The Talkie
Thursday, April 9, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home உரையாடல்

என்யோ மோரிகோனே நேர்காணல்

The Talkie by The Talkie
June 16, 2025
in உரையாடல்
A A
0
ennio_morricone
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon காயத்ரி ஆர்.

என்யோ மோரிகோனே (Ennio Morricone) இத்தாலியர். தனது ஆறாவது வயது முதல் இசைக்குறிப்புகளை எழுதிவருபவர். இத்தாலிய, ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்தவர். Once Upon a Time in the West படத்திற்கான இவரது இசைத்தட்டு மட்டும் பத்து மில்லியன் வரை விற்று சாதித்திருந்தது.

இத்தாலியப் படங்களில் எதையெல்லாம் நாம் இன்றளவும் கிளாசிக் என்று சொல்கிறோமோ, அவற்றின் இசையமைப்பாளர் இவராகவே இருக்கிறார். பள்ளிக் கால நண்பரும்  திரைப்பட இயக்குநருமான செர்ஜியோ லியோனுடன் இவர் இணைந்ததும் அந்தப் படங்களின் தன்மை வேறு வடிவம் கொண்டன. இருவரும் இணைந்து செய்ததெல்லாம் அற்புதங்கள். அதற்கு சிறந்த ஒரு உதாரணமாக Good Bad Ugly படத்தினைச் சொல்ல முடியும்.  இசைத்துறைக்காக அளிக்கப்படும் அத்தனை உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். 

புகழ்பெற்ற இத்தாலிய இயக்குநரான குசிப்பே டோர்னடோர் இவர் குறித்த ஒரு ஆவணபப்டத்தை இயக்கியிருக்கிறார். என்யோ மோரிகோனே மறைந்தது இரண்டு வருடங்களுக்குப் பிறகு 2022ல் அது வெளிவந்தது. மிக ஆத்மார்த்தமான, என்யோவின் அக உலகை நெருங்கிப் பார்க்கும் வாய்ப்பினை ஏற்படுத்திய ஆவணப்படம் அது.

என்யோ மோரிகோனே அளித்த நேர்காணலின் மொழிபெயர்ப்பு இது.

எப்படி சினிமாத்துறைக்குள் வந்தீர்கள்?

நான் ரோமில் இசையமைப்பு படித்துக் கொண்டிருந்தபோது, ​​திரைப்பட இசையமைப்பாளராக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் சம்பாதிக்க வேண்டியிருந்ததால், பாப் பாடல்கள், நாடகங்கள், வானொலி, பின்னர் தொலைக்காட்சி இசையின் அமைப்புகளில் பணியாற்றத் தொடங்கினேன். குறிப்பாக ஒரு இசைக்குழுவுடன் பணிபுரிவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது. மட்டுமல்லாமல், நான் எழுதிய இசையை இசைப்பதைக் கேட்க அற்புதமாயிருந்தது.

இதன் மூலம் என்னை நானே தெரிந்து கொள்ளவும் முடிந்தது. என்னை தைரியமாக, பரிசோதனை முயற்சி செய்ய அனுமதித்தது. இதனால் சில இசையமைப்பாளர்கள் என்னைக் கவனிக்கத் தொடங்கினார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றச் சொன்னார்கள். எனக்கும் அது பிடித்திருந்தது.

நான் படத்திற்கு இசையமைக்கத் தொடங்கியபோது, ​​எனக்கு முன்பிருந்தவர்களைப் பற்றிக் கொஞ்சம் கூட யோசிக்கவேயில்லை. எனக்கு ரோல் மாடலாக இருந்தவர்கள் பாரம்பரிய இசைத் துறையில் இருந்தார்கள்.

வேலை தொடங்குவதற்கு முன்பு திரைப்படங்கள் ஊக்கமளிப்பதாக இருந்திருக்கிறதா?

நான் இசையமைக்கும் படத்தின் தொனி, அதன் மனநிலையைப் பற்றிய தெளிவான யோசனை எனக்கு எப்போதும் இருக்கும். இயக்குநரின் பார்வையிலிருந்து, ஸ்க்ரிப்ட்டிலிருந்து, சில சமயங்களில் அந்தப் படத்துக்கான புகைப்படங்களிலிருந்து கதையைத் தெரிந்து கொள்வேன். ஆனால் பெரும்பாலும் நான் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு சினிமாக் காட்சிகளைப் பார்க்கக் கிடைத்ததில்லை.

செர்ஜியோ லியோனியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் குழந்தைகளாக இருந்த காலத்திலிருந்தே ஒருவரையொருவர் தெரியும், இல்லையா?

நாங்கள் தொடக்கப்பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். ஆனால் ஒரு வருடம் மட்டுமே. நாங்கள் சிறந்த நண்பர்கள் என்று சொல்ல முடியாது. பின்னர், Fistful of Dollars படத்துக்கு இசையமைக்க அவர் என்னைக் கேட்டபோதுதான், எங்கள் நட்பு வளர்ந்தது. வெற்றிகரமான கூட்டணிக்கு நட்பும் பரஸ்பர நம்பிக்கையும் அவசியம்.

Once upon a Time in the West படப்பிடிப்பில் இருக்கும்போது, ​​உங்கள் இசையை ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிக்க வைக்கும் லியோனியின் உத்தியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? படப்பிடிப்பிற்கு முன் இசை எழுதியது யாருடைய முடிவு?

செர்ஜியோதான் படத்தை எடுப்பதற்கு முன்பு இசையை எழுதிப் பதிவு செய்யச் சொன்னார். பின்னர் அவர் படப்பிடிப்பின் போது அதை ஒலிக்கச் செய்தார் என்பதைக் தெரிந்துகொண்டேன்.

அப்படியானால், ஒலிப்பதிவின் வசனம் அல்லாத இசைப் பக்கத்தைத் தவிர உங்களுக்கு வேறு எதைப் பற்றியும் அப்போது தெரியாது இல்லையா? வூடி ஸ்ட்ரோடின் தொப்பியில் தண்ணீர் சொட்டுவதை அடிப்படையாகக் கொண்ட அற்புதமான தொடக்கக் காட்சி ஞாபகத்துக்கு வருகிறது.

அது அவருடைய கண்டுபிடிப்பு. இருப்பினும் புளோரன்சில் நடந்த ஒரு பரிசோதனையைப் பற்றி நான் அவரிடம் பகிர்ந்துகொண்டது எனக்கு நினைவிருக்கிறது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட, முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட எந்த ஒலியும் எந்தச் சத்தமும் ஒரு புதிய அர்த்தத்தைப் பெறும் என்று அந்த இசைக்கலைஞர்கள் கருதினர். நீர்த்துளியை அடிப்படையாகக் கொண்ட 20 நிமிட காட்சி, அந்த உரையாடலின் வெளிப்பாடு என்று நான் நினைக்கிறேன்.

பொதுவாக, நீங்கள் ஒலிப்பதிவுகளின் இசை அல்லாத  வேறு பிரிவுகளில்  ஈடுபடுவதில்லையா?

நான் அதை இயக்குநர், ஒலியமைப்பாளர், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆட்களிடம் விட்டுவிடுகிறேன். இசை மற்ற ஒலிகளின் உராய்விலிருந்து விடுபட்டு, பார்வையாளர்களைக் குழப்பும் வகையில் இல்லாமல், அதை அவர்கள் தூய்மையாகக் கேட்க வேண்டும் என்பதே எனது கருத்து.

நான் பணியாற்றிய நூற்றுக்கணக்கான படங்களில், ஒரே ஒரு படத்துக்கு மட்டுமே முழு ஒலிப்பதிவுக்கும் நான் பொறுப்பேற்றேன். வசனம் தவிர மற்ற அனைத்துக்கும் பொறுப்பு. அது வர்ஜீனியா ஒனோராடோவின் ஒரு L’ultimo uomo di Sara (1973) படம். அந்த நேரத்தில் ஒவ்வொரு ஒலியையும் இசையாகக் கருத வேண்டும் என்பதே யோசனை. எனவே நான் இசைக்குழுவையும் மற்ற ஒலிகளான காலடிச் சத்தம், தொலைபேசி ஒலித்தல், சொட்டும் நீர் போன்ற இசை அல்லாத ஒலிகளையும் பயன்படுத்தினேன். இவை அனைத்தையும் ஒலிப்பதிவின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதினேன்.

நீங்கள் திரைப்பட இசையமைப்பாளராகவும் சேம்பர் மற்றும் ஆர்கெஸ்ட்ரா இசையின் இசையமைப்பாளராகவும் இருக்கிறீர்கள். எதை நீங்கள் ஒரு ‘முழுமையான இசை’ என்று சொல்வீர்கள்?

அவை இரண்டு வெவ்வேறு உலகங்கள். திரைப்பட இசை பல தாக்கங்களுக்கு உட்பட்டது. அதில் இயக்குநரின் எதிர்பார்ப்பு, எத்தகைய திரைப்படம், பார்வையாளர்களின் விருப்பு, அவர்களின் இசைக் கலாச்சாரம் என எல்லாம் சேரும். எனது மற்ற படைப்பு ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வழங்கப்படும் சேவை அல்ல,  அதை உருவாக்க வேண்டிய அவசியத்தை நான் உணருவதால் அதைச் செய்கிறேன்.

இருப்பினும், இரண்டும் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. உதாரணமாக, உங்கள் படைப்பான Voci dal silenzioவில், The Missionல் இருந்து எடுத்த ஒரு இசைக்குறிப்பு இருக்கிறது.

9/11 படுகொலையை மனதில் கொண்டு Voci dal silenzioவை எழுதத் தொடங்கினேன். இந்த பயங்கரமான சோகம், பிற படுகொலைகளின் நீண்ட வரிசையில் சமீபத்தியது என்பதை பின்னர் உணர்ந்தபோது, ​​எனது திட்டத்தை மாற்றினேன். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் படுகொலைகள் நடக்கின்றன. அவற்றைப் பற்றி நாம் ஒருபோதும் அறிவதில்லை. கடந்த காலங்களிலும் இதே அளவில்தான் நடந்திருக்கின்றன. அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்காவில் உள்ள பழங்குடி மக்களின் கொடூரமான இனப்படுகொலை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். எனவே அந்த நேரத்தில், Voci dal silenzioவை நமக்குத் தெரிய வராத அனைத்து படுகொலைகளுக்கும் அர்ப்பணிக்க முடிவு செய்தேன். இந்தச் சூழலில், The Missionல் இருந்து எடுத்த அந்த இசைக்குறிப்பு, ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசியர்களால் பூர்வீக தென் அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்பட்டதை மக்களுக்கு நினைவூட்ட உதவியது.

நீங்கள் எப்போதாவது மற்ற இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசையமைத்திருக்கிறீர்களா அல்லது உங்கள் இசையின் ஒவ்வொரு அம்சத்தையும் நீங்களே கட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறீர்களா?

நான் இதுபோன்ற ஒரு கேள்வியை அவமானமாகக் கருதலாம். ஆனால் நீங்கள் ஏன் அதைக் கேட்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. எனக்குத் தெரிந்தவரை  பீத்தோவன், பாக், ஸ்ட்ராவின்ஸ்கி போன்றவர்கள் யாரையும் தங்களுடன் சேர்ந்து பணியாற்ற அழைக்க மாட்டார்கள். நீங்கள் உங்களை ஓர்  இசையமைப்பாளர் என்று அழைக்க விரும்பினால் ஒவ்வொரு இசைக்குறிப்பையும் நீங்களே செய்திருக்க வேண்டும். சிலர் எப்படி மற்றொருவரிடம் தங்கள் வேலையைக் கொடுத்து முடிக்கச் சொல்வார்கள் என்று தெரியவில்லை.

நிச்சயமாக, நீங்கள் தீவிர இசையமைப்பாளராக இல்லாமல், திரைப்பட இசையமைப்பாளராகவே வருங்கால தலைமுறையினரால் நினைவுகூரப்படுவீர்கள். அது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா?

இது எனக்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் இசையமைப்பாளர் மோரிகோனேவைப் படிக்க விரும்புவோர், எனது படைப்பின் இரண்டு அம்சங்களையும் கருத்தில் கொள்ளத்தானே வேண்டும்.

ஆனால் உங்கள் திரைப்பட இசைதான் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கும் என்பதை நீங்கள் மறுக்க முடியாது.

நிச்சயமாக. ஆனால் எனது படைப்புகளை ஆராய விரும்பும் இசைவியலாளர்கள் என்னுடைய இந்த இரண்டு செயல்பாடுகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை அளிக்கத்தான் வேண்டும். இயற்கையாகவே, திரைப்பட இசை என்பது அடிப்படை இசை. இது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். அனைத்து கலைகளும் ஓர் இடத்தில் சங்கமிக்கும் இடம் இது. இதற்கு நான் “வாக்னேரியன்” என்று பெயர் வைத்திருக்கிறேன். எனவே, வரலாற்றாசிரியர்கள் இந்தக் காலகட்டத்தை கலாசார ரீதியாக அர்த்தமுள்ளதாக்க  திரைப்பட இசையை அனைத்து கலைகளுடனும் இணைந்துதான் படிக்க வேண்டும்.

‘ஸ்பாகெட்டி வெஸ்டர்ன்ஸ்‘ அதாவது ‘இத்தாலிய வெஸ்டர்ன்ஸ்’ என்று நீங்கள் சொல்லும் அந்த வகைமையில் உங்கள் பணி…

‘ஸ்பாகெட்டி வெஸ்டர்ன்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே நான் பேசமாட்டேன். அது செர்ஜியோ லியோனியின் படைப்புக்கு அவமானம். ஸ்பாகெட்டி என்பது உணவு. லியோனியின் படைப்பு நிச்சயமாக நீங்கள் உண்ணும் ஒன்றல்ல.

(சிரிப்பு) சரிதான்…

எனவே, அவர்களை ‘இத்தாலிய வெஸ்டர்ன்ஸ்’ என்று அழைப்பது மிகவும் பொருத்தமானது.

சரி, இந்த வகைமையின் வளர்ச்சிக்கு உங்கள் பணி மிகவும் முக்கியமானது, இல்லையா? முதன்முதலில் இத்தாலிய வெஸ்டர்ன் வகை இசையை செர்ஜியோ லியோனியின் படத்தில்தான் கையாண்டீர்கள். உங்களுடைய மிகப்பெரிய பங்களிப்பு இந்த இசையில் இருப்பதாக பலர் நம்புகிறார்கள். நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

இல்லை, இல்லவே இல்லை. இப்படிச் சொல்லும் மக்களுக்கு என்னுடைய படைப்புகள் தெரியாது. நான் பணியாற்றிய 500க்கும் மேற்பட்ட படங்களில், 30 முதல் 33 படங்களுக்கு மேல் வெஸ்டர்ன் படங்கள் இல்லை. எனவே அது மிகச் சிறிய… மொத்தத்தில் 7 முதல் 8 சதவீதம் மட்டுமே. எனவே இந்த மக்கள் உண்மை என்னவென்று சரி வரத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்!

லியோனிக்கு இசையமைப்பதற்கு முன்பே நீங்கள் வெஸ்டர்ன் இசையின் ரசிகரா, அல்லது காலப்போக்கில் அவை உங்களுக்குப் பிடித்தமானதாயிற்றா?

இல்லவே இல்லை. எனக்கு மேற்கத்திய இசையில் ஆர்வம் இருக்கவேயில்லை. உண்மையில், அப்படி ஒரு வகைமை இருப்பதுகூட எனக்குத் தெரியாது.

Bernardo Bertolucci, Dario Argento, Brian de Palma, Giuseppe Tornatore என்று பல பிரபல திரைப்பட இயக்குநர்களுடன் நீங்கள் பணியாற்றியுள்ளீர்கள். நீங்கள் பணியாற்றிய இயக்குநர்களில் குறிப்பாக இசையில் யார் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாகத் தனித்து நிற்கிறார்கள்?

லியோனி முறையான இசை பயின்றவர் இல்லையென்றாலும், அவருடைய படங்களுக்கு எப்படிப்பட்ட இசை வேண்டும் என்ற சரியான புரிதல் அவரிடம் இருந்தது. அதேபோலத்தான் டொர்னடோரும். அவருடன் 25 வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன். நாங்கள் ஒன்றாகப் பணியாற்றிய முதல் சில படங்களுடன் ஒப்பிடும்போது, ​​இப்போதிருக்கும் அவருடைய இசையறிவு அபாரம். இந்த விஷயத்தில் அவருக்கு உதவினேன் என்று சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டோர்னடோர் சிறந்த இசை நிபுணராக இல்லாவிட்டாலும், முறையாக இசையைப் படித்ததில்லை என்றாலும், கடினமாகத் தோன்றும் சில விஷயங்களைக்கூட உணர்ந்து புரிந்துகொள்ளும் திறன் அவரிடம் இருப்பதைக் காண்கிறேன்.

பலருக்கு ‘மோரிகோனே‘ என்ற பெயரைக் கேட்டாலே சவுக்கடிகளின் சத்தம், Alessandro Alessandroniயின் விசில்கள், Edda dell’ Orsoவின் குரல் மற்றும் பிற தனித்துவமான இசைக்கருவிகளுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. தனித்துவமான ஒலியை உருவாக்குவது உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?

நான் ரோமில் வசிக்கும் ஓர் இசையமைப்பாளர். இந்த ஊரில் இருக்கும் திறமையான கலைஞர்களே என்னை ஈர்க்கின்றனர். உதாரணமாக, அமெரிக்காவிலிருந்து ஒரு டிரம்பெட்டர் அல்லது ரஷ்யாவிலிருந்து ஒரு பாடகர் எனக்கு ஒருபோதும் பறந்து வந்ததில்லை. பியானோ கலைஞர்களான Arnaldo Graziosi, Gilda Buttà, வயலின் கலைஞர்களான Dino Asciolla, Franco Zamponi, Alessandroni மற்றும் dell’Orso… இவர்களுக்கு எப்போதும் என் வேலையில் ஒரு முக்கிய பங்கு உண்டு. என் சொந்த ஊரிலேயே இந்தத் திறமையானவர்கள் இருந்ததால் என்னால் இவர்களை உபயோகப்படுத்திக்கொள்ள முடிந்தது. மறுபுறம், போதுமான திறமை வாய்ந்த இசைக்கலைஞர்களைக் கண்டுபிடிக்க முடியாததால், பல இசைக்கருவிகள் பல ஆண்டுகளாக என் இசையில் இல்லாமல் இருந்தன. எனவே எந்தவொரு நிகழ்ச்சிக்கும் தாக்கத்தை அதிகப்படுத்தும் வகையில், அதற்குத் தகுந்த இசைக்கருவிகளை நான் தேர்ந்தெடுப்பதுண்டு.

“படங்களைப் பொருத்தவரை இசை பெரிதாக மதிக்கப்படுவதில்லை என்பது சரியே. ஏனென்றால் இசை என்பது ஒரு திரைப்படத்தின் முதன்மைக்கலை அல்ல ” என்று நீங்கள் ஒருமுறை சொன்னீர்கள். ஒரு துணைக் கலையை உருவாக்குபவராக, உங்களை நீங்கள் அந்த இடத்தில் தாழ்த்தப்பட்டவராக உணர்ந்ததுண்டா?

இல்லை, அது எனக்கு ஒருபோதும் பிரச்சனையாக இருந்ததில்லை. ஏனென்றால் திரைப்பட இசை நம் காலத்தின் அடிப்படைக் கலை வடிவம்.

இசை ஒரு துணைக்கலையாக எந்த அளவுக்குச் செயல்படுகிறது? பெரிய திரையைத் தாண்டி அதற்கு ஒரு வாழ்க்கை இருக்க முடியுமா?

Bruckner, Mahler, Mozart மற்றும் பிற இசையமைப்பாளர்களின் இசை பல படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை அந்தப் படங்களுக்கு நன்றாகவும் இருந்திருக்கிறது. ஏன் நன்றாக இருக்கிறதென்றால், அவ்வகை இசைக்கென்று தனியாக ஓர் உயிர், வடிவம், தன்னைத்தானே அற்புதமாக வெளிப்படுத்திக்கொள்ளும் இயல்பு எல்லாமே இருக்கிறது. எனவே, சினிமா ஊடகத்துக்குள் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டுமென்றால் இசை ஒரு முழுமையான தனித்த வடிவமாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு சினிமாவுக்காக செய்யப்படும்போது, முன்கூட்டியே இசைக்குறிப்புகள் எழுதப்படாமல், அந்தப் படத்துக்காக என்று எழுதப்பட்டால் நல்லது என்று நினைக்கிறேன்.

Author Image

காயத்ரி ஆர்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர். காயத்ரி ஆர். – எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பிரெஞ்சு மொழி பேராசிரியை. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
thirai isai nagaswaram

திரையிசையில் நாகஸ்வரம்  03

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?