The Talkie
Saturday, April 11, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள் இந்தியத் திரைப்படங்கள்

எண்களின் முடிச்சில் அவிழும் கணக்கு.

The Talkie by The Talkie
May 21, 2025
in இந்தியத் திரைப்படங்கள், கட்டுரைகள்
A A
3
court
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon ரேவா

மார்ச் 14 -2025 -ல் வெளியான தெலுங்கு திரைப்படம் Court -State vs a nobody இணையத்தில் பேசுபொருளாகி பலராலும் விரும்பிப் பார்க்கப்பட்ட ஒரு படமாக இருக்கிறது. இந்தப் படத்தை ராம் ஜெகதீஸ் இயக்க , நானி அவர்கள் தயாரித்துள்ளார்.  

படம், போக்சோ சட்டத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. போக்சோ சட்டத்தை தனது சுயநலத்திற்காக கையில் எடுக்கும்  அதிகார மனதிற்கும், அந்தச் சட்டத்தைப் பற்றி எதுவுமே அறியாத நாயகன், POCSO சட்டத்தால் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாவதுதான் கதை. கோர்ட் இவர்கள் வாழ்வில் என்னென்ன திருப்புமுனைகளை உண்டாக்குகிறது என்பதை தொய்வில்லாது சொல்லிருக்கிறது திரைக்கதை. 

QUIET: COURTS IN SESSION

படம் OTT தளத்திற்கும் வந்து அறுபது நாட்களைக் கடந்திருக்கிறது. இந்த கோர்ட் டிராமா கணிசமான வசூலையும் மக்கள் கவனத்தையும் பெற்றிருப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

இயக்குநர் ராம் ஜெகதீஸ், அவருக்கு இது முதல்படம் என்பதில் தொடங்கி, ஜாப்லி, சந்து, சூர்ய தேஜா, மங்கபதி, ஜாப்லியின் அம்மா இவர்களையும் தவிர சந்துவின் அம்மா என கதைக்காக தேர்ந்தெடுத்த அத்தனைக் கதாபாத்திரங்களும் தத்தமது பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். 

இவர்களைத் தாண்டி, சலவைத் தொழில் செய்துவரும் சந்துவின் அம்மா பயன்படுத்துகிற அயர்ன்பாக்ஸ், ஒவ்வொரு முறையும் ஒலித்து, பின் அமைதியாகிற கோர்ட் பெல், தன் பக்க நியாயத்தைப் பேச முடியாது சந்து மௌனமாக அதிகாரத்தின் முன் கைகளை நீட்டும்போது அவற்றை சிறைபிடித்துக்கொள்ளும் கைவிலங்கு போன்ற ஜடப் (or உயிரற்ற) பொருள்களுக்கும்கூட இக்கதைக்குள் சமமான இடம் இருக்கிறது. 

கதைச் சுருக்கமாக, நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பத்தொன்பது வயது நாயகன் சந்துவுக்கு, அதிகார வசதி படைத்த மங்கபதி குடும்பத்தில் இருக்கும் பதினெட்டு வயது பூர்த்தியாகாத பெண் ஜாப்லியோடு காதல் உருவாகிறது. இவர்கள் காதலை  ஜாப்லியின் மாமா மங்கபதி தெரிந்துகொள்கிறார். ஜாப்லியின் வயது மங்கபதிக்கு சாதகமாக மாறுகிறது.  அதன் பொருட்டு தன் தகுதிக்கு சற்றும் பொருந்தாத நாயகன் சந்து மீது போக்சோ சட்டம் பாய்கிறது. எந்தக் கேள்வியும் கேட்காமல் அந்த சாமானியன் கைகளில் விலங்கிடப்பட்டு, அவன் குற்றவாளியாக நீதியின் முன் நிறுத்தப்படுகிறான். 

குற்றவாளியாக நிற்கும் சந்துவின் முன் நீதிபதிகளாக, வழக்கறிஞர்களாக, மங்கபதியாக, எதுவுமே தெரியாத சந்துவின் குடும்பத்தில் உள்ள அப்பாவி மனிதர்களாக… என்று இவர்களில் ஒருவராக நின்று நம்மையும்  யூகங்களின் வழியே இந்தப் படத்தில் பங்கெடுக்க வைத்தது படத்தின் முதல் பாதி. பின் கதையின் முடிவு ஓரளவு தெரியத் தொடங்கும்போது.  சந்துவும் ஜாப்லியும் ஒரு கல்யாண மண்டபத்தில் இருக்கிற தனி அறைக்குள் நுழைந்து சரியாக பதினாறு நிமிடங்கள் கழித்து வருகிற வீடியோ ஒன்று வெளியாகி, படத்தின் பிற்பகுதியை விறுவிறுப்பாக்குகிறது. 

ஆணும் பெண்ணும் தனி அறைக்குள் என்ன செய்திருப்பார்கள் என்று ஒவ்வொருவரும் யூகித்தபோது, அந்தத் தனியறைக்குள் 16 நிமிடங்கள் என்ன நடந்தது என்பதை நாயகனும் நாயகியும் சொல்லும் தருணம் innocent ஆக அவர்கள் காதல் வெளிப்பட்ட தருணமாகவே பார்க்க முடிந்தது. 

எந்தவொரு கேள்விக்கு முன்னும், நாம்  யாராக நிற்கிறோம் என்பதை இந்தப் படத்தில்  பயன்பட்டிருக்கிற Trolley தியரியை சூர்ய தேஜா விளக்குவதன் மூலம், அந்த தியரியைப் பற்றிய அடிப்படை அறிவை விதைக்கிறார்  இயக்குநர்.   பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் முடிவுகளை எவ்வாறு எடுக்கிறோம் என்பதை விளக்குகிறது டிராலி தியரி. 

அதன்படி கதைக்குள் மனிதர்களைத் தாண்டியும் முக்கியப் பங்காற்றி இருப்பது எண்கள் எண்கள் எண்கள்.. இரண்டாவதாக நம்முடைய  Popular Belief System. 

Court: அதிகாரம் Vs மனசாட்சி: 

சூர்ய தேஜா : 

வசதியாக உட்கார்ந்து சாப்பிடணும்ன்னா கூட இங்க கேஸ் வேணும் என்று சக வழக்கறிஞரிடம்  பேசுகிற சூர்ய தேஜா, தன்னுடைய அப்பாவைப் போல எங்கே தானும் நீதிமன்றத்தில் நோட்டரி அதிகாரியாக மட்டுமே இருந்துவிடுவோமோ என்ற தவிப்புடைய ஒருவர். இவர் முதல்முதலாக கையில் எடுக்கிற வழக்காக சந்துவின் வழக்கு அமைந்துவிடுகிறது. 

மங்கபதி :

பெண்கள் போடுகிற துணியில்தான் வீட்டின் ஒட்டுமொத்த கௌரவமும் இருக்கிறது என்று நினைப்பவர். அதனாலேயே தன் பீடத்தை பெண்களின் மேல் ஏற்றிவைத்து, அதிகாரச் செங்கோலோடு கதை நெடுக வருபவர். இந்த ஜோடனை வழக்கு பொதுப் பார்வைக்கு தெரியவரும்போது, தன் மரியாதைக்காக அவர் அதிகாரத்துடன் பலியிடுவது அவர் வீட்டுப் பெண்ணான ஜாப்லியை. ஜாப்லியின் வழியாக சந்துவை. 

சந்து & ஜாப்லி : 

கதையின் முற்பாதியில் துள்ளலான காதல் நாயகனாகவும் நாயகியாகவும் வயதிற்கே உரிய அப்பாவித்தனங்களோடு இருவரும் இருக்கிறார்கள். கதையின் பிற்பாதியில் ஜாப்லியும் சந்துவும்  தூக்கிச் சுமக்கிற மௌனம் மட்டுமே ஒட்டுமொத்த கதைக்கான நிறமாக இருக்கிறது.

மோகன் ராவ் : 

வழக்கறிஞர் மோகன் ராவிடம் பயிற்சி வழக்கறிஞராக இருக்கிறார் சூர்ய தேஜா. கதையில் எந்த இடங்கள் எல்லாம் தொய்வடைய வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் மோகன் ராவ் ஒரு ஆசானாகி புதிர் முடிச்சுகளை அவிழ்த்துவிடும் வேலைகளைச் செய்கிறார். 

இந்த முக்கியமான கதாபாத்திரங்கள் வழியே, அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற அதிகாரம், யாருக்கு பயனாகிறது என்பதை காட்சிப்படுத்தியிருக்கிற விதம் நேர்த்தி.  இந்த தனிமனித அதிகார மையங்களால் எளிய மனிதன் ஒருவனின் வாழ்க்கை என்னவாகிறது என்பதை  இரண்டரை மணி நேர விசாரணை வழியாக படம் விறுவிறுப்போடு காட்டுகிறது. 

எண்கள், வெறும் எண்கள் மட்டுமே அல்ல என்பதை சந்துவின் வழக்கு எண்ணில் இருந்து அவன் வயது, வழக்கறிஞர்கள் மற்ற மனிதர்களை வழக்கு எண்களாக உச்சரிக்கிற இடம், ஜாப்லியின் வயது, சந்து மீது வழக்கு போடப்பட்ட நாள், 78 நாட்களாக அவன் ஜெயிலில் இருப்பது, ஒவ்வொரு முறையும் தேதியின் வழியாக தள்ளிப்போடப்படுகிற விசாரணை… இதைத் தவிர்த்து, சந்துவை நீதிமன்றம் இல்லாமல் முதல் முதலாக காட்டுகிற காட்சியில் ஒரு அரை வட்டத்தில் HAPPY NEW YEAR 2013 என்று எழுதப்பட்டிருக்கும். இந்த அரைவட்டம் முழுமையாகிற இடமாக ஜாப்லி தனக்கு பதினெட்டு வயது ஆகிவிட்டதென்று ஒரு வீதியில் சந்துவின் முன் அறிவிக்கிற இடம் வரை எண்கள் எண்கள் எண்கள்…    

மனிதர்கள் குற்றமற்றவர்கள் என்பதற்கும் வயது குற்றமற்றது என்பதற்கும் இடையில் இருக்கிற வித்தியாசம் நிறைய யோசிக்க வைக்கிறது. 

 இந்தக் கதை எண்களை வைத்து போடப்பட்ட முடிச்சுக்கள். தான் போட்ட முடிச்சில் நம்பிக்கையோடு திரைக்கதையை கையாண்டிருக்கிறார் ராம் ஜெகதீஸ். அதுவே ஒரு கட்டத்தில் நாயகன் குற்றமற்றவன் என்று தெரிய வரும்போதும், தெரிந்த முடிவின் மீது புதிய திசையைத் திறந்து நம்மையும் கேள்வி கேட்காமல் உள்ளே போக வைக்கிறார். 

வசனங்கள் படத்தின் பெரிய பலமாகத் தோன்றுகிறது. நீதிமன்ற விசாரணைகள் சில மட்டும் சலிப்பு ஏற்படுத்தினாலும், 2013 ம் ஆண்டிற்குள் நம்மை வெளிச்சங்கள் வழியாகவும், கதைக்குள் கையாளப்பட்டிருக்கிற பொருட்களின் வழியாகவும் பொருந்த வைக்கிறார். 

ரசித்த காட்சிகள் : 

  • மகனுக்காக தவிக்கிற சந்துவின் தாய் தனக்குத் தெரிந்த உழைப்பின் வழியே தன் மகனுடைய சட்டையை இஸ்திரி செய்து அதை சந்து போட்டுக்கொள்ளும் காட்சியில் இருக்கும் உயிர் வெப்பம் நமக்கும் கடத்தப்படுகிறது. 
  • ஜாப்லியின் அம்மா தன் மகள் குற்றமற்றவள் என்று அறிந்துகொண்டு எடுக்கிற அவதாரம், உக்கிரம். அமைதியின் வழியாகவே அவர் கடத்துகிற அன்பு மங்கபதியை அத்தனை பேர் முன்னால் அடிக்கிற போது, அவளும் அந்த நீதியின் வழியே ஏதோ கற்றுக்கொண்டவளாகவே படுகிறது.. 
  • ஜாப்லியும் சந்துவும் அந்தத் தனி அறைக்குள் என்ன செய்தார்கள் என்று விவரிக்கிற அந்த காட்சி. உண்மையான காதலின் முன் அத்தனை மனமும் குழந்தைத்தனங்களை ஏற்றிருப்பதுதானே என்பதை சொல்லாமல் சொல்லியதாக தோன்றியது.  
  • கோர்ட்டில் மங்கபதியின் வழக்கறிஞர் சூர்ய தேஜாவிடம் பேசும்போது, தேஜா கோபத்தில் கோர்ட்டின் பெல்லை வேகத்தோடு அடிக்கிற காட்சி, படம் தொடங்கும் முதல் காட்சியான பெல் அடித்து QUIET : COURT IN SESSION என்பதை சத்தத்தின் வழியாகக் காட்டிய இடம் சிறப்பு.
  • சந்து குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டு அவன் வெளியே வருகிற அதே நேரத்தில், போலிஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே பொய் வழக்கு போடப்பட்ட ஒரு பால்வியாபாரியின் துருப்பிடித்த கேனை அவர் எடுத்துக்கொண்டு போகிற அந்த காட்சி.

இப்படி கனமேற்றுகிற ஏராளமான காட்சிகள் கதைக்குள் இருக்கின்றன. 

யார் குற்றமற்றவர்கள் :

இந்தக் கேள்வி படம் பார்க்கும்போது ஒரு இடத்தில் உருவானது. ஜாப்லியின் பள்ளி படிக்கிற தங்கை அழுதுகொண்டே தன் அம்மாவை நோக்கி ஓடிவருவாள்.

அவள் சொல்கிற சொற்கள் இன்றைக்கும் இருக்கிற யதார்த்தம். வெளிச்சத்துக்கு வந்துவிட்டதால் அவை குற்றங்களாகிவிடுமா? ஜாப்லியைவிட வயது குறைந்த ஒரு  சாதாரணப் பெண்ணுக்கு நிகழ்ந்தது மட்டும் சட்டத்தின் முன் வராதா?  

17 வயது 11 மாதம்  10 நாட்களில் மைனராக இருக்கிற ஒரு பெண் தன் வாழ்வின் மீதோ தன்னைச் சுற்றி நடக்கிறவற்றின் மீதோ முடிவுகள் எடுக்கமுடியாத பெண், எப்படி 20 நாட்கள் நிறைவிற்குப் பின் 18 தொட்டதும் அந்தப் பக்குவம் வந்துவிடுகிறது என்று சூர்ய தேஜாவின் வழியே எழுந்த குரல் முக்கியமானது. 

சந்துவும் ஜாப்லியும் தம் வயதை உணர்ந்து காதலை வெளிப்படுத்திக்கொண்ட அந்த நடுவீதிக் காட்சி கடத்துவது எதை? 

இங்கு யார் குற்றவாளிகள் ?

ஒரு சிறந்த வழக்கறிஞர், கண்முன் கிடக்கிற பதில்களில் இருக்கிற சாதக பாதங்களை உணர்ந்து, கேள்விகளை உருவாக்கத் தெரிந்தவர்.

மக்களுக்காக இயற்றப்படும் சட்டங்கள், அவற்றின் ஆணிவேராக இருக்கும் ஆதாரங்கள், மீடியா வெளிச்சம் போட்டுக் காட்டுகிற குற்றம்(!), கொடுக்கப்படும் தண்டனை, இவை எல்லாவற்றின் மீதான ஒரு கேள்வியை இப்படம் கண்டிப்பாக எழுப்புகிறது.

                    YES… BLACK COAT IS ALWAYS ABOUT QUESTIONING. 

அதிகாரத்துக்கு எதிராகப் பேச சக்தியற்றவர்களின் கைகளில் இடும் விலங்குக்குப் பின்னால், விளங்கிட முடியாத நியாயமும் கண்ணீரும் இருக்கலாம் என்பதையே படம் உணர்த்துகிறது. 

Author Image

ரேவா

ரேவா – கவிஞர். எழுத்தாளர். நுட்பம் இணைய வானொலியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
feature image

ஸ்டார்ட்! கேமரா!! - 03 மாருதி ராவ்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?