The Talkie
Saturday, April 11, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home உரையாடல்

க்வென்டின் டாரண்டினோ நேர்காணல்

The Talkie by The Talkie
December 24, 2025
in உரையாடல்
A A
0
quentin dratino
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon காயத்ரி ஆர்.

தமிழ்த் திரைப்பட ரசிகர்கள், இயக்குநர்களுக்கு விருப்பமானவர்  க்வெண்டின் டான்ரண்டினோ. அமெரிக்காவின் சமகால முகம். அதிகம் அறிமுகம் தேவைப்படாத ஒரு இயக்குநர். அவரது படங்களைப் போலவே நேர்காணல்களும் எப்போதுமே சுவாரஸ்யம் தருபவை.

மிஸ்டர் டாரன்டினோ, உங்கள் படங்களைப் பார்க்கும்போது எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது. உங்களுக்குப் பெண்களின் பாதங்கள் மீது அதீத மோகமோ?

நான் மறுக்கமாட்டேன். பாதங்கள் மீது மோகம் கொண்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட இயக்குநர்களைப் பற்றி நீங்கள் யோசித்தால், அதில் ஆல்பிரட் ஹிட்ச்காக், புனுவேல், சாமுவேல் ஃபுல்லர் போன்றோர் இருப்பார்கள்.

அவர்கள் கேமராவை எங்கு வைக்க வேண்டும் என்று அறிந்திருந்ததால்தான் அவர்கள் சிறந்த இயக்குநர்களாக இருந்தார்கள் என்பதையும் இது உணர்த்துகிறது. ஆனால், என் படங்களில் கால்களுக்கும் பின்புறத்திற்கும் ஏறக்குறைய சமமான முக்கியத்துவம் கிடைக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

வன்முறைக்கும் கூட.

நான் என் கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். எனக்குத் திரைப்பட வகைகளுக்குள்ளும், அதன் துணை வகைகளுக்குள்ளும் பயணிப்பது பிடிக்கும். நான் கையாளும் திரைப்பட வகைகளில் பரபரப்பான, வன்முறை நிறைந்த விஷயங்கள் உள்ளன.

அது க்ரைம் படங்களாகவோ,  குங் ஃபூ படங்களாகவோ, சாமுராய், ஸ்லாஷர் படங்களாகவோ, கார் சேசிங்கோ, எதுவாக இருந்தாலும் சரி… அவை இயல்பாகவே வன்முறைக்கு வழிவகுக்கின்றன. பரபரப்பான சினிமா என்று வரும்போது, ​​அந்தத் திரைப்பட வகைகள் நெஞ்சை உறைய வைக்கும் வன்முறை நிறைந்த சினிமாவாகத்தான் இருக்கின்றன. அவை எனக்குப் பிடிக்கும். ஆனால் Jackie Brown படம் வன்முறை நிறைந்ததல்ல. அது முழுக்க முழுக்க கதாபாத்திரங்களைப் பற்றியது.

எப்படி இவ்வளவு தத்ரூபமான கதாபாத்திரங்களை உருவாக்குகிறீர்கள்?

இதற்கு நான் சொல்லும் பதில் எந்த வகையிலும் வேடிக்கையானது அல்ல. அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன். அதுதான் என் வேலை. தன்னைப்பற்றி மட்டும் எழுதுவது அல்ல ஒரு எழுத்தாளனின் வேலை. மற்ற மனிதர்களையும் கவனித்து, ஆராய்ந்து அவர்களைப் பற்றியும் எழுதுவதுதான். மற்றவர்கள் பேசும் விதம், அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்கள் என அனைத்தையும் கவனிப்பது.

மட்டுமல்லாமல், என் மூளை ஒரு பஞ்சு போன்றது. எல்லோரும் சொல்வதை நான் உள்வாங்குகிறேன். மக்களின் சிறிய தனித்துவமான பழக்கவழக்கங்களைக் கவனிக்கிறேன். யாராவது என்னிடம் ஒரு நகைச்சுவையைச் சொன்னால் அதை நினைவில் வைத்துக்கொள்கிறேன். மக்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான கதையை என்னிடம் சொன்னால், அதையும் நான் நினைவில் வைத்துக்கொள்கிறேன்.

ஒருவேளை அது உங்களுக்கு நினைவில் இல்லையென்றால்?

அப்படியென்றால், அது நினைவில் வைத்துக்கொள்ளத் தகுதியானது அல்ல என்றுதான் அர்த்தம். விஷயம் என்னவென்றால், அது என் மனதில் இருக்கும். அது ஆறு மாதங்களோ அல்லது பதினைந்து வருடங்கள் கழித்தோ, புதிய கதாபாத்திரங்களை எழுதும்போது, ​​என் பேனா ஒரு ஆன்டெனா போல செயல்பட்டு, அந்தத் தகவலைக் கொண்டு வந்துவிடும். திடீரென்று அந்தக் கதாபாத்திரங்கள், ஏறக்குறைய… முழுமையாக உருவான நிலையில் வெளிவருகின்றன. நான் அவர்களின் உரையாடலை எழுதுவதில்லை. அவர்களையே பேச வைக்கிறேன்.

மீண்டும் வன்முறை என்ற விஷயத்திற்கு வருவோம். தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எதைப் பார்த்தால் பயம்?

சந்தேகமே இல்லாமல், எனக்கு இருக்கும் ஒரே பயம்… பகுத்தறிவற்ற விஷயம்தான்… இருந்தாலும்,  எலிகளைப் பார்த்தால் ரொம்ப பயம்.

நிஜமாகவா?

என்னை பலவீனப்படுத்தும் என்று சொல்லக்கூடிய ஒரே விஷயம் இதுதான். இந்த மேஜையில் ஒரு எலி இருந்திருந்தால், நான் ஏதேனும் ஒரு பெண்ணின் மடியில் இருந்திருப்பேன். ஒருவேளை நான் அவளுடைய தோள்களின் மீது நின்று கொண்டு, காட்டுக் கத்தலாகக் கத்திக்கொண்டிருந்திருக்கலாம்.

உங்களுக்கு எப்போதாவது பயங்கரமான கனவுகள் வருமா?

பயங்கரக் கனவுகள் வந்து வெகு நாட்களாயிற்று. நீங்கள் சிறு குழந்தையாக இருக்கும்போது, ​​பயங்கரமான கனவு வந்தால் நீங்கள் உங்கள் பெற்றோரின் படுக்கையில் ஏறிப் படுத்துக்கொள்வீர்கள். ஆனால் என் அம்மா மிகவும் கண்டிப்பானவர். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, அவர்கள் என்னை என் படுக்கைக்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

அதன் பிறகு, அம்மாவைப் பார்க்க ஓடிச் செல்ல முடியாது என்பதால், பயங்கரக் கனவுகள் காணும் வசதி இனி எனக்கு இல்லை என்பதை நான் உணர்ந்தேன். அதனால், அதன் பிறகு பெரும்பாலும் அத்தகைய கனவுகள் வருவதில்லை.

என்றாவது ஒரு நாள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களா அல்லது அவர்கள் உங்கள் ஆற்றலைக் குறைத்துவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா?

என்ன நடக்கிறது என்று பார்ப்போம், ஆனால் நான் என்றென்றும் திரைப்படங்கள் செய்யப் போவதில்லை. எனக்கு 60 வயது ஆகும்போது நிறுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் அதில் உறுதியாக இருக்கிறீர்களா?

இல்லை, ஆனால் அதுதான் திட்டம். விருந்திலிருந்து எப்போது வெளியேற வேண்டும் என்று தெரியாத, வயதான மனிதர்களுக்கான படங்களை உருவாக்கும் ஒரு வயோதிக திரைப்பட இயக்குநராக நான் இருக்க விரும்பவில்லை. மட்டுமல்லாமல், வயோதிகத்தனமான விஷயங்களால் என் திரைப்படப் பட்டியலை நான் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நான் என் முடிவை மாற்றிக்கொள்ளக்கூடும்.

எனக்கு ஒரு படம் இயக்க வேண்டும் என்று தோன்றி, 62 வயதில் என்னால் அது முடிந்தால் நான் செய்வேன். ஆனால், நான் வெற்றியுடன் களத்தை விட்டு வெளியேற விரும்புகிறேன். நீங்கள் இப்போது பார்க்கும் இந்த மனிதன், இவனே படங்களை உருவாக்கும் மனிதனாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த முதுமையானவன் அல்ல. நான் அந்த வயதில் ஒரு இலக்கியவாதியாக இருக்கவே விரும்புகிறேன். சினிமா புத்தகங்கள் எழுதுவது, நாவல்கள் எழுதுவது, குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது போன்றவற்றைச் செய்ய நினைக்கிறேன்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தோராயமாக எத்தனை திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள்?

எனக்குத் தெரியவில்லை. என்னால் யூகிக்கக்கூட முடியவில்லை. 17 முதல் 22 வயது வரை, நான் திரையரங்குகளில் பார்த்த ஒவ்வொரு திரைப்படத்தையும், மறுவெளியீட்டுத் திரையரங்குகளில் பார்த்த படங்களையும் ஒரு பட்டியல் போடுவேன். அது ஒரு புதிய வெளியீடாக இருந்தால் அந்த எண்ணைச் சுற்றி ஒரு வட்டம் போடுவேன்.

எனக்குப் பிடித்த படங்களைத் தேர்ந்தெடுத்து, என்னால் முடிந்த சிறிய விருதுகளை வழங்குவேன். 197லிருந்து 200 படங்கள் வரை எண்ணிக்கை இருக்கும். நான் தீவிரமாகத் திரைப்படங்கள் பார்த்த அந்த நாட்களில் 200 படங்கள் என்பதுதான் சராசரி எண்ணிக்கை.

மிக அதிகமான எண்ணிக்கை என்று நினைக்கிறேன். உங்களுக்குப் பிடித்தமான மூன்று படங்கள்?

இன்று, இந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் நீங்கள் என்னிடம் கேட்டால், நான் மூன்று படங்களைச் சொல்வேன். நாளை அல்லது இன்னும் ஆறு மணி நேரம் கழித்து நீங்கள் என்னிடம் கேட்டால், அது மாறுபடும்.

சரி! இப்போது என்ன பிடிக்கும்?

நான் Abbott and Costello Meet Frankenstein  என்று சொல்வேன். ஏனென்றால் நான் சிறு பையனாக இருந்தபோது அந்தப் படத்தைப் பார்த்தேன், அது அந்த நேரத்தில் எனக்கு மிகவும் பிடித்த படமாக இருந்தது. அதற்குக் காரணம், அதில் இருந்த வெவ்வேறு வகைகளின் கலவைதான். அபோட் மற்றும் கோஸ்டெல்லோவின் காட்சிகள் மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஃபிராங்கன்ஸ்டைன் வரும்போது மிகவும் பயமுறுத்துவதாக இருக்கும். எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது நான் இப்படி வகைகளைப் பிரித்துப் பார்க்கிறேன் என்று எனக்குத் தெரியாது. என் வாழ்க்கை முழுவதும் நான் அதைத்தான்…அதாவது வெவ்வேறு வகைமைகளை ஒன்றாகக் கலப்பது…

அதைத்தான் செய்து வருகிறேன்.  பிடித்த படங்களில் ஒன்றாக Taxi Driver  படத்தையும் சேர்ப்பேன். அதற்கான காரணத்தைச் சொல்வது சற்று கடினம். Taxi Driver  படத்தின் தாக்கத்தை ஓரிரு வாக்கியங்களில் சுருக்கிச் சொல்லிவிட முடியாது. என் கருத்துப்படி, சினிமா வரலாற்றிலேயே அதுதான் மிகவும் நாவல் தன்மை கொண்ட, சிக்கலான ஒரு கதாபாத்திர ஆய்வாக இருக்கும். நாவல்களில் மட்டும்தான் ஒரு கதாபாத்திரம் இப்படிச் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். ஆனால் அதே நேரத்தில், மிகவும் பொழுதுபோக்கு நிறைந்த ஒரு திரைப்படம். Taxi Driver படம் முழுவதும் சிரிப்புக்குரிய தருணங்கள் உள்ளன. அடுத்த படம் The Good, the Bad and the Ugly.

உங்களுக்குப் பிடிக்காத ஏதேனும் திரைப்பட வகைமைகள் உண்டா?

எனக்கு எல்லாமே பிடிப்பதில்லை. எனக்கு வரலாற்றுப் படங்கள் பிடிக்கும், ஆனால் நான் அந்த ஆடை அலங்கார ரசிகன் அல்ல. நான் சற்றும் மதிக்காத மற்றொரு வகை திரைப்படம் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள். அவை நடிகர்கள் ஆஸ்கர் விருதுகளை வெல்வதற்கான ஒரு பெரிய சாக்குப்போக்கு மட்டுமே. அது ஒரு மோசமான சினிமா.

ஏன்?

மிகவும் சுவாரஸ்யமான ஒரு நபரின் வாழ்க்கையைக்கூட, ஆரம்பம் முதல் இறுதி வரை நீங்கள் சொன்னால் அது மிகச் சலிப்பூட்டும் திரைப்படமாகிவிடும். நீங்கள் இதைச் செய்ய விரும்பினால், அவருடைய முழு வாழ்க்கையையும் ஒரு காமிக் புத்தக வடிவில் தான் உருவாக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் எல்விஸ் பிரெஸ்லியைப் பற்றி ஒரு திரைப்படம் உருவாக்கும்போது, ​​அவருடைய முழு வாழ்க்கையைப் பற்றியும் திரைப்படம் எடுக்கக்கூடாது.

ஒரே ஒரு நாளைப் பற்றி திரைப்படம் எடுங்கள். எல்விஸ் பிரெஸ்லி சன் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்குள் நுழைந்த நாளைப் பற்றி ஒரு திரைப்படம் எடுங்கள். அவர் சன் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்குள் நுழைவதற்கு முந்தைய முழு நாளையும் பற்றி ஒரு படம் எடுங்கள். அவர் அந்த வாசலுக்குள் நுழையும்போது படம் முடிவடைய வேண்டும். அதுதான் திரைப்படம்.

உங்கள் வாழ்க்கையைப் பற்றி ஒரு திரைப்படம் எடுத்தால்… அதுவும் சலிப்பூட்டுவதாக இருக்குமா?

நான் பெருமைப்படக்கூடும். ஆனால் நான் அந்தப் படத்தைப் பார்க்க மாட்டேன்.

Author Image

காயத்ரி ஆர்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர். காயத்ரி ஆர். – எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பிரெஞ்சு மொழி பேராசிரியை. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
startcamera_07

 வி.கே மூர்த்தி-02 ஸ்டார்ட் கேமரா 07

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?