The Talkie
Saturday, April 11, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள் உலகத் திரைப்படங்கள்

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

The Talkie by The Talkie
March 16, 2025
in உலகத் திரைப்படங்கள், கட்டுரைகள்
A A
2
Irunda-Pakkam
Share on WhatsappShare on FacebookShare on Twitter


Author Icon ஹரிஹரசுதன் தங்கவேலு

மனித நாகரிகத்தின் மிக முக்கியக் கண்டுபிடிப்பாக நெருப்பைக் குறிப்பிடுவார்கள். பிறகு சக்கரம், ஆடை என மனிதன் தனக்கான தேவைகளுக்காக எதையாவது கண்டுபிடித்துக் கொண்டே தான் இருந்தான். நமது டிசைன் அப்படி. சும்மா இருக்க மாட்டோம். இப்படியாக கடந்த நூற்றாண்டின் ஓர் அற்புத வரவு, இணையம். கடிதங்களிலும், தொலைபேசிகளிலும் நேசித்திருந்த இதயங்களை ‘வாங்கடா கணினிக்கு’ என இழுத்து வந்தது. மனிதத் தொடர்புகளை இன்னும் இலகுவாக்கியது. மை கொண்டு எழுதியிருந்தவர்களை, மை டியர் என திரையில் டைப் செய்ய வைத்தது, முத்தங்கள் ஸ்மைலிகளானது. மொபைல் டேட்டா உயிர் சுவாசமானது. இன்று பூவுலகில் உயிர் வாழ்ந்திருக்கும் ஜீவராசிகளை விட மொபைலில் எடுக்கப்படும் புகைப்படங்கள் அதிகமாம். சரி அப்படி அதிகம் செல்பிகள் க்ளிக்குவது ஆண்களா பெண்களா என எழுதலாம் தான் !! அப்புறம் டிவிட்டரில் அடிப்பார்கள் வேண்டாம்.

சரி ! இத்தனை ஆற்றல் வாய்ந்த, அன்பிற்கினிய இணையம் நன்மைகளை மட்டும் தருகிறதா என்றால், நிச்சயமாக இல்லை. சமூக வலைதளங்களின் வருகை வரை எல்லாம் நலமாகத் தான் இருந்தது. அதன் பிறகு நிகழ்ந்தது ஒரு தொழில்நுட்பப் பிரளயம். எல்லோரும் எல்லாரையும் திட்டினார்கள், இணையத்தில் எதைப் பதிந்தாலும் வேலிடேஷன் எதிர்பார்த்தார்கள். ட்ரம்ப் பதவி ஏற்பிற்கு வாழ்த்துகள் பதிவிட்ட சுந்தரம் மாமாவின் கமெண்டுக்கு ட்ரம்ப் பதில் அளிக்கவில்லையாம். ரெண்டு நாளாக கோபித்துக் கொண்டு ட்விட்டர் திறக்கவே இல்லை. ஆனால் இன்ஸ்டாவில் ரீல் மட்டும் பார்த்திருந்தார். சுந்தரம் மாமாவின் இந்த வலி நிறைந்த முடிவிற்கு ட்ரம்ப் மட்டும் காரணமில்லை. “ மாப்ள ! புது வேலை, ட்ரம்ப் ரிப்ளை போடலை. சரி! ஆனா இந்த மெலேனா புள்ளக்கு என்ன, அதுவும் அந்த தொப்பி குறித்து கூட ஒரு கமெண்ட் போட்டிருந்தேன்! அதுக்கும் ரிப்ளை பண்ணல”, எனக் கோபித்துக் கொண்டார். வாழ்வு தான் எவ்வளவு கொடுமையானது.” மாமா ! நீங்க கமலா ஹாரிசிற்கு போட்டிருக்கலாம் ! சும்மா இருப்பதால் நிச்சயம் ரிப்ளை பண்ணுவார்” என்றேன்.

ஆக இணையத்தில் எதைச் செய்தாலும் அது முதலில் பார்க்கப்பட வேண்டும், பிறகு பாராட்டப் படவேண்டும், அதோடு நில்லாமல் லைக் ஷேர் கமெண்டுகளின் மூலம் அது அங்கீகரிக்கப்பட வேண்டும். இதை செய்யவில்லை என்றால் எவ்வளவு உற்ற நண்பனாக இருந்தாலும் அவன் அன்றே நமக்கு எதிரி தான் ! வாட்சப்பில் துரோக ஸ்டேட்டஸ் வைத்து விட்டு பிளாக் செய்து விட வேண்டும். இப்படியான ஒரு டிஜிட்டல் மாயையில் சிக்கியிருப்பதன் உச்சம் எது என்பது தான் Black Mirror தொடர்,

எதிர்காலத் தொழில்நுட்பம் அதனால் ஏற்படும் சமூக மாற்றங்கள், உளவியல் தாக்கங்கள், டிஜிட்டல் சம்பிரதாயங்கள் என இத்தொடர் ஒரு பேரனுபவம்! ஆறு பகுதிகள், 26 அத்தியாயங்கள் என இருக்கும் இத்தொடரின் ஒரு சிறப்பு! ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு தனிக்கதை! ஆக நீங்கள் எந்த அத்தியாயத்தில் இருந்தும் பார்க்கத் துவங்கலாம்!

26 அத்தியாயங்களும் அற்புதம் எனினும், என்னை அதிர வைத்த சில அத்தியாயங்கள் இவை.

Nosedive – (மூன்றாம் பாகத்தின் முதல் அத்தியாயம் )



இன்று விற்பனை பொருட்கள் மற்றும் படைப்புகளுக்கு ரேட்டிங் இருப்பது போல மனிதர்களுக்கும் ஐந்து நட்சத்திர மதிப்பீடு கொண்டு மதிப்பிடும் ஒரு கால கட்டத்தில் நிகழும் கதை! உங்களது ஒவ்வொரு நாள் நடவடிக்கை, சமூகவலைதள பதிவுகள், நேரடி சந்திப்புகள், நீங்கள் பேசும் விதம் என அனைத்தும் பிறரால் மதிப்பிடப்பட்டு ரேட்டிங் வழங்குவார்கள், இதைக் கொண்டு தான் உங்கள் சமூகப் பொருளாதார நிலை ஒப்பிடப்படும். 4.5 மதிப்பீடுகளுக்கு மேல் வைத்திருந்தால் சமூகத்தின் உயர்ந்த நிலை மனிதராக கருதப்படுவீர்கள். மருத்துவம், சேவைகள், நட்பு என எல்லாவற்றிலும் முன்னுரிமை இவர்களுக்கு தான்! கிட்டத்தட்ட நம் இன்ஸ்டா பிரபலங்கள் போல என வைத்துக் கொள்ளுங்கள்.

லாசியின் நோக்கம் ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க வேண்டும்! அதற்காக பணம் சேமித்து வருகிறார். ஆனால் தனது ரேட்டிங் 4.2, இதுவே 4.5 என இருந்தால் ஒரு மிகப்பெரும் தொகை தள்ளுபடி செய்யப்படும். ஆக தனது மதிப்பீட்டை மூன்று புள்ளிகள் உயர்த்தும் முயற்சியில் இறங்குகிறார் லாசி. யாரைப் பார்த்தாலும் இன்முகமாக சிரிக்கிறார், வலிய சென்று உதவிகள் செய்கிறார், மிகக் கனிவாக நடந்து கொள்கிறார். ஆனாலும் கல் நெஞ்சம் கொண்ட சமூகம், ஓலா ஆட்டோவிற்கு ரேட்டிங் போடுவது போல கடுமை காட்டுகிறது! என்ன செய்தும் புள்ளிகள் ஏறவில்லை! 4.5 மதிப்பீடுகளுக்கு மேல் வைத்திருக்கும் நபர்களை ஏக்கமாகப் பார்க்கிறார் லாசி. அதில் அவளது பால்ய நண்பி நவோமி இருக்கிறார் ! அவளது கவனத்தை கவரும் விதமாக தாங்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய பொம்மையை லாசி பதிவிட அதற்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங் தந்து அங்கீகரிக்கிறார் தோழி நவோமி! அது மட்டுமின்றி தனது நிச்சயதார்த்த விழாவில் மணப்பெண் தோழியாக ஒரு நட்புரை வழங்க லாசிக்கு வாய்ப்பு தருகிறார் ! லாசிக்கு மகிழ்ச்சி தாளவில்லை! இதை மட்டும் சரியாக செய்து விட்டால் வந்திருக்கும் விருந்தினர்கள் தனக்கு தரும் ரேட்டிங்கில் நிச்சயம் தனது ரேட்டிங் 4.5 கடந்து உயர்ந்து விடும், வீட்டை வாங்கி விடலாம் என நினைக்கிறார் ! ஆனால் இணையம் யாரை விட்டது?

நிச்சயதார்த்த தினம் அன்று, லாஸியின் விமானம் ரத்தாகி விடுகிறது! இன்னொரு விமானத்தில் ஒரே ஒரு இருக்கை தான் இருக்கிறது, ஆனால் அது 4.5 ரேட்டிங் இருந்தால் தான் தர முடியும் என்கிறார் விமான நிலையப் பணிபெண்! தனது நிலையை சொல்லி கெஞ்சி கதறுகிறார் லாசி! எவரும் மனம் இறங்கவில்லை, ஒரு கட்டத்தில் கோபத்தில் லாசி பொங்கி எழ, விமான நிலையக் காவலர்களால் கைது செய்யப்படுகிறார்! அதைப் பார்த்து பலர் நெகட்டிவ் ரேட்டிங் செய்ய லாசியின் மதிப்பீடு 4க்கும் குறைவாகிறது! இதில் காவலர்கள் வேறு ‘டபுள் டேமேஜ்’ தண்டனை தர, அவரது ரேட்டிங் இன்னும் வீழ்கிறது! இதனால் விமானத்தில் செல்ல முடியாமல் ஒரு பழைய காரை வாடகைக்கு எடுத்து விழா இடத்திற்கு செல்கிறார்! வழியில் எரிபொருள் இன்றி கார் நின்று விடுகிறது, ரேட்டிங் இல்லாததால் எரிபொருளும் லாசிக்கு மறுக்கப்படுகிறது! லாசியால் துயரத்தை தாங்கிக் கொள்ளவில்லை! பார்த்து பார்த்து சேர்த்த மதிப்பீடுகள் எல்லாம் இப்படி ஒரே நாளில் வீழ்கிறதே என கிடந்து துடிக்கிறார்! அவரது ஒரே நம்பிக்கை, எப்படியாவது நிகழ்வில் சென்று நல்லபடியாக பேசி விட்டால் கிடைக்கும் ரேட்டிங் மூலம் எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என நம்புகிறார், நிச்சயதார்த்த விழா நோக்கி விரைகிறார் !

ஆனால், லாஸியின் ரேட்டிங் கடுமையாக வீழ்ந்திருப்பதை கண்டு நவோமி தனது விழாவிற்கு அவரை வர வேண்டாம் என சொல்கிறாள். உன்னால் எனது ரேட்டிங்கும் பாதிக்கும் என விளக்குகிறார்! இருந்தும் தனக்கான அங்கீகாரத்தை தேடி லாசி விழாவிற்குள் நுழைகிறார்! பிறகு என்ன நடந்தது என்பதை நெட்ப்ளிக்ஸில் பாருங்கள்! ரேட்டிங் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அற்புதமான கெட்ட வார்த்தைகளால் லாசி அர்ச்சிக்கும் இந்த அத்தியாயத்தின் இறுதிக் காட்சி ஒரு கவிதை, நிச்சயம் மிஸ் செய்து விடாதீர்கள்!

இதே போல மனதை நெகிழ வைக்கும் இன்னொரு அத்தியாயம் ,

Fifteen Million Merits



அறை முழுவதும் டிஜிட்டல் திரையால் சூழ்ந்த ஒரு காலம்! 24 மணிநேரமும் பார்ப்பதற்கு நிகழ்ச்சிகள் வந்து கொண்டே இருக்கும்! விளம்பரங்களும் தான்! ஒரே ஒரு விஷயம் நீங்கள் கண்களை ஒரு நொடி மூடினாலும் இவை நின்று விடும், இதைப் பார்ப்பதற்கு நீங்கள் கண்களைத் திறந்தே ஆக வேண்டும்! அப்படி செய்தால் உங்களுக்கு ‘மெரிட்’ எனப்படும் புள்ளிகள் கிடைக்கும்! இந்த மெரிட் பாயிண்ட்ஸ் தான் இங்கு பணம் போல ! நீங்கள் காலை பல் துலக்கும் பேஸ்ட் முதல் உண்ணும் உணவு, வாழ்வு, கேளிக்கை என அனைத்தும் இந்த புள்ளிகள் தந்து தான் வாங்க வேண்டும்! ஒரு விளம்பரத்தை பார்க்க வேண்டாம் என ஸ்கிப் செய்ய வேண்டும் என்றாலும் கணிசமான புள்ளிகள் கட்டணம் தர வேண்டும்!

பிங் தான் இக்கதையின் நாயகன்! அவனது இறந்த போன தம்பியின் புள்ளிகளையும் சேர்த்து பிங்கிடம் மில்லியன் புள்ளிகள் இருக்கின்றன ! அதை சொகுசாக செலவு செய்து வாழ்ந்து வருகிறான்! அப்போது அபி எனும் பெண்ணிடம் காதலில் விழுகிறான்! அபி அற்புதமாகப் பாடக் கூடிய திறமை கொண்டவள்! ஹாட் ஷாட் எனும் திறமைக்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது அவளது கனவு! இதற்கு பிங் உதவுகிறான்! தனது வாழ்நாள் சேமிப்பு புள்ளிகள் மொத்ததையும் தந்து அபிக்கு அந்த நிகழ்வில் போட்டியாளராகக் கலந்து கொள்ளும் தங்க டிக்கெட் வாங்குகிறான்! அபி போட்டியில் கலந்து கொள்கிறாள்! மிக அற்புதமாகப் பாடுகிறாள்! ஆனால் மக்களுக்கு பிடிப்பதில்லை! குழம்பி நிற்கும் அபியின் மனதை நடுவர்களில் ஒருவன் மாற்றுகிறான்! நீ பாடுவதை விட பாலியல் தொழிலாளியாக மாறினால் பணமும் புகழும் கொட்டும் என்கிறான்! அபி தவறான பாதையை தேர்வு செய்கிறாள்!

இப்போது அபியின் பாலியல் விளம்பரம் திரையில் தோன்றுகிறது! அதைப் பார்க்க முடியாமல் ஸ்கிப் செய்யும் அளவு கூட பிங் கிடம் பாயிண்ட்ஸ் இல்லை! அபியை இப்படி மாற்றிய இந்த சமூகத்திற்கும், ஹாட் ஷாட் நிகழ்ச்சிக்கும் ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்கிறான் பிங். மீண்டும் புள்ளிகளை சம்பாதிக்கத் துவங்குகிறான்! உணவு மறுத்து, உறக்கம் மறுத்து பாயின்ட்ஸ் களை சேர்பதை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறான்! சில மாதங்களில் மில்லியன் பாயிண்ட்ஸ் சேர்ந்ததும் நிகழ்ச்சிக்கான தங்க டிக்கெட்டை வாங்குகிறான்! போகும் வழியில் ஒரு கூரிய உடைந்த கண்ணாடியை யாருக்கும் தெரியாமல் நிகழ்சிக்குள் கொண்டு செல்கிறான்! மேடை ஏறுகிறான் பிங்! பிறகு என்ன செய்தான் என்பதை நீங்கள் நிச்சயம் நெட்பிளிக்லில் பார்த்து விடுங்கள். விளம்பர மோகம்! மக்களின் ரசனை, அதனால் ஏற்படும் மாற்றங்கள் என இந்த அத்தியாயம் ஒரு தனித்துவமானது.

இதே போல ஒரு பரபரப்பான ஒரு திரில்லர் போல அமைந்த மற்றுமொரு Black Mirror அத்தியாயம்,

The National anthem,


பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் இளவரசி கடத்தப்படுகிறாள். அவரை உயிரோடு விட வேண்டும் எனில், பிரிட்டிஷ் பிரதமர், தொலைக்காட்சி நேரலையில் பன்றியோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என பகீர் நிபந்தனை வைக்கிறான் கடத்தல்காரன். உலகம் அதிர்கிறது, மீடியாக்களில் விவாதம் துவங்குகிறது. மக்கள் கமெண்ட்ஸ்களில் அடித்துக் கொள்கிறார்கள். முதலில் சாதாரணமாகத் துவங்கும் விவகாரம், இளவரசியின் விரலை வெட்டி கடத்தல்காரன் அனுப்பியதும் பூதாகரமாக வெடிக்கிறது. கடத்தல்காரனை பிடிக்க முடிந்ததா! பிரதமர் என்ன செய்தார் என்பதெல்லாம் தான் பரபர வைக்கும் திரைக்கதை! இப்படியெல்லாம் எந்த நாட்டிலாவது கதை எழுதி அதை படமாக்கி விட முடியுமா என்று அச்சம் கொள்ள வைக்கும் தயாரிப்பு இது! காரணம் இப்போது இருக்கும் சூழ்நிலைகளில் அரசியல் தலைவர்கள் பற்றி என்ன எழுதினாலும் ஐடி விங் ‘ஆட்டோ’பாட் வைத்து தூக்குகிறார்கள். அப்படியிருக்கும் காலகட்டத்தில் படைப்பு சுதந்திரத்தின் உச்சம் இந்த அத்தியாயம். மீடியாக்களின் எக்ஸ்லூஸிவ் வெறி, நொடிக்கு நொடி மாறும் மக்கள் மன நிலை! கருத்துக் கணிப்புகள் என ஒரு அதிரடி அட்டகாசம் இது! நிச்சயம் பாருங்கள்.

Balck Mirror தொடர் தவிர்த்து தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகளில் என்னைக் கவர்ந்த சில திரைப்படங்கள் இவை!

Ctrl (2024) திரைப்படம்.

This image has an empty alt attribute; its file name is CTRL-1024x512.jpg



நெல்லா தனது காதலன் ஜோ வுடன் இணைந்து செய்யும் வி-லாக் பதிவுகள் பிரபலம்! ஒரு கட்டத்தில் காதல் முறிவு ஏற்பட, ஜோ குறித்த நினைவுகளில் இருந்து மீள ஒரு செயற்கை நுண்ணறிவு செயலியை தரவிறக்குகிறார் நெல்லா. ஒரு மெய்நிகர் நண்பனாக அறிமுகம் ஆகி, அச்செயலி நெல்லாவை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என இதுவும் ஒரு அட்டகாசமான திரில்லர் தான்!

Ex Machina (2014)



இது ஒரு அறிவியல் புனைகதை திரில்லர். காலெப் ஒரு ப்ரோகிராமர். ஒரு போட்டியில் வெற்றி பெற்ற அவர், தனது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நாதனின் தொலைதூர தோட்டத்தில் ஒரு வாரம் தங்கியிருக்க அழைக்கப்படுகிறார். அங்கு, டூரிங் சோதனை மூலம் ‘அவா’ என்ற மேம்பட்ட ஒரு AI ரோபாட்டை மதிப்பீடு செய்யும் பணி காலெப்பிற்கு வழங்கப்படுகிறது. காலேப் அவாவுடன் பேசும் பொழுது, அதன் மீது தனிப்பட்ட உணர்வுகளை வளர்த்துக் கொள்கிறார், அவா மிக அழகாக காலேப்பை நம்ப வைத்து ஏமாற்றுகிறது! தான் ஒரு செயற்கை நுண்ணறிவிடம் ஏமாந்து போகிறோம் எனத் தெரியாமலேயே ஏமாறுகிறார் கலெப், பிறகு என்ன நிகழ்ந்தது என்பது தான் கதை!

Unfriended (2014)


இது ஒரு ஹாரர் வகை திரைப்படம்! உயர்நிலைப் பள்ளி நண்பர்கள் குழு ஒன்று ஸ்கைப் இல் அரட்டையடிக்கும்போது, ஒரு அறியப்படாத பயனர் அவர்களின் அழைப்பில் இணைகிறார். நண்பர்களை ஒரு கொடூர விளையாட்டிற்கு நிர்பந்திக்கிறார். முதலில் மறுக்கும் நண்பர்கள் மிரட்டப்படுகிறார்கள், ஒவ்வொருவர் குறித்த ரகசியங்களை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் எதிராகத் திரும்புகிறார்கள். பிறகு பயங்கரமான வழிகளில் ஒவ்வொருவரும் இறக்கின்றனர். இறுதியில், கடைசியாக தப்பிப்பிழைத்த பிளேயர் என்ன செய்கிறார் என்பது தான் கதை, Cyber Bullying எனப்படும் இணைய மிரட்டல் மற்றும் உளவியல் தாக்குதல்களின் பாதிப்பை சொல்லும் படம் இது.

Truman Show (1998 )


ஜிம் காரியின் நடிப்பில் வெளிவந்த ஒரு அட்டகாசமான திரைப்படம். ட்ரூமன், தனக்குத் தெரியாமல் ஒரு மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவில் பிறந்து வளர்கிறார். அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது, ஆனால் அவரைச் சுற்றியுள்ள குடும்பம், நண்பர்கள், சக ஊழியர்கள், காதலி என அனைவரும் நடிகர்களே. இது எதுவுமே ட்ரூமனுக்கு தெரியாது. ட்ரூமனின் உலகம் என்பது ஒரு மிகப்பெரிய திரைப்பட செட்,
சில சந்தேகமான சம்பவங்களை எதிர்கொண்ட பிறகு, ட்ரூமன் உண்மையை கண்டுபிடிக்க முயல்கிறார். ஆனால் நிகழ்ச்சியின் இயக்குனர் கிரிஸ்டோஃப், அவரை கட்டுப்படுத்த பல வகையான தந்திரங்களைப் பயன்படுத்துகிறார். கடைசியில், ட்ரூமன் தனது ‘செட்’ உலகத்தின் எல்லையை அடைந்து, நிஜ உலகத்திற்குள் செல்லும் வாயிலைக் கண்டுபிடிக்கிறார். பிறகு அதிலிருந்து தப்பி வெளியேறினாரா என்பது தான் கதை! நாம் வாழும் வாழ்வு, இச்சமூகம் இதெல்லாம் உண்மையா, இல்லை போலியான நடிகர்களா என ஒரு வியப்பை ஏற்படுத்தும் படைப்பு இது.

Transcendence (2014)



முன்னணி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளரான டாக்டர் வில் காஸ்டர் அவரது விரோதிகளால் தாக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறார். அப்போது அவரது மனைவி காஸ்டரின் அறிவுத்திறனை ஒரு சூப்பர்கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்கிறார்.

இப்போது சூப்பர் கம்ப்யூட்டர் மூலம், டிஜிட்டல் வடிவில், மிக வேகமாக வளர்ச்சி அடைந்து, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகிறார் காஸ்டர், பெரும் நோய்களைக் கூட குணமாக்குகிறார். பங்கு சந்தையில் நுழைகிறார். பணம் ஈட்டுகிறார். டிஜிட்டல் உயிராக எல்லா இடங்களிலும் நீக்கமற நுழைகிறார். ஆனால், அவரது அதிகமான சக்தி மனிதர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. அரசும் புரட்சியாளர்களும் இணைந்து அவரை நிறுத்த முயலுகிறார்கள். கடைசியில் இணையத்தில் உயிர் வாழும் காஸ்டரை எப்படி அழிக்கிறார்கள் என்பது தான் கதை. ஒரு வித்தியாசமான திரைப்படம்! நிச்சயம் பாருங்கள்.

இதில் இன்னும் பெருமைக்குரிய படைப்புகளாக Her (2013), In Time (2011), The Circle (2017), The Social Dilemma (2020) ஆகியவைகளைக் குறிப்பிடலாம். இது போல இணையத் தொழில்நுட்பம் சார்ந்த உங்களுக்குப் பிடித்த படங்கள், தொடர்கள் இருந்தாலும் தெரிவியுங்கள். பார்ப்போம்.

Author Image

ஹரிஹரசுதன் தங்கவேலு

அங்கீகரிக்கப்பட்ட ஹேக்கிங் நிபுணர். எழுத்தாளர், வசனகர்த்தா, இஸ்ரோவின் கதை, AI என்னும் ஏழாம் அறிவு இரண்டும் கவனம் ஈர்த்த இவரது புத்தகங்கள். ஆனந்த விகடனில் இவர் எழுதிய ‘இருள்வலை வில்லன்கள்’ சமீபமாக பலருடைய கவனத்தையும் பெற்றிருந்தது.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post

யார் உங்கள் பார்வையாளர்?

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?