும் அதில் பின்னிப் பிணைந்த சமூகம், பள்ளி, சட்டங்கள் மற்றும் அவசியங்களை காட்சிகளின் மூலமும் வசனங்களின் மூலமும் விளக்கியிருக்கிறார்கள். 

இத்தொடரில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள சிங்கிள் ஷாட் உத்தி  காட்சிகளுக்கான உண்மைத்தன்மையில் நாம் உணர்வதற்கான நெருக்கத்தை, அந்த இடங்களில் நாமே போய் நிற்பது போன்ற மாயத்தை ஏற்படுத்துகிறது. 

ஜேமியின் அப்பாவாக நடிக்கும் ஸ்டீஃபன் க்ரெஹம் (Stephen Graham), ஜாக் தோர்ன்( Jack Thorne) உடன் சேர்ந்து ஸ்க்ரிப்ட்டை எழுதியிருக்கிறார்.  ஒன் ஷாட் என்பது இத்தொடரை இயக்கியிருக்கும் பிலிப் பராண்டினிக்கும்(Philip Barantini), ஸ்டீஃபென் கிரெஹமுக்கும் புதியதல்ல. ஏற்கனவே க்ரெஹம் நடித்து பராண்டினி இயக்கிய Boiling point (2021) என்ற படமும், அடலசென்ஸ் ஸ்டைலில் அதன் சீக்வலாக நாலு பாகங்களைக் கொண்ட Boiling point (2023) வலைத் தொடரும் வந்துள்ளன. அவையனைத்துமே இதேபோல ஒன் ஷாட்டில் படமாக்கப்பட்டவை. ஏற்கனவே இதில் நல்ல அனுபவம் இருந்ததால் Adolescence ஒன் ஷாட் உத்தி மிகச் சரியாகப் பயன்பட்டிருக்கிறது

ஒளிப்பதிவாளர் மாத்யூ லூயிசும்  (Matthew Lewis) ஏற்கனவே  Boiling Pointல் பணியாற்றியவர்தான். அது அவருடைய இரண்டாவது படம். மேலும் 2021க்கான பிஃபா(BIFA) அவார்டை அவர் ஒளிப்பதிவுக்காக பெற்றிருக்கிறார். பெரும் உழைப்பும் முன்னேற்பாடுகளும் இந்த முயற்சியை வெற்றிபெறச் செய்திருக்கின்றன.

 மூக்கை உறிஞ்சிக்கொண்டு கண்களில் ஈரத்துடன் முதல் எபிசோடில்  ஜேமியாக அறிமுகமாகும் ஓவன் கூப்பர், மூன்றாவது எபிசோடில் மிரட்டி விடுகிறார். சிறு வயதிலேயே பாடி லாங்வேஜிலிருந்து டயலாக் டெலிவரி வரை ஜேமியாகவே தன்னை உருமாற்றிக்கொண்டிருக்கிறார். 

80:20 விகிதாச்சாரங்கள்  ஆண்ட்ரூ டோட் (Andrew Tote) போன்ற இணைய ஆணாதிக்க (men rage) பேர்வழிகளால் பெரியதாகப் பேசப்பட்டது. முதல் தரமான பெண்கள் அனைவரும் அவர்களுக்கு மேம்பட்டவனான ஆணை விரும்பத் தொடங்க அதற்குத் தகுதி வாய்ந்த ஆணாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாதவனை பெண் ஒதுக்குகிறாளென சொல்லப்பட்டது. மோனோஸ்பியரில் எமோஜிகள், ரெட் பில், கிட்னி பீன் என்பதெல்லாம் குறியீடு. பெண்ணைக் கவர முடியாத ஆணை இகழும் சொல்லாக குறிப்பிடுகிறது. 

இங்குதான் ஜேமி சிக்கிப் போனதாக இத்தொடர் அடையாளப் படுத்துகிறது. ஜேமியால் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் கேட்டியின் அரைநிர்வாணப் படம் நண்பர்களால் பகிரப்பட்டதாக ஜேமி சொல்கிறான்.  இது போன்று நிர்வாணப் படம் வெளிவருவது என்பது பெண்ணின் ஒழுக்கத்துக்கு எதிரானது என்பதால்  கேட்டி இரண்டாம் தரமான பெண்ணாக ஜேமியால் கருதப்படுகிறாள். மேலும் அவளுடைய அங்கங்கள் ‘ஃப்ளாட்’டாக இருக்கிறது  எனவும் உருவகேலிக்கும்  ஆளாகியிருக்கிறது. இதனால் ஜேமியின் மனதில் கேட்டி அணுகுவதற்கு எளியவள் எனவும், அவளைத் தன்னைப் போல ஒருவன் விரும்புவதே பெரிய விஷயம் என்பது போலவும் மனதில் பதிந்திருக்கிறது. எனவே கேட்டியின் மறுப்பு ஜேமியை கோபப்படுத்துகிறது. மேலும் இகழும் சொல்லின் குறியீடான ‘கிட்னி  பீன்’ எமோஜியை இன்ஸ்டாக்ராமில் அவள் பின்னூட்டமிட்டிருந்ததே அவன் ஈகோவைச் சீண்டி அவளைக் கொலை செய்யும்வரை கொண்டு போயிருக்கிறது. இந்தத் தொடர் Toxic masculinityயின் வீரியத்தையும் அது தடுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் சேர்த்து சொல்லியிருக்கிறது. அழுத்தப்பட்ட உணர்வுகளும், அவமானங்களும் கொந்தளிப்பது, ஒரு உயிரைப் பறித்துவிடுகிற அபாயத்தைச் சொல்கிறது.

இத்தொடரில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. முக்கியமாக பள்ளியில் கேட்டியின் தோழி ஜேட், ரியானை தாக்குமிடம். சுற்றி இருக்கும் மாணவர்கள் சண்டையைப் பிரித்து விடாமல் ஃபோனில் வீடியோ எடுக்கத் தொடங்குகின்றனர். தன் அப்பாவின் விசாரணை சரியாகச் செல்லவில்லை என்பதை உணரும் மகன், பதட்டமாகி இந்த இளைய உலகத்தை விளக்கும் காட்சியில் ஆஷர் வாட்லி போல நாமும் உறைந்து போக வேண்டியிருக்கிறது. ஜேமி தன்னை வலிய ஆணாகவும், பெண்ணென்ற ஒரே காரணத்தால் பலவீனமாக தெரபிஸ்ட்டைப் பார்ப்பதும் ஒரு இடத்தில் அதிர வைக்கிறது. ஜேமி கேட்டியை மோசமானவளாக முன்வைப்பதன் மூலம் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள முயல்வதை வசனங்களின் மூலம் வெளிப்படுத்துவது புத்திதிசாலித்தனம். 

படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுமளவு பயமுள்ள சிறுவனை காவலர் கைது செய்வது, அவனை தடாலடியாக நடத்தாமல் அரவணைப்புடன் அவனுக்குரிய உரிமைகளுடன் நர்ஸ், காவலர்கள் நடத்துவது. சிசிடிவியில் பார்த்தபின்னும் தந்தை அவனை அணைத்துக் கொள்வது, டிடெக்டிவ் ஆஷ் டிக்கும் பெண் காவலருக்குமான சம்பாஷணைகள், பள்ளியின் இன்றைய சூழல், ஜேடின் அந்த பருவத்துக்குரிய சீற்றம், பின்னணியில் இளம்குரல்களில் பாடல் (choir) ஒலிக்க, சில மைல் தூரத்துக்கு அப்பால்  ஜேமியின் அப்பா கேட்டிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது, ஜேமியின் நடவடிக்கைகளால் தொந்தரவுக்குள்ளானாலும் கடைசிவரை உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு தெரபிஸ்ட் எரின் (Erin Doherty) போராடுவது என மூன்று எபிசோட்களைத் தாண்டிய பின் நான்காவதாக ஜேமியின் குடும்பம் சம்பவத்திற்கு பிறகு உலகை எதிர்கொள்ளும் விதத்தைக் காண்பித்து இருக்கிறார்கள். தவிர்க்க முடியாமல் கலங்க வைக்கும் எபிசோட். 

தன் கணவனின் பிறந்தநாளை எப்படியாவது நல்லபடியாக கொண்டாடிவிட வேண்டுமென  தொடர்ந்து ஜேமியினுடைய அம்மா ஏற்பாடுகளை செய்வதும், ஜேமியின் சகோதரி இயல்பாக இருப்பது போல வெளிக்காட்டிக் கொள்வதும் சமூகம் அவர்களை நடத்தும் விதமும், மீண்டுவிடலாம் என அவர்களே அவர்களை ஏமாற்றிக்கொண்டு எதையெதையோ செய்து அத்தனையும் தோல்வியில் முடிய தொய்ந்து போய் முடியாமல் ஜேமியின் அப்பா அவனுக்காக, அந்த துயரத்துக்காக தன்னை ஒப்புக் கொடுத்துக்கொள்ளும் இடம்வரை கண்கள் கலங்கிக்கொண்டே இருக்கின்றன. 

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தையே இதுவரை பரிதாபத்துடன் பார்த்திருந்தது போய் குற்றத்தைச் செய்தவரின் குடும்பமும், அதற்கான காரணங்களென அடுக்கி வைத்ததுமான குறுக்குவெட்டு தோற்றம் மனதை அலைக்கழிக்கிறது. ஜேமியின் மூடிய அறையில் இரவு ஒருமணி வரை விளக்கெரிந்ததைப் பற்றி சொல்லிவிட்டு, அதற்கு பின்னரும் என்ன நடந்ததென எப்படி நாம் அறிய முடியும் என அம்மா புலம்புகிறார். அப்பா தன்னுடைய அப்பா போல் கொடுமைக்காரராக நான் நடக்கவில்லையே என அழுகிறார். உண்மையில் பெற்றோர் எல்லாவற்றுக்கும் தான்தான் பொறுப்பு என்பதைப் போல குற்றவுணர்வு கொள்ளும் இடம் அனைவரையும் அசைத்துப் பார்த்துவிடுகிறது. தொடர்ந்து தெரபிஸ்ட் ஜேமியின் அப்பாவைப் பற்றிக் கேட்பதை இங்கு தொடர்புபடுத்திக் கொள்ளலாம். 

பெண்கள் எப்போதும் ஆணின் உணர்வுகளை சமப்படுத்திக் கொள்ள முயற்சி செய்துகொண்டே இருப்பதைத் தொடர் நெடுகிலும் பார்க்கலாம். தோழியின் மரணத்தால் பாதிக்கப்படும் ஜேட்-ஐ பெண் ஆசிரியையே ஆற்றுப்படுத்துகிறார். ஜேமியை தெரபிஸ்ட் தன்னைச் சமனப்படுத்திக்கொண்டே கேள்விகளை அடுக்குகிறார். முடிந்தபின் ஜேமியின் நடத்தையால் அவருள் உண்டான பதட்டத்தை கையாள முடியாமல் அழுகிறார். இறுதிக் காட்சியில் எட்டி மில்லரின் நடத்தையை க்ரிஸ்டினாவும் லிசியும் தடுக்க இயலாமல் தடுமாறுகின்றனர். அவரின் கண்மூடித்தனமான ஆத்திரத்தையும் அவரின் வலியையும் அவர்கள் போக்குவதற்கு முயல்கின்றனர். இப்படி தொடர் நெடுகிலும் பேசுவதற்கும் சிந்திப்பதற்குமான பல்வேறு விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன.

  கதை நடக்கும் மேற்குலகத்தில் வளரிளம்பருவத்தில் ஏற்படும் குற்றங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. நல்ல வேளையாக இதெல்லாம் இந்தியாவில் இன்னும் வரவில்லை என பெருமைப் பட்டுக்கொள்ளும் நிலைமையில் நாமில்லை. நமக்கும் இது நேரலாம் என்பதன் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

காவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் நாகரிகத்துடன் சொற்களை கவனமாகப் பேசுகிறார்கள், சாரி, ஆர் யூ  ஓகே?, தேங்க்ஸ் என மற்றவர்களிடம் வெகு அனுசரணையாக எடுத்துச் செல்வார்கள். ஆனால் பள்ளியில் அடுத்த தலைமுறையைக் காட்டும்போது அப்படியே எதிர்ப்பதமாக சிறிதும் நட்பற்ற, நாகரிகமற்ற நடத்தையை எதிர்கொள்ள முடியாது அந்த ஆசிரியர்கள் தவிப்பதைப் போலவே நாமும் தவிக்கிறோம். ஒரு தலைமுறை இடைவெளி என்பதை பட்டவர்த்தனமாக உணர்த்தும்  காட்சிகள் அவை. பள்ளியிலிருந்து  கேட்டிக்கு மலர்வளையம் வைக்கும் இடம்வரை காமிரா நகர்ந்துகொண்டே செல்லும். அவரவர் கைகளில் இருக்கும் ஃபோன்களை பார்த்துக்கொண்டே மனிதர்கள் தனித்தனியாக நடந்து செல்வார்கள்.தீவுகளாக இத்தலைமுறை பிரிந்துவிட்டதை அடையாளப் படுத்திய இடம் அது. 

சக உயிருக்கான கருணையை உலகம் பின்னால் நகர்த்தி வைக்கத் தொடங்கியிருக்கிறது. இணைய வலைதளங்கள், சோசியல் மீடியாக்கள் உலகத்தை வீட்டின் ஒரு அறைக்குள் கொண்டு வரும் அதே சமயம் பொதுவாழ்க்கையை அந்நியமாக்கி விடுகின்றன. பதின்பருவத்தில் தனக்கான அடையாளத்தை நிறுவ வேண்டிய அழுத்தத்திற்கு பிள்ளைகள் ஆளாகின்றனர். தன்னை அதிகமாக ஈர்க்கும் விஷயங்களுக்கு அடிமை ஆகின்றனர்.

ஜேமிக்கு விளையாட்டு பிடிக்காது எனவும் அது தன் தந்தைக்குத் தெரியாது எனவும் சொல்லும்போது தெரபிஸ்ட் கவலைப்படுகிறார். கடைசி எபிசோடில் ஜேமி முக்கியமான சரியான முடிவை எடுக்கும்போது அவன் திரும்ப வரைய ஆரம்பித்து விட்டதாகக் கூறுகிறான். வளரிளம் சிறார்களுக்கு ஏற்படும் மனக்குழப்பங்களிலிருந்து தப்பிக்க   உரையாடல்களை நிகழ்த்த வேண்டும். சோசியல் ஸ்கில்ஸ் எனப்படும் சமூகத்தினுடன் நெருங்கி பழகும் விளையாட்டுகளை, சந்தர்ப்பங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதெல்லாம் தானாக புரிந்துவிடுகிறது. 

அன்பும் பாதுகாப்பும் நிறைந்த வீட்டுச் சூழல், உடலுக்கும் மனதுக்குமான கள விளையாட்டுகள் மற்றும் பிடித்த பொழுதுபோக்கில் ஈடுபாடு என மனதைத் திருப்பிக்கொள்ள உளவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் பெரும்பாலும் அதற்கு சாத்தியப்படாமல் வீட்டுச் சிறையில் மாட்டிக்கொள்ளும் மாணவர்கள் ஐந்து இன்ச் செல்ஃபோனில் உலகையே காண்கின்றனர்.. 

சரியான திரைக்கதை, வசனங்கள், ஒளிப்பதிவு, நடிகர்கள் என சமூகத்துக்குத் தேவையான ஒரு கதையையும் கொடுத்திருப்பதே  Adolescence தொடரின் வெற்றிக்குக் காரணமாயிருக்கிறது. எதிர்காலத்தின் நன்மைக்காக தவிர்க்க முடியாத ஒரு வலைத்தொடராகியுள்ளது .

Author Image

சவிதா

கவிஞர், எழுத்தாளர். தொலைக்காட்சி நாடகங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
start cameara02

ஸ்டார்ட் கேமரா! மார்கஸ் பார்ட்லே - 02

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?